Wednesday, December 17, 2008

நாட்டுப் பற்றை எப்படி வெளிப்படுத்துவது?


முன்பெல்லாம் கிரிக்கெட் மாட்சுகளில் மட்டுமே வெளிப்பட்டுக் கொண்டிருந்த நாட்டுப் பற்று, தீவிரவாத தாக்குதல்கள் தொடர்கதையாகி விட்ட பிறகு இப்போதெல்லாம் ஒவ்வொரு தாக்குதலுக்குப் பிறகும் வெளிப் படுகிறது. உண்மையான நாட்டுப் பற்றை ஒவ்வொரு இந்தியரும் எவ்வாறு வெளிப் படுத்த வேண்டும் என்று இங்கு பார்ப்போம்.

முன்பெல்லாம் கிரிக்கெட் மாட்சுகளின் போது, தேசிய மூவர்ண உடைகளை அணிந்து கொண்டும், தேசிய கொடிகளை கையில் வைத்துக் கொண்டும், உடலில் வண்ணங்கள் தீட்டிக் கொண்டும் பலர் தங்களது தேசிய உணர்வை வெளிப்படுத்தியதுண்டு. போட்டிகளுக்கு நேரில் செல்ல முடியாதவர்கள், வீட்டில் தொலைக்காட்சிகளில் அந்த போட்டிகளை நேரடி ஒளிபரப்பில் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டும் டெண்டுல்கர் போன்றவர்கள் செஞ்சுரி அடிக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டும் தங்களது நாட்டுப் பற்றை வெளிப் படுத்தியதுண்டு. வசதி படைத்த சிலரோ பல ஆயிரம் செலவு செய்து பார் வசதியுடன் கூடிய ரெஸ்டாரண்டுகளில் நண்பர்களுடன் இந்த போட்டிகளை (காக்டேயிலுடன்) ரசித்துக் கொண்டே தேசிய உணர்வுகளை வெளிப் படுத்தியதுண்டு. இதற்கெல்லாம் வசதியில்லாதவர்கள் ரோட்டில் சில எலக்ட்ரானிக்ஸ் கடை வாசலில் இந்த மாட்சுகளை பார்த்துக் கொண்டும், ஸ்கோரை கேட்டுக் கொண்டும், எதிரணியை திட்டிக் கொண்டும் தமது தேசிய உணர்வை வெளிப் படுத்துவதுண்டு. இதெல்லாம் செய்யாதவர்கள் நாட்டின் மீது அக்கறை இல்லாதவர்கள் என்று சொல்வது கூட நாட்டுப் பற்றை ஒருவகையில் வெளிப்படுத்துவதுதான் என்று கருதுபவர்கள் கூட நாட்டில் உண்டு.

இப்போது ஒவ்வொரு தீவிரவாத தாக்குதலுக்குப் பின்னரும் நாட்டு பற்றை எப்படி வெளிப் படுத்துகிறோம் என்று பார்க்கலாம். தொலைக் காட்சி , பத்திரிக்கை, வலைதளம் போன்ற பொது ஊடகங்களில் நடைபெறும் விவாதங்களில் பங்கேற்று அரசியல்வாதிகளை, கண்காணிப்பு அதிகாரிகளை திட்டுவதும், பாகிஸ்தான் மீது படையெடுக்க வேண்டும் என்பதும், உயிர்த்தியாகம் புரிந்த வீரர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்துவதும் நாட்டுப் பற்றை வெளிப்படுத்திய திருப்தியைக் கொடுக்கின்றன. ஊடக விவாதங்களில் ஈடு பட முடியாதவர்கள் ஊடகங்களை விடாமல் பின்தொடர்ந்தும், வீடு மற்றும் அலுவலங்களில் மற்றவர்களோடு மேற்சொன்னவாறு கலந்துரையாடியும் தங்கள் நாட்டுப்பற்றை வெளிப்படுத்துகின்றனர். மேலும் பலர் நாட்டுப் பற்று மிக்க குறுந்தகவல்களை பரிமாறிக் கொண்டும் (இவற்றை ஆரம்பித்து வைப்பது வணிக நோக்கம் கொண்ட சிலரே என்ற சந்தேகம் எனக்குண்டு), மின்னஞ்சல்களை அனுப்பிக் கொண்டும் தங்கள் தேசிய உணர்வை வெளிப்படுத்துகின்றனர். சிலர் இதற்கு ஒரு குறிப்பிட்ட சமுதாயமே காரணம் என்று குறை சொல்லிக் கொண்டும் சிலர் மனித சங்கிலி, கையெழுத்துப் போராட்டம் நடத்திக் கொண்டும் நாட்டுப் பற்றை வெளிப் படுத்துகின்றனர்.

நாட்டுப் பற்று என்பது மிகவும் அவசியம் . இதில் மாற்றுக் கருத்து எதுவும் கிடையாது. மேற்சொன்னவை எல்லாம் நாம் தாக்கப் பட்டு விட்டோமே என்ற ஒரு வேகத்தில் மட்டுமே வரும் உணர்வுகள் என்பதும் வந்த வேகத்தில் காணாமல் போய் விடுகின்றன என்பதுமே வேதனையான விஷயங்கள்.

அது சரி. நாட்டுப் பற்று என்பது எப்படி இருக்க வேண்டும்? நாம் ராணுவத்திலோ, காவல் துறையிலோ பணியாற்ற வில்லையே? நம்மை போன்ற சாதாரண குடிமக்கள் எவ்வாறு நாட்டுப் பற்றை வெளிப்படுத்த முடியும்?

எப்படி ஒரு அமைதியான சராசரி வாழ்வில் நாட்டுப் பற்று வெளிப் பட வேண்டும் என்று பார்ப்போம்.

முதலில் சுவாமி விவேகானந்தர் ஒருமுறை அமெரிக்கா சென்ற போது நடைபெற்ற ஒரு சிறிய சம்பவம். அவருக்கு தூங்குவதற்கு முன்பு பால் அருந்தும் வழக்கம் இருந்தது. அவர் தங்கியிருந்த பகுதியிலோ பால் விற்கும் கடை எதுவும் காணப் பட வில்லை. சுவாமி அவர்கள் பாலுக்காக அங்கும் இங்கும் அலைந்து திரிந்து தேடிக் கொண்டிருந்தார். அதை கவனித்த ஒருவர் அவரிடம் வந்து எதற்காக தேடிக் கொண்டிருக்கிறார் என்று வினவ சுவாமியும் காரணத்தைச் சொன்னார். உடனே அந்த நபர் தனது வீட்டுக்குச் சென்று ஒரு கப் பால் கொண்டு வந்தார். சுவாமி மறுத்து பால் இல்லாமலேயே தாம் தூங்க முயற்சி செய்வதாக கூற, அந்த அமெரிக்கர் ஒரு பதில் அளித்தார். அது ஒவ்வொரு இந்தியனும் தெரிந்து புரிந்து கொள்ள வேண்டியது. அவர் சொன்னது " நீங்கள் திரும்பிச் சென்று அமெரிக்காவில் பால் கிடைக்க வில்லை என்று கூறக் கூடாது. ஒரு அமெரிக்கன் என்ற முறையில் என் நாட்டின் பெருமையைக் காப்பாற்ற வேண்டியது எனது கடமை"

இதுதான் நாம் நாட்டுப் பற்றை வெளிப் படுத்த வேண்டிய முறை. நம் ஒவ்வொருவரும் நாட்டின் பெருமையை தோளில் சுமக்க வேண்டும்.

காலையில் எழுவது முதல் இரவு தூங்கும் வரை நம்மாலும் பல வகையிலும் நாட்டுப் பற்றை வெளிப் படுத்த முடியும். சில உதாரணங்கள் கீழே.

மனம் மற்றும் உடல் உறுதி பெறுவதற்கான பயிற்சிகள் (நாட்டிற்கு வலுவானவர்கள் அதிகம் தேவைப் படுகிறார்கள்)

சாலை விதிகளில் தொடங்கி நாட்டின் அனைத்து சட்ட திட்டங்களையும் மதிப்பது. வரிகளை ஒழுங்காக செலுத்துவது.

சக இந்தியர்களை நேசிப்பது - நாடு என்பது நிலமும் நீர்நிலைகளும் மட்டும் அல்ல. இங்கு வாழும் மனிதர்களே இந்த இந்திய நாடு. நாட்டு மக்களை நேசிப்பதின் மூலமே நாட்டை நேசிக்க முடியும்.

சமுதாயத்தால் அங்கிகரிக்கப் பட்ட பணிகளில் மாத்திரம் ஈடுபடுவது. அந்தப் பணி எதுவானாலும் உண்மையாக உழைப்பது.

உண்மையான திறமையை மதிப்பது. நாட்டுப் பற்று உள்ளவர்களை அங்கீகரிப்பது. சமுதாயத்திற்கு தொண்டு செய்பவர்களைப் போற்றுவது. முக்கியமாக போலித்தனமானவர்களை ஒதுக்கி வைப்பது.

தம்மைச் சுற்றி நடைபெறும் அநியாங்களை தட்டிக் கேட்பது, முடியாவிட்டால் குறைந்தப் பட்சம் சுட்டிக் காட்டுவது, அதுவும் முடியா விட்டால் தட்டிக் கேட்பவர்களையும் சுட்டிக் காட்டுபவர்களையும் ஆதரிப்பது, அது கூட முடியாவிட்டால் குறைந்த பட்சம் அநியாயங்களுக்கு ஆதரவு கொடுக்காமல் இருப்பது. (தவறுகளை கண்டுக் கொள்ளாமல் இருப்பது கூட ஒருவகையில் அவற்றுக்கு ஆதரவு கொடுப்பது போலத்தான்).

எரிசக்தி மற்றும் இதர ஆதாரங்களையும் வீணடிக்காமல் வருங்காலத்திற்காக சேமிப்பது.

இவை மட்டுமல்ல. நடைபாதையில் கிடக்கும் ஆணி போன்ற ஒரு கூர்மையான பொருளையோ அல்லது மக்கள் வழுக்கி விழக் கூடிய பழத் தோல் போன்றவற்றை எடுத்து ஓரத்தில் போடுவது கூட ஒருவகையில் நாட்டுப் பற்றை வெளிப்படுத்துவதுதான்.

இன்னும் கூட பல வகைகளில் நம்மைப் போன்ற குடிமக்கள் நமது நாட்டுப் பற்றை வெளிப்படுத்தலாம். இவ்வாறான நாட்டுப்பற்றுக்கு விளம்பரமோ அல்லது மற்றவர்களின் சான்றிதழோ தேவை இல்லை. நமது ஆத்ம திருப்தியே போதும்.

நன்றி.

17 comments:

MARI MUTHU said...

நீங்கள் சொல்லி இருக்கும் அத்தனைக்கும் மற்றும் இந்த தாய் நாட்டிற்கும், தலை வணங்கி என்னுடைய வணக்கத்தையும் பக்தியையும் மரியாதையையும் செலுத்துகிறேன்.

வந்தே மாதரம்!, ஜெய் ஹிந்த்.!

Maximum India said...

அன்புள்ள "வாழ்க வளமுடன் வாழ்க வையகம்"

பின்னூட்டத்திற்கு நன்றி.

இன்னும் கூட பலவகைகளிலும் நாட்டுப் பற்றை வெளிப் படுத்தலாம் என்று சொல்லி இருக்கிறேன். இதைப் படிப்பவர்களும் கூட நம்மைப் போன்ற சாமான்யர்கள் செயல் படுத்தக் கூடிய சில யோசனைகளை தெரியப் படுத்தலாம்.

நன்றி.

MARI MUTHU said...

ஒரு சின்ன பரிந்துரை , எனக்கு தெரிந்ததை சொல்லுகிறேன் . நாம் வாங்கும் பொருள்களுக்கு பில் கேட்டு வாங்கி பணம் கொடுக்கலாம். இதன் மூலம் நமது அரசாங்கத்திற்கு சேரவேண்டிய வரி சரியாக போய் சேரும். மற்றும் நாம் செலுத்த வேண்டிய வரிகளையும் சரியாக செலுத்தினால் நமது நாடு வளரும். நமக்கு தெரிந்த வசதியானவர்களை கொஞ்சம்மாவது வருமான வரி கட்ட சொல்லி தாழ்மையுடன் கேட்கலாம். சொல்லி இருக்கும் அத்தனைக்கும் மற்றும் இந்த தாய் நாட்டிற்கும், தலை வணங்கி என்னுடைய வணக்கத்தையும் பக்தியையும் மரியாதையையும் செலுத்துகிறேன்.

வந்தே மாதரம்!, ஜெய் ஹிந்த்.!

Maximum India said...

அன்புள்ள மாரிமுத்து

பின்னூட்டத்திற்கு நன்றி

//ஒரு சின்ன பரிந்துரை , எனக்கு தெரிந்ததை சொல்லுகிறேன் . நாம் வாங்கும் பொருள்களுக்கு பில் கேட்டு வாங்கி பணம் கொடுக்கலாம்.//

இது நல்ல பரிந்துரை. பல சமயங்களில் பில் போடாமல் இருந்தால் விலை குறைவு என்று நம்மையும் நாட்டை ஏமாற்ற வைக்க முயற்சி செய்யும் வணிகர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

// சொல்லி இருக்கும் அத்தனைக்கும் மற்றும் இந்த தாய் நாட்டிற்கும், தலை வணங்கி என்னுடைய வணக்கத்தையும் பக்தியையும் மரியாதையையும் செலுத்துகிறேன். //

உங்களுடைய மற்றும் முதலாவதாக பின்னூட்டம் இட்டிருக்கும் நண்பரின் தாய்நாட்டுப் பற்றுக்கு எனது வந்தனங்கள் பல.

வந்தே மாதரம்!, ஜெய் ஹிந்த்.!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஐயா,

நாட்டுப் பற்று நீங்கள் கூறிய கருத்துக்களை

(அதுதான் தெரியுமே.....)

விட சொல்லியமுறை சிறப்பாக இருந்தது.


இதேமுறையில் இந்தக் கருத்துக்களை நானும் சொல்ல முயற்சிக்கிறேன். நல்ல முயற்சி.

Maximum India said...

அன்புள்ள சுரேஷ்

பின்னூட்டத்திற்கு நன்றி

//இதேமுறையில் இந்தக் கருத்துக்களை நானும் சொல்ல முயற்சிக்கிறேன்//

உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்

DHANS said...

மிக அருமையான பதிவு...

தாங்கள் சொன்னவற்றை ஏற்கனவே செயல்படுத்த முயற்சித்து வருகிறேன்.

என்ன நம்மை ஒருமாதிரி பார்கிறார்கள் ஆனால் அதிலும் ஒரு பெருமை, மற்றவர்களை விட வித்தியாசமாய் இருக்கிறோமே என்று.

கடந்த வாரம் ஒரு கடையில் சில பொருட்கள் வங்கி அதற்க்கு பில் கேட்டதற்கு " quotation" தாளில் கொடுத்தனர், அதை வாங்க மறுத்து பில் புக்கில் கேட்டதற்கு இருநூறு அதிகமாகும் என்றனர், அதையும் சேர்த்து வாங்கின என்னை மொத்த கடையே ஒரு மாதிரி பார்த்தது.

People laugh because I am different. And I laugh because they are all the same..

That's called ATTITUDE

- Swami Vivekananda

இதுதான் இப்போதைக்கு என்னுடைய கொள்கை

வால்பையன் said...

திண்ணை பேச்சு வீணர்களுக்கு சரியான சவுக்கடி!

உங்களுடய கருத்துகள் அனைத்தையும் ஏற்று கொள்கிறேன்

raje said...

நல்ல பின்னூட்டம்
நாட்டுபற்றூடன் நம்மிடம் நல்ல சுயக்கட்டுபாடும் அவசியம்

Maximum India said...

அன்புள்ள DHANS

அருமையான பின்னூட்டத்திற்கு நன்றி. உங்களை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. மேலும் கூட பல சிறந்த நாட்டுப் பற்றாளர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு விளம்பரம் கிடைப்பதில்லை. அவர்களுக்கு விளம்பரம் தேவையுமில்லை.

நானும் கூட உங்களைப் போலவே இந்த பதிவில் உள்ளவற்றை பின்பற்ற முயற்சித்து வருகிறேன். (எழுதிட்டு எழுதியவரே பின்பற்ற வில்லையென்றால் எப்படி?)

Maximum India said...

திண்ணை பேச்சு வீணர்களுக்கு சரியான சவுக்கடி!

உங்களுடய கருத்துகள் அனைத்தையும் ஏற்று கொள்கிறேன்

Maximum India said...

அன்புள்ள வால்பையன்!

//திண்ணை பேச்சு வீணர்களுக்கு சரியான சவுக்கடி!

உங்களுடய கருத்துகள் அனைத்தையும் ஏற்று கொள்கிறேன்//

இந்த கருத்துக்கள் பல நாள் என் உள்மனதில் இருந்தவை. பல நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டும் இருக்கிறேன். இப்போது இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

முன்பெல்லாம், டெண்டுல்கர் விளையாட வரும் போது பலரும் (முக்கியமாக வணிக நோக்கமுடையவர்கள்) உச்சரிக்கும் வாசகம் இது. "இவர் ஒருவரே நாட்டுக்காக விளையாடுகிறார்" நான் அவர்களைப் பார்த்து கேட்க விரும்பிய கேள்வி "மற்ற பத்து பேரும் யாருக்காக விளையாடுகிறார்கள்?" இப்படி ஒரு குழு விளையாட்டாக இருக்க வேண்டிய ஒரு விளையாட்டில் கூட தனி நபர் புகழ்ச்சியும் நாட்டுப் பற்றை காசாக்க நினைக்கும் வணிக புத்தியும் கண்டால் எனக்கு கோபமாக வருகிறது. நாட்டு பற்று என்பது எவரது தனிச் சொத்தும் அல்ல. அனைவருக்கும் இருக்க வேண்டியது மற்றும் அனைவரிடமும் இருப்பதே ஆகும்.

Maximum India said...

நல்ல பின்னூட்டம்
நாட்டுபற்றூடன் நம்மிடம் நல்ல சுயக்கட்டுபாடும் அவசியம்

Maximum India said...

அன்புள்ள ராஜே

//நல்ல பின்னூட்டம்
நாட்டுபற்றூடன் நம்மிடம் நல்ல சுயக்கட்டுபாடும் அவசியம்//

இந்த பதிவின் மீது பின்னூட்டம் இட்டவர்கள் அனைவருக்கும் (உங்களையும் சேர்த்து) சிரம் தாழ்ந்த வணக்கங்கள் மற்றும் நன்றிகள்.

கபீஷ் said...

Good One MI!!
I do follow almost all you said

Maximum India said...

Dear Kabeesh

Thanks for the comments.

//I do follow almost all you said//

Nice hear something like this from my friends.

MARI MUTHU said...

U CAN MAKE A HUGE DIFFERENCE TO THE INDIAN ECONOMY BY FOLLOWING A FEW SIMPLE STEPS.


Please spare a couple of minutes here........ for the sake of India ... our country..


I got this article from one of my friends, but it's true, I can see this from day to day life,

Small example,
Before 5 months 1 CAN $ = IND Rs 32
After 5 months. Now it is 1 CAN $ = IND Rs 37

Do you think Canadian Economy is booming? No, but Indian Economy is Going Down.


Our Economy is in YOUR hands


INDIAN economy is in a crisis. Our country like many other ASIAN countries is undergoing a severe economic crunch. Many INDIAN industries are closing down. The INDIAN economy is in a crisis and if we do not take proper steps to control those, we will be in a critical situation.


More than 30000 crore rupees of foreign exchange are being siphoned out of our country on products such as cosmetics, snacks, tea, beverages... etc which are grown, produced and consumed here .


A cold drink that costs only 70 / 80 paisa to produce is sold for NINE rupees, and a major chunk of profits from these are sent abroad. This is a serious drain on the INDIAN economy.


'COCA COLA 'and' SPRITE' belong to the same multinational company, 'COCA COLA'?


Coke advertisements says ' JO CHAHE HO JAYE, COCACOLA ENJOY'

(Let Whatever happen, you enjoy coke)



What can you do?








You can consider some of the better alternatives to aerated drinks.
You can drink LEMON JUICE, FRESH FRUIT JUICES, CHILLED LASSI (SWEET OR SOUR), BUTTER MILK, COCONUT WATER, JALJEERA, ENERJEE, MASALA MILK........ ..


Everyone deserves a healthy drink, including you!
Over and above all this, economic sanctions have been imposed on us. We have nothing against Multinational companies, but to protect our own interests we request everybody to use INDIAN products only for next two years. With the rise in petrol prices, if we do not do this, the rupee will devalue further and we will end up paying much more for the same products in the near future.


What you can do about it?

1. Buy only products manufactured by WHOLLY INDIAN COMPANIES.
2. ENROLL as many people as possible for this cause.


Each individual should become a leader for this awareness.

This is the only way to save our country from severe economic crisis. You don't need to give-up your lifestyle. You just need to choose an alternate product.

All categories of products are available from WHOLLY INDIAN COMPANIES.

LIST OF PRODUCTS

BATHING SOAP: USE - CINTHOL & OTHER GODREJ BRANDS, SANTOOR, WIPRO SHIKAKAI, MYSORE SANDAL, MARGO, NEEM, EVITA, MEDIMIX, GANGA , NIRMA BATH & CHANDRIKA

INSTEAD OF - LUX, LIFEBOY, REXONA, LIRIL, DOVE, PEARS, HAMAM, LESANCY, CAMAY, PALMOLIVE


TOOTH PASTE: USE - NEEM, BABOOL, PROMISE, VICO VAJRADANTI, PRUDENT, DABUR PRODUCTS, MISWAK, AJANTA.

INSTEAD OF - COLGATE, CLOSE UP, PEPSODENT, CIBACA, FORHANS, MENTADENT, ORAL-B.


SHAVING CREAM: USE - GODREJ, EMANI

INSTEAD OF - PALMOLIVE, OLD SPICE, GILLETE


BLADE: USE - SUPERMAX, TOPAZ, LAZER, ASHOKA

INSTEAD OF - SEVEN-O -CLOCK, 365, GILLETTE


TALCUM POWDER: USE - SANTOOR, GOKUL, CINTHOL, WIPRO BABY POWDER, BOROPLUS


INSTEAD OF - PONDS, OLD SPICE, JOHNSON BABY POWDER, SHOWER TO SHOWER


MILK POWDER: USE - INDIANA, AMUL, AMULYA

INSTEAD OF - ANIKSPRAY, MILKANA, EVERYDAY MILK, MILKMAID.


SHAMPOO: USE - LAKME, NIRMA, VELVET INSTEAD OF - HALO, ALL CLEAR, NYLE, SUNSILK, HEAD AND SHOULDERS, PANTENE

MOBILE CONNECTIONS USE - BSNL, AIRTEL INSTEAD OF - HUTCH


Every INDIAN product you buy makes a big difference. It saves INDIA . Let us take a firm decision today.


BUY INDIAN TO BE INDIAN we are not against foreign products.

WE ARE NOT ANTI-MULTINATIONAL.

WE ARE TRYING TO SAVE OUR NATION.

EVERY DAY IS A STRUGGLE FOR REAL FREEDOM.

WE ACHIEVED OUR INDEPENDENCE AFTER LOSING MANY LIVES.

THEY DIED PAINFULLY TO ENSURE THAT WE LIVE PEACEFULLY.



THE CURRENT TREND IS VERY THREATENING!!!!


MULTINATIONALS CALL IT GLOBALISATION OF INDIAN ECONOMY. FOR INDIANS LIKE YOU AND ME IT IS RECOLONISATION OF INDIA ...

THE COLONIST'S LEFT INDIA THEN. BUT THIS TIME THEY WILL MAKE SURE THEY DON'T MAKE ANY MISTAKES.


WHO WOULD LIKE TO LET A' GOOSE THAT LAYS GOLDEN EGGS' SLIP AWAY.



PLEASE REMEMBER: POLITICAL FREEDOM IS USELESS WITHOUT ECONOMIC INDEPENDENCE .


RUSSIA , S.KOREA , MEXICO ..........THE LIST IS VERY LONG!!
LET US LEARN FROM THEIR EXPERIENCE AND FROM OUR HISTORY.


LET US DO THE DUTY OF EVERY TRUE INDIAN.


FINALLY: IT'S OBVIOUS THAT U CAN'T GIVE UP ALL OF THE ITEMS MENTIONED ABOVE,

Blog Widget by LinkWithin