Skip to main content

Posts

இங்கும் அங்கும் பாதை உண்டு. இதில் நீ எந்த பக்கம்?

சென்ற வாரம் 8350 என்ற எதிர்ப்பு நிலையை தாண்டிய போதும், நிப்டியால் முழுமையான வெற்றியை பெற முடிய வில்லை. 8350 என்ற நிலையின் அருகிலேயே இன்னும் நிலை பெற்றுள்ளது. உலக சந்தைகளின் போக்கினையொட்டி இந்த வாரம் 8350 என்ற எதிர்ப்பு நிலையை முழுமையாக முறியடிக்கின்றதா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். நன்றி.

வரும் வாரம் பங்கு சந்தை எப்படி இருக்கும்?

வரும் வாரம் நிஃப்டி 8350 என்ற நிலையில் ஒரு முக்கியமான எதிர்ப்பு நிலையை (Resistance ) எதிர் கொள்ள வேண்டியிருக்கும். அதை எளிதாக கடக்கும் பட்சத்தில் வரும் வாரத்தில் பங்கு சந்தை ஏற்றமான நிலையை காண வாய்ப்புக்கள் உள்ளன. வரும் வாரம் சிறக்க வாழ்த்துக்கள். 

கடன். கவனம் தேவை!

இது கலியுகம் இல்லை. ஒரு கடன் யுகம். சாமான்யன் முதல் சகல வசதி கொண்டவர் வரை கடனாக வாங்கித் தள்ளி கொண்டுள்ளனர். அரசாங்கங்கள் கூட இன்று கடன் சுமையில் தத்தளித்துக் கொண்டுள்ளன. இன்றைய நிலையில் பெரும்பாலான அரசாங்கங்கள் (இந்தியா உட்பட) புதிது புதிதாக கடன் வாங்கித்தான் வட்டியை கட்டிக் கொண்டிருக்கின்றன. சமீபத்தில் கடன் படுத்தும் பாடு பற்றிய ஒரு சுவாரஸ்யமான கட்டுரை படித்தேன். அதன் இணைப்பு கீழே! http://www.streettalklive.com/daily-x-change/1279-debt-driving-the-economy-since-1980.html இந்த கலியுகம் மன்னிக்கவும் கடன் யுகத்திலிருந்து நம்மைக் காப்பாற்ற எம்பெருமான்தான் இன்னுமொருமுறை அவதாரம் எடுக்க வேண்டும். நன்றி!

வேண்டாமே ஹீரோயிசம்!

சட்டிஸ்கர் மாநிலத்தில் மாவட்ட ஆட்சியர் கடத்தப் பட்டதை பற்றிய சில தகவல்களை பத்திரிக்கைகளில் படித்தேன். தகுந்த பாதுகாப்பின்றி மாவட்டத்தின் கிராமப் பகுதிகளுக்கு செல்வது ஆபத்தானது என்று காவல் துறை அறிவுறுத்திய பின்னரும், மாவட்ட ஆட்சியர் மாவோயிஸ்ட் பகுதிகளுக்கு முறையான பாதுகாப்பின்றி சென்றததால்தான் இந்த விபரிதம் ஏற்பட்டதாக குறிப்பிடப் பட்டிருந்தது. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் உண்மையாக இருக்கும் பட்சத்தில், அந்த மாவட்ட ஆட்சியர் கண்டனத்திற்கு உரியவரே. அவர் துணிச்சல் மிகுந்தவராக இருக்கலாம் மேலும் அவருக்கு அவரது உயிர் பெரியதாக இல்லாமல் இருக்கலாம். அரசாங்கம் மாவோயிஸ்ட்டுகளின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில், அவர் எந்த பாதிப்புமின்றி வெளியே வந்து ஒரு ஹீரோவைப் போல பேட்டியும் கொடுக்கலாம். ஆனால் அவர் கடத்தப் பட்டதன் விலையை அரசாங்கமும் அதன் மூலம் நாடும்தான் கொடுக்க வேண்டும். சட்டத்தின் பிடியில் இருக்கும் மாவோயிஸ்டுகள் விடுதலை மற்றும் திரைக்கு பின்னே கொடுக்கப் படும் பணத்திற்கு யார் பொறுப்பேற்றுக் கொள்ளப் போகிறார்கள்? இதற்கு முந்தைய எல்லா கடத்தல் மற்றும் பிந்தை...

நேர்ந்து விடப் பட்டவர்கள் - இவர்களும் இந்தியர்களே!

எனது வங்கியில் புதியதாக கணக்கு துவக்க விண்ணப்பித்த ஒரு நடுத்தர வயது பெண்மணி, தனது விண்ணப்பத்தில் தந்தை/கணவர் பெயரை நிரப்ப வில்லை. ஏன் நிரப்ப வில்லை என்ற என் கேள்விக்கு அந்த பெண்ணிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. பொதுவாகவே கல்வியறிவு மிகவும் குறைந்த வட கர்நாடக பகுதி என்பதால், அவரது விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய உதவி செய்த நபரை அழைத்து, கணவர் பெயரை நிரப்பும் படி அறிவுறுத்தினேன், . அந்த பெண்ணிற்கு இன்னும் திருமணமாக வில்லை என்று அந்த நபர் கூறினார். அதனால் என்ன, அவரது தந்தை பெயரை நிரப்புங்கள் என்று சற்று எரிச்சலுடன் கூறினேன். அவருக்கு தந்தையும் இல்லை என்றார் அவர். மேலும் எரிச்சலான நான் தந்தையை கேட்க வில்லை, தந்தையின் பெயரைத்தான் கேட்கிறேன் என்று கூறினேன். அதற்கு அவர், அந்த பெண்மணியின் பட்டப் பெயரை கவனிக்க வில்லையா என்று கேட்டார். அதற்கென்ன என்று நான் திருப்பிக் கேட்ட போது, அந்த (தேவதாசி) இனத்தை சேர்ந்தவர்கள் கடவுளுக்கு நேர்ந்து விடப் பட்டவர்கள் என்றும் அவர்களுக்கு தந்தையோ கணவரோ கிடையாது என்று கூறினார். இந்த காலத்திலும் இப்படியா என்று ஒரு நிமிடம் திகைப்பின் உச்சிக்கு சென்ற நான் அந்த பெண்ணைப் ப...

டாலர் செல்லா காசாகுமா?

நாகரிக வளர்ச்சியின் காரணமாக பண்டமாற்று வணிக முறை வழக்கொழிந்த பின்னர், பல நூறாண்டு காலமாக தங்கம்தான் பன்னாட்டு வணிகத்தின் அதிமுக்கிய நாணயமாக திகழ்ந்து வந்தது. ஆனால், கடந்த நூற்றாண்டில் தனிப்பெரும் பொருளாதார வல்லரசாக அமெரிக்கா உருவெடுத்த பின்னர், டாலர் பன்னாட்டு வணிகத்தின் முக்கிய நாணயமாக தலையெடுத்தது. நிக்சன் அதிர்ச்சிக்குப் பின்னரும், டாலருக்கு மாற்றான உலக நாணயமாக யூரோ நாணயம் முன்னிறுத்தப் பட்ட பின்னரும் கூட டாலர் தனது முக்கியத்துவத்தை தக்க வைத்துக் கொண்டதுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். ரஷ்யாவின் அரசியல் செல்வாக்கு குறைந்த பின்னர், தனிப்பெரும் ஏகாதிபத்தியமாக அமெரிக்கா உருவெடுத்ததும், இந்தியா, சீனா போன்ற உற்பத்தி நாடுகள் அமெரிக்காவின் நுகர்வோர் கலாச்சாரத்தை பெருமளவில் சார்ந்திருந்ததும், டாலரின் மதிப்பு பெருமளவில் வீழாமல் காப்பாற்றின. சமீபத்திய பொருளாதார வீழ்ச்சிக்கு அதிமுக்கிய காரணம், அளவுக்கதிகமான கடன் பொருளாதாரத்தின் வளர்ச்சி என்றாலும், பொருளாதார மீட்சிக்கு உலக நாடுகள் தேர்ந்தெடுத்த பாதை அதே வீழ்ச்சி பாதையானது துரதிர்ஷ்டவசமான ஒன்றாகும். அரசின் செலவினங்களை குறைத்து கடன் அளவை குறைப்பதற்கு...