Skip to main content

Posts

ஹை! இது கூட நல்லாருக்கே?

பொதுவாக அமெரிக்காவில் சளி பிடித்தால் இந்தியாவில் தும்மல் வரும் என்று சொல்லப் படுவதுண்டு. அமெரிக்க சந்தைகளின் போக்கை குறிவைத்தே இந்திய சந்தைகள் நகருவதாகவும் ஒரு பொதுவான கருத்து உண்டு. ஆனால் இன்று இந்தியாவில் நிகழ்ந்துள்ள ஒரு மாற்றம் (இந்திய மத்திய வங்கி தனது முக்கிய வட்டி வீதத்தை அதிகப் படுத்தியது) அமெரிக்காவின் சந்தையை பெருமளவு பாதித்ததாக அந்த நாட்டின் முக்கிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது உலக அரங்கில் இந்தியா இப்போது எவ்வளவு அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது என்பதை காட்டுகின்றது. ஜெய் ஹிந்த்!

பெர்சிஸ்டேன்ட் சிஸ்டம்ஸ் - முதலீடு செய்யலாம்.

மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான "பெர்சிஸ்டேன்ட் சிஸ்டம்ஸ் லிமிடெட்" தனது பங்குகளை வெளியிட முடிவு செய்துள்ளது. நாளைய தேதியில் (19.03.2010) முடிவடையும் இந்த வெளியீட்டின் (IPO) விலை Rs.290-310 என்ற அளவில் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. மென்பொருட்களை அவுட்சோர்சிங் (Outsoruced Software Product Development - OPD) செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ள இந்த நிறுவனம் மற்ற தகவல் தொழிற்நுட்ப நிறுவனங்களிடம் இருந்து சற்று மாறுபட்டு காணப் படுகிறது. இந்த நிறுவனத்தின் நிதி நிலை அறிக்கைகள் சிறப்பாகவே (உலகப் பொருளாதார பின்னடைவு ஏற்பட்ட 2009 ஆம் ஆண்டை தவிர) காணப் படுகிறது. இதன் விலை நிர்ணயமும் ஏற்கனவே வணிகமாகி வரும் மற்ற பெரிய மென்பொருள் நிறுவனங்களை விடவும் கவரக் கூடிய வகையில் உள்ளது. ஓரளவுக்கு மதிப்பில் சிறந்த இந்த நிறுவனத்தின் மிகச் சிறிய அளவிலான புதிய பங்கு வெளியீடு பலமடங்கு வரவேற்பை பெறும் என்று நம்புகின்றேன். சந்தையிலும் மென்பொருட் நிறுவனங்களின் பங்குகளுக்கு தற்போது நல்ல வரவேற்பு காணப் படுவதும், இந்திய மென்பொருட் நிறுவனங்கள் பெருமளவுக்கு சார்ந்திருக்கும் அமெரிக்க பொருளாதாரம் சற்று மேம்பட்டு வருவதும் நல்...

"முதல் உறுதி" நிதிகளில் முதலீடு செய்யலாமா?

பொதுவாக பங்குசந்தையில் முதலீடு செய்வதென்றால் பலருக்கும் வரும் முதல் பயம் "போட்ட முதல் முழுமையாக திரும்பி வருமா?" என்பதுதான். இது நியாயமான பயம்தான் என்பதில் சந்தேகில்லை. அதே சமயம், இந்த பயத்தினை தமக்கு சாதகமாக பயன்படுத்த விரும்பும் சில பரஸ்பர நிதி நிறுவனங்கள் (சில காப்பீட்டு நிறுவனங்கள் கூட) புதிய பங்கு திட்டங்களை (Capital Protection Schemes) அறிமுகப் படுத்தி வருகின்றனர். குறிப்பிட்ட பங்கு நிதி திட்டத்தில் முதலீடு செய்தால் போட்ட பணம் போகாது (நுண்ணிய எழுத்துக்களில் "போட்ட பணம் போகாமலிருக்க முயற்சி செய்வோம்" என்ற டிஸ்கியுடன்) என்றும் விளம்பரம் செய்கின்றனர். இந்த திட்டங்களில் முதலீடு செய்வதினால் என்ன லாபம் அல்லது என்ன நஷ்டம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். ஏற்கனவே சொன்னபடி "பங்கு சந்தையில் பங்கெடுக்க வேண்டும்", அதே சமயம் "முதலுக்கு மோசமாக கூடாது", "கொஞ்சம் குறைவான வருமானம் பங்குசந்தையில் இருந்து வந்தாலும் போதும்" என்றெல்லாம் விரும்புபவர்கள் ஏற்கும் வண்ணம் இந்த பங்கு நிதி திட்டங்கள் வடிவமைக்கப் படுகின்றன. முதலீட்டாளர்களின் பணத்தில் ஒரு குற...

பட்ஜெட் பாத்திரம் ஏந்தி வந்தே!

பட்ஜெட் பாத்திரம் ஏந்தி வந்தே! பொதுவாக பட்ஜெட் என்பது ஒரு அரசாங்கத்தின் வரவு செலவு அறிக்கையாக மட்டுமே அறியப்படுகிறது. பல நாடுகளில் இதற்கு மேலே எந்த ஒரு முக்கியத்துவமும் பட்ஜெட்டிற்கு வழங்கப் படுவதில்லை. அதே சமயத்தில் இந்தியாவில் பட்ஜெட் மீது எப்போதுமே ஏராளமான எதிர்பார்ப்புக்கள் இருந்து வந்திருக்கின்றன. இந்த முறையும் எதிர்பார்ப்புக்களுக்கு பஞ்சமில்லை. இந்திய சமூகத்தின் ஒவ்வொரு பகுதியினரும் அரசாங்கத்திடமிருந்து ஏதேனுமொன்றை எதிர்பார்த்த வண்ணமே இருக்கின்றனர். பெரும் தொழில் அதிபர்கள் விரும்புவது முதலீட்டு சலுகைகள் மற்றும் வரிச்சலுகைகள். பங்குசந்தையின் விருப்பத்திற்கேற்ப பட்ஜெட் அமைய வேண்டுமென்று பங்கு வர்த்தகர்கள் விரும்புகின்றனர். மத்திய தர மக்கள் விரும்புவது வருமான வரி உயர்வு சலுகைகள் மற்றும் விலைவாசி கட்டுப்பாட்டு நடவடிக்கைகள். எளிய மக்கள் விரும்புவது தள்ளுபடிகள், மானியங்கள் மற்றும் விலைவாசி குறைப்பு நடவடிக்கைகள். சென்ற வாரம் வணிக தொலைகாட்சிகளில் பெரும் தனவந்தர்கள் பட்ஜெட் தொடர்பாக தமது விருப்பங்களை முன்வைத்த போது, எனக்கு ஒரு பழைய கதை ஞாபகத்திற்கு வந்தது. ஒரு பெரிய அரசனிடம் ஏதேனும் பெற்ற...

ஏமாறாதே! ஏமாற விடாதே!

இரண்டு நாட்களாக பதிவுலகம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. நித்யானந்தா செய்தது தவறா அல்லது ரஞ்சிதா செய்தது தவறா அல்லது இவர்கள் அந்தரங்கத்தை வெட்ட வெளிச்சமயமாக்கியது தவறா என்றெல்லாம் ஏராளமான பதிவுகள்/பின்னூட்டங்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இந்த பதிவில் இந்த தவறுகளைப் பற்றி அலசும் அளவுக்கு எனக்கு ஆன்மிகம், சாமியார்கள், திரை (நிழல்) உலக வாழ்க்கை போன்றவற்றைப் பற்றி அதிகம் பரிச்சயமில்லை என்றாலும் எனக்கு தோன்றிய சில பொதுவான கருத்துக்களை மட்டும் இங்கு முன்வைக்க விழைகிறேன். எத்தனையோ முறை போலி நிதி நிறுவனங்களிடம் ஏமாந்தாலும் திரும்ப திரும்ப அவற்றில் பணம் போட்டு ஏமாந்து கொண்டுதான் இருக்கின்றனர் நமது இந்திய மக்கள். சொல்லப் போனால் அமெரிக்கா போன்ற நாடுகளில் கூட போன்சி என்ற பெயரில் ஏமாறுபவர் ஏராளம். அதே போலத்தான் ஆன்மீகவாதிகளிடம் ஏமாறும் பொதுமக்களின் தொடர்கதையும். பல சாமியார்களின் மோசடிகளைப் பற்றிய ஊடகங்களில் தகவல்கள் வந்து கொண்டே இருந்தாலும், இந்த சாமியார் அப்படியல்ல என்று ரொம்பவும் அப்பாவித்தனமாக மீண்டும் மீண்டும் ஏமாறும் கதைகள் புதிது புதிதாக வந்த வண்ணமே உள்ளன. இவ்வாறு தொடர்ந்து ஏமாறுவதற...

மதமும் மனிதமும் - வாலுக்கு ஒரு கோரிக்கை!

அன்புள்ள வால்! மதம் முன்னர் வந்ததா அல்லது தீவிரவாதம் முன்னர் வந்ததா என்ற கேள்வி எழுந்தால், தீவிரவாதம் என்பதுதான் உண்மையாக இருக்க முடியும். ஏனென்றால் மனிதர்கள் இயல்பிலேயே வன்முறையாளர்கள்தான். மற்ற விலங்குகளை வேட்டையாடியே தனது வாழ்வைத் தொடங்கியவன்தான் ஆதி மனிதன். சற்று யோசிக்கத் தொடங்கியவுடன், மற்றவர்களை தனது ஆளுமைக்கு உட்படுத்த விளைந்த மனிதனின் ராஜதந்திரங்களில் ஒன்றுதான் மதம். எனவே மதத்திற்கு "ஆளுமை விரும்பி" மனிதனே வேராக இருக்கும் போது, மதத்தினை மட்டும் கடிந்து கொண்டு பிரயோஜனம் இல்லை என்றே நினைக்கிறேன். மதம் இல்லை என்று சொல்லிக் கொண்டு பதவிக்கு வந்தவர்களும் கூட மனிதர்கள் மீது வன்முறை மற்றும் அடக்கு முறையை பிரயோகித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். எனவே மதமே உலகத்தில் இல்லாமல் போய்விடினும் வன்முறைகள், தீவிரவாதங்கள் அழிந்து போய் விடும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. சட்டங்கள், சமுதாய அமைப்புக்கள், ஜாதிகள், ஒழுக்க முறைகள் (morals) அனைத்துமே ஒருவகையில் தனிப்பட்டவரின் அல்லது குழுக்களின் ஆளுமைக்கான வழிமுறைகள்தான். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால், அந்நிய நாட்டுடனான போரில் கொலை செய்பவ...

சீனாவில் முதலீடு செய்ய வேண்டுமா?

இன்றைய பொருளாதார சூழ்நிலையில், உலகெங்கும் ஆச்சரியத்துடன் பார்க்கப்படும் ஒரு நாடு சீனா. பொருளாதார தளர்ச்சியில் பல மேற்கத்திய நாடுகள் தத்தளித்துக் கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில், தனது அபரிமிதமான வளர்ச்சி வேகத்தை கட்டுப் படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் ஒரு நாடு சீனா. இந்த நாட்டின் வேகமான வளர்ச்சியின் பலனை அடைய விரும்புவர்களுக்கு இப்போது ஒரு நல்ல முதலீட்டு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதாவது இந்தியாவில் இருந்து கொண்டே சீனாவில் முதலீடு செய்யலாம் என்பது ஒரு வரவேற்கத் தக்க செய்திதானே? இந்தியாவின் பெஞ்ச்மார்க் முயுச்சுவல் பன்ட் (Benchmark Mutual Fund) இப்போது "ஹாங்செங் பங்கு குறியீட்டு நிதியினை (Hang Seng Benchmark Exchange Traded Scheme) " அறிமுகப் படுத்துகின்றது. இந்த நிதியில் தொண்ணூறு சதவீதம் ஹாங் செங் குறியீட்டில் உள்ள பங்குகளில் முதலீடு செய்யப் படும். மீதம் உள்ள பத்து சதவீதம் நிதி மற்ற முதலீடுகளுக்காக உபயோகிக்கப் படும். இந்த நிதியின் போக்கு கிட்டத்தட்ட ஹாங்செங் குறியீட்டின் போக்கினை சார்ந்தே இருக்கும். இந்த நிதியில் குறைந்த பட்சம் முதலீடு செய்ய வேண்டிய தொகை ரூபாய் - ப...