Saturday, May 16, 2009

தாஜ்மகாலின் மதிப்பு ஒரு ரூபாய்!


இது ஏதோ பொம்மை தாஜ்மகாலின் விலை மதிப்பு அல்ல. ஆக்ராவில் யமுனா நதிக் கரையில் அமைந்துள்ள உண்மையான தாஜ்மகாலின் மதிப்புத்தான் ஒரு ரூபாய். ஆச்சரியப் படாதீர்கள்! குதுப்மினார் போன்ற இதர கலைச்சின்னங்களும் ஒரு ரூபாய் அளவிற்கு மதிப்பிடப் பட்டுள்ளன. சற்று விவரமாக பார்ப்போம்.

தற்போது மத்திய அரசின் நிதிநிலை அறிக்கைகள் நடப்பு கணக்கியல் முறையில் (Cash Method) தயாரிக்கப் படுகின்றன. அதை மாற்றி சொத்து சேரும் முறைப் படி (Accrual Method) நிதிநிலை அறிக்கைகள் தயார் செய்ய புதிய முடிவு எடுக்கப் பட்டுள்ளது. இதன் படி, அரசின் கைவசம் உள்ள சொத்துக்களை மதிப்பிடும் முயற்சியில் இப்போது மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

அந்த முயற்சியின் முதல் படியாக, தாஜ் மகால், குதுப்மினார் போன்ற கலைச் சின்னங்களின் மதிப்பு ரூபாய் ஒன்று என்று நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

புதிய கணக்கியல் முறையின் படி, இருபத்து ஐந்து வருடங்களுக்கு உட்பட்ட அரசு சொத்துக்களின் மதிப்பு அவற்றின் முதலீட்டு செலவாக இருக்கும். அதே சமயத்தில் இருபத்து ஐந்து வருடங்களுக்கு முந்தைய சொத்துக்களின் மதிப்பினை அரசே நிர்ணயிக்கும். இந்த முறையில் தாஜ் மகால் விலை ஒரு ரூபாய் என்று மத்திய அரசினால் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

சில வருடங்களுக்கு முன்னர் கட்டப் பட்ட சில சாதாரண அரசு கட்டிடங்களின் மதிப்பு பல லட்சம் அல்லது பல கோடியாக இருக்கும் போது, தாஜ் மகால் போன்ற ஒரு அரிய பொக்கிஷத்தின் மதிப்பு ஒரு ரூபாயாக கணக்கிடுவது ஒரு வினோதம்தான்.

அதே சமயத்தில், பலே கில்லாடியான நமது அரசியல்வாதிகள், தனியார் மயமாக்கம் என்ற பெயரில், அரசு சொத்துக்களை லாபத்தில் விற்கிறேன் என்று சொல்லிக் கொண்டு தாஜ் மகால் இரண்டு ரூபாய், தஞ்சை கோயில் மூன்று ரூபாய், செங்கோட்டை நான்கு ரூபாய் என்று கூறு போட்டு விற்று விட்டு விடக் கூடாது. ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் நமக்கு ஏற்கனவே நல்ல முன் அனுபவம் இருக்கிறது அல்லவா?

நன்றி.

11 comments:

test said...

நீங்களே ஐடியா குடுத்தா எப்படி ?

Unknown said...

நல்ல விலை வரும்போது சொல்லுங்க - நான் கூட ரொம்ப நாளா மாமல்லபுரம் வாங்கலாமான்னு யோசிச்சிக்கிட்டு இருக்கேன்.

(அது சரி, “கஜுராஹோ” கோவிலுக்கு என்ன விலை? அரசுவையோ, மதனையோ கேட்க வேண்டிய கேள்வியோ?
http://www.sathyamurthy.com

பொதுஜனம் said...

"இழைத்து இழைத்து கட்டிய தாஜ் மஹால் ஒரு ரூபாய் . அரிசி ஒரு ருபாய். டெலிபோன் ஒரு ரூபாய் . ஒட்டு ஆயிரம் ரூபாய்.! " எங்கள ஒன்னும் அசய்க்க முடியாது மாப்ளே

Maximum India said...

நன்றி பௌலொஸ் ராஜா!

//நீங்களே ஐடியா குடுத்தா எப்படி ?//

நான் ரொம்ப லேட்! நமது அரசியல்வாதிகளும் தொழில் அதிபர்களெல்லாம் இந்த விஷயத்தில் ரொம்ப பாஸ்ட். இப்பவே, எல்லா ஏற்பாடுகளும் நடந்து முடிந்திருக்கும்.

நன்றி.

Maximum India said...

நன்றி சாம

//நல்ல விலை வரும்போது சொல்லுங்க - நான் கூட ரொம்ப நாளா மாமல்லபுரம் வாங்கலாமான்னு யோசிச்சிக்கிட்டு இருக்கேன்.//

முல்லா கதை ஒன்று! நீங்கள் கூட படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். குதிரை விலை ஒரு ரூபாய்! ஆனால், கூட உள்ள ஒரு பூனையின் விலை ஆயிரம் ரூபாய். இரண்டையும் ஒன்றாகத்தான் வாங்க வேண்டும் என்பது முல்லாவின் நிபந்தனை.

இப்படித்தான் அரசு சொத்துக்களின் விலையும்! மாமல்லபுரம் ஒரு ரூபாயாக இருக்கலாம். ஆனால் அதனை வாங்க பல ஆயிரம் கோடி லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கும். அதற்கு நீங்கள் தயாராக இருந்தால் உங்களுக்கு மாமல்லபுறம் விற்க அரசியல்வாதிகள் தயாராக இருப்பார்கள்.

நன்றி

Maximum India said...

நன்றி பொதுஜனம்!

//"இழைத்து இழைத்து கட்டிய தாஜ் மஹால் ஒரு ரூபாய் . அரிசி ஒரு ருபாய். டெலிபோன் ஒரு ரூபாய் . ஒட்டு ஆயிரம் ரூபாய்.! " எங்கள ஒன்னும் அசய்க்க முடியாது மாப்ளே//

தாஜ் மகால வச்சு என்ன பண்ண? வேடிக்கைதான் பார்க்க முடியும். டெலிபோன்? பேசத்தான் முடியும். அரிசியை வைத்து பொங்கி திங்கத்தான் முடியும். ஆனால் ஒட்டு அப்படியா? இவ்வளவு குறைஞ்ச முதல் போட்டு கொள்ளை லாபம் அடிக்க முடியற தொழில் வேறு ஏதாவது உண்டான்னு சொல்லுங்க மச்சி!

KARTHIK said...

நீங்களும் இந்தியா கேட்ட வாங்கிப்போடலாம்.

// நல்ல விலை வரும்போது சொல்லுங்க - நான் கூட ரொம்ப நாளா மாமல்லபுரம் வாங்கலாமான்னு யோசிச்சிக்கிட்டு இருக்கேன்.//

:-))

வால்பையன் said...

மெரினா கடற்கரை அவ்வளவு கூட வராதுன்னு நினைக்கிறேன்!

ப்ளாட் போட்டு வித்துறலாமா?

Maximum India said...

நன்றி வால்பையன்!

Naresh Kumar said...

//மெரினா கடற்கரை அவ்வளவு கூட வராதுன்னு நினைக்கிறேன்!//

மெரீனா மாதிரி காதல் பேசும் இட்த்தை நான் பார்த்ததே இல்லை!!! காதல் பண்ணா, பக்கத்துலியே பாரு சமாதி, அந்த கதிதான் உனக்குன்னு சிம்பாலிக்கா சொல்லியிருப்பாங்க:))))

நரேஷ்
www.nareshin.wordpress.com

Maximum India said...

அன்புள்ள நரேஷ்!

நல்லாவே யோசிக்கிறீங்க.

:-)

நன்றி!

Blog Widget by LinkWithin