சரியான சாலை வசதி இல்லாத ஒரு அடர்த்தியான காட்டுக்குள் பயணம் செய்யும் நேரிடும் போது, ஒரு சரியான திசைமானி மற்றும வரைபடம் இருந்தால் மட்டுமே நம்மால் நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு சரியாக, சரியான நேரத்திற்குள் செல்ல முடியும். இல்லையென்றால், நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடியாதது ஒரு பக்கம், மறு பக்கம் நாம் பெரும் குழப்பத்திலும் அச்சத்திலும் ஆழ்ந்து விட வாய்ப்பு உள்ளது. இதனால், ஒரே இடத்தை சுற்றி சுற்றி வரவோ அல்லது முற்றிலும் மாறுபட்ட திசையில் சென்று விடவோ வாய்ப்பு உள்ளது.
நமது வாழ்க்கையை கூட ஒரு அடர்த்தியான காட்டுடன் ஒப்பிடலாம். வாழ்வின் பல்வேறு தருணங்களில் நாம் அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் சரியான திசை இன்றி வழி தெரியாமல் தடுமாறி விடுகிறோம். அப்போதெல்லாம், சரியான இலக்குகள் மற்றும அவற்றை அடைவதற்கான வழிமுறைகள் இல்லாவிடில் நாம் திருவிழா கூட்டத்தில் தொலைந்து போன ஒரு சிறுவனின் மனநிலையை அடைந்து விட வாய்ப்பு உள்ளது. இதனால் ஏற்படுவது பெரும் அச்சம் மற்றும பரிதவிப்பு. இந்த மாதிரியான தருணங்களில் நமது மூளை சரியாக வேலை மறுத்து விடுகிறது.
இத்தகைய பிரச்சினைகளில் இருந்து நாம் தப்பிக்க மனவியல் வல்லுனர்கள் தரும் யோசனை இது. "தொலை தூர இலக்குகளும் அவற்றை அடைவதற்கான திட்டமும் இருக்கும் பட்சத்தில் நாம் வாழ்க்கையில் தொலைந்து போவதிலிருந்து தப்பிக்க முடியும்."
ஆனால் தொலை தூர இலக்குகளை நிர்ணயிப்பதும் திட்டங்களை தீட்டுவது நம்மில் பலருக்கு மிகக் கடினமான காரியம். காரணம் சாமான்ய மனிதர்களுக்கு அத்தகைய திட்டமிடுதலுக்கு தேவையான தகவல்களும் (Data) எதிர்காலத்தை பற்றிய சரியான முன் கணிப்பும் (Forecasts) முழுமையாக கிடைப்பதில்லை. மேலும், மிகப் பெரிய வல்லுனர்களால், பல காலம் கடினமான உழைப்பில் உருவாக்கப் படும் திட்டங்களே பல சமயங்களில் தோல்வி அடைந்து விடுகின்றன. நம்மை போன்ற சாமான்யர்கள் என்ன செய்ய முடியும்?
நீண்ட கால பெரிய இலக்குகளை நிர்ணயிப்பதற்கு மற்றும் அவற்றை அடைவதற்கான திட்டங்களை தீட்டுவதற்கு முன்னர் நாம் செய்ய வேண்டிய சிறிய பரிசோதனை முயற்சி இது. (இன்றைக்கே தொடங்கி விடுதல் உத்தமம்) குறுகிய கால நோக்கில், சிறிய மற்றும் எளிதில் அடையக் கூடிய இலக்குகளை உங்களுக்கு நீங்களே நிர்ணயித்து கொள்ளுங்கள்.
உதாரணமாக, நாளை காலை 6.00 (முடியாவிட்டால் ஒரு 7.00) மணிக்கு படுக்கையை விட்டு எழுவோம் என்பது கூட ஒரு இலக்குதான். அந்த இலக்கை அடைய திட்டம் தீட்டுங்கள். அதாவது அலாரம் வைக்கலாம். இரவில் சீக்கிரமாக தூங்கலாம். இப்படி தீட்டிய திட்டம் வெற்றி பெறுவது நீங்கள் காலையில் எழுவதை பொறுத்தது.
அப்படி எழுந்து விட்டால், உங்களை நீங்களே பலமாக பாராட்டிக் கொள்ளுங்கள் (வேறு யார் வருவார் இதற்கெல்லாம் பாராட்ட) . எப்படி பாராட்டுவது என்றால், "டே (உங்கள் பெயர்) நீ உண்மையிலேயே பெரிய ஆளுடா. சாதிச்சுட்டடா " பக்கத்தில் யாரும் இல்லையென்றால் வாய் விட்டு சத்தமாக கூட பாராட்டிக் கொள்ளலாம். (பாராட்டி விட்டு மறுபடியும் தூங்க போய் விடக் கூடாது). ஒருவேளை வெற்றி பெறா விட்டால் (அடுத்த நாள்) முயற்சியை தளர விடாதீர்கள். இறுதி வரை போராடுங்கள், அடைவதற்கான புதிய வழிகளை தேடுங்கள். நாள் முழுதும் அதற்காகவே யோசித்துக் கொண்டிருங்கள்.
முதல் திட்டம் வெற்றி பெற்ற பிறகு புதிய இலக்குகளை நிர்ணயித்து கொள்ளலாம்.உதாரணம், அரை மணி நேர நடை பயிற்சி, உடற்பயிற்சி அல்லது மன பயிற்சி, ஒரு குறிப்பிட்ட புத்தகம் படித்து முடிப்பது, அலுவலகத்திற்கு நேரத்திற்கு செல்வது, பிடித்த ஊருக்கு அல்லது சினிமாவிற்கு செல்வது இப்படி எது வேண்டுமானாலும் இருக்கலாம். ஒரே ஒரு நிபந்தனை. இலக்கு அடையக் கூடியதாகவும் அதனை அடைவதற்கான திட்ட வழி முறைகள் எளிமையானதாகவும் இருக்க வேண்டும். ஒவ்வொரு இலக்கை அடைந்த பிறகும் நீங்கள் அதனை (உங்களுக்கு பிடித்த அல்லது முடிந்த வரை) கொண்டாடுவதும் மிகவும் அவசியம்.
இந்த பயிற்சிகள் முதல் பார்வையில் வேடிக்கையாக தோன்றலாம். ஆனால் இவை உளவியல்ரீதியானவை. இவற்றால் நாம் அடையக் கூடிய பயன்கள் கீழே.
இலக்குகளை நிர்ணயிக்கவும் திட்டங்களை தீட்டவும் மனம் பழகிக் கொள்கிறது. நாம் அடையும் சிறு சிறு வெற்றிகள் மூலம் நமக்கு புதிய தன்னம்பிக்கையும் மகிழ்ச்சியும் கிடைக்கிறது. இந்த வெற்றிகள் நம்மை புதிய மற்றும் பெரிய இலக்குகள் நிர்ணயிப்பதற்கான உற்சாகத்தைக் கொடுக்கிறது. சிறிய திட்டங்களை தீட்ட நாம் மேற்கொண்ட பயிற்சி பெரிய திட்டங்களை சிறப்பாக தீட்ட உதவுகிறது. சில சமயங்களில் இவை நம்முடைய நீண்ட கால நோக்கம் என்ன என்பதைக் கூட நம்மை உணரச் செய்ய உதவுகின்றன. வெற்றிகளை நாம் கொண்டாடுவது மிகவும் அவசியம் என்று சொன்னேன் அல்லவா? ஏனென்றால், நம்முடைய லட்சியங்களின் வெற்றி முதலில் நமக்கு திருப்தி அளிக்க வேண்டும். மற்றவர்களின் பாராட்டையோ அங்கீகாரத்தையோ எதிர்பார்த்திருக்கக் கூடாது. அவ்வாறு எதிர்பார்த்திருந்து ஒரு வேளை பாராட்டு வெளியிலிருந்து கிடைக்காத பட்சத்தில் மனம் தளர்ந்து விடும்.
இப்படி நீங்கள் இலக்குகளும், அவற்றை அடைவதற்கான முயற்சிகளும், முயற்சிகளில் வெற்றி பெற்றதற்கான மகிழ்ச்சிகளும் கொண்ட மனிதராக இருக்கும் பட்சத்தில், வாழ்க்கைக்குள் நீங்கள் எங்கே தொலைய போகிறீர்கள்? வாழ்க்கையை எப்போதும் துரத்தும் மனிதராக அல்லவா இருப்பீர்கள்?
எங்கே கிளம்பி விட்டீர்கள்? முதல் இலக்கை நிர்ணயிக்கத்தானே?
நன்றி.
22 comments:
உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்...பாடல் நினைவு வருகிறது.மனதை கட்டுக்குள் கொண்டு வந்தால் எதனையும் வெல்லாம்...கட்டுரை அருமை.
வாழ்க வளமுடன்,
வேலன்.
சூப்பர்..வழக்கம் போல உபயோகமான பதிவு....நான் இன்றிலிருந்தே ஆரம்பிக்கிறேன்!!!!!
இந்த 6 மணிக்கு எழுந்திருக்கவேண்டும் எல்லாம் சரி.ஆனால் 6 மணிக்கு தூக்கம் கலைந்தவுடனே இன்னும் ஒரு 5 நிமிசம்,இன்னும் ஒரு 5 நிமிசம் சுகமிருக்கிறதே:)
பின்னூட்டத்திற்கு நன்றி வேலன்
பின்னூட்டத்திற்கு நன்றி கமல்
வாழ்த்துக்கள்
பின்னூட்டத்திற்கு நன்றி வேலன்
//உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்...பாடல் நினைவு வருகிறது.மனதை கட்டுக்குள் கொண்டு வந்தால் எதனையும் வெல்லாம்...//
நீங்கள் சொல்வது சரி. எனக்கும் இந்த பாடல் வரிகள் மிகவும் பிடிக்கும்
நான் படித்தில் மிகவும் பிடித்த பதிவு இது இதில் குறிப்பிட்ட பகுதியை மட்டும் மேற்கோள்
காட்ட முடியவில்லை பதிவில் உள்ள 518 எழுதுக்களும் சிறப்பானவை எப்படிங்க நம்ம முதல் இலக்கு நான் எழுத்துக்களை எண்ணாமல் மொத்த எழுத்துக்களை கண்டுபிடித்தேன் எப்படி என்று சொல்லுகளேன்
அன்புள்ள ராஜ நடராஜன்
பின்னூட்டத்திற்கு நன்றி
//இந்த 6 மணிக்கு எழுந்திருக்கவேண்டும் எல்லாம் சரி.ஆனால் 6 மணிக்கு தூக்கம் கலைந்தவுடனே இன்னும் ஒரு 5 நிமிசம்,இன்னும் ஒரு 5 நிமிசம் சுகமிருக்கிறதே:)//
அபப நீங்க 5.30 மணிக்கே அலாரம் வச்சுட வேண்டியதுதான் :)
அன்புள்ள dg
பின்னூட்டத்திற்கு நன்றி
//நான் படித்தில் மிகவும் பிடித்த பதிவு இது இதில் குறிப்பிட்ட பகுதியை மட்டும் மேற்கோள்
காட்ட முடியவில்லை பதிவில் உள்ள 518 எழுதுக்களும் சிறப்பானவை எப்படிங்க நம்ம முதல் இலக்கு நான் எழுத்துக்களை எண்ணாமல் மொத்த எழுத்துக்களை கண்டுபிடித்தேன் எப்படி என்று சொல்லுகளேன் //
நானும் கூட இந்த பதிவை மிகவும் விரும்பி ரசித்தும் கூட சில நாட்களுக்கு முன்னரே எழுதினேன். ஆனால் மும்பை பிரச்சினையினால் பதிவிட கொஞ்சம் காலதாமதம் ஆகி விட்டது.
உங்கள் முதல் இலக்கில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள். மேலும் வெற்றிகள் பல பெறவும் வாழ்த்துக்கள்.
எப்படி கண்டுபிடித்தீர்கள்? கொஞ்சம் சொல்லுங்களேன். :)
wordpress word count ல சார். இலக்கிலும் குறுக்குவழி என்ன பண்ண நம் ( நாமன்னு சொல்லலாம்ல) மனது அப்படி பழகி விட்டது.
அன்புள்ள DG
//இலக்கிலும் குறுக்குவழி என்ன பண்ண நம் ( நாமன்னு சொல்லலாம்ல) மனது அப்படி பழகி விட்டது. //
இது குறுக்கு வழி அல்ல. எளிய வழி. அவ்வளவே. கலக்குங்க. :)
//அபப நீங்க 5.30 மணிக்கே அலாரம் வச்சுட வேண்டியதுதான் :)//
அதைத்தானே செய்கிறேன்!5.30 முதல் 10 நிமிடத்துக்கொரு முறை அலாரத்தின் தலையில் தட்டி கடைசியில் 6.10 க்குப் போனாப் போகுதுன்னு எழுந்திருக்கிறதுதான்.
எப்படியோ இனிமேல் எனக்கு நானே ஒரு சபாஷ் போட்டுக்கொள்ளப் போகிறேன்:)
அன்புள்ள ராஜநடராஜன்
//எப்படியோ இனிமேல் எனக்கு நானே ஒரு சபாஷ் போட்டுக்கொள்ளப் போகிறேன்:)//
கவலைப் படாதேங்க. உங்களுக்கு நானும் ஒரு சபாஷ் போடறேன் :)
நன்றி
//(பாராட்டி விட்டு மறுபடியும் தூங்க போய் விடக் கூடாது).//
அதைத்தானே தெனமும் செய்யுறோம் :-))
// ராஜ நடராஜன் said...
இந்த 6 மணிக்கு எழுந்திருக்கவேண்டும் எல்லாம் சரி.ஆனால் 6 மணிக்கு தூக்கம் கலைந்தவுடனே இன்னும் ஒரு 5 நிமிசம்,இன்னும் ஒரு 5 நிமிசம் சுகமிருக்கிறதே:) //
சரியா சொன்னீங்க நட்டு.எனக்கு இப்படி 5 நிமிஷம் கடந்து கடந்து ஒரு வழியா 8 மணிக்கு தான் தூக்கம் தெளியும்.
நல்ல ரசிக்கும்படியான பதிவு
அன்புள்ள கார்த்திக்
பின்னூட்டத்திற்கு நன்றி
//நல்ல ரசிக்கும்படியான பதிவு //
ரசித்ததோட நிறுத்திடாதீங்க, கொஞ்சம் முயற்சி பண்ணுங்க :)
வணக்கம்
நாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தியா பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.
http://www.thamizhstudio.com/
Add a Gadget - ல் இதை பயன்படுத்துக
வழி –> Add a Gadget –> select HTML/JavaScript
Title : தமிழ் ஸ்டுடியோ.காம்
Content : img alt=”தமிழ் ஸ்டுடியோ.காம்” src=”http://thamizhstudio.com/images/home_stud_logo.jpg”/>
எனக்கு பிடித்த பதிவு
நன்றாக இருந்தது,
அன்புள்ள dhans
உங்களது பின்னூட்டத்திற்கு நன்றி. எனக்குக் கூட மிகவும் பிடித்த பதிவு இது. :)
தொலைந்து போகவிருக்கும் வாழ்கையை இக்கட்டுரை மீட்டெடுத்து தரவல்லது ..... நம்பிக்கையை வளர்க்கிறது.... நன்றி....
அன்புள்ள அட்வகேட் ஜெயராஜன் ஐயா
//தொலைந்து போகவிருக்கும் வாழ்கையை இக்கட்டுரை மீட்டெடுத்து தரவல்லது ..... நம்பிக்கையை வளர்க்கிறது.... நன்றி....//
பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி
நல்ல பதிவு..ஆரம்பிக்கப்போகிறேன்..
// நல்ல பதிவு..ஆரம்பிக்கப்போகிறேன்//
நல்லது கண்ணகி! வாழ்த்துக்கள்!
:)
Post a Comment