Thursday, December 4, 2008

உயிர் பிழைத்திருப்பதற்காக பயப்படும் தீவிரவாதி!


எல்லாக் குற்றவாளிகளும் தண்டனைக்கு முக்கியமாக மரணதண்டனைக்கு பயப் படுவது வழக்கம். ஆனால், இந்த தீவிரவாதியோ உயிர் தப்பித்து விடுவோமோ என்று அஞ்சுகிறான். வேதனையிலும் வேடிக்கையான இந்த கதையை கேளுங்கள்.

மும்பை தாக்குதலின் போது ஒருவன் மட்டுமே உயிரோடு பிடிக்கப் பட்டான் என்பது நினைவிருக்கும். அவன் வெளியிடும் தகவல்கள் (பத்திரிக்கை செய்தி) இதோ. இவன் பாகிஸ்தானில் உள்ள பாரிட்கொட் பகுதியில் வாழ்ந்த ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தவன். இரண்டு வருடங்களுக்கு முன்னர், இவனைப் பெற்றவன் இவனை ஒரு தீவிரவாதிகளின் குழுத் தலைவனிடம் (லஸ்கர் ஈ தோய்பா) பெரும் பணம் பெற்றுக் கொண்டு ஒப்படைத்தான்.

அந்த தலைவனிடம் இவனைப் போலவே இளைய வயதுடையவர்கள் (இவனையும் சேர்த்து) 25 பேர் இருந்தனர். இவர்களுக்கு பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் காட்டுப் பகுதிகளில் ஒரு வருடம் தீவிர பயிற்சி அளிக்கப் பட்டுவந்தது. இந்தியாவில் தாக்கவே இவர்கள் தயார் செய்யப் படுகின்றனர் என்ற தகவல் இவனுடைய தந்தைக்கு முன்னரே தெரிந்ததே இருந்தது. சுமார் 45 நாட்களுக்கு முன்னர், இந்த 25 பேர் கொண்ட குழுவிலிருந்து 10 பேர் மும்பையை தாக்க தேர்ந்தெடுக்கப் பட்டனர். அவர்களுக்கு தாஜ் ஹோட்டல், நரிமன் ஹௌஸ் மற்றும் ஒபேராய் ஹோட்டல் ஆகியவற்றின் வரைபடங்களின் நகல்கள் வழங்கப் பட்டன.


எக்காரணத்தை கொண்டும் பாகிஸ்தான் இவர்கள் திரும்பக் கூடாது என்பது இவர்களுக்கு இடப் பட்டிருக்கும் உறுதியான கட்டளை என்றும் இவன் உயிர் தப்பித்துள்ளான் என்று தெரிந்தால் இவனுடைய குடும்பத்துக்கும் ஆபத்து என்றும் போலீசாரிடம் தெரிவித்துள்ளான்.இவனுக்கு மரண தண்டனை உறுதி அல்லவா? எப்படி இவன் உயிர் தப்பிக்க அலல்து பாகிஸ்தான் உயிரோடு திரும்ப முடியும்? இவன் பலர் முன்னிலையில் நடத்திய உயிர்வேட்டை பல வீடியோக்களில் கூட நேரடியாக பதிவு செய்யப் பட்டுள்ளன அல்லவா? மேலும் இவனை போலீஸார் நேரடி சண்டையில் கையும் களவுமாக அல்லவா பிடித்துள்ளனர்? இப்படி எல்லாம் கேள்வி கேட்டால் நீங்கள் ஒரு அப்பாவி.

இங்கே இந்தியாவில் இவனை போன்றவர்களை காப்பாற்றுவதற்கென்றே கும்பல் கும்பலாக பலர் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் என்னென்னவெல்லாம் சொல்லி இவனை காப்பாற்ற முயற்சிப்பார்கள் தெரியுமா? "போலீஸார் இந்த வழக்கை ஒரு அப்பாவி மீது ஜோடித்து விட்டனர். போலீஸார் சாட்சியை உண்மையென்று எடுத்துக் கொள்ள முடியாது. வீடியோ ஆதாரங்கள் செல்லாது. அவை திரிக்கப் பட்ட ஆதாரங்கள். எவரேனும் நேரடி சாட்சி சொனாலும் கூட அவர் ஒரு பொய் சாட்சி. இவனுக்கு சட்டரீதியான (நீதிமன்றங்களில் வழக்காட) உரிய உதவிகளை செய்ய வேண்டும்"சுப்ரீம் கோர்ட் வரை இந்த வழக்கு சென்று இவன் மீதான குற்றச் சாட்டு மெய்ப்பிக்கப் பட்டாலும் கூட இவனுக்காக கருணை மனு அனுப்பப் படும். இவன் தங்கி இருக்கும் சிறை அனைத்து வசதிகளுடன் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என சில கோரிக்கைகள் எழும். அரசியல்வாதிகளோ இவன் சம்பந்தமான ஒவ்வொரு விஷயத்தையும் வாக்கு வங்கி என்ற மாயத்திரையின் ஊடேயே பார்ப்பார்கள். மனித நேயத்தின் அடிப்படையில் இந்தியாவில் இருந்து மரணதண்டனையையே முழுமையாக நீக்க வேண்டும் என்று கூட சில கோஷங்கள் எழும்.


இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு முக்கிய விஷயம் கவனிக்கப் படத் தக்கது. இவன் போன்றவர்கள் லட்சியத்திற்காக போராடும் போராளிகள் அல்ல. இவர்கள் சொந்த குடும்பத்தினராலேயே பணத்திற்காக விற்பனை செய்யப் பட்ட கூலிக் கொலைகாரர்கள் மட்டுமே.


நன்றி

16 comments:

கபீஷ் said...

ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க. பொறுத்திருந்து பார்ப்போம் இனியாவது இந்த அரசியல் வாதிகள் திருந்துகிறார்களா என்று

Maximum India said...

அன்புள்ள கபீஷ்

// பொறுத்திருந்து பார்ப்போம் இனியாவது இந்த அரசியல் வாதிகள் திருந்துகிறார்களா என்று//

இப்போது மக்களின் கோபம் தீவிரவாதிகளுக்கு அடுத்தபடியாக அரசியல்வாதிகள் மீதுதான் அதிகம் இருக்கிறது. இதை ஓரளவுக்கு டெல்லி அரசியல்வாதிகள் உணர்ந்திருக்கிறார்கள். ஆனால், மாநில அரசியல்வாதிகள் கொஞ்சம் மொத்தமான தோல் கொண்டுதான் வாழ்ந்து வருகிறார்கள்.

பின்னூட்டத்திற்கு நன்றி :)

கார்த்திக் said...

// இப்போது மக்களின் கோபம் தீவிரவாதிகளுக்கு அடுத்தபடியாக அரசியல்வாதிகள் மீதுதான் அதிகம் இருக்கிறது. இதை ஓரளவுக்கு டெல்லி அரசியல்வாதிகள் உணர்ந்திருக்கிறார்கள்.//

இங்க அதுக்கு வாய்பே இல்லை.பாப்போம் என்ன நடக்குதுன்னு.

கார்த்திக் said...

இதையும் பாருங்க

pothujanam said...

இந்தியாவில் கூலிக்கு மார் அடிக்கிறார்கள். பாகிஸ்தானில் கூலிக்கு உயிரே எடுக்கிறார்கள். ஏதோ மெடிக்கல் காலேஜில் பணம் கட்டி சேக்கற மாதி போயி அவனை சேத்தி இருக்கான் அவங்கப்பன். ஆனா ஒன்னு. உயிரே போக போதுன்னு தெரிஞ்சு எல்லை தாண்டி வர பசங்களோட மன உறுதி தான் என்ன. வறுமையும் மோசமான போதனை களும் ஒரு மனிதனை எவ்ளவு தூரமும் கொண்டு செல்லும் என்பதற்கு இது சாட்சி. பாகிஸ்தானில் தீவிர வாத புற்று நோய் முழுக்க பரவி விட்டது.உலக அழிவின் விதை அங்கே தூவப்பட்டு இருக்கிறது.புற்று நோய் பாதித்த இடத்தை முற்றிலும் அறுவை சிகிச்சை செய்து அகற்ற வேண்டும். அதற்கு கொஞ்சம் விலை கொடுக்கத்தான் வேண்டும் .எல்லை தாண்டிய பயங்கர வாதத்தை பாகிஸ்தான் செய்கிறது என்றால் நம் மக்களை காப்பாற்ற எல்லை தாண்டி தாக்குவதில் தவறேதும் இல்லை.நம் முப்படை அதை செய்ய முடியும். ஆனால் நாட்டில் உள்ள சொறி சிரங்கு படைகள் அதற்கு வழி விடுவார்களா?

nandan said...

அவன் வாக்கு மூலத்டில் சொன்னதெல்லாம் உண்மை என்று நம்புகிறீர்களா? பாவம் நீங்கள்.

தாஜ் ஓட்டலில் இருந்து தப்பித்தவர்கள் கூற்றுப்படி தீவிரவாதிகள் அனைவரும் ஆங்கிலத்தில் பொளந்து கட்டினார்களாம். நீங்கள் என்னமோ இவர்கள் பள்ளிப் படிப்பை நிறுத்திய கூலி வேலை செய்கிறவர்கள் என்கிறீர்கள்.

Maximum India said...

அன்புள்ள கார்த்திக்

பின்னூட்டத்திற்கும் கருத்துக்கும் நன்றி

நீங்கள் குறிப்பிட்டுள்ள வலைத்தளத்தைப் பார்த்தேன். விரிவான பதில் பின்னே.

Maximum India said...

அன்புள்ள பொதுஜனம்

பின்னூட்டத்திற்கும் கருத்துக்கும் நன்றி

பாகிஸ்தானை தாக்க வேண்டுமா என்பது ஒரு பெரிய கேள்விக்குறி. விரிவான விளக்கம் விரைவில் ஒரு பதிவில்.

அதற்கு முன்னர் ஒரு பாகிஸ்தானியர் எனது ஆங்கில பதிவில் இட்டுள்ள ஒரு பின்னூட்டத்தை பாருங்கள். இதற்கு என்ன பதில் கொடுக்கலாம் என்றும் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.

shazi 45 has left a new comment on your post "Delicious India":

hello brother i am very said that India have been stroked by some terrorist and this is very condemning thing.
what do you thing actually that either pakistan is involved in this terrorist activity as pakistan is aslo facing the terrorist attacks.
do you also thing that a country that is having terrorist destruction in his own country can be involved i this kind of disasters.
and you really thing think that the behavoiur of indian media was good regarding creating fake film of chacha rehman that was looking a bollywood iind of stuff.
i am waiting for your comments on my blog. that is
conceptual world.blog spot.com

Maximum India said...

அன்புள்ள நந்தன்

//அவன் வாக்கு மூலத்டில் சொன்னதெல்லாம் உண்மை என்று நம்புகிறீர்களா? பாவம் நீங்கள்.//

உங்கள் கேள்வி நியாயமானதே. இந்த வாக்குமூலங்கள் வேண்டுமென்ற கசியவிடப் பட்டவையாக கூட இருக்கலாம். ஆனால், இந்த முறை, பல தகவல்களுக்கு CCTV, மொபைல் கேமரா மற்றும் நேரடி சாட்சிகள் உண்டு. எனவே ஓரளவுக்கு நம்பலாம்.

//தாஜ் ஓட்டலில் இருந்து தப்பித்தவர்கள் கூற்றுப்படி தீவிரவாதிகள் அனைவரும் ஆங்கிலத்தில் பொளந்து கட்டினார்களாம். நீங்கள் என்னமோ இவர்கள் பள்ளிப் படிப்பை நிறுத்திய கூலி வேலை செய்கிறவர்கள் என்கிறீர்கள்.//

அவர்கள் பிரிட்டனை சேர்ந்தவர்கள் என்று கூறப் படுகிறது. தீவிரவாதிகள் இப்போது மல்டி நேஷனல் கம்பெனி லெவலுக்கு போய் ஆள் சேர்ப்பார்கள் போல. இவர்களிடம் எல்லா நாட்டை சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள்.

வால்பையன் said...

முதல்ல புடிங்க வாழ்த்துகளை
வெகு சமீபத்தில் வந்து ஆனந்த விகடன் வறவேற்பரையில் இடம் பிடிப்பது சாதாரண விசயமா!
ஆனாலும் நான் முதலிலேயே சொன்ன படி ப்ளாக் என்ற ஊடகத்தை சரியாக பயன்படுத்துவதில் நீங்கள் தான் முன்னோடி.

கார்த்திக் said...

வாழ்துக்கள்!
வாழ்துக்கள்!!
வாழ்துக்கள்!!!

எங்கலுக்கு டிரீட் பார்சல்ல அனுபிடுங்க. :-))

Maximum India said...

அன்புள்ள வால்பையன்/கார்த்திக்

//முதல்ல புடிங்க வாழ்த்துகளை//

முதல்ல நீங்களும் கார்த்திக்கும் புடிங்க எனது நன்றிகள :-))

உங்களுடைய ஊக்கத்திற்கு மிக்க நன்றிகள்

vinoth said...

நீங்க சொன்னது 100 சதவிகிதம் உண்மையுளும் உண்மை. இந்த வெறி பிடித்த நாய்களை காப்பாற்ற என்றே நாம் நாட்டில் ஒரு கூட்டம் இருக்கிறது. அரசியல்வாதி, அறிவுஜீவி(அருந்ததி ராய்&குரூப்) மற்றும் மனித உரிமை குரூப். இவர்களை முதலில் நாடு கடத்த வேண்டும்.

SKY said...

உலகம் (பூமி) எங்கே போய்கொண்டிருக்கிறது ?

Maximum India said...

அன்புள்ள வினோத்

பின்னூட்டத்திற்கும் கருத்துக்கும் நன்றி.

தீவிரவாதிகளை சாதாரண குற்றவாளிகளைப் போல நடத்தாமல் எதிரி நாட்டின் கொடூர போர்க் கைதிகளைப் போல பாவித்து அவர்களுக்கான தண்டனைகளுக்கு தனிச் சட்டம் கொண்டு வரவேண்டும்.
அவர்களுக்கு அளிக்கப் படும் தண்டனை புதிதாக வருபவர்களின் வயிற்றில் புளியைக் கரைக்க வேண்டும்.

நன்றி.

Maximum India said...

அன்புள்ள SKY

பின்னூட்டத்திற்கு நன்றி

//உலகம் (பூமி) எங்கே போய்கொண்டிருக்கிறது ?//

உங்களுடைய கவலை நியாயமானதே. இன்றிருக்கும் நிலை (தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதம்) மிகவும் கவலைக்குரிய ஒன்றே. இதனை உடனே உலக நாடுகள் கவனிக்கவிடில் பெரும் அபாயம் நிச்சயம்.

நன்றி

Blog Widget by LinkWithin