தளர்ந்து வரும் இந்தியப் பொருளாதாரத்தை நிமிர்த்துவதற்காக இந்திய தலைமை வங்கியும் மத்திய அரசும் கிரியா ஊக்கித் திட்டத்தின் இரண்டாம் பகுதியை இன்று அறிவித்துள்ளன. இந்த திட்டங்கள் பற்றியும் இவை எந்த அளவுக்கு பயனளிக்கும் என்பது பற்றியும் இங்கு விவாதிப்போம். முதலில் தலைமை வங்கியின் அறிவிப்புகள் மாற்று வட்டி வீதம் (ரெபோ) ஒரு சதவீதம் (5.50%) குறைக்கப் பட்டுள்ளது. இதன் மூலமாக வணிக வங்கிகள் இந்திய தலைமை வங்கியிடம் இருந்து குறைந்த கால நோக்கில் கடன் பெறும் போது செலுத்த வேண்டிய வட்டித் தொகை குறையும். இதனால், வங்கிகள் பொது மக்களுக்கு வழங்கும் கடன் தொகைக்கான வட்டி வீதங்களை குறைக்கும் என எதிர்பார்க்கலாம். மேலும், ரொக்க கையிருப்பு வீதம் 0.50 சதவீதம் I5.00%) குறைக்கப் பட்டுள்ளது. இதனால், சுமார் 20,000 கோடி ரூபாய் வங்கிகளின் கையிருப்பில் அதிகமாக இருக்கும். இந்த நடவடிக்கை மூலமாக, பொது மக்களுக்கு பணத்தட்டுப்பாடு இல்லாமல் வங்கிகளால் கடன் தர முடியும். இரண்டாவது மத்திய அரசின் அறிவிப்புகள் வணிக நிறுவனங்களும், நிதி நிறுவனங்களும் வெளிநாட்டு கடன் பெறும் சில நடைமுறைகள் எளிமையாக்கப் பட்டுள்ளன. சிறிய நகர குடியிருப்பு...
கொஞ்சம் மாத்தி யோசி!