Thursday, December 11, 2008

சக பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு ஒரு வேண்டுகோள்


புரட்சிக் கவி பாரதி பிறந்த இந்த திருநாளில், சக தமிழ் பதிவர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் நானும் ஒரு தமிழ் எழுத்தாளன்/பதிவர் என்ற முறையில் நான் விடுக்கும் ஒரு உரிமை கலந்த வேண்டுகோள் இங்கே.

சங்ககாலத்தில் தமிழ் இலக்கியங்கள் பெரும்பாலும் காதல் மற்றும் வீரம் ஆகியவற்றையே அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டு வந்தன. பின்னர், சமண பௌத்த மதங்களின் தாக்கம் தமிழ்நாட்டில் அதிகம் ஆனதும், அறம், பொருள் மற்றும் வீடு பேறு என வாழ்வியல் போதனைக்குரிய விஷயங்கள் அதிகமான அளவில் அற நூல்களாக எழுதப் பட்டன. இடைக்காலத்தில் தமிழ் பொதுவாக பக்தி மொழியாகவே அறியப் பட்டு கம்பராமாயணம், திருப்பாவை, திருவாசகம் தேவாரம் போன்ற பக்தி இலக்கியங்கள் தமிழில் இயற்றப் பட்டன.


தற்காலத்திலோ, தமிழ் இலக்கியங்கள் காதல், அரசியல், சமூகக் கருத்துக்கள், தனிப் பட்ட உணர்வுகள் போன்றவற்றையே அதிகம் பிரதிபலிக்கின்றன.

யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்
வள்ளுவர்போல இளங்கோ வைப்போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததிலை
உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை;

என்று கர்வமாக சொன்ன அதே பாரதியே மற்றொரு கவிதையில்

புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்;
மெத்த வளருது மேற்கே - அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.

சொல்லவும் கூடுவதில்லை - அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்

என்றந்த பேதை (தமிழ்த் தாய்) உரைத்தாள் - ஆ!
இந்த வசையெனக் கெய்திட லாமோ?
சென்றிடு வீர் எட்டுத்திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்திங்கு சேர்ப்பீர்!


என்றும் தமிழில் நுட்பமான விஷயங்கள் (அதிகம்) இல்லையே என்ற தனது வருத்தத்தையும் வெளிபடுத்தினான்.

அதிர்ஷ்ட வசமாக, தமிழர்களாகிய நாம் இன்றைக்கு உலகின் எட்டுத் திக்கிலும் சென்று பல தொழிற்நுட்ப துறைகளிலும் சிறந்து விளங்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறோம். நாம் (வேற்று மொழியில்) கற்ற பல கலைச் செல்வங்களை தமிழிலும் தந்தால் பாரதியின் (மேற்சொன்ன) கனவு நிறைவேறுமல்லவா? தொழிற்நுட்ப செல்வங்கள் தமிழில் (அதிகம்) இல்லையே என்ற வருத்தமும் நீங்குமல்லவா? எனவே நண்பர்களே, நாம் கற்றறிந்த நுட்பமான விஷயங்களை தமிழில் எளிமையாகவும் சுவையாகவும் தெளிவாகவும் தர முயற்சி செய்வோம் என இந்த நல்ல நாளில் உறுதி எடுத்துக் கொள்வோம்.

நன்றி

பின் குறிப்பு: எனக்கு இன்னும் கொஞ்சம் பேராசையான கனவு கூட உண்டு. தமிழில் இல்லாத நுட்பமான விஷயங்களே உலகில் இல்லை எனும் அளவிற்கு தமிழ் இலக்கியம் வளர்ந்து வேற்று மொழியாளர்களும் தமிழ் கற்றுக் கொண்டால் தம்மறிவை வளர்த்துக் கொள்ளலாம் என்ற நினைக்கும் நிலை வந்தால் எப்படி இருக்கும்?

20 comments:

KARTHIK said...

//எனக்கு இன்னும் கொஞ்சம் பேராசையான கனவு கூட உண்டு. தமிழில் இல்லாத நுட்பமான விஷயங்களே உலகில் இல்லை எனும் அளவிற்கு தமிழ் இலக்கியம் வளர்ந்து வேற்று மொழியாளர்களும் தமிழ் கற்றுக் கொண்டால் தம்மறிவை வளர்த்துக் கொள்ளலாம் என்ற நினைக்கும் நிலை வந்தால் எப்படி இருக்கும்? //

புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்;
மெத்த வளருது தெற்கே - அந்த
மேன்மைக் கலைகள் பிறமொழிகளில் இல்லை.

சொல்லவும் கூடுவதில்லை - அவை
சொல்லுந் திறமை பிறமொழிக் கில்லை
மெல்லத் பிறமொழிகள் சாகும் - அந்த
தெற்கு தமிழ்மொழி புவிமிசை யோங்கும்.

//எனக்கு இன்னும் கொஞ்சம் பேராசையான கனவு கூட உண்டு.//

கனவு மெய் படவேண்டும்.

தேவன் மாயம் said...

நல்ல கருத்து !!!
தமிழை எங்கே நிறுத்தலாம் என்ற கவிதை ஞாபகம் வருது !!!!
தேவா

Maximum India said...

அன்புள்ள கார்த்திக்

பின்னூட்டத்திற்கும் கவிதைக்கும் நன்றி

அட்டகாசமாக எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்

நமது கனவு விரைவில் மெய்ப்பட கடுமையாக உழைப்போம் என்று பாரதி பிறந்த தினத்தன்று சபதம் எடுத்துக் கொள்வோம்.

Maximum India said...

அன்புள்ள தேவா

பின்னூட்டத்திற்கு நன்றி.

பாரதி கண்ட கனவு மெய்ப் பட நாமனைவரும் முயற்சி செய்வோம்

நன்றி

Maximum India said...

viswanarayan commented on your story 'சக பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு ஒரு வேண்டுகோள்'

'நல்ல ஆவல். இங்கு திறமைக்கு பஞ்சம் இருப்பதாகத் தோன்றவில்லை. முயற்சி எடுத்தால் முடியாதது. திறமை வாய்ந்தவர்களுக்கு உங்கள் அழைப்பு எட்டட்டும்.'

Here is the link to the story: http://www.tamilish.com/story/18082

Thank your for using Tamilish!

- The Tamilish Team

Maximum India said...

அன்புள்ள விஷ்வநாராயன்

//திறமை வாய்ந்தவர்களுக்கு உங்கள் அழைப்பு எட்டட்டும்.'//

பின்னூட்டத்திற்கும் கருத்துக்கும் நன்றி. நீங்கள் சொல்வது போல தமிழர்கள் பல துறைகளிலும் சிறப்புற இருந்தாலும் அந்தத் துறைகளைப் பற்றிய நுட்பக் கருத்துக்களை தமிழில் எழுதினால் படிப்பவர்கள் அதிகம் இருப்பார்களா என்று யோசிக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அவர்களுக்கு ஒரு செய்தி. நுட்பக் கருத்துக்களை எளிமையாகவும் நுட்பமாகவும் சொன்னால் படிக்க பலர் முன்வருவார்கள். சுஜாதா போன்றவர்கள் இதில் முன்னோடிகள். நான் கூட சிறுவனாக இருக்கும் போது கூட பூந்தளிர் படித்ததை விட அதிக ஆர்வமாக கலைக்கதிர் படித்து வந்திருக்கிறேன். இதற்கு காரணம் கடினமான அறிவியல் கருத்துக்களைக் கூட அந்த "கலைக்கதிர்" பத்திரிக்கை மிகுந்த சுவையுடனும் சிறுவர்களும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாக சொன்னதுமே.

Itsdifferent said...

As I am not fluent, humorous and pragmatic in Tamil, I am planning to work with another blogger to write about leadership, giving back to the community as a concept soon.
I agree, lets work together to create the long lasting stories.

Maximum India said...

Dear ItsDifferent

Thank you very much for the interest that has been shown towards the society. I sincerely believe that such compassion and empathy are more important for writing rather than so called writing. Hence you can start rightaway. I am keen in reading your tamil writings.

Maximum India said...

Tamilish Service to me
show details 11:21 PM (6 hours ago) Reply



udhayakv commented on your story 'சக பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு ஒரு வேண்டுகோள்'

'மிகச்சரியாக சொன்னீர்!'

- Show quoted text -

Here is the link to the story: http://www.tamilish.com/story/18082

Thank your for using Tamilish!

- The Tamilish Team



If you don't want to receive emails whenever other users comment on your story edit the story and deselct the check box for the email option

Maximum India said...

அன்புள்ள udayakv

பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி

tamilish! மிக்க நன்றி.

ராஜ நடராஜன் said...

//பின் குறிப்பு: எனக்கு இன்னும் கொஞ்சம் பேராசையான கனவு கூட உண்டு. தமிழில் இல்லாத நுட்பமான விஷயங்களே உலகில் இல்லை எனும் அளவிற்கு தமிழ் இலக்கியம் வளர்ந்து வேற்று மொழியாளர்களும் தமிழ் கற்றுக் கொண்டால் தம்மறிவை வளர்த்துக் கொள்ளலாம் என்ற நினைக்கும் நிலை வந்தால் எப்படி//

பாரதிக்குதான் தூரப்பார்வைன்னு நினைச்சா நீங்களும் அவ்ர்கூட கூட்டு சேருவது போல தெரிகிறதே!

ISR Selvakumar said...

முயற்சிக்கிறேன்!

nerkuppai thumbi said...

" மெல்ல தமிழ் இனி சாகும் " அல்ல:
வெல்லத் தமிழ் இனி வாழும்

Maximum India said...

அன்புள்ள செல்வக்குமார்

உங்கள் உறுதிமொழிக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

நிறைய முயற்சி செய்யுங்கள். வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Maximum India said...

அன்புள்ள நெற்குப்பை தும்பி ஐயா

//" மெல்ல தமிழ் இனி சாகும் " அல்ல:
வெல்லத் தமிழ் இனி வாழும்//

அருமையான ஆக்கம். உங்கள் வாக்கு பலிக்கட்டும்.

Maximum India said...

அன்புள்ள ராஜநடராஜன்

பின்னூட்டத்திற்கு நன்றி

//பாரதிக்குதான் தூரப்பார்வைன்னு நினைச்சா நீங்களும் அவ்ர்கூட கூட்டு சேருவது போல தெரிகிறதே!//

நீங்கள் எந்த அர்த்தத்தில் சொல்லியிருந்தாலும் பரவாயில்லை. பாரதியுடன் கூட்டாக வைத்ததற்கு நன்றி.

RAMASUBRAMANIA SHARMA said...

VERY EXCELLENT ARTICLE...STILL TAMIL IS RUNNING IN OUR BLOOD(SORRY STILL I FIND IT DIFFICULT TO WRITE MY COMMENTS IN TAMIL).....MAHAKAVI SUBRAMANIA BHARATHI IS A MAN WITH VISION...HE WAS VERY MUCH CONFIDENT ONE DAY HIS DREAMS WILL COME TRUE. AS PER THE OLD SAYING "WE CANNOT EVEN REPLACE A SINGLE WORD FROM HIS POEM. BEST IS ALWAYS FAMILIAR. NO AD IS REQUIRED....DEFINETELY ALL HIS DREAMS WILL COME TO REALITY ONE DAY WITH OUR COLLECTIVE EFFORTS....

Maximum India said...

Dear Ramasubramania Sharma

Thanks for the comments and wishes.

//(SORRY STILL I FIND IT DIFFICULT TO WRITE MY COMMENTS IN TAMIL).....//

Before starting this blog, I was also thinking like this. But I found it is quite possible if one puts little effort as Tamil is our mother language and it is always in our blood.

சி தயாளன் said...

நிச்சயமாக...

Maximum India said...

அன்புள்ள டொன் லீ

உங்கள் உறுதிமொழிக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

Blog Widget by LinkWithin