வலைப்பூ ஆரம்பித்து இரண்டு மாதங்கள் மட்டுமே முடிந்த நிலையில் "சந்தை நிலவரம்" இப்போது பிரபல தமிழ் வார இதழான ஆனந்த விகடன் வரவேற்பறையை அலங்கரிக்கும் பெருமையைப் பெற்றுள்ளது. விவரங்கள் உள்ளே.
இதழ் 10.12.2008 பக்கம் எண் 47.

இந்த மகிழ்ச்சியான தருணத்தை தங்களுடன் பகிர்ந்து கொள்ள நான் விரும்புகின்றேன். மேலும் இந்த வலைப்பூ ஆரம்பித்த நாளிலிருந்து இன்று வரை பல வகையிலும் பின்னூட்டம் அளித்து ஊக்கம் அளித்தவர்கள், வருகை புரிந்து உற்சாகம் தந்தவர்கள் மற்றும் அக்கறையோடு அறிவுரை சொன்னவர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். (தனித்தனியான நன்றிகள் எனது நூறாவது பதிவில்)
புதியவர்களை உற்சாகப் படுத்தும் இந்த சிறந்த சேவையினை புரியும் விகடன் குழுமத்திற்கும் வந்தனம் கலந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ் கூறும் நல்லுலகம் தந்த இந்த அங்கீகாரத்திற்கு என்றும் கடமை பட்டிருப்பதுடன் இந்த அங்கீகாரம் தரும் கூடுதல் பொறுப்புகளையும் உணர்ந்து வருங்காலத்தில் இன்னும் சிறப்புடன் கூடிய பதிவுகளை வழங்க முயற்சி செய்வேன் என்று உறுதி கூறுகிறேன்.
நண்பர்களே, நீங்கள் இது வரை தந்த ஆதரவு மேலும் தொடரவும் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ் தாய்க்கு வந்தனம்
நன்றி.
18 comments:
Congrats! u deserve this!!!!
Thank you Kabeesh
With all your support and wishes It has happened
இந்த ஆனத்த விகடன் வரவேற்ப்பறை பாத்துத்தான் இப்படி ஒரு உலகம் இருப்பதையே அறிந்துகொண்டம்.
உங்களுக்கு வாழ்த்துக்கள்
ஆவிக்கு நன்றிகள்.
ஏற்கனவே ஒரு முறை வாழ்த்திவிட்டாலும், திரும்ப திரும்ப வாழ்த்துனும் போலிருக்கு,
உண்மையில் உங்களை அறிமுக படுத்தி ஆனந்த விகடன் பெருமை கொள்கிறது.
இதன் பின் உங்களுக்கு மேலும் சிறப்பாக எழுதும் பொறுப்பு கொடுக்க பட்டுள்ளது. மேலும் உங்களிடமிருந்து பல விசயங்கலை தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன்.
நல்ல முயற்சிகளுக்கு மிக விரைவிலேயே அங்கீகாரம் கிடைக்கும் என்று இது பட்டயம் சொல்கிறது. வாழ்த்துக்கள்.
வலைப்பதிவை மிக சரியான முறையில் பயன்படுத்தி நல்ல விஷயங்களை நளினமாக சொல்லிவருகிறீர்கள். நற்பணி தொடரட்டும்.
அன்புள்ள கார்த்திக்
வாழ்த்துக்களுக்கும் தொடர்ந்து அளித்து வரும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி :)
அன்புள்ள வால்பையன்
வாழ்த்துக்களுக்கும் தொடர்ந்து அளித்து வரும் ஆதரவுக்கும் நன்றிகள் பல.
//இதன் பின் உங்களுக்கு மேலும் சிறப்பாக எழுதும் பொறுப்பு கொடுக்க பட்டுள்ளது.//
நிச்சயமாக.
//மேலும் உங்களிடமிருந்து பல விசயங்கலை தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன்//
நானும் முடிந்த வரை பல விஷயங்களை பற்றி விவாதிக்க ஆர்வமாக உள்ளேன்.
நன்றி
அன்புள்ள நெற்குப்பை ஐயா
உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.
இந்த அங்கீகாரம் கிடைக்க நீங்கள் கொடுத்த ஊக்கமும் (பல அக்கறை கலந்த) அறிவுரைகளும் மிகவும் உதவியாக இருந்தன.
நன்றிகள் பல.
வாழ்த்துக்கள்
நல்வாழ்த்துக்கள்...
நல்லதொரு முயற்சி
உங்கள் பணி தொடரட்டும்...
அன்புள்ள கிரி
வாழ்த்துக்களுக்கு நன்றி
அன்புள்ள தங்கராசா
வாழ்த்துக்களுக்கும் ஊக்கத்திற்கும் நன்றி
வாழ்த்துக்கள்
மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
அன்புள்ள சங்கர்
வாழ்த்துக்களுக்கு நன்றி
அன்புள்ள பொதுஜனம்
வாழ்த்துக்களுக்கு நன்றி
வாழ்த்துகள்.......
கடின உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் இது....
தொடர்க..... வெல்க......
அன்புள்ள அட்வகேட் ஜெயராஜன் ஐயா
வாழ்த்துக்களுக்கு நன்றி. சட்டம் போன்ற கடினமான தொழிற் நுட்ப விஷயங்களையும் எளிமையான தமிழில் அருமையாக விளக்க முடியும் என்று நிருபித்த உங்கள் எழுத்துக்களும் எனக்கு முக்கிய முன்னோடியாக இருந்திருக்கின்றன,
தொடர்ந்து தங்களது ஆதரவையும் அக்கறையையும் எதிர்நோக்கும்
Post a Comment