
பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இறைவன், இறைதூதர் இப்ராஹிம் முன்னே தோன்றி உனக்கு மிகவும் பிடித்ததை எனக்கு தருவாயா என்று கேட்க அவர் தனது பிரியமான மகனையே அர்ப்பணிக்க முடிவு செய்த நாளே இந்த திருநாள் என்று கருதப் படுகிறது. மேலோட்டமாக பார்க்கும் போது, இந்த நிகழ்வு இறையாளர் இப்ராகிமின் ஆழமான கடவுள் பக்தியையும் கடவுள் நம்பிக்கையையும் வெளிக்காட்டுவது போல தோன்றலாம். ஆனால், எல்லாம் வல்ல இறைவனுக்கே கூட ஏதாவது ஒன்று தர விரும்பும் அளவுக்கு உயரிய கருணையும் ஈகையும் கொண்டது ஒரு மனித மனம் என்பதை உலகிற்கு உணர்த்தும் உன்னதமான நிகழ்வு இது என்பது எனது கருத்து. இப்படி தம்மைப் படைத்த இறைவனுக்குக் கூட ஏதாவது வழங்க எண்ணும் மனித உள்ளம் தன்னை சுற்றிலும் உள்ளவர்களுக்கும் எளியவர்களுக்கும் கூட கருணை காட்ட வேண்டும் என்பதையே இந்த ஈகைத் திருநாள் அனைவருக்கும் உணர்த்துகிறது என்று நம்புகிறேன்.
பணம் தேவையில்லை. கருணை காட்ட மனம் மட்டுமே போதும். உண்மையான அன்புடன் கொடுக்கப் படும் உணவு சாதாரணமானதாக இருந்தாலும் அது அமிர்தத்திற்கு ஒப்பானது என்பதை எல்லா வேதங்களும் வலியுறுத்துகின்றன.
இஸ்லாம் மார்க்கம் உலகிற்கு ஈந்த உயரிய கருத்துக்களாகிய சகோதரதத்துவத்தையும் மனித நேயத்தையும் உலகத்தினர் அனைவரும் கொண்டாடும் திருநாளாக இந்த ஈகைப் பெருநாள் அமைந்திட எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வோம்.
அனைவருக்கும் ஈகை பெருநாள் வாழ்த்துக்கள்
5 comments:
இதே அளவு சகோதர பாசத்தை அவங்களும் நம்ம மேல காட்டினால் சந்தோஷம் தான்.
அன்புள்ள வால்பையன்
பின்னூட்டதிற்கு நன்றி
எனது அய்யன் வள்ளுவன் வாக்கு இது
"அன்புஈனும் ஆர்வம் உடைமை; அதுஈனும்
நண்புஎன்னும் நாடாச் சிறப்பு"
//வால்பையன் said...
இதே அளவு சகோதர பாசத்தை அவங்களும் நம்ம மேல காட்டினால் சந்தோஷம் தான்.
//
??????????????????
வால்பையன் நீங்க குறிப்பிட்ட "அவங்களும்" அப்படிங்கற வார்த்தையில யாரைக் குறிப்பிடறீங்க.
இஸ்லாமிய தீவிரவாதிகளையா.. இல்லை இஸ்லாமிய சமூகத்தினரையா..
இஸ்லாமிய தீவிரவாதிகள்ன்னு நீங்க சொன்னீங்கன்னா தீவிரவாதத்துக்கு எந்த மதமும் ஆதரவானது கிடையாது. அது எந்த மதமா இருந்தாலும் சரி.
மற்றபடி எனது ஈகைத் திருநாள் வாழ்த்துக்களையும் இங்கு பதிவு செய்து கொள்கின்றேன்.
அன்புள்ள சென்ஷி
பின்னூட்டத்திற்கும் கருத்திற்கும் நன்றி
//தீவிரவாதத்துக்கு எந்த மதமும் ஆதரவானது கிடையாது. அது எந்த மதமா இருந்தாலும் சரி.//
நீங்கள் சொல்வதை வழி மொழிகிறேன்
நன்றி
//தீவிரவாதத்துக்கு எந்த மதமும் ஆதரவானது கிடையாது. அது எந்த மதமா இருந்தாலும் சரி.//
ஆஹா
நவீன இலக்கியவாதி சென்ஷியின் கருத்துக்கு நானும் வழிமொழிகிறேன்.
ஈகை திருநாள் வாழ்துக்கள்.
Post a Comment