மும்பையை தாக்கிய இரு தீவிரவாதிகள் கையில் நவீன ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள் மற்றும் கையெறி குண்டுகள். இவர் கையில் வெறும் ஒரு வாக்கி டாக்கி மட்டுமே. ஆனால் மனதிலோ ஏராளமான வீரம் மற்றும் நெஞ்சுரம். இந்த இருவரில் ஒருவனை தீர்த்துக் கட்டவும் மற்றவனை பிடிக்கவும் தன்னுயிர் நீத்து பல உயிரைக் காப்பாற்றிய இந்த உண்மையான காவலரின் கதையை கேளுங்கள்.
கடந்த புதனன்று, மும்பை சி.எஸ்.டி ரயில் நிலையம் மற்றும் காமா மருத்துவ மனையில் கொடும் தாக்குதல் நடத்திய இரண்டு பயங்கரவாதிகள் வழியில் மறித்த தீவிரவாதி தடுப்புக் குழுவின் தலைவரையும் மற்ற சில போலீசாரையும் சுட்டுக் கொன்று விட்டு போலீஸ் ஜீப்பில் தப்பித்தனர். அங்கிருந்து மெட்ரோ சினிமா வழியே சென்ற இவர்களை வழி மறித்து போலீஸ் தாக்கும் போது இவர்கள் சென்ற ஜீப் டயர் பஞ்சர் ஆனது. குறுக்கே வந்த ஒரு ஸ்கோடா காரை வழி மறித்த இந்த பயங்கரவாதிகள் அதில் ஏறிக் கொண்டு மும்பையின் முக்கிய புள்ளிகள் (மகாராஷ்டிரா கவர்னர் உட்பட) வாழும் பகுதியான மலபார் ஹில்சை நோக்கி விரைந்தனர்.
அப்போது மாரின் டிரைவ் சாலையில் டுயுட்டி பார்த்துக் கொண்டு இருந்தவர் திரு.துக்காராம் ஒம்ப்லெ எனும் ஒரு உதவி காவல் அலுவலர். அவருக்கு இந்த வழியாக தீவிரவாதிகள் வருகிறார்கள் என்ற தகவல் வாக்கி டாக்கி மூலமாக அனுப்பப் பட்டது. ஏற்கனவே சொன்னது போல அப்போது அவரிடம் எந்த ஆயுதமும் கைவசம் இல்லை. ஆனால் நெஞ்சம் முழுதும் தைரியம் நிறைந்திருந்தது.
அப்போது தீவிரவாதிகள் சென்ற ஸ்கோடா கார் அந்த சாலையில் இவரை கடந்து சென்றது. துணிச்சலாக அந்த காரை தனது இரு சக்கர வாகனத்தில் துரத்திச் சென்றார் நம் ஹீரோ. மிக வேகமாக செல்லும் அந்த காரையும் விடாமல் (தன் உயிரையும் பொருட்படுத்தாமல்) பைக்கில் துரத்திக் கொண்டே சென்றார்.
மலபார் ஹில்ஸ் பகுதியுள் நுழைவதற்கு முன்னர், கிர்காவும் கடற்கரை சிக்னலில் தடுப்பு சுவர் இட்டு காத்துக் கொண்டிருந்தனர் மும்பை போலீஸார். அதை கண்டு வேகத்தைக் குறைத்து காரை பின்பக்கம் திருப்ப முயல, அந்த சமயத்தில் அவர்களது காரின் முன்னே சென்று தனது பைக்கை நிறுத்தினார் துக்காராம். இதனால் நிலை தடுமாறிய பயங்கரவாதிகள், சாலையின் மத்திய தடுப்புச் சுவரில் காரை மோதிவிட்டனர். ஆனால், அதே சமயத்தில் தங்களது துப்பாக்கியை எடுத்து காவலர்களை நோக்கி சுட ஆரம்பித்தனர். அப்போது அவர்களை நோக்கி ஓடிவந்த துக்காராம் ஒருவனது துப்பாக்கியை தன் கையில் அழுத்தமாக பற்றிக் கொண்டார்.
அந்த சமயம் துப்பாக்கியின் குண்டுகள் அவரது வயிற்றை துளையிட்ட போதும் அந்த துப்பாக்கியின் பிடியை அவர் தளர விடவே வில்லை. இதனால், மற்ற போலீஸார் மீது ஒருவனால் சுட முடியவில்லை. துக்காராம் வீர மரணம் தழுவும் அந்த இறுதி தருணத்திலும் கூட துப்பாக்கியில் இருந்து கையை மட்டும் எடுக்கவே இல்லை. (நன்றி: DNA India)
விரைந்து செயல் பட்ட மற்ற போலீஸார் இருவரையும் சுட்டு வீழ்த்தினர். அதில் ஒருவன் உயிர் பிழைத்து வாக்கு மூலம் அளித்த கதை இன்னொரு பதிவில்.
துக்காராம் செய்த உயிர் தியாகத்தின் மதிப்பு அளவிடற்கரியது.
மும்பை வந்த தீவிரவாதிகளில் முதன் முதலாக ஒருவன் பிடிப் பட்டதற்கும் ஒருவன் கொல்லப் பட்டதற்கும் இவரே மூல காரணம்.
அந்த பயங்கரவாதிகள் மலபார் ஹில்ஸ் பகுதிக்கு திட்டமிட்டபடி சென்றிருந்தால் இழந்திருக்கக் கூடிய உயிர்கள் எத்தனை இருந்திருக்கும்? மேலும் பிடிபட்ட ஒருவன் மூலமே நமக்கு பல பயங்கர உண்மைகள் வெளிவந்துள்ளன என்பதையும் நினைத்து பார்க்க வேண்டும்.
இன்றைய தேதியில் காவல் துறையின் மீது எத்தனையோ (ஊழல் உட்பட) குற்றச்சாட்டுகள் சுமத்தப் படுகின்றன. அந்த அத்தனை கறைகளையும் ஒரே இரவில் நீக்கும் ஒரு சிறந்த அரிய சேவையை இன்னுயிரைக் கொடுத்து இந்த காவல்காரர் செய்துள்ளார். கதைகளில் படித்தும் திரைபடங்களில் பார்த்தும் மட்டுமே உள்ள இத்தகைய அரிய தியாகத்தை பார்த்த பின்னராவது இந்திய போலீஸ் துறை சிறப்பாக செயல் பட்டு நம் நாட்டை காப்பாற்றினால் அதுவே அவருக்கு செலுத்தப் படும் அஞ்சலியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
தியாகத்திரு.துக்காராம் ஒம்ப்லெ அவர்களது ஆத்மா சாந்தியடையவும் அவரது குடும்பம் இந்த வருத்தமான சூழலில் இருந்து மீண்டு சிறந்த முறையில் வாழவும் வேண்டிக் கொள்வோம்.
வாழ்க துக்காராம் புகழ்!
ஜெய் ஹிந்த்.

Comments
வாழ்க துக்காராம் புகழ்!
அவருடை குடும்பத்திர்க்கு வேண்டிய உதவி்களை அரசு செய்திடவேண்டும்.
அவருக்கு எனது வணக்கங்கள்.
பின்னூட்டத்திற்கு நன்றி
'உண்மையான ஹீரோ அவர். அவர் குடும்பத்திற்கு எல்லா நனமையும் கிடைக்க கடவுளைப் பிரார்த்திப்போமாக.'
Here is the link to the story: http://www.tamilish.com/story/16117
Thank your for using Tamilish!
- The Tamilish Team
Thanks for the comments
பின்னூட்டத்திற்கு நன்றி
தீவிரவாதிகள் மக்களை தாக்கத்தொடங்கியதும் மைக்கின் மூலம் யாரையும் அந்த பிளாட்பாரம் வரவிடாமல் செய்தனர் இவரும் இவர் நண்பரும்.....இவரின் இந்த செயலால் பல உயிர்கள் பிழைத்தது...மும்பை மக்கள் இவரை இப்போது கொண்டாடுகிறனர்....
வாழ்க அனைவரும்...ஒழிக தீவிரவாதிகளும் தீவிரவாதமும்
//அவருடை குடும்பத்திற்கு வேண்டிய உதவி்களை அரசு செய்திடவேண்டும்.//
நானும் வழிமொழிகிறேன்
பின்னூட்டத்திற்கு நன்றி
நீங்கள் சொல்வது மிகவும் சரியே. காவல்துறையை மட்டும் நம்பி இராமல் தனிப் பட்ட மனிதர்களும் இது போன்ற புத்திசாலித்தனமாக செயல் பட்டால் பல உயிர் இழப்புகளை தவிர்க்கலாம்.
மேலும் இது போன்ற உண்மையான ஹீரோக்களை கொண்டாடுவோம். பள்ளிப் பாடங்களில் இவர்கள் பெயர் வரசெய்வோம்.
வழிமொழிகிறேன்
Thank you for the comments
பின்னூட்டத்திற்கு நன்றி
முட்டிக்கொள்வது
absolutely!
சோகத்திலும் ஒரு புத்துணர்வு கிட்டச்செய்யும் செய்தி.
துக்காராம், salutes!
http://timesofindia.indiatimes.com/Mumbai/We_had_to_act_or_be_killed/articleshow/3774445.cms
பின்னூட்டத்திற்கு நன்றி
நீங்கள் சொல்வது சரியே. நாம் உண்மையான ஹீரோக்களை விட்டு விட்டு நிழல்திரை ஹீரோக்களையும் கிரிக்கெட் ஹீரோக்களையும்தான் அதிகம் கொண்டாடுகிறோம்.
பின்னூட்டத்திற்கு நன்றி
DNA பத்திரிக்கையில் அவர் இறந்ததாகவே குறிப்பிடப் பட்டுள்ளது. மேலும் Times of India பத்திரிக்கையிலும் கூட அவர் தாக்குதலில் உயிர் தப்பி பிழைத்ததாக கூறப் படவில்லை. நமது நாட்டின் சோகமே இதுதான். இறந்த போலீசாரில் பெரிய அதிகாரிகளைத் தவிர உய்ரிதியாகம் செய்த மற்றவரைப் பற்றி முறையான தகவல்களோ புகைப் படங்களோ அதிகம் வெளியிடவே இல்லை.
மேலும் ஒரு போலீஸ் காரர் தீவிரவாதிகளை லத்தி கொண்டு தாக்கியதாகக் கூறப் படுகிறது. ஆனால் இவை அனைத்தையும் பற்றி அதிகாரப் பூர்வ தகவல்கள் எதுமே இல்லை. எனவே, மேற்சொன்ன தினத் தாள்களில் வெளியிடப் பட செய்திகளின் அடிப்படையிலேயே நாம் பல தகவல்களைப் பெற முடிகிறது.
Thanks for the comments
Thank you for the comments
அந்த தியாகசெம்மல் துக்காராமுக்கு மும்பையின் மத்தில் சிலை அமைத்திட வேண்டும், கூடவே அரசியல்வாதிகளின் சிலைகளை அகற்றி இந்த சிலையின் முக்கியத்துவத்தை காட்ட வேண்டும்