அவையாவன.
தமிழ் நாட்டில் மட்டுமே, பெரும் தலைவர்கள், கலை சார்ந்த துறைகளுக்கு (குறிப்பாக சினிமா) மிக அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர்.
தமிழ் நாட்டில் மட்டுமே, சினிமா நடிகர்கள் கொண்டாடப்படுகின்றனர்.
சொல்லப் போனால், குஜராத்துக்கு எண்ணெய் சார்ந்த தொழில்கள், மும்பைக்கு நிதி சார்ந்த துறைகள் மற்றும் கர்நாடகத்திற்கு மென் பொருட்கள் எனக் குறிப்பிடுவது போல தமிழ்நாட்டிற்க்கு என்று இருப்பது சினிமா துறை மட்டுமே என்ற மாயை காணப் படுகிறது.
பிரபல பத்திரிக்கைகள், கலை சார்ந்த செய்திகளுக்கே, முக்கியத்துவம் அளிப்பது போலவும தோன்றுகின்றது.
நான், அவர்களிடம் அதெல்லாம் ஓரளவிற்கே உண்மை, . மற்றபடி தமிழ் நாடு பல துறைகளில் முன்னோடி மாநிலமாக இருக்கிறது என்று வாதிட்டாலும், உள் மனதில் ஒரு கேள்வி எழுகிறது.
நம்மிடம் பல திறமைகள் இருந்தும் கூட நாம் ஏன் பெருமளவிற்கு முன்னேற வில்லை.நமது மாநிலம் இந்தியாவில், கல்வியறிவில் மட்டுமே முன்னணி மாநிலமாக இருந்து என்ன பயன்?
சோழர் கால பெருமையை என்றைக்கு மீட்டு எடுப்பது? (தமிழர் பெருமை என்றால் உலகறிய செய்ய வேண்டாமா?)
நான், நுண் கருத்துக்கள் மற்றும் கணிதம் சார்ந்த துறைகளுக்கான கருத்தரங்குகளுக்கு செல்லும் போது பல தமிழர்களை பார்க்கமுடிகிறது. அதே சமயத்தில், பணம் ஈட்டும் துறைகளுக்கான கருத்தரங்குகளில் பெரும்பாலும் மேற்கு மாநிலத்தவரே அதிகம் காணப்படுகின்றனர். அதே சமயத்தில்,அவர்களின் நிறுவனங்களில், பல தமிழர்கள் முக்கியப் பொறுப்புக்களில் பணிபுரிகின்றனர்.
பணம் அதிகம் புழங்கும் பங்கு வர்த்தக துறையில் கூட, பல தமிழர்கள் பணி புரிகின்றனர்.ஒரு நண்பர் வேடிக்கையாக கூறினார். We can manage Money well, but not make it.
இன்றைய தேதியில், இந்தியாவில், மும்பைக்கு பிறகு, தமிழ் நாட்டிலிருந்து மட்டுமே, மிக பெரும் செலவிலான திரைப் படங்கள் வெளியாகின்றன.
உருவாக்கும் திறன் (Creativity) வெகுவாக இருந்தும், இங்கிருந்து ஏன் மிகப் பெரிய தொழில் அதிபர்கள் அதிகம் உருவாகுவதில்லை?
என்ன காரணம்?
நாம் சற்று அளவுக்கு அதிகமாகவே கலையோடு இயைந்து வாழ்கிறோமோ?
பணம் ஈட்டுவது பற்றி அதிக அக்கறை காட்ட வில்லையோ? அல்லது, வேலை, குடும்பம், நண்பர்கள், இலக்கியம் மற்றும் சினிமா என்ற குறுகிய வட்டமே போதும் என்ற மனப்பான்மையிலேயே வாழ பழகி விட்டோமோ?
ஒரு வகையில் அகம் சார்ந்த துறைகள் அதிக முக்கியத்துவம் பெற்றதால்தான் தமிழ் நாடு பெரும்பாலும் அமைதி மாநிலமாக திகழ்கிறது என்று சிலர் கூறலாம்.
அது மட்டும் போதுமா?
சற்றே யோசியுங்கள்.
நம் சரித்திரத்தில்,எப்போது, நாம் உலகம் முழுக்க தெரிந்தவர்களாக இருந்தோம்?
சோழர் காலத்தில் மட்டும்தானே?
நான் ஒரு முறை, இந்தோனேசிய சரித்திரத்தைப் பற்றி படிக்கும் போது, அதில் எவ்வாறு, சோழர்கள் அன்றைய விஜயப் பேரரசை முறியடித்தனர் என்பது பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது.
அன்றைக்கு, போர் திறன், நம் புகழ் பரப்பியது.
இன்றைக்கு, பொருளாதார வலிமை மற்றும் உடல் திறன் (பன்னாட்டு விளையாட்டு போட்டிகள்) நம்மை அடையாளம் காட்டும்.
எத்தனை நாட்களுக்கு, இந்த நடிகர் ஆட்சியை பிடிப்பாரா அல்லது அந்த நடிகை முதலிடம் பிடிப்பாரா என்று கவலைப் படுவது?
நிறுத்தி கொள்வோம்.
சற்றே மாற்றி சிந்திப்போம்.
இப்போது, நாம் என்ன செய்தால் நம் இழந்த பெருமைகளை மீட்க முடியும்?
எப்படி, மற்றவரை, தமிழரின் புற நானூறு மீண்டும் ஒரு முறை பாடச் செய்வது?
சிந்திப்போம்.
Comments
நீங்க சொன்னது ரொம்ப நல்லா இருக்கு.
ஆனால், இவ்வளவு மட்டும் போதுமா?
நமது திறமைகளுக்கு (Potential) சாதிக்க வானமே எல்லை.
அதற்க்கு நாம் என்ன பண்ண போகிறோம்? அதுதான் என் கேள்வி.
Maximum India
தலைவரின் படம் வரவில்லை என்றால் உண்ணாவிரதம் இருப்பது . வேறு எந்த மாநிலத்திலும் நடக்காது. நடிகர்களை கடவுளாக கருதுவது ஒரு வதமான மனச்சிதைவு நிலையாக கருதுகிறேன்.
மாற வேண்டும்
மாற்றம் வேண்டும்
நமது அவா. குறிப்பிட்ட எந்த கட்சியையும் குறை கூறுவது எங்கள் நோக்கம் அல்ல ஆயின் ஆட்சியிலும் சினிமாவிற்கு அப்பாற்பட்ட துறையிலிருந்து முதல் அமைச்சரும் பிற அமைச்சர்களும் இருந்தால் நன்றாக இருக்குமோ என்னமோ?