Skip to main content

Posts

ஆரு வூட்டு சொத்துக்கு ஆருங்க அடுச்சுக்கிரது?

சில உண்மை சம்பவங்களின் அடிப்படையில், எனது சொந்த (ஊரின் பேச்சு ) நடையில் ஒரு கற்பனையான சிறு (தொடர்?) கதை இங்கே. சரியாக புரிந்து கொள்வது உங்கள் பாடு. ஒரே ஒரு ஊரிலே (பரதம் பட்டின்னு வச்சிக்கோங்களேன்) ஒரு ஜகதலப் பிரதாபன் இருந்தாராம். அவரோட பேரு குரு அண்ணாத்தே-வாம். பழய பாலிஸ்டர் துணி வியாபாரியா பொழப்ப ஆரம்பிச்ச அவரு ஊரிலே பாதிய வளைச்சுப் போட்டுகிட்டாராம். அவருக்கு ரண்டு பசங்க இருந்தாங்களாம். ஒருத்தன் பேரு மகேஷுஅண்ணாத்தே . இன்னொருத்தன் பேரு சுநிலு அண்ணாத்தே. ரெண்டு பேரும் அப்பாவ விட அதிபுத்திசாலிங்கலாம். அந்த ஊரிலே கடுமையான நல்ல தண்ணி பஞ்சமாம். குடிக்கற தண்ணிய காசு கொடுத்து பக்கத்து ஊரிலே இருந்து வாங்க வேண்டியிருந்துச்சாம். ஒரு நாளு, ஊரு ஜனங்கெல்லாம் ஒண்ணா சேந்து, ஒரு முடிவு பண்ணாங்களாம். ஊருக்கு கிளக்கு பாத்த மாதிரி இருக்க தெங்காட்டிலே ஊருக்கு சொந்தமான ஒரு இடத்திலே நல்ல தண்ணி நெறைய கிடைக்குதுன்னு ரொம்ப படிச்சவங்க சொல்றாங்க. அதனால அங்க ஊருக்கு பொதுவா ஒரு பெரிய கிணறு வெட்டலாம்னு. அப்புறம் நம்ம தண்ணி கஷ்டமெல்லாம் தீந்து போயிடும். பக்கத்து ஊரிலே இருந்து குடிக்கற தண்ணிய காசு போட்டு வாங்க வேண...

மறைந்து வாழ நேரிடும் போது?

தமிழகத்தின் உயர் பொறுப்பில் இருக்கும் ஒரு தமிழ் ஆர்வம் மிக்க ஒரு IAS அதிகாரியிடமிருந்து (சில நண்பர்கள் வழியாக) பெறப் பட்ட கருத்துகள் இவை. ஒரு குறிப்பிட்ட முதல்வருக்கு நெருக்கமாக இருப்பதாக கருதப் பட்டதால், தேர்தலுக்கு பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் இவருக்கு மிகச் சிறிய அலுவலகத்தில் அதிக முக்கியத்துவம் இல்லாத ஒரு பதவி தரப் பட்டது. பொதுவாக இறையாண்மை தேர்வுகள் (Civil Services) எழுதுபவர்கள் இவரை ஒரு சிறந்த முன்னோடியாக கருதுவதால், எனது சில நண்பர்களும் இவரை தேர்வு நிமித்தமாக நேரில் சென்று சந்தித்தனர். அப்போது, மிக பிரபலமான ஒரு IAS அதிகாரியின் அலுவலகம் மிகச் சிறியதாகவும் சுறுசுறுப்பு குறைந்ததாகவும் இருப்பதைக் கண்டு ஆச்சர்யப் பட்டு அவரிடம் அது குறித்து வினவினர். மேலும் அரசியல் காரணங்களினால் அவருக்கு அநீதி இழைக்கப் பட்டிருப்பதாக வருந்தினர். அதற்கு அவர் அளித்த பதில்கள் கீழே. தனக்கு இந்த பதவி கிடைத்திருப்பது தனக்கு இழைக்கப் பட்ட அநீதியாக தான் கருதவில்லை. பொதுவாக, இறையாண்மை பணிகள் (IAS) மிகுந்த மன அழுத்தமும் ஒரு நாளின் அனைத்து நேரத்தினையும் எடுத்துக் கொள்வதாகவும் இருப்பதால், ஒரு IAS அதிகாரியால் ...

தோனியும் திருக்குறளும்

மும்பை பெங்களூரு போன்ற போன்ற பெரு நகரங்களிலிருந்து வரும் மேல் தட்டு மக்கள் மட்டுமே இந்திய கிரிக்கட்டில் கோலோச்ச முடியும் என்பதை சமீப காலங்களில் தகர்த்துக் காட்டியவர் (சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாநிலமாக கருதப் படும் ஜார்கண்டில் இருந்து வந்த) தோனி. இதன் மூலம், ஒருவரது வெற்றிக்கு பிறக்கும் சூழ்நிலையை விட செயல் திறனே முக்கியம் எனும் பொருள் படும் "பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும்; சிறப்புஒவ்வா செய்தொழில் வேற்றுமை யான்" எனும் குறளை மெய்ப்பித்து காட்டியவர் தோனி. இப்போது இந்திய கிரிக்கட்டின் மூன்று வடிவங்களிலும் கேப்டன் பொறுப்பு ஏற்றுள்ள தோனி, அதன் ஒவ்வொரு வடிவத்திலும் தனது அணியினரிடமிருந்து சிறப்பான செயல்பாட்டை வெளி கொண்டு வர மேலாண்மை கல்வி படிக்காமலேயே மேற்கொண்ட (வள்ளுவம் கண்ட) மேலாண்மை தத்துவம் இது. "இதனை இதனால் இவன்முடிக்கும் என்றுஆய்ந்து அதனை அவன் கண்விடல்" அதாவது யாரால் எதை சரியாக செய்ய முடியும் என்று சரியாக முடிவு செய்து அவரிடம் அந்த பொறுப்பை விட்டு விட்டால் தலைவரின் பொறுப்பு முடிந்தது என்று பொருள். கிரிக்கெட்டுக்கும் மற்ற விளையாட்டுகளுக்கும் உள்ள ...

இந்திய மென்பொருட் துறையை எதிர் கொண்டுள்ள சவால்களும் காத்திருக்கும் வாய்ப்புகளும்

1991 க்கு பிறகு அசுர வளர்ச்சி அடைந்து இப்போது உலகின் பின் அலுவலகம் (Back Office) இந்தியா என்று பெயர் எடுக்க வைத்த இந்திய மென்பொருட் துறை (இப்போதைய) மாறியுள்ள பொருளாதார சூழ்நிலைகளால் கடும் சவால்களை எதிர் கொள்ளும் சூழல் உருவாகி உள்ளது. இந்தியாவின் முக்கிய அந்நிய செலவாணி ஈட்டும் துறையான மென்பொருட் துறை சந்திக்கும் சவால்களைப் பற்றி இங்கு முதலில் விவாதிப்போம். உலகப் பொருளாதாரத் தேக்க நிலை. வரும் ஆண்டில் உலகின் பொருளாதார வளர்ச்சி சென்ற சில வருடங்களை விட மிக குறைவாக இருக்கும் என IMF, உலக வங்கி போன்ற உலக அமைப்புகள் தெரிவிக்கின்றன. முக்கியமாக, நம்மிடமிருந்து மென்பொருள் இறக்குமதி மிக அதிகமாக செய்த அமெரிக்கா மற்றும் ஐரோப்பா பகுதிகள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிப்பது குறிப்படத் தக்கதாகும். அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பன்னாட்டு வங்கித் துறையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக BFSI என அழைக்கப் படும் மென்பொருட் துறையின் (இது வரை மிக அதிக வளர்ச்சி கண்டு கொண்டிருந்த) பிரிவு வெகுவாக பாதிக்கப் படும் எனவும் தெரிகிறது. சில நிறுவனங்களிடம் இருந்து வர வேண்டிய தொகையை வசூல் செய்வதற்காகவே ஒரு தனி துறையை ஏற்...

சட்டங்களும் சில கட்டங்களுக்குள்

சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற ஒரு உண்ணாவிரத போராட்டத்தின் போது, சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு தமது உணர்ச்சிகளை வெளிபடுத்தாமல் இருப்பதாக சிலர் கூறினர். பொது மக்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் சட்டங்களுக்குக் கூட சில கட்டுப்பாடுகள் உண்டு தெரியுமா? பேயாட்சி செய்யும் நாட்டில் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்று சொன்னான் பாரதி . அதாவது பேயைப் போல தீய குணங்கள் உள்ளவர்களால் ஆட்சி நடத்தப் படும் போது அவர்களால் உருவாக்கப்படும் சட்டங்கள் பிணத்தை தின்னுவதைக் கூட (தீய செயல்கள் செய்வதைக் கூட) நியாயப்படுத்தும் என்று பொருள். ஒரு குறிப்பிட்ட காலம் வரை, காங்கிரஸ் தலைவர்கள் சூரியன் மறையாத நாட்டின் (பிரிட்டிஷ் அரசின்) சட்டத்திற்கு கட்டுப்பட்ட ஒரு சுயராஜ்யம் (Home Rule) மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தை மாற்றி அன்னியரின் (அடக்கு முறை) சட்டத்தையே எதிர்த்து சட்ட மறுப்பு இயக்கம் கண்டவர் மகாத்மா காந்தி. அவருடைய அந்த முடிவே இந்தியா முழுமையான சுதந்திரம் பெற காரணமாக இருந்தது. சுதந்திரம் பெற்றபோது வாழ்ந்த தன்னலமற்ற அரசியல் தலைவர்கள் உணர்ந்திருந்த ஒரு முக்கிய விஷயம் இது. வருங்காலத்தில் வரும் அரசுகள் மேற்கண்ட உண்ம...

இதோ இந்தியாவில் இன்னுமொரு தாஜ்மஹால்

ஆக்ராவில் யமுனா நதிக் கரையோரம் அமைந்துள்ள தாஜ்மகால் பற்றி அனைவரும் கேள்விப் பட்டிருப்பீர்கள். இந்தியாவிலேயே, இன்னொரு பகுதியில் தாஜ்மஹாலின் மற்றொரு பிம்பம் அமைக்கப் பட்டிருக்கிறது தெரியுமா? அதுவும் தாஜ்மஹால் கட்டிய ஷாஜகானை சிறை வைத்த அவுரங்கசீப் அவர்களின் மனைவியின் நினைவாகவே அமைக்கப் பட்டுள்ளது என்பது கூட ஒரு சுவாரஸ்யமான விஷயம். உண்மையான தாஜ்மஹால் கீழே இரண்டாவது தாஜ்மஹால் கீழே இரண்டுக்கும் குறைந்த பட்சம் ஆறு வித்தியாசங்கள் கண்டுப் பிடிக்க முடிகிறதா? சஸ்பென்ஸ் போதும் நினைக்கிறேன். தாஜ்மகாலைப் போன்றே உள்ள இரண்டாவது கல்லறைக் கோயில் அவுரங்கஜீபின் மூன்றாவது மனைவியின் (தில்ராஸ் பனோ பேகம்) நினைவாக அவருடைய மகனால் (ஆஜம் ஷா) பதினேழாம் நூற்றாண்டில் கட்டப் பட்டது. இதன் பெயர் பிபி-கா-மக்பாரா. இது மகாராஷ்ட்ர மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத் நகரத்தில் அமைந்துள்ளது. இது ஏழைகளின் தாஜ்மஹால் எனவும் அழைக்கப் படுகிறது. பிற்காலத்திய முகலாய கட்டிட வடிவமைப்பில் உருவான இந்த கல்லறைக் கோயில் ஆக்ரா தாஜ்மகாலின் புகழின் முன்னே சூரிய ஒளியில் தெரியும் நிலவாக முக்கியத்துவம் குறைந்து போனாலும் பார்க்க வேண்டிய ஒரு சுற்றுலாத்...

ஒப்பீடு (Comparison) செய்கிறீர்களா?

பறக்கும் சீக்கியர் (Flying Sikh) என்று அழைக்கப் பட்ட மில்கா சிங் அவர்களைப் பற்றி கேள்விப்பட்டிறிக்கிறீர்களா ? இந்தியாவின் மிகச் சிறந்த தடகள விளையாட்டு வீரர்களில் ஒருவராக கருதப்படும் அவர் 1960 இல் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் மயிரிழையில் பதக்கம் தவற விட்டதற்கான காரணம் தெரியுமா? மில்கா சிங் பறக்கும் சீக்கியர் என்று அழைக்கப்பட்டதற்கு காரணம் இல்லாமல் இல்லை. மேலே குறிப்பிட்ட ஒலிம்பிக் போட்டிக்கு முன்னர் நடைப் பெற்ற சர்வதேச பந்தயத்தில் (அப்போதைக்கு) உலக சாதனை செய்து முத்லாவாதாக வந்தவர் அவர். ஒலிம்பிக் முதல் நி லை போட்டியில் கூட அவர் பெற்றது இரண்டாவது இடம். தங்கம் வெல்வார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட அவர், தனது ஓட்டத்தினை மிக வேகமாக தொடங்கினார். பாதியில் மற்றவர்கள் மிக நிதானமாக ஓடி வருவது போல அவருக்கு தோன்றியது. (உண்மையில் அவர்களால் இவர் வேகத்திற்கு ஓட முடியவில்லை) முதல் பாதியில் அவர்களைப் போல நிதானமாக ஓடினால்தான் தன் சக்தியை சேமித்து இறுதியில் மிக வேகமாக ஓடி கோப்பையை வெல்ல முடியும் என்று தவறாக நினைத்து வேகத்தினை சற்று மட்டுப்படுத்தினார். விளைவு, தங்கம் வெல்ல வேண்டியவர் இறுதியில் வெண...