Tuesday, September 23, 2008

அமெரிக்க பொருளாதார வீழ்ச்சி - ஒரு இந்திய பார்வை பகுதி 1.


அமெரிக்கா தற்போது கடந்த 80 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.



பங்கு மற்றும் இதர சந்தைகள் கடும் வீழ்ச்சியினை சந்தித்து வருகின்றன.



பழம்பெருமை மிக்க பன்னாட்டு முதலீட்டு வங்கிகள் மூடப்பட்டு வருகின்றன.



ற்ற வங்கிகளும் கடும் நிதி நெருக்கடியினை சந்தித்து வருகின்றன.




பல வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டுள்ளன.


வங்கிகளை மீட்டெடுக்க அரசு சுமார் $1.8 trillion டாலர் (அதாவது 82 லட்சம் கோடி ரூபாய்) செலவு செய்து உள்ளது. இந்திய ஒட்டுமொத்த உள்நாட்டு பொருளாதார உற்பத்தியை (GDP) போல சுமார் 2 மடங்கு.


பல்லாயிரக்கணக்கனோர் வேலை இழந்து உள்ளனர்.


இத்தகைய வீழ்ச்சிக்கான காரணிகள் யாவை மற்றும் இவற்றினால் இந்தியாவிற்கு எத்தகைய பாதிப்பு ஏற்படும் என்பது குறித்து இங்கு ஆராயலாம்.



கடந்த சில காலமாக Subprime Crisis (தரம் குறைந்த கடன் நெருக்கடி) குறித்து பல நிபுணர்களும் பல்வேறு ஊடகங்களில் விவாதித்து வருகின்றன.


Subprime Crisis (தரம் குறைந்த கடன் நெருக்கடி) ஆதி மூலம் குறித்து நாம் தெரிந்து கொள்ள 2008 களின் துவக்கத்திற்கு செல்ல வேண்டும்.


ஏற்கனவே பொருளாதார சரிவை சந்தித்து கொண்டிருந்த அமெரிக்காவை செப்டம்பர் 11, 2001 இடியென தாக்கியது. மனதளவில் பெரிதும் பாதிக்க பட்டிருந்த அமெரிக்கர்களை உற்சாக ப்படுத்த புஷ் ஒரு உணர்ச்சி மிகு உரை நிகழ்த்தினார்.


அதில் அமெரிக்கர்களே! மகிழ்ச்சியாக இருந்து, உலகிற்கு அமெரிக்கர்கள் யாரென்று காட்டுங்கள் என்று முழங்கினார்.


அதிக செலவு செய்வது, நாட்டு பற்றினை வெளிப்படுத்துவதற்கான வழி என எதிர்க் கட்சியினரும் வழி மொழிந்தனர்.


செலவு செய்வதை உற்சாக படுத்த அமெரிக்க தலைமை வங்கி (பெடெரல் ரிசர்வ்) வங்கி கடன் வட்டி வீதத்தினை மிகவும் குறைத்தது (1.00%).



வங்கி கடன் விதி முறைகள் தளர்த்தப் பட்டன. இதுவரை தகுதி இல்லை என கருத பட்டவர்களுக்கும் (Subprime borrowers) கடன் வழங்கப் பட்டன. மேலும் வங்கிகள் (Adjustable Rate Mortgage ) மாற்று வட்டி வீத கடன்களை கொடுக்க ஆரம்பித்தன. அதாவது முதலில் குறைந்த வட்டி. சற்று காலத்திற்கு பிறகு அதிக வட்டி.



மக்கள் கடன் வாங்க ஆரம்பித்தனர். ரியல் எஸ்டேட் முதலீடு செய்ய ஆரம்பித்தனர். வீடு வாங்க கடன் பிறகு வீட்டின் மேல் பல கடன்கள் என்று கடன் சுமை ஆரம்பித்தது. வீட்டு சொத்து விலைகள் கடுமையாக உயர்ந்தது. மக்கள் லாபம் பார்த்தனர். அந்த லாப பணம் கண்மூடித்தனமாக செலவு செய்யப் பட்டது.


அமெரிக்க பொருளாதாரம் உயர்ந்தது.



முதலீட்டு வங்கிகள் இக்கடன்களை கடன் பிணைய பகுத்தல் (Securitization) செய்தன. புதிய முதலீடுக்கான உபகரணங்கள் கண்டு பிடிக்கப் பட்டன. புதிய உபகரணங்கள் சந்தைக்கு வந்தன. அவற்றில் பல வங்கிகளும் நிதி நிறுவனங்களும் முதலீடு செய்தனர். அனைவர்க்கும் லாபம் கிடைத்தது.


லட்சம் கோடி ஆனது. கோடி பல்லாயிரக்கணக்கான கோடி ஆனது.


பணம் அமெரிக்காவிலிருந்து பல்வேறு சந்தைகளுக்கு பாய்ந்தது. (இப்பணத்தில் இந்திய சந்தைக்கும் சில ஆயிரம் கோடி கிடைத்தது. சென்செக்ஸ் 3000 புள்ளிகளில் இருந்து 21000 புள்ளிகளுக்கு உயர்ந்தது.) இந்திய நிபுணர்கள் இத்தகைய உயர்வுக்கு பல வடிவம் கொடுத்தனர். (Structural Bull Market”, “Super Power by 2050”, “Most Happening Place”, “Strong Fundamentals driving growth”, “ Long term Growth story” etc etc.)


உலக நாடுகள் அமெரிக்கர்களுக்கு சேவை செய்ய ஆரம்பித்தன.


ரஷ்ய அரேபியா நாடுகள் பெட்ரோல் வழங்கினர். தென் அமெரிக்க நாடுகள் கனிமம் அளித்தன.


ஆஸ்திரேலியா மற்றும் நியூ ஜெலாந்து பழ காய்கறிகள் அளித்தன.


ஆசியா நாடுகள் குறிப்பாக சீனா உற்பத்தி தொழிற்சாலை ஆயின.


இந்தியா BPO அலுவலகம் (back office) ஆனது.


ஒட்டு மொத்த உலக நாடுகளும் அமெரிக்க சேவகர்கள் ஆயின. ஏற்றுமதியில் கிடைத்த டாலர்கள் அமெரிக்க கடன் சந்தையிலேயே முதலீடு செய்யப் பட்டன.


அமெரிக்க தரம் தாழ்ந்த (Subprime) கடனாளிகள் எப்போதும் போல ரியல் எஸ்டேட் பிரச்சனைகளில் மாட்டி கொண்டனர். கடன் திருப்புவதில் பிரச்சனை ஏற்பட்டது.


2007 துவக்கத்தில் Subprime இல் பிரச்சினைகள் உள்ளன என பெடெரல் ரிசர்வ் முதன் முறையாக ஒத்துக் கொண்டது. சில காலம் உலக சந்தைகள் வீழ்ச்சியை சந்தித்தன.


ஆனால் புதிய இந்தியஎருதுகள் (Bulls) இதை ஒத்துக் கொள்ள மறுத்தன. அமெரிக்க வங்கிகளின் நிபுணத்துவம், புதிய வடிவான பிணயங்களாக (Credit Default Swaps) வெளிப் பட்டன.


அமெரிக்க தரம் தாழ்ந்த கடன் பிரச்சனைகள் விஸ்வ ரூபம் எடுத்தன. கடனாளிகள் கடன் திருப்ப முடிய வில்லை. தலை கீழ் பிரமிடு அதன் பளு தாங்காமல் அதுவே சரிய ஆரம்பித்தது.


முதல் நிதி நெருக்கடி ஜனவரி 2008 இல் ஏற்பட்டது. உலக சந்தைகள் பெரும் வீழ்ச்சியினை சந்தித்தன. (இந்திய எருதுகள் இதற்க்கு தொழில் நுட்ப கோளாறு என்ற பெயர் கொடுத்தனர்) (Technical Problems due to Reliance Power IPO).


Societe Generale காணாமல் போனது. Bear Sterns முழுகியது.


அமெரிக்க தலைமை வங்கி எரியும் நெருப்பில் எண்ணையாக வட்டி வீதத்தினை குறைத்தது.


அமெரிக்க வங்கிகள் எளிதாக கிடைக்கும் பணத்தினை எண்ணையில் (Crude Oil) முதலீடு செய்தனர். எண்ணெய் விலை ஏறியது. நிபுணர்கள் பல்வேறு காரணங்களை (ஈரான் முதல் இந்திய தேவை வரை) அடுக்கினர்.


எதுவும் பலிக்கவில்லை. அமெரிக்க வங்கிகள் மூடப்பட்டன. அரசு உதவி (முதல் பத்தி) போத வில்லை. கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டது. மற்ற சந்தைகளும் சரிய ஆரம்பித்தன.


இறுதியில் பலூன் வெடித்தது. பல வங்கிகள் மூடப்பட்டன.


பல்லாயிரக்கணக்கனோர் வேலை இழந்தனர்.


இந்திய சந்தைகளும் பெரும் சரிவினை சந்தித்து உள்ளன.


இந்த கதையிலிருந்து நாம் (இந்தியர்கள்) கற்று கொள்ள வேண்டியது என்ன?

சரிவு தொடருமா? அல்லது மீளுமா?


மீண்டும் சந்திப்போம்.


(தயவு செய்து ஆங்கில பதிப்பிற்கு http://maximumindia.blogspot.com/2008/09/subprime-crisis-indian-perspective-part.html இல் பார்க்கவும்)


8 comments:

KARTHIK said...

அவங்க போதைக்கு உலகமே ஊறுகாய் :-))

Unknown said...

அருமை அருமை...
மிகவும் சுலபமாக புரியக்கூடிய வகையில் எழுதியிருக்கிறீர்கள் நண்பரே...
அடுத்த பாகத்தையும் ஆவலுடன் எதிர்நோக்கும்....

-கமல்

Unknown said...

Santhai Nilavaram - pudhiya muarchi. Ungalin sulabamana tamil akkam arumai. Americavin veelchiyil indhiya poruladharam padhikka pattadhu unmai anaal chinavum japanum, americavai nambi (muluvadhumaga) export seidhu kondirundadu andha nadugalin veelchi miga adhigama irukkum. Ingu Indiavil REAL ESTATE, CEMENT AUTO IVAIGALIN PADHIPPU ADHIGAMA IRUKKAM matrapadi, namadhu nadu americavai nambi illai. Software kooda adhigam padhikkadha alavu nadmadu company muyarchi eduthulladhu,..parpom good luck
g e moorthy

Anonymous said...

¾í¸ÇÐ

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

நல்ல முயற்சி.
ஆனால் அமெரிக்கப் பற்றாக்குறை பட்ஜெட்டில் ஃபெட்'க்கு எங்கிருந்து இவ்வளவு ரிஸர்வ் தொகை கிடைக்கும்?

ஒன்றரை பில்லியன் டாலர்கள் எங்கிருந்து கிடைக்கும்?

மீண்டும் மக்களின் தலையில்தானே விடியும்?

Anonymous said...

நண்பர்களே

தங்கள் வாழ்த்துக்களுக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி.

அறிவன் கூறியிருப்பது மிகவும் சரி.

அதே சமயத்தில் அமெரிக்கா பிரச்சினை அந்நாட்டு மக்களுடன் முடிவதில்லை.

அமெரிக்கா டாலர் அச்சடித்தால் உலகம் முழுக்க அது பரவி பணவீக்கம் உயரும். மற்ற நாடுகளும் பாதிக்கப்படும்.

Anonymous said...

வணக்கம்! இந்தபுதிய முயற்ச்சி வெற்றிபெற எணது மணமார்ந்த நல்வாழுத்துக்கள்!
மு.கோவிந்தசாமி.
மும்பை

Naresh Kumar said...

முதலில் எனது வாழ்த்துக்கள்.

அர்த்தம் தரும் உபயோகமான பதிவுக்கு ஒரு வாழ்த்தென்றால் மிகக் கடினனமான வார்த்தைகளைக் கூட தமிழ் படுத்தியதற்கு ஒரு வாழ்த்து!!

அடுத்த பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!!

Blog Widget by LinkWithin