The Art of Appraisal
-
Big Boss: This year your performance was good, excellent and outstanding.
So, your rating is "average".
Kumar: What? How come 'average'?
Big Boss: Becau...
பிரிவுகள்
- சமூகம் (121)
- செய்தியும் கோணமும் (104)
- பொருளாதாரம் (101)
- பங்கு சந்தை (98)
- அரசியல் (74)
- பயணங்கள்/அனுபவங்கள் (40)
- மனவியல் (40)
- பங்கு சந்தை வெற்றி பயணம் - ஒரு வழித் துணை (15)
- கதை (9)
- நகைச்சுவை (7)
- அறிவியல் (5)
- திரைவிமர்சனம் (4)
- சட்டம் (3)
- நூலகம் (3)
- கிறுக்கல்கள் (1)
Saturday, December 6, 2008
மருந்து கம்பெனிகளின் மோசடி
அரசையும் மக்களையும் இந்திய மருந்து கம்பெனிகள் பெரிய அளவில் ஏமாற்றி வருகின்றன. அதிர்ச்சி தரும் இந்த தகவலை தருபவர் யார் தெரியுமா? இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்தின் (NPPA) புதிய தலைவரான திரு.எ.கே.பானர்ஜீ. சற்று விரிவாக பார்ப்போம்.
"இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் இது வரை சுமார் 1600 கோடி ரூபாய் மருந்து கம்பெனிகள், நுகர்வோரிடம் இருந்து அதிகம் பெற்றுக் கொண்டதாக கூறி அந்த கம்பெனிகளுக்கு நோட்டீஸ் விட்டிருக்கிறது. இதில் சுமார் 1000 கோடி ரூபாய் கோரி ஒரே ஒரு (சிப்லா) நிறுவனத்திடமிருந்து மட்டும் வர வேண்டும்.
இதை விட அதிர்ச்சி தரக் கூடிய தகவல் அடுத்தது. அத்தியாவசிய மருந்துகளின் மீது அரசு விதித்துள்ள விலை கட்டுபாட்டை மீற இந்த கம்பெனிகள் செய்யும் ஏமாற்று வேலை. இவ்வாறு கட்டுப்பாட்டில் உள்ள மருந்துகளில் சிறிது மாற்றம் செய்து (சமயங்களில் கிட்டத்தட்ட அதே பெயரில் கூட) அந்த மருந்துகளை அதிக விலைகளில் விற்க படுகின்றன. இதனால் அரசின் நடவடிக்கைகளில் இருந்து இந்த கம்பெனிகள் தப்பித்துக் கொள்வதுடன் கொள்ளை லாபம் அடிக்க முடிகிறது."(நன்றி: The Economic Times)
மற்ற நுகர்வோர் சந்தைகளுக்கும் மருந்து வியாபாரத்திற்கும் உள்ள முக்கிய வித்தியாசம், மருந்து பொருட்களை வாங்குபவர்கள் பெரும்பாலும் இந்த மருந்து பெயர்களைப் பற்றியும் அவற்றின் குணங்களை பற்றியும் அவற்றின் மீது உள்ள அரசு (அத்தியாவசிய மருந்துகள் குறித்த) விலை கட்டுப்பாடுகள் குறித்தும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. மேலும் இங்கு நுகர்வோர் பெரும்பாலும் நொடிந்த மனதுடனே காணப் படுகின்றனர். மருத்துவர்களில் சிலர் மருந்து கம்பெனிகள் தரும் சில அன்பளிப்புகள், சில வெளிநாட்டு உள்நாட்டு பயணங்கள் ஆகியவற்றிக்கு ஆசைப் பட்டுக் கொண்டு அதிக விலையில் உள்ள மருந்துகளையே நோயாளிகளுக்கு பரிந்துரைக்கின்றனர். எனவே, இந்த மருந்து சந்தை, பொதுவான சந்தை விதிகளுக்கு முரணாக உள்ளது. அதாவது, விலை அதிகமுள்ள மருந்துகளே இந்தியாவில் அதிகம் விற்பனையாகின்றன. இதனால், ஏற்கனவே உடலாலும் மனதாலும் நொந்து போன நோயாளிகள் பெருமளவு பணத்தையும் இழக்கின்றனர்.
இது போன்ற பிரச்சினைகளுக்கு முக்கிய காரணம் அரசு தனது நல்ல முயற்சிகளை (அத்தியாவசிய மருந்துகளுக்கான விலைக் கட்டுப்பாடு) கூட மக்களிடையே சரிவர கொண்டு செல்லாததுதான். மேலும் மக்களிடையே இருக்க வேண்டிய அரசு சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு இந்தியாவில் சற்று குறைவாக இருப்பதும் ஒரு காரணம்.
ஒவ்வொரு தனியார் மருத்துவ மனையிலும் பல்வேறு வியாதிகளை குணப் படுத்த கொடுக்க வேண்டிய (அரசு பட்டியலில் உள்ள ) மருந்துகளின் பட்டியல் அனைவரும் கவனிக்கக் கூடிய அளவில் பெரியதாக இட்டிருக்க அரசு ஆணை பிறப்பித்திருக்க வேண்டும். அத்தியாவசிய மருந்துகள் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே உரிய அளவில் ஏற்படுத்துவதும் இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு வர வழி வகுக்கும். குறைந்த பட்சம் எந்த மருந்து எந்த வியாதிக்கு என்ற கேள்வியை மருத்துவரிடமும், இதே குணத்தில் உள்ள மற்ற கம்பெனி மருந்து என்ன விலை என்று மருந்து கடைக் காரரிடமும் நோயாளிகள் (அல்லது அவர்களது உறவினர்கள்)கேட்க வேண்டும். ஆனால் நடைமுறையில் இதெல்லாம் சாத்தியப் படுமா என்று சொல்வது கடினம். நோயாளி மக்கள் கடவுளாக நம்பும் டாக்டர்கள் அனைவரும் (சில்லறைக்கு ஆசைப் படாமல் சேவை மனதுடன்) மனது வைத்தால் தான் உண்டு.
ஏற்கனவே உடல் கெட்ட அந்த பாவப் பட்ட மக்களுக்காக கொஞ்சமாவது மனதை மாற்றிக் கொள்ளுங்கள் என்று அந்த சில மருத்துவர்களிடம் நாம் கோரிக்கை வைப்போம்.
நன்றி
Labels:
சமூகம்,
செய்தியும் கோணமும்
Subscribe to:
Post Comments (Atom)
22 comments:
அவசியமான பதிவு.. நன்றி
அறைக்குள் இருக்கும் வைத்தியர் அரை வைத்யர் என்று தெரியாமல் அரைகுறை வைத்தியம் செய்து கொள்கின்றனர் பலர். ஒரு நாட்டின் சொத்தான மக்களின் உடல் நலனில் அரசு அதிக அக்கறை கொள்ள வேண்டும் . ஆக்கமும் அழித்தலும் செய்யும் மருந்து கம்பனிகளுக்கு என்ன அக்கறை இருக்கும். கடையில் விற்கும் முறுக்கை தின்று பார்த்து வாங்கும் மக்கள் வைத்தியர் கொடுக்கும் மருந்தை வேளை மறக்காமல் முழுங்கி தொலைக்கின்றனர். மண்ணில் விளையும் மார்க்கெட் காய்கறியை சந்தேக கண்ணோடு பார்த்து வாங்கும் நம்ம சாமானியன் படித்த (?) டாக்டர் பார்க்க பள பள என் இருக்கிறார் , நம்மை காப்பாற்றுவார் என்று நம்பித்தான் மருந்தை வாங்கி கொள்கின்றனர்..ஊசி போடும் டாக்டர்கள் ஊசிப்போன மருந்தை எழுதி தரக்கூடாது.காசு வாங்கிகொண்டு கழுதை அறுக்க கூடாது. நான் தப்பித்தேன் சாமி. என் டாக்டர் ரொம்ப நல்லவர். கொஞ்சமாக பணம் வாங்கி நல்ல மருந்தை தருகிறார்.ஆனால் என் மேல் உள்ள அக்கறையால் (!) அடிக்கடி ஆஸ்பத்ரி பக்கம் வர செய்கிறார். அவரு ரொம்ப நல்லவருங்க.
அன்புள்ள கையேடு
பின்னூட்டத்திற்கு நன்றி
அன்புள்ள பொதுஜனம்
பின்னூட்டத்திற்கும் கருத்துக்கும் நன்றி.
நீங்கள் சொல்வது போல டாக்டர் நம்பிக்கைக்கு உகந்தவராக இருப்பது மிகவும் முக்கியம். அது போலவே டாக்டர் கொடுக்கும் மருந்துகளை அப்படியே சாப்பிட்டு விடாமல் அவற்றை பற்றிய மேலோட்டமான அறிதலாவது அவசியம்.
நன்றி
THE ARTICLE DEPITS POINTS WHICH IS COMPLETELY A BIASED STATEMNENT...ONE SHOULD UNDERSTAND, WHAT IS MEDICAL TECHNOLOGY, AND HOW IT IS IMPROVING NOW A DAYS, WITH THE HELP OF LEARNED DOCTORS' WHO ARE NOT ONLY INTERESTED TO MAKE MONEY BY Rx SOME MEDICATIONS,(WHICH IN TURN THEY MAY GET SOME BENEFITS THRU THE PARTICULAR COMPANIES)AS MENTIONED IS NOT AT ALL TRUEE. MAY BE HERE AND THERE SOME MISTAKES CAN HAPPEN, WHICH IS COMMON IN ALL DEPARTMENTS. BUT STILL, IF A QULIFIED PHYSICIAN Rx A MEDICATION FOR HIS NEEDY PATIENT, DEFINETELY, THE PHYSICIAN WHOLEHEARTEDLY BELIEVES THAT THE MEDICATION WILL CURE THE AILMENT. IN CASE IF ANY PHYSICIAN FOUND, A PARTICULAR MEDICATION IS NOT PRODUCING THE DESIRED RESULTS, IMMEDIATELY HE WILL WITHDRAW THE MEDICATIONS AND CHANGES INTO SOME OTHER USEFUL MEDICATIONS.IT HAPPENS, MAINLY BECAUSE OF THE EXCESS COMPETTION AMONG THE BIG PHARMA COMPANIES AND THEIR HECTIC REPEATED PRESSURE TO THE PARTICULAR PHYSICIANS OR ANY OTHER LEADING CONSULTANTS.MAJORITY OF THE MEDICATIONS ARE Rx ONLY FOR COURTESY(FOR PHARMA COMPANIES) AND NOT FOR MONEY AS MENTIONED IN THE ARTICLE. BUT STILL ALL THE QUALIFIED PHYSICIANS ARE VERY CONCIOUS NOW AND UNLESS THEY ARE REST ASSURED THAT THE PARTICULAR MEDICATION IS VERY USEFUL TO THEIR PATIENTS, DOCTOR WILL NOT Rx the product(what ever the reason may be).In the nutshell...doctors are still conscious about their patients health condition only, by and large.So let us not spread such biased statements without knowing the indepth details.
Dear Ramasubramania Sharma
Thank you for the comments and your views. I fully appreciate your feelings for the Doctors' community. I wish whatever you are telling about them will be completely a true fact.
Further, I would like to mention here that I have never disputed the fact that the physicians are conscious about the patients' health conditions in the article.I fully appreciate the sincerity of physicians towards the speedy recovery of their patients.
This article is based on an interview from the Chairman of National Pharmaceutical Pricing Authority. I don't have any reason to believe that he has any necessity to give a biased opinion about the drugs market practices.
My doubt here is why the costliest drugs are always being the most sold in India as he mentioned in the interview (even though there are alternative drugs of same ingredients and having a quality assurance too)Can you please clarify me this phenomenon if you don't mind?
One more question is arising out of your own comments.
//MAJORITY OF THE MEDICATIONS ARE Rx ONLY FOR COURTESY(FOR PHARMA COMPANIES) //
Why should medications be done on any courtesy basis? While I completely agree that Doctors are conscious about health conditions of the patients, my question is "Should Doctors not be conscious about the financial conditions of the patients too?" In India, still health insurance is not popular as you know. Many poor people have become debt ridden for ever in case they become sick one time because of the skyrocketing prices of medicines. Myself, I have been a witness for many such cases. You may also agree on this fact. I have also seen many kindful doctors who are very conscious about the price front of the medicines. Let us request the entire Doctors' community to follow such kind Doctors' steps in safeguarding the interests of poor people both on health and financial fronts.
Thank you.
Dear Ramasubramania Sharma
Thank you for the comments and your views. I fully appreciate your feelings for the Doctors' community. I wish whatever you are telling about them will be completely a true fact.
Further, I would like to mention here that I have never disputed the fact that the physicians are conscious about the patients' health conditions in the article.I fully appreciate the sincerity of physicians towards the speedy recovery of their patients.
This article is based on an interview from the Chairman of National Pharmaceutical Pricing Authority. I don't have any reason to believe that he has any necessity to give a biased opinion about the drugs market practices.
My doubt here is why the costliest drugs are always being the most sold in India as he mentioned in the interview (even though there are alternative drugs of same ingredients and having a quality assurance too)Can you please clarify me this phenomenon if you don't mind?
One more question is arising out of your own comments.
//MAJORITY OF THE MEDICATIONS ARE Rx ONLY FOR COURTESY(FOR PHARMA COMPANIES) //
Why should medications be done on any courtesy basis? While I completely agree that Doctors are conscious about health conditions of the patients, my question is "Should Doctors not be conscious about the financial conditions of the patients too?" In India, still health insurance is not popular as you know. Many poor people have become debt ridden for ever in case they become sick one time because of the skyrocketing prices of medicines. Myself, I have been a witness for many such cases. You may also agree on this fact. I have also seen many kindful doctors who are very conscious about the price front of the medicines. Let us request the entire Doctors' community to follow such kind Doctors' steps in safeguarding the interests of poor people both on health and financial fronts.
Thank you.
?????
அவசியமான பதிவு..
இதில் பெரும்பகுதி மருந்துகள் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் வாங்குவதில் அமைகின்றன்.
வாங்கும் அனைத்து பொருட்களுக்கும் [மருந்துக்கும்] பில் வாங்கும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
பில் வாங்க ஆரம்பித்தாலே அரசுக்கு தெரிந்துவிடும். குறைந்தபட்சம் தெரிந்தபிறகாவது தவறினை திருத்திக் கொள்ள முடியும்.
அன்புள்ள சுரேஷ்
பின்னூட்டத்திற்கும் கருத்துக்கும் நன்றி
//இதில் பெரும்பகுதி மருந்துகள் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் வாங்குவதில் அமைகின்றன்.//
இது எந்த அளவு சரி என்று தெரிய வில்லை. ஏனெனில், மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் வாங்கும் மருந்துகள் பொதுவாக எளிமையானவையாகவும் விலை குறைவானவையாகவுமே இருக்கின்றன.
//வாங்கும் அனைத்து பொருட்களுக்கும் [மருந்துக்கும்] பில் வாங்கும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
பில் வாங்க ஆரம்பித்தாலே அரசுக்கு தெரிந்துவிடும். குறைந்தபட்சம் தெரிந்தபிறகாவது தவறினை திருத்திக் கொள்ள முடியும்.//
இது சிறந்த கருத்து. அனைவரும் இதை பின்பற்றுவது நல்லது. நானும் வழிமொழிகிறேன்.
அன்புள்ள dg
பின்னூட்டத்திற்கு நன்றி
மருத்துவருக்கு மருத்துவம்தான் வாழ்க்கை. பெரும்பாலான மருத்துவர்களுக்கு அதைத் தவிர வேறு தொழிலும் தெரியாது.
வெறும் கமிஷனுக்காக தரமற்ற மருந்துகளை எழுதிக் கொடுத்து தனது வாழ்க்கையை கெடுத்துக் கொள்ள விரும்ப மாட்டார்கள்.(ப்ராக்டீஸ் கொரஞ்சுடும்ல)
இருமல் மருந்துகளும், டானிக் வகைகளும்தான் மேற்க்கண்ட இடத்தை வகிக்கின்றன்.
அவை பல இடங்களில் பரிந்துரை இல்லாமலேயே கிடைக்கின்றன. அவைகளில்தான் மேலே சொன்ன பணவேறுபாடுவரும்.
மற்றபடி நூறு, ஆயிரம் என விலையில் உள்ள மருந்துகள்
புதிதாக கண்டுபிடிக்கப் பட்டிருப்பதால் அதன் சூட்சுமம் மற்ற கம்பனிகளுக்கு தெரியும் வரை விலை அதிகமாக்வே இருக்கின்றன்
இதுனால தான் பாசமான பெல் அமைச்சர் ஸ்சுவிஸ் வங்கியில 30 ஆயிரம் கோடி சேமிச்சு! வச்சிருக்காரு போல
திரு ராம் சுப்ரசர்மா தெரிவித்த சில கருத்துக்கள் உண்மையே. இருப்பினும் கட்டுரையில் சொன்னது போல் கிராமப்புற ஏழைகளுக்கு தரமான மருத்துவம் இன்னும் எட்ட கனியாகவே உள்ளது. எனக்கு தெரிந்து சாதாரண வயிற்று வலி என்று வந்த ஒரு கிராமத்து மனிதரை பல மருந்துகள் கொடுத்து ஆறு மாதம் மருத்துவ மனையில் படுக்க வைத்து இருந்தனர். பின் யாரோ சொல்லி ஸ்கேன் செய்ததில் எப்போதோ ஒரு அதி புத்தி சாலி வயிற்றில் கத்திரி வைத்து தைத்த கொடுமை தெரிய வந்தது.ஏன் இந்த அலட்சியம் ? சாதாரண சளிக்கு எதுக்குங்க நூறு ருபாய் மருந்து? மருத்துவ கல்வியின் விலை அதிகமாக் உள்ளதால் அப்படியா? சரி மருத்துவர்களை விடுங்கள்.நுகர்வோர் அமைப்புகள் என்ன செய்கின்றன?
அன்புள்ள பொதுஜனம்
பின்னூட்டத்திற்கும் கருத்திற்கும் நன்றி
//சாதாரண சளிக்கு எதுக்குங்க நூறு ருபாய் மருந்து?//
நீங்கள் கேட்பது நியாமான கேள்வி. சாதாரண சளியை பற்றிய ஒரு வேடிக்கையான தகவல். சளிக்கு மருந்து சாப்பிட்டால் இரண்டு வாரத்தில் குணமாகி விடும். சாப்பிடா விட்டால் ௧௪ நாட்களில் குணமாகி விடும்.
// சரி மருத்துவர்களை விடுங்கள்.நுகர்வோர் அமைப்புகள் என்ன செய்கின்றன?//
மேலை நாடுகளைப் போல நம் நாட்டில் மருத்துவ துறையில் நுகர்வோர் அமைப்புகளின் செயல்பாடு அவ்வளவு திருப்திகரமாக இல்லை என்றுதான் கூறவேண்டும்.
நன்றி
அன்புள்ள வால்பையன்
பின்நூட்டதிற்கும் தகவலுக்கும் நன்றி
உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? சுவிஸ் பங்குகளில் அதிகம் போடப் பட்டிருக்கும் பணம் இந்தியர்களுடையதுதான் என்று சொல்லப் படுகிறது. மேலும் அந்நாட்டின் பொருளாதார செழுமைக்கே ஒரு முக்கிய காரணம் இது போன்ற (கணக்கில் வராத வட்டி குறைவு அல்லது இல்லாத) வைப்புத் தொகைதான். நம் மக்கள் இங்கே வாடி வரும் போது நம்நாட்டின் பணம் ஒரு வெளிநாட்டை வாழவைக்கிறது என்பது வேதனையான ஒரு விஷயம்.
அன்புள்ள சுரேஷ்
//மருத்துவருக்கு மருத்துவம்தான் வாழ்க்கை. பெரும்பாலான மருத்துவர்களுக்கு அதைத் தவிர வேறு தொழிலும் தெரியாது.
வெறும் கமிஷனுக்காக தரமற்ற மருந்துகளை எழுதிக் கொடுத்து தனது வாழ்க்கையை கெடுத்துக் கொள்ள விரும்ப மாட்டார்கள்.(ப்ராக்டீஸ் கொரஞ்சுடும்ல)
இருமல் மருந்துகளும், டானிக் வகைகளும்தான் மேற்க்கண்ட இடத்தை வகிக்கின்றன்.
மற்றபடி நூறு, ஆயிரம் என விலையில் உள்ள மருந்துகள்
புதிதாக கண்டுபிடிக்கப் பட்டிருப்பதால் அதன் சூட்சுமம் மற்ற கம்பனிகளுக்கு தெரியும் வரை விலை அதிகமாக்வே இருக்கின்றன் //
நீங்கள் சொல்வது ஒருவகையில் சரிதான். ஆனால் இந்த பதிவு தரமற்ற மருந்து பொருட்கள் மற்றும் புதிய மருந்துகள் குறித்து எழுதப் பட்டது அல்ல. மேலும் இங்கு மருத்துவர்கள் தரமற்ற மருந்துகளை வழங்குவதாகவும் எந்த வகையிலும் குறைகூறப் படவில்லை. அது மட்டுமல்ல, பல மருத்துவர்கள் சேவை மனப்பான்மை கொண்டே இந்த துறைக்கு வருகின்றனர் என்பதை இந்த பதிவர் நன்கு அறிவார்.
உங்களுடைய பதிவைக் கூட பார்த்தேன் http://ruraldoctors.blogspot.com/ மக்களுக்கு மிகவும் உபயோகமான தகவல்களை கூறி உள்ளீர்கள். நன்றி மற்றும் இந்தப் பணி தொடர வாழ்த்துக்கள்.
இந்த பதிவில் கூறப்பட்டுள்ளது போல ஒரு வியாதியை குணப் படுத்தும் இரண்டு அல்லது ஒரே கம்பெனியின் வேறுவேறு மருந்துகள் ஒன்றுகொன்று குறையிலாத தரத்துடன் இருக்கும் போது கூட அதிகவிலை உள்ள மருந்தே அதிக விலையில் விற்கப் படுகின்றன. இது சந்தைவிதிகளுக்கு புறம்பானது அல்லவா? இதற்கு காரணம் என்ன?
////ஒரு வியாதியை குணப் படுத்தும் இரண்டு அல்லது ஒரே கம்பெனியின் வேறுவேறு மருந்துகள் ஒன்றுகொன்று குறையிலாத தரத்துடன் இருக்கும் போது கூட அதிகவிலை உள்ள மருந்தே அதிக விலையில் விற்கப் படுகின்றன.//////
வெவ்வேறு மருந்து வெவ்வெறு விலைக்குத்தான் விற்கும்.
நீங்கள் குறிப்பிடுவது ஒரே மருந்து வெவ்வேறு கம்பனிகள் வெவ்வேறு விலைக்கு விற்பதன் காரணம் என்பதாகத்தான் இருக்கும் என்று நினைக்க்கிறேன்.
தயாரிப்பவர்கள் தங்கள் தயாரிப்புகளின் தரத்திற்கு வைக்கும் விலையாகக் கூட இருக்கலாம்.
ஒரு மருத்துவர் அல்லது மருத்துவமனை தன்னை ஏமாற்றுவதாக சுரண்டுவதாக மக்கள் நினைக்க ஆரம்பித்துவிட்டால் அவர்களை கண்டிப்பாக ஓரம் கட்டி விடுவார்கள்.
அதனால் எந்த சூழ்நிலையிலும் மருத்துவர் தனது இமேஜைக் கெடுத்துக் கொள்ள நினைக்க மாட்டார்.
அவர் நல்ல பெயருடன் இருந்தால் அவர்னாலயே முடியல எங்க போனாலும் இப்படித்தான் என்று கூறுவார்கள்.
பெயர் கெட்டுவிட்டால் என்க்கு இவனப் பத்தி தெரியும் மத்தவங்கதான் கேட்கல என்று ஒரே போடாக போட்டு விடுவார்கள்
//"Should Doctors not be conscious about the financial conditions of the patients too?" //
நோயாளியின் நிலை உணராத மருத்துவர்கள் காலப் போக்கில் அடித்துச் செல்லப் பட்டிருக்கிறார்கள்.
அன்புள்ள சுரேஷ்
//வெவ்வேறு மருந்து வெவ்வெறு விலைக்குத்தான் விற்கும்.
நீங்கள் குறிப்பிடுவது ஒரே மருந்து வெவ்வேறு கம்பனிகள் வெவ்வேறு விலைக்கு விற்பதன் காரணம் என்பதாகத்தான் இருக்கும் என்று நினைக்க்கிறேன்.//
நான் குறிப்பிட வந்தது வேறு. அரசு ஒரு குறிப்பிட்ட (அத்தியாவசியம் என்று வகைப் படுத்தப் பட்ட) மருந்திற்கு ஒரு அதிகபட்ச விலையினை நிர்ணயிக்கிறது. ஆனால் அந்த மருந்தை தயாரிக்கும் கம்பெனி அந்த கட்டுப்பாட்டை மீற திட்டமிட்டு அந்த மருந்தின் பெயரை அல்லது அதன் கூறுகளை (ingredients) லேசாக மாற்றி அதிக விலையில் விற்பனை செய்கிறது. அரசு விலை கட்டுப்பாட்டில் உள்ள மருந்தும் இரண்டாவது வகை மருந்தும் ஒரே கம்பெனி தயாரித்ததுதான். ஆனால் இரண்டாவது வகை அதிக விலை விற்கும் மருந்தே அதிகமாக விற்பனை ஆகிறது என்ற குற்றச் சாட்டை இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்தின் தலைவர் கூறுகிறார்.
Excerpts of the interview of Dr.A.K.Bannerjee, Chairman of National Pharmaceutical Pricing Authority are given below. His statements can be considered more authentic than many others.
//These are essentially cases of misbranding. To keep a check on such violations is not our mandate. All we can do is to bring them to the notice of the Drug Controller General of India (DCGI) who is the authority to look after quality of medicines. Indeed, we do come across such cases and regularly inform the DCGI about them. However, it is not just misbranding but companies also try to dodge price controls by altering the composition of their brands.
Companies often change the percentage of price controlled drugs in formulations to escape price control. We have taken steps to check this practice. We now ask companies to inform us of such a move before they approach the DCGI — the authority approving new brands — for a change in the combination of a price-controlled drug. Now it is mandatory for companies to inform us of their plans to change the composition of drugs that had been brought under price control in public interest. //
//There is a great disparity between prices of drugs imported by multinational companies and those produced by indigenous manufacturers.
(Competition does not reduce prices in pharma sector. Despite many players, the brand leader is also the price leader — the costliest drugs are sold the most.)//
http://economictimes.indiatimes.com/Interview/Dr_A_K_Banerjee_Chairman_of_NPPA/articleshow/3752977.cms
மேலே குறிப்பிட்டுள்ள வலைதளத்தை பார்த்து விட்டு நீங்கள் பதில் கூறுங்கள். பிறகு நான் ஒப்புக் கொள்கிறேன், மருந்து சந்தையில் தவறுகள் ஏதும் நிகழவில்லை என்று.
அன்புள்ள சுரேஷ்
//நோயாளியின் நிலை உணராத மருத்துவர்கள் காலப் போக்கில் அடித்துச் செல்லப் பட்டிருக்கிறார்கள்//
நீங்கள் சொல்வது சரிதான். ஆனால், பல சமயங்களில் சந்தை விதிகள் (Free Market Rules) மருத்துவ துறையில் எடுபடுவதில்லை. காரணம், பல இடங்களில் மற்றும் நேரங்களில் நமக்கு மருத்துவரை தேர்வு செய்யும் அல்லது மதிப்பிடும் வாய்ப்பு கிடைப்பதில்லை.
Post a Comment