இந்தியாவை பொறுத்த வரை பயங்கரவாதத்தினால் அதிகமாக பாதிக்கப் படாத மாநிலமாகத்தான் தமிழகம் இருந்து வந்திருக்கிறது. ஆனால், தமிழகத்தில் ரயிலை கவிழ்க்க சதி செய்யப்பட்டுள்ளதாக இன்று வந்த செய்தி உண்மையிலேயே அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. ரயில்வே துறை ஊழியர்களின் சமயோசிதமான செயல்பாடுகள்தான் மலைகோட்டை எக்ஸ்பிரஸ் சந்திக்கவிருந்த மிகப் பெரிய விபத்தினை தவிர்த்து ஆயிரக்கணக்கான பொதுமக்களின் உயிரை காப்பாற்றி உள்ளது. அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டு தெரிவிக்கும் அதே நேரத்தில், தமிழகம் விழிப்புடன் இருக்க வேண்டிய கட்டம் இது என்பதையும் இங்கு பதிய விரும்புகிறேன்.
ராஜபக்சேயின் இந்திய வருகையை எதிர்த்து அச்சிடப் பட்ட நோட்டிஸ்கள் அந்த இடத்தில் கண்டுபிடிக்கப் பட்டதாக போலீஸ் தரப்பு தெரிவிக்கின்றது. இது உறுதிபடுத்த முடியாத தகவல் என்பதால் உடனடியாக யார் மீதும் குற்றம் சாட்டி விட முடியாது என்றாலும், சதி வேலையில் ஈடுபட்டவர்களின் நோக்கம் எதுவாக இருந்தாலும் அது எவ்வளவு உயர்வாக இருந்தாலும், அவர்கள் கண்டிக்கப் படவேண்டியவர்கள் மற்றும் சட்டத்தினால் தண்டிக்கப் பட வேண்டியவர்கள்.
வட மாநிலங்களில் வாழ்ந்தவன் என்ற முறையில் பயங்கரவாதத்தின் வலியை நேரடியாக உணர்ந்தவன் நான். அந்த வகையில் நான் சொல்லிக் கொள்ள விரும்புவது, எந்த காரணத்தினை முன்னிட்டும், பயங்கரவாதத்திற்கு தமிழகத்தில் இடமளித்துவிடக் கூடாது. சதிக்கும்பலை உடனடியாக கண்டுபிடித்து சட்டத்திடம் ஒப்படைக்க வேண்டியது அரசின் கடமை. அரசின் உறுதியான நடவடிக்கைகளுக்கு பொதுமக்களும் எதிர்கட்சிகளும் துணை நிற்க வேண்டும் என்பது எனது விருப்பம்.
நன்றி!

Comments
முன்புபோல் அதிகமாக பதிவுகள் போடுவதில்லேயே சார்.
பகிர்வுக்கு நன்றி சார்.
தீவிரவாதம் நடக்கும் இடங்களில் எல்லாம் அது எப்படி துண்டு நோட்டிஸ்கள் போலீசார் கைகளில்
கிடைக்கிறது, ஆச்சிரியமாக உள்ளது.
//எந்த காரணத்தினை முன்னிட்டும், பயங்கரவாதத்திற்கு தமிழகத்தில் இடமளித்துவிடக் கூடாது. //
தமிழகத்தை மட்டும் ஏன் பிரித்து பார்க்கிறிர்கள். இந்தியவில் மடடும்மல்ல உலகத்தில் தீவிரவாதம்
எங்கு நடந்தாலும் கண்டிக்கக்கூடிய
விசயம்தான்.தீவிரவாதத்தால் அதிகம் பதிக்கப்படுவது அப்பாவி மக்கள் தான்.
பதிவுக்கு நன்றி சார்.
அற்புதமான பதிவு!
அன்பு பதிவர்களே/நண்பர்களே,
என்னுடைய முதல் பதிவு இங்கே போட்டு இருக்கிறேன். தயவு செய்து பாருங்கள், பிடித்தால் ஓட்டு போடுங்கள்!
http://kaniporikanavugal.blogspot.com/
//அரசியலில் உள்ள சில நாதேரிகள் திருந்திவிட்டாலே பல கேடு விளையும் செயல்களை விட்டு தமிழகம் பாதுகாப்பாக இருக்கும்.//
உண்மைதான் நண்பரே!
//முன்புபோல் அதிகமாக பதிவுகள் போடுவதில்லேயே சார்.//
பொதுவாகவே உற்சாகமான மனிதன்தான் நான். ஆனால் சமீபத்தில் நிகழ்ந்த சில விரும்பத்தகாத நிகழ்வுகள், எனது உற்சாகத்தில் ஓட்டை விழச் செய்து விட்டன. உலகில் உள்ள தனது எல்லா கெட்ட குணங்களையும் விலக்கிக் கொண்டாலும், "சலிப்பு தன்மையை" மட்டும் விலக்கிக் கொள்ள முடியாது என்று சாத்தான் ஒருமுறை சொன்னாராம். அந்த அளவுக்கு மோசமானது, "சலிப்பு தன்மை". இப்போது என்னுடைய போராட்டம் எல்லாம் அந்த சலிப்புத்தன்மையுடன்தான். மீண்டு வர வேண்டும். மீண்டும் வர வேண்டும் என்பதுதான் எனது இப்போதைய எதிர்பார்ப்பு, நோக்கம் எல்லாமும்.
அக்கறையான விசாரிப்பு நன்றி ரஹ்மான்!
//தமிழகத்தை மட்டும் ஏன் பிரித்து பார்க்கிறிர்கள். இந்தியவில் மடடும்மல்ல உலகத்தில் தீவிரவாதம்
எங்கு நடந்தாலும் கண்டிக்கக்கூடிய
விசயம்தான்.தீவிரவாதத்தால் அதிகம் பதிக்கப்படுவது அப்பாவி மக்கள் தான். //
நீங்கள் சொல்வது போல தீவிரவாதம் எங்கு நடந்தாலும், எந்த வடிவத்தில் இருந்தாலும், எந்த நோக்கத்திற்காக நடத்தப் பட்டாலும் கண்டிக்கப் பட வேண்டியதுதான். அதே சமயம், தமிழகம் இது வரை அதிகம் பாதிக்கப் படாத பகுதியாக இருப்பதால், இந்த பிரச்சினையை முளையிலேயே கிள்ளி எறிந்து விட வேண்டும் என்பதுதான் என் விருப்பம். எனவேதான், தமிழகத்திற்கான "சிறப்பு எச்சரிக்கையாக" இந்த பதிவு.
நன்றி!
அற்புதமான பதிவு!
அன்பு பதிவர்களே/நண்பர்களே,
என்னுடைய முதல் பதிவு இங்கே போட்டு இருக்கிறேன். தயவு செய்து பாருங்கள், பிடித்தால் ஓட்டு போடுங்கள்!
http://kaniporikanavugal.blogspot.com///
உங்கள் வரவு பதிவுலகுக்கு நல்வரவாகட்டும்.
முதல் பதிவுக்கு வாழ்த்துக்கள்!
உங்கள் நல்ல உள்ளத்துக்கு,எல்லாம் வல்ல இறைவன் எப்போதும் துணையிருப்பான்.
உங்களுக்காக இறைவனிடம் பிராத்திக்கிறேன்.
நன்றி சார்.
//இந்த விஷயத்தில் அரசியல் ரீதியாயகவோ அல்லது மதரீதியாகவோ வேற்றுமை பார்க்காமல் எல்லோரும் ஒற்றுமையாக இருந்து இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் ஏற்படாமல் இருக்க பாடுபடவேண்டும். எந்த ஒரு விஷயத்திற்கும் அப்பாவி மக்களை ஏன் குறி வைக்கிறார்கள். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு (யாராயினும் சரி) அதிகபட்ச தண்டனை கொடுக்க முயற்சிக்க வேண்டும்.//
உண்மைதான் நண்பரே! பயங்கரவாதத்திற்கு மதமும் இல்லை, மொழியும் இல்லை, இனமும் இல்லை.
பயங்கரவாதிகள் உண்மையில் கோழைகள். அதனால்தான் அவர்கள் எப்போதும் ஆயுதம் ஏந்தாத பொதுமக்களையே குறி வைக்கின்றனர். அவர்களுக்கு நன்றாகவே தெரியும், அரசியல்வாதிகளுக்கு பொதுமக்களின் மீது எந்தவொரு அக்கறையுமில்லை ஆதலால் அவர்கள் முழுமுனைப்புடன் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள் என்று. இவர்களுக்கு நோகாமல் பொழப்பு நடத்த எளிய இலக்கு பொதுமக்கள்தான்.
மீண்டும் சொல்கிறேன். பயங்கரவாதிகள் உண்மையில் கோழைகள்தான் என்று.
நன்றி!
மிக்க நன்றி தாமஸ் ரூபன்!
உங்களைப் போன்ற நண்பர்கள் பதிவுலகம் கொடுத்த கொடை ஆவர்.
மிக்க நன்றி!