The Art of Appraisal
-
Big Boss: This year your performance was good, excellent and outstanding.
So, your rating is "average".
Kumar: What? How come 'average'?
Big Boss: Becau...
பிரிவுகள்
- சமூகம் (121)
- செய்தியும் கோணமும் (104)
- பொருளாதாரம் (101)
- பங்கு சந்தை (98)
- அரசியல் (74)
- பயணங்கள்/அனுபவங்கள் (40)
- மனவியல் (40)
- பங்கு சந்தை வெற்றி பயணம் - ஒரு வழித் துணை (15)
- கதை (9)
- நகைச்சுவை (7)
- அறிவியல் (5)
- திரைவிமர்சனம் (4)
- சட்டம் (3)
- நூலகம் (3)
- கிறுக்கல்கள் (1)
Tuesday, December 9, 2008
முதல் ரவுண்ட் காங்கிரசுக்கு. முடிவான ரவுண்ட் யாருக்கு?
2009 மக்களவையை தேர்ந்தெடுப்பதற்கான பொது தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்பட்ட ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 3-2 என்ற செட் கணக்கில் முக்கிய எதிர்கட்சியான பாரதிய ஜனதா கட்சியை தோற்கடித்துள்ளது. இந்த தேர்தல் முடிவுகளின் சிறப்பம்சங்கள் மற்றும் இந்த தேர்தல் தரும் பாடங்கள் குறித்து இங்கு விவாதிப்போம்.
டெல்லி, ராஜஸ்தான், மிசோரம், சட்டிஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் காஷ்மீர் மாநிலங்களில் சட்ட சபையை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இவற்றில் முதல் ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன.
தேர்தலுக்கு முன்னர், டெல்லி மாநிலத்தில் காங்கிரசும் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சட்டிஸ்கரில் பாரதிய ஜனதா கட்சியும் ஆட்சி செய்து வந்தன. மிசோரம் மாநிலத்தில் மிசோரம் தேசிய கட்சி எனும் பிராந்திய கட்சி ஆட்சி செய்து வந்தது.
இப்போது காங்கிரஸ் டெல்லியில் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை பி.ஜெ.பி இடமிருந்தும், மிசோரத்தை மிசோரம் தேசிய கட்சியிடமிருந்தும் காங்கிரஸ் கைப்பற்றி உள்ளது. சட்டிஸ்கர் மாநிலத்தில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலும் மத்திய பிரதேசத்தில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று பி.ஜெ.பி ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
அரசியல் நோக்கர்கள் பார்வையில் இந்த தேர்தல் முடிவுகள் தரும் பாடங்களை பார்ப்போம்.
பயங்கரவாத பிரச்சினையில் அரசியல் பண்ண வேண்டாம்
பொது மக்கள் தீவிரவாதத்தை கட்டுபடுத்த அரசுகள் தவறிவிட்டதற்கு ஒரு குறிப்பிட்ட கட்சியை மட்டுமே பொறுப்பாக்காமல் கட்சி வேறுபாடின்றி அனைத்து அரசியல்வாதிகள் மீதும் கோபமாக உள்ளனர். மும்பை தாக்குதலுக்கு பின்னர் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பி.ஜெ.பி. பயங்கரவாதத்தை முன்னிறுத்தியும் காங்கிரஸ் மீது (தடுக்கவில்லை என்ற) குற்றச்சாட்டை சுமத்தியும் செய்த பிரசார யுக்தி பலிக்காமல் போனது குறிப்பிடத் தக்கது.
ஆட்சி எதிர்ப்பு அலை அவசியம் இல்லை
Anti Incumbency Wave என அழைக்கப் படும் ஆட்சி எதிர்ப்பு அலை இந்த முறை பெருமளவு வீசாமல் போனது ஒரு கவனிக்க வேண்டிய விஷயம். நான்கு பெரிய மாநிலங்களில் மூன்றில் ஆட்சியாளர்களே மீண்டும் பதவிக்கு வந்துள்ளனர். டெல்லியில் மாநில அரசு மேற்கொண்ட வளர்ச்சி திட்டங்களும், மத்திய பிரதேசத்தில் முதலமைச்சர் மீது இருந்த நல்ல இமேஜும் சட்டிஸ்கரில் மக்களுக்கு திருப்தியான அரசு மற்றும் எம்.எல்.ஏக்களின் செயல்பாடுமே இவ்வாறு ஆட்சிகளை தக்க வைத்துக் கொள்ள உதவின என கூறப் படுகிறது. அது மட்டுமல்லாமல், மக்களிடம் நல்ல மாற்று என்று யாரையும் கருத முடியாமல் போனதும் ஒரு காரணமே.
முன்னிறுத்தப் பட்ட வலிமையான தலைமையே வெற்றிக்கு அடிப்படை
வெற்றி பெற்றால் இவரே முதலமைச்சர் என முன்னரே தெளிவு படுத்தப் பட்டு, அந்த தலைவரின் முழு கட்டுப்பாட்டில் தயாரிக்க பட்ட பிரசார வியுகங்களே வெற்றி பெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று. உதாரணம், டெல்லியில் திருமதி. ஷீலா தீக்ஷித், ராஜஸ்தானில் திரு.அசோக் கெலத், மத்திய பிரதேசத்தில் திரு.ஷிவ்ராஜ் சிங் சௌகாந் மற்றும் சட்டிஸ்கரில் திரு.ராமன் சிங் ஆகியோர் மக்களின் முன்னர் முதலமைச்சர் வேட்பாளர்களாக தெளிவாக முன்னிறுத்தப் பட்டனர். பெரும்பாலான தோல்விகள், உட்கட்சி பூசல்களினாலும் தலைவர்களுக்கு மக்களிடம் நேரடி தொடர்பு இல்லாததனாலுமே என்பது குறிப்பிடத் தக்கது.
மூன்றாவது அணி தாக்கம் குறைவு
இந்த தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி ஓரளவுக்கு அதிக வாக்குகள் பெற்றிருந்தாலும், மூன்றாவது அணியால் பெருமளவுக்கு பாதிப்பு ஏற்படுத்த முடியாமல் போனதும் கவனிக்கத் தக்கது. பெரும்பாலும் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி ஆகிய இரு அணியினருக்குமே நேரடி போட்டி இருந்தது. (இந்த மாநிலங்களில் ஏற்கனவே கூட மூன்றாவது அணி வலுவாக இல்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.)
இறுதி வரை கடும் போட்டி
அனைத்து பெரிய மாநிலங்களிலுமே, கடும் போட்டி நிலவியதும், வெற்றி பெற்றவரின் வாக்கு வித்தியாசங்கள் குறைவாக இருந்ததும், கடைசி வரை யாருக்கு வெற்றி என்று தீர்மானிக்க முடியாமல் இருந்ததும் கவனிக்க தக்கவை.
இந்தியா முழுக்க பொது தேர்தல் என்பது இந்த மாநில தேர்தல்களிலிருந்து அளவிலும் பிரசார யுக்திகளிலும் பெருமளவுக்கு வேறு பட்டிருக்கும் என்றாலும் கட்சிகள் இதிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் என்ன என்று பார்ப்போம்.
1.மக்களவைக்கு நடை பெறும் பொது தேர்தலில் போட்டி மிகக் கடுமையானதாக இருக்கும்.
2. நல்லாட்சிக்கு எப்போதும் மக்கள் ஆதரவு இருக்கும். மக்களுடன் கலந்து பழகி அவர்கள் பிரச்சினைகளை புரிந்து கொள்ளும் தலைமையை மக்கள் விரும்புகிறார்கள்.
3. மக்கள் விரும்புவது உறுதியான மற்றும் (தெளிவாக) முன்னரே முன்னிறுத்தப் பட்ட தலைமை.
4. தீவிரவாதத்தை பொறுத்தவரை கட்சிகள் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுவதையும் தேர்தல் பிரச்சார யுக்தியாக உபயோகிப்பதையும் மக்கள் விரும்ப வில்லை. இவற்றை நிறுத்தி விட்டு நாட்டின் பாதுகாப்பிற்கு தேவையான பொதுவான தீவிரவாத எதிர்ப்புக் கொள்கையை உருவாக்குவதில் கட்சிகள் கவனம் செலுத்த வேண்டும்.
5. மூன்றாவது அணி வரும் தேர்தலில் பெரும் தாக்கத்தை உருவாக்க கடுமையாக போராட வேண்டியிருக்கும். அதே சமயத்தில், மாயாவதி அவர்களின் தாக்கம் அனைத்து கட்சிகளாலும் உணரப் படும்.
6.பல கட்சிகள் இருந்தாலும், மக்களுக்கு நல்ல சாய்ஸ் மற்றும் சரியான மாற்று என்பது மிகவும் அரிதான விஷயமாக இருக்கிறது.
தெளிவான சமூக பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான கொள்கைகளின் அடிப்படையில் மட்டுமே தேர்தல்கள் நடக்கும் என்ற ஜனநாயகத்தின் முதிர்ச்சி நிலை இந்தியாவில் விரைவில் மலர வேண்டும் என்பதே எனது ஆசை. ஒரு இந்திய குடிமகனின் இந்த ஆசை நிறைவேறுமா?
நன்றி
Labels:
அரசியல்,
சமூகம்,
செய்தியும் கோணமும்
Subscribe to:
Post Comments (Atom)
15 comments:
//தெளிவான சமூக பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான கொள்கைகளின் அடிப்படையில் மட்டுமே தேர்தல்கள் நடக்கும் என்ற ஜனநாயகத்தின் முதிர்ச்சி நிலை இந்தியாவில் விரைவில் மலர வேண்டும் என்பதே எனது ஆசை. ஒரு இந்திய குடிமகனின் இந்த ஆசை நிறைவேறுமா?//
அதே ஆசையில் இருக்கும் இன்னொரு இந்தியனையும் சேர்த்துகோங்க!
what you are saying is technically correct.But still BJP leads the race with 294 seats against corgress'278.
Muthu
அன்புள்ள வால்பையன்
பின்னூட்டத்திற்கு நன்றி
//அதே ஆசையில் இருக்கும் இன்னொரு இந்தியனையும் சேர்த்துகோங்க!//
அப்ப நாம ரண்டு பேரும் ஒரு கூட்டணி அமைச்சுடலாம்! :)
Dear K from KK
Thank you for the comments
//But still BJP leads the race with 294 seats against corgress'278//
Assembly constituencies of different state are different in size. Majoriy in the Assembly house is more important.
Thank you for the comments.
முட்டாள் மக்கள் அறிவாளிகள் பணக்காரர்கள்/அரசியல்வாதிகள் என்பது உறுதியாகிறது
அன்புள்ள vinhvishali
பின்னூட்டத்திற்கு நன்றி
Dear MI,
I couldnt comment the below in ur recent post, few times it happened. May be the problem with inet connection. Becos of this i couldnt comment on few posts of urs. If possible post the below as comment
Friendly
Kabheesh
வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் வெற்றி/தோல்வி நிர்ணயிப்பதில் என்ன சிக்கல்? நடைமுறையில் வருமா, இந்தியாவில்? நீங்க என்ன நினைக்கறீங்க?
வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் வெற்றி/தோல்வி நிர்ணயிப்பதில் என்ன சிக்கல்? நடைமுறையில் வருமா, இந்தியாவில்? நீங்க என்ன நினைக்கறீங்க?
அன்புள்ள கபீஷ்
//வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் வெற்றி/தோல்வி நிர்ணயிப்பதில் என்ன சிக்கல்? நடைமுறையில் வருமா, இந்தியாவில்? நீங்க என்ன நினைக்கறீங்க?//
அனேகமாக நீங்கள் எம்.பி. எம்.எல்.ஏ மூலம் இல்லாமல் அமெரிக்கா போல நேரடியாக அரசை தேர்ந்தெடுக்கும் முறை பற்றி கேட்கிறீர்கள் என்று நான் நினைக்கிறேன். இது பற்றி நமது அரசிய சாசன நிர்ணய சபையிலேயே (Constituent Assembly of India) பெரும் தலைவர்கள் விவாதங்கள் பல நடத்தி பாராளுமன்ற ஜனநாயக முறையே இந்தியாவிற்கு சிறந்தது என்று முடிவு செய்தனர். இப்போது சுதந்திரம் கிடைத்து 60 ஆண்டுகள் முடிந்து விட்டதால், நமது தேர்தல் முறைகளை மாற்றி அமைப்பது குறித்து தேசிய அளவில் புதிய விவாதங்கள் நடத்தி ஒத்த கருத்து ஏற்படுத்துவது நல்லது.
நேரடியாக ஜனாதிபதியை அல்லது பிரதம மந்திரியை தேர்ந்தெடுக்கும் தேர்தல் முறை மூலம், இரு கட்சி (அல்லது கூட்டணி) அரசியல் ஏற்படக் கூடும். தேர்தலுக்கு பின்னர் அரசால் முழு ஆட்சிக் காலத்தையும் இதர கட்சிகளின் தலையீடு இல்லாமல் கழிக்க முடியும். பல உதிரி கட்சிகளுக்கு இன்று கிடைக்கும் தேவையற்ற மரியாதை குறைந்து போகும்.
ஆனால் இது பெரிய விஷயம். இதை பற்றி இன்னும் பல விவாதங்கள் தேவைப் படுகின்றன.
முதல் ரவுண்ட் காங்கிரசின் வெற்றியில் பி.ஜே.பி பாடம் கற்றுக் கொள்ளவேண்டியது அவசியம்.
அன்புள்ள ராஜநடராஜன்
பின்னூட்டத்திற்கு நன்றி
//முதல் ரவுண்ட் காங்கிரசின் வெற்றியில் பி.ஜே.பி பாடம் கற்றுக் கொள்ளவேண்டியது அவசியம். //
பிஜேபி மட்டுமல்ல, காங்கிரஸ் கூட சில பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம். உதாரணமாக, மேலிடத்திற்கு ஆமாம் போடுபவர்களை விட, தனிச் சிறப்புடன் இயங்கிய காங்கிரஸ் வேட்பாளர்களே இந்த தேர்தலில் அதிகம் வெற்றி கண்டுள்ளார்கள்.
Thank you for using the right map of India.
Vikatan, has already cut off Pok in their article (ravikumra, mla).
I have written to them so many times, and left comments in that article as well, no use.
Its highly objectionable, and I believe we can even bring contempt case against vikatan just for that.
Dear ItsDifferent
While searching for the image of Indian map in the internet sites only, i was very much conscious about it.
Thank you for rightly noticing it.
நல்ல அலசல்.
// இரு கட்சி (அல்லது கூட்டணி) அரசியல் ஏற்படக் கூடும்.//
நம் நாட்டுக்கு இது சாத்தியமா என்ற கேள்வி எலும் அதேவேளையில்.
இது நிகழும் நாள் தொலைவில் இல்லை என்ற நம்பிக்கை மட்டும் இறுக்கு.
அன்புள்ள கார்த்திக்
பின்னூட்டத்திற்கு நன்றி
//நம் நாட்டுக்கு இது சாத்தியமா என்ற கேள்வி எலும் அதேவேளையில்.
இது நிகழும் நாள் தொலைவில் இல்லை என்ற நம்பிக்கை மட்டும் இறுக்கு.//
நம்பிக்கையில் நானும் பங்கு கொள்கிறேன்
Post a Comment