Skip to main content

அம்மா குடித்த ஞானப் பால்

(இன்று வார இறுதி நாளல்லவா? ஒரு கதை எழுத முயற்சி செய்யலாம் என்று ஆசை. படித்துப் பாருங்கள்.)

அவளுக்கு நிறைய கர்வம் உண்டு. அவள் ரொம்ப அழகென்று. அந்த நினைப்பில் ஒரு நியாயம் உண்டு. கடந்து சென்ற பல ஆண்கள் அவளைத் திரும்பி திரும்பி பார்த்திருக்கிறார்கள். அவளுடைய நிறுவனத்தில் அவளுக்கென்று தனி மரியாதை. அவளுடைய நிறுவனம் பரஸ்பர நிதி திட்டங்களை மார்க்கெட்டிங் செய்யும் நிறுவனம் ஆகும். அது சம்பந்தமாக நிறுவனம் நடத்திய பல பொது நிகழ்ச்சிகளில் அவளே முன்னிலைப் படுத்தப் பட்டிருக்கிறாள். பங்கு சந்தைகள் மற்றும் நிதி சந்தைகள் விஷயத்தில் அவள் ஒரு கற்றுக் குட்டியே ஆயினும், சந்தை போக்கு பற்றி அவள் விவரிக்கும் போது, சந்தை விவரம் நன்கு தெரிந்த விற்பன்னர்கள் கூட மது அருந்திய வண்டுகள் போல மயங்கி கிறங்கி போய் கேட்டுக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

குழந்தை பெற்றுக் கொண்டால் தனது அழகு போய் விடும் என்று பயந்த அவள் பிள்ளை பெறுவதை பல காலம் தள்ளிப் போட்டு வந்தாள். அவளது கணவன் பலவாறு முயற்சி செய்து பிள்ளை பெற்றுக் கொண்டும் அழகை இழக்காத சில உள்நாட்டு வெளிநாட்டு நடிகைகளை உதாரணம் காட்டி ஒரு வழியாக அவளை குழந்தை பெற்றுக் கொள்ள சம்மதிக்கச் செய்தான். அழகான குழந்தையும் பிறந்தாகி விட்டது. இப்போது அவர்கள் இருவருக்கும் ஒரு வாக்குவாதம். (அழகைக் காப்பாற்ற) சில வாரங்கள் வரையே குழந்தைக்கு தாய்ப் பால் கொடுக்க முடியும் என்கிறாள். அவனோ குறைந்தது சில மாதங்களாவது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்கிறான். இந்த முடிவை எடுக்கும் பொறுப்பை அவர்களது குடும்ப மருத்துவருக்கு கொடுக்க முடிவு செய்கிறார்கள் அவர்கள். அவளோ, குடும்ப மருத்துவரிடம் சில வாரங்களில் நிறுத்தப்படும் தாய்ப்பாலுக்கு பதிலாக குழந்தைக்கு கொடுக்க வேண்டிய மாற்று உணவு எது என்று மட்டும் கேட்கும் மறைமுக உள்நோக்கத்துடன் சென்று மருத்துவருக்காக மருத்துவமனையில் தன் குழந்தையுடன் ஒரு மாலை வேளையில் காத்திருக்கிறாள்.

அப்போது, திடீரென்று கீழ் தளத்தில் ஒரே அலறல் சத்தம். ஆம். அன்று அந்த நகரத்திற்கே ஒரு சோக தினம். தீவிரவாதிகள் பயங்கர ஆயுதங்களுடன் குழந்தைகள்/பெண்கள்/பிரசவ மருத்துவமனை என்றும் பாராமல் அந்த மருத்துவமனைக்குள்ளும் நுழைந்து விடுகிறார்கள். கண்ணில் கண்டவரையெல்லாம் குழந்தைகள் என்று கூட பார்க்காமல் துப்பாக்கியால் சுட்டுத் தள்ளுகிறார்கள்.

அச்சத்தில் நடுங்கி போய் மேல்தளத்தில் இருந்தவர்கள் (நமது கதாநாயகியையும் சேர்த்து) எல்லோரும் ஒரு சிறிய அறைக்குள் சென்று தாளிட்டுக் கொள்கிறார்கள். மேலேயும் வந்த அந்த பயங்கரவாதிகள் ஒவ்வொரு பகுதியாக கொலைவெறி வேட்டை நடத்தி வருகிறார்கள். பல தாய்மார்களும் பல குழந்தைகளும் அந்த சிறிய அறைக்குள் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள். புழுக்கம் தாளாமல் சில குழந்தைகள் சிணுங்க ஆரம்பிக்க ஒரு புத்திசாலி நர்ஸ் ஒரு யோசனை கூறுகிறார். "தீவிரவாதிகள் இங்கிருந்து செல்லும் வரை அனைத்து குழந்தைகளுக்கும் தாய்ப்பால் குடுத்துக் கொண்டே இருங்கள் "

இந்த முறை விரைவில் செயல் பட்ட நம் அதிரடிப் படை வீரர்கள், அந்த தீவிரவாதிகளை உடனடியாக முடித்துக் கட்ட, அறையில் இருந்த அனைவரும் பத்திரமாக வீடு திரும்புகிறார்கள்.

சில நாட்கள் கழிந்த பிறகு தாய்ப்பால் கொடுக்கும் விவகாரத்தை மீண்டும் எழுப்பிய கணவனிடம் அவள் சொன்னது " சில மாதங்கள் அல்ல சில வருடங்களுக்கு நான் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பேன் என்று" அவளது மனமாற்றத்திற்கு அவனுக்கு காரணம் ஏதும் விளங்க வில்லை. நமக்குத்தானே தெரியும் அவள் ஞானப் பால் குடித்தவளென்று.

நன்றி.

(பின்குறிப்பு: கத பரவால்லேன்னு ஒரு நாலு பேர் பின்னூட்டம் இல்லேன்னா வோட்டு மூலம் சொன்னாப் போதும். இன்னொரு தரம் கத எழுதுவேன். ஐயோ! இப்பயே கண்ண கட்டுதேன்னு சொல்றீங்களா? பயபடாதீங்க அடிக்கடி இல்ல, எப்பயாவது ஒரு தரம்தான் . அப்பாடா தப்பிச்சமுன்னு நிம்மதி பெருமூச்சு விடுறீங்களா? அதுக்குள்ளே இன்னொரு விஷயமும் கேட்டுக்குங்க. ஒரு கவித கூட எழுத முயற்சி பண்ணிக்கிட்டிருக்கேன். முயற்சி திருவினையாக்கும்ன்னு பெரியவங்க சொல்லுவாங்க.)

Comments

கபீஷ் said…
கதை பரவாயில்ல!!!! :-):-):-):-)
சில நாட்கள் கழிந்த பிறகு தாய்ப்பால் கொடுக்கும் விவகாரத்தை மீண்டும் எழுப்பிய கணவனிடம் அவள் சொன்னது "//



சில விஷயங்களை புரிய வைக்க துப்பாக்கி முனை தேவைப் படுகிறது
//அழகை இழக்காத சில உள்நாட்டு வெளிநாட்டு நடிகைகளை உதாரணம் காட்டி ஒரு வழியாக //


பாவம் அந்தக் கணவன்
Unknown said…
முதல் கதையா? நல்லா இருக்குங்க. நல்ல கரு. என்ன கொஞ்சம் "finetune" பண்ண சரி ஆகிவிடும்.

நம்ம வலைக்கு வாங்க. .கருத்து சொல்லுங்கள்.ஸ்பேம் மெயில்/மழை/ஹைகூ/காதல் கவிதைகள் அண்ட் சிறுகதை.எல்லாம் உண்டு.

ஸமீபத்துல ''சிறு கதை எழுதுவது எப்படி?பதிவர்களே படியுங்கள்!" ஒரு பதிவு போட்டிருக்கேன்.
Maximum India said…
அன்புள்ள கபீஷ்

நன்றி.
Maximum India said…
அன்புள்ள சுரேஷ்

பின்னூட்டத்திற்கு நன்றி

//சில விஷயங்களை புரிய வைக்க துப்பாக்கி முனை தேவைப் படுகிறது//

சரியாக சொன்னீர்கள்.
Maximum India said…
அன்புள்ள ரவிசங்கர்

பின்னூட்டத்திற்கு நன்றி

//முதல் கதையா? நல்லா இருக்குங்க. நல்ல கரு. என்ன கொஞ்சம் "finetune" பண்ண சரி ஆகிவிடும். //

இது மூன்றாவது. முதலாவது ஆங்கில பதிவில் (Laymen Brothers Vs Lehman Brothers). இரண்டாவது தமிழ் பதிவில் (ஆரு வீட்டு சொத்துக்கு ஆருங்க அடுச்சுக்கறது?) முதலிரண்டும் உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட நையாண்டி கற்பனைக் கதைகள். இது ஒரு உண்மை சம்பவங்களின் பின்னணியில் ஒரு கற்பனைக் கதை. எப்படி fine tune பண்ணறதுன்னு அப்புறம் எனக்கு மட்டும் சொல்லுங்க ப்ளீஸ் :)

//நம்ம வலைக்கு வாங்க. .கருத்து சொல்லுங்கள்.ஸ்பேம் மெயில்/மழை/ஹைகூ/காதல் கவிதைகள் அண்ட் சிறுகதை.எல்லாம் உண்டு.

ஸமீபத்துல ''சிறு கதை எழுதுவது எப்படி?பதிவர்களே படியுங்கள்!" ஒரு பதிவு போட்டிருக்கேன்.//

பார்த்தேன். கருத்தும் சொல்லி இருக்கேன்.

நன்றி :)
raje said…
இம் நல்ல தொடக்கம் பங்கு சந்தை போல.

ராஜேஷ் கண்ணன்
Maximum India said…
அன்புள்ள ராஜேஷ்கண்ணன்

//இம் நல்ல தொடக்கம் பங்கு சந்தை போல.//

வாழ்த்துக்களுக்கு நன்றி.
KARTHIK said…
// அப்பாடா தப்பிச்சமுன்னு நிம்மதி பெருமூச்சு விடுறீங்களா? அதுக்குள்ளே இன்னொரு விஷயமும் கேட்டுக்குங்க. ஒரு கவித கூட எழுத முயற்சி பண்ணிக்கிட்டிருக்கேன். முயற்சி //

இதுவும் உண்மைசம்பவத்தின் அடிப்படையில் அமைந்த கதையா இருக்கும்னு நெனச்சேன்.
ஆனா அப்படி இல்லை.
கதை நல்லாதான் இருக்கு.
Maximum India said…
அன்புள்ள கார்த்திக்

//கதை நல்லாதான் இருக்கு.//


பின்னூட்டத்திற்கும் பாராட்டுக்கும் நன்றி.

மனதில் இப்படி இருந்தால் எப்படி இருக்கும் என்று தோன்றியது. முடிந்த வரை கதையாக எழுதி விட்டேன்.

கதை பரவால்லேன்னு கபீஷ் சொல்ல நல்லாத்தான் இருக்குன்னு நீங்க சொல்லி இருக்கீங்க. இருந்தாலும் இந்தியர்களுக்கு சகிப்புத் தன்மை கொஞ்சம் அதிகம்தேன்.

ஆனா ஒன்னு (ஆனான்னா ஒன்னு ஆவனான்னா ரெண்டுன்னு சொல்லிடாதீங்க). கதை எழுதுவது நம்ம ஏரியா இல்லேங்கனா. அதுக்குன்னு நெறைய பேர் தனி தெறமசாலிங்க இருக்காங்க (ஒரு வேள லீவு போட்டு யோசிப்பாங்களா?)

ஏதோ ஒரு ஆசைக்கு அப்பப்ப (இது என்ன சின்னப் பிள்ளத்தனமா இல்ல இருக்குன்னு சொன்னாலும் சரி) ஒன்னொன்னு பப்ளிஷ் பண்ணி உடறேன். (பின்ன என்ன ஆனந்த விகடன்லேயா பப்ளிஷ் பண்ணுவாங்கன்னு கேக்காதீங்க) இங்கதேன் நாம்பளே ரைட்டரு நாம்பளே பப்ளிஷரு. :) :) :)
KARTHIK said…
// ஏதோ ஒரு ஆசைக்கு அப்பப்ப (இது என்ன சின்னப் பிள்ளத்தனமா இல்ல இருக்குன்னு சொன்னாலும் சரி) ஒன்னொன்னு பப்ளிஷ் பண்ணி உடறேன்.//

பண்ணுங்க ப்ண்ணுங்க
போக போக நல்லாவரும்.
இதுவும் நல்லகதைதான்.
ஆனா முடிவு கொஞ்சம் யூகிக்கும் படியாக இருந்தது.

கதையின் தலைப்பு அருமை
Maximum India said…
அன்புள்ள கார்த்திக்

வாழ்த்துக்களுக்கு நன்றி.

//ஆனா முடிவு கொஞ்சம் யூகிக்கும் படியாக இருந்தது.//

அடுத்த முறை முடிவு யூகிக்க முடியாத படி முழு நீள சஸ்பென்ஸ் கதை. முடிவு எனக்கே தெரியாதுன்னா பாத்துக்கோங்களேன் :)
கதை அருமையாக இருக்குது

கவிதை எழுதுங்க ஆனா காதல் கவிதை மட்டும் வேண்டாம்
Maximum India said…
நன்றி வால்பையன்

முதல் கமெண்டு பரவால்லேன்னு வந்தது, இரண்டாவது நல்லாதான் இருக்குன்னு வந்தது. இப்ப நீங்க அருமையாக இருக்குதுன்னு வேற சொல்லிரிக்கீங்க. நல்ல முன்னேற்றம்தான்.

மொத்தத்தில் ஒரு கதை ஆசிரியர் உருவாகிறார்.

//கவிதை எழுதுங்க ஆனா காதல் கவிதை மட்டும் வேண்டாம்//

காதல் கவிதைல்லாம் கல்யாணத்துக்கு முன்னமே எழுத வரல. இப்ப எங்க வரப் போகுது?

நன்றி

Popular posts from this blog

வாண வேடிக்கையா? வெறும் புஸ்வாணமா?

பெரிதாக வெடிக்கப் போகிறது அல்லது வண்ண மயமான ஒளிச்சிதறல்கள் பூக்கப் போகின்றன என்றெல்லாம் பெரிதாக நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போது, சில பட்டாசுகள் புஸ்வாணமாக போவதுமுண்டு. தீபாவளி தினத்தன்று நமக்கெல்லாம் சில சமயங்களில் ஏற்பட்டு விடும் இது போன்ற ஒரு அனுபவம் சென்ற வாரம் பங்குசந்தையிலும் ஏற்பட்டது. சென்ற வாரம் நம்மை ஏமாற்றிய புஸ்வாணங்களைப் பற்றி முதலில் பார்ப்போம். முதல் புஸ்வானம் - பாரதி ஏர்டெல் தென் ஆப்பிரிக்க தொலைபேசி நிறுவனமான எம்டிஎன்-னுடான இணைப்பு இல்லையென்றவுடன் முதலில் துள்ளிக் குதித்த பாரதி பங்கு, வெகு சீக்கிரத்திலேயே ஆடி அடங்கி விட்டது. எம்டிஎன்னுடன் இணையாததால் சில அபாயங்கள் நீங்குகின்றன என்று அந்த பங்கினை அதிக விலையில் வாங்கி வைத்து ஆசையுடன் காத்திருந்த பலருக்கு பாரதி ஒரு பெரிய புஸ்வாணமாகவே அமைந்தது. இரண்டாவது புஸ்வானம் - ரிலையன்ஸ் பத்து ஆண்டுகளுக்கு பின்னர் ரிலையன்ஸ் நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு போனஸ் பங்கு கொடுப்பதாக அறிவித்தது. இந்தியாவின் 'நம்பர்-ஒன்' வணிகத் தாளான எகோநோமிக் டைம்ஸ் பத்திரிக்கை, தீபாவளி வாணவேடிக்கை ஆரம்பித்து விட்டதாக முதல் பக்கத்தில் தலைப்ப...

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

இந்தியா தாக்குப் பிடிக்குமா?

இன்றைய உலகப் பொருளாதாரத் தேக்க நிலையில், இந்தியாவால் தாக்குப் பிடிக்க முடியுமா என்பது பற்றி பார்ப்போம். சமீபத்தில் வெளியிடப் பட்ட மத்திய புள்ளியல் (மத்திய அரசு) நிறுவனத்தின் மதிப்பீட்டின் படி இந்தியப் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 7.1 சதவீதம் வளர்ச்சியுறும் என்று தெரிகிறது. இது சரியாக இருக்கும் பட்சத்தில் உலகிலேயே இரண்டாவதாக வேகமாக வளர்ச்சியுறும் நாடு இந்தியாவாகத்தான் இருக்கும் (சீனா முதலாவது). சென்ற ஆண்டில் ஒன்பது சதவீதம் வளர்ச்சி பெற்றிருந்த இந்தியப் பொருளாதாரம் செப்டம்பர் 2008 வரையிலான முதல் அரையாண்டில் 7.80% வளர்ச்சிப் பெற்றிருந்தது. பொதுவாகவே பண்டிகைக் காலமாக கருதப் படுகிற இரண்டாவது அரையாண்டே தொழிற் துறையில் அதிக வளர்ச்சியைக் காட்டும் என்றாலும் இந்த முறை இந்தியத் தொழில் துறை பெரும் தேக்க நிலையில் இருந்து வந்திருக்கிறது என்பது கவனிக்கத் தக்கது. இந்திய தொழிற் வளர்ச்சி கடந்த இரு மாதங்களாக மிகவும் குறைந்து காணப் படுவதாலும் ஏற்றுமதியோ இறங்குமுகத்தில் இருப்பதாலும் இந்திய அரசாங்கம், மார்ச் 2009 வரையிலான நிதி ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் நமது பொருளாதாரம் குறைந்த வளர்ச்சியே (6.30%) இரு...