Skip to main content

படைத்தவர்களை விஞ்சும் பாத்திரங்கள்!

கல்கி அவர்களின் பிரபல சரித்திர நாவலான "பொன்னியின் செல்வனை" பலரும் படித்திருப்பீர்கள். அந்த நாவல் சோழப் பேரரசனான ராஜ ராஜ சோழனின் இளமைக் கால சம்பவங்களின் அடிப்படையில் எழுதப் பட்டது.

எல்லாவகையிலும் சோழ சாம்ராஜ்யத்தின் அரசு பதவிக்கு தகுதியானவனாகவும் மக்கள் செல்வாக்கு மிகுந்தவனாகவும் இருந்த போதும் தனக்கு வந்த அரியணை வாய்ப்பை தனது சித்தப்பனுக்கு விட்டுக் கொடுத்த மேலான குணத்தை விளக்குவதையே அடிப்படை நோக்கமாக கொண்டு, ராஜராஜ சோழனின் பல பெயர்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் என்ற தலைப்பிலேயே, அந்த நாவல் எழுதப் பட்டது. நாவலின் விறுவிறுப்பைக் கூட்டுவதற்காக மட்டுமே, கோமாளித்தனமும் குறும்பும் நிறைந்த ஒரு இளம் வீரனாக வந்தியத் தேவன் கதாபாத்திரம் அறிமுகப் படுத்தப் பட்டாலும், பின்னர் கதை போகும் போக்கில் நாவலின் ஆசிரியரே ஒரு கட்டத்தில், "நமது கதையின் நாயகனாகிய வந்தியத் தேவன்" என்று சொல்லும் அளவுக்கு அந்த பாத்திரம் வெற்றி பெற்று விடுகிறது. மேலும் இன்றளவும் அந்த கேரக்டர் நம் மனதில் அழியாமல் நிலை கொண்டுள்ளது.

சமீபத்தில் வெளி வந்து சக்கைப் போடு போட்ட பைரேட்ஸ் ஆப் கரீபியன் என்ற தொடர் சினிமாவில், ஜானி டெப் ஒரு கோமாளி துணை கதாப் பாத்திரமாகவே படைப்பாளிகளால் அறிமுகப் படுத்தப் பட்டாலும், அந்த பாத்திரத்திற்கு மக்கள் கொடுத்த ஆதரவுக்குப் பின்னர் அவரே அந்த சினிமாவின் கதாநாயகன் ஆக அறியப் படுகிறார். இது அந்த கதாபாத்திரத்தின் வெற்றி மற்றும் அதை ஏற்று நடித்தவரின் வெற்றியும் ஆகும்.

இப்படி இன்னும் கூட பல உதாரணங்கள் சொல்ல முடியும். தமிழ் திரையுலகில் கூட ரஜினி, சத்தியராஜ், பிரகாஷ் ராஜ் போன்றவர்கள், அவர்களின் ஆரம்ப கால திரைப்படங்களில் சிறிய பாத்திரங்களாகவும் வில்லன்களாகவும் அறிமுகமானாலும் அந்தந்த படங்களில் நடித்த கதாநாயகர்களை விட அதிகப் புகழ் பெற்றுள்ளனர். இதற்கும் அவர்களின் தனித் திறமையும் கடும் உழைப்புமே காரணம் ஆகும்.

இந்த எதிர்வினைகள் நிழல் வாழ்வுக்கு மட்டுமல்ல, நிஜ வாழ்வுக்கும் பொருந்தும்.

கடவுள் ஒரு மனிதனை எப்படி படைத்திருந்தாலும் சரி, எந்த நோக்கத்திற்காக எங்கு படைத்திருந்தாலும் சரி அல்லது சமூகம் அவனை எங்கே வைத்தாலும் சரி எப்படி சுரண்டினாலும் சரி, அவனால் தனித்து நிற்க முடியும் ஜெயிக்கவும் முடியும்.

ஆப்ரகாம் லிங்கன், எடிசன், அம்பேத்கர், போன்ற மாபெரும் சாதனையாளர்கள் சாதனையாளர்கள் முதல் நாம் இன்று பார்க்கும் எத்தனையோ வெற்றியாளர்கள் இந்த கருத்தினை உறுதி செய்கிறார்கள்.

உங்கள் பெற்றோர் வசதி வாய்ப்பில்லாதவர்களா? பரவாயில்லை, உங்களுக்கு இளமையில் நல்ல கல்வி மற்றும் இதர வாய்ப்புக்கள் கிடைக்க வில்லையா? பரவாயில்லை, உங்கள் தகுதிக்கு ஏற்ற வாய்ப்புக்களை இந்த சமூகம் கொடுக்காமல் ஒதுக்கி வைக்கிறதா? கவலையில்லை. சுற்றமிருப்போர் உங்களை வஞ்சிக்கிறார்ககளா? வருத்தமில்லை.

உங்கள் கேரக்டர், உங்கள் பண்புகள் உங்கள் கடும் உழைப்பு மட்டும் போதும். வாழ்க்கை நாடகத்தில் உங்களை ஒரு பாத்திரமாக படைத்தவர்களையும் படுத்துபவர்களையும் விஞ்சலாம்.

நிழல் பாத்திரங்கள் செய்து காட்டியதை, உயிருள்ள நிஜ பாத்திரங்களாகிய நம்மால் செய்ய முடியாதா என்ன?

நன்றி.

Comments

//உங்கள் கேரக்டர், உங்கள் பண்புகள் உங்கள் கடும் உழைப்பு மட்டும் போதும். வாழ்க்கை நாடகத்தில் உங்களை ஒரு பாத்திரமாக படைத்தவர்களையும் படுத்துபவர்களையும் விஞ்சலாம்.//

எதா இருந்தாலும் அதுல ஒரு தத்துவதத்தை பிடிச்சிருரிங்களே தலைவா!

மூணு புத்தகத்தையும் வாங்கி வச்சி தூங்குது! புத்தகத்தோட சைஸ்ச பார்த்தா படிக்க பயமா இருக்கு!
Maximum India said…
நன்றி வால்பையன்!

//எதா இருந்தாலும் அதுல ஒரு தத்துவதத்தை பிடிச்சிருரிங்களே தலைவா!//

வாழ்க்கையில் நாம் சந்திக்கும் அனுபவங்கள் தத்துவங்களை உருவாக்குகின்றன. அந்த கருத்துக்களுக்கு துணை சேர்ப்பதே இது போன்ற உதாரணங்கள்.

//மூணு புத்தகத்தையும் வாங்கி வச்சி தூங்குது! புத்தகத்தோட சைஸ்ச பார்த்தா படிக்க பயமா இருக்கு!//

ஒரு முறை படிக்க ஆரம்பியுங்கள். பிறகு கீழே வைக்க மனம் இருக்காது. பொன்னியின் செல்வனான ராஜராஜ சோழன் மட்டுமல்ல, பொன்னியின் செல்வனான இந்த நாவலும் சரித்திரத்தைத் தாண்டி நிற்கக் கூடியது.

நன்றி.
என்னது புத்தகத்தை பார்க்க பயமாக இருக்கிறதா???
படித்து பாருங்கள் அன்பரே .... !!
KARTHIK said…
அப்போ பைரேட்ஸ் ஆப் கரீபியன்ல ஹேரோ ஜானி இல்லையா !

தன்னம்பிக்கை தரும் அருமையான பதிவுங்க :-))
Maximum India said…
அன்புள்ள பரமார்த்த குரு!

//என்னது புத்தகத்தை பார்க்க பயமாக இருக்கிறதா???
படித்து பாருங்கள் அன்பரே .... !!//

உண்மைதான் நண்பரே! வால்பையன் உடனடியாக பொன்னியின் செல்வன் நாவலை படிக்க வலுவாக சிபாரிசு செய்கிறேன்.

நன்றி.
Maximum India said…
நன்றி கார்த்திக்!

பதிவிலேயே சொன்ன படி பல முறை படைப்பாளிகளால் கதாநாயகர்களாக உருவாக்கப் பட்ட பாத்திரங்களை தனது தனிச் சிறப்பால் வேறு சில பாத்திரங்கள் வெற்றி கண்டுள்ளன.

உண்மையான வாழ்க்கையில் கூட அப்படித்தான். ஏதோ சுமாராக வருவார் பலராலும் என்று எதிர்பார்க்கப் பட்ட சிலர் அசாதாரண சாதனைகளை செய்து விடுகின்றனர்.

நன்றி.
Anonymous said…
நிஜமாலுமே புத்துணர்ச்சி தர்றமாதிரி இருக்கு தல.. நீங்க எங்கெயோ போய்ட்டீங்க‌
Maximum India said…
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி இளைய கவி!
படைப்பை விஞ்சும் பாத்திரங்களுக்கு புத்தகத்தை படிக்க வேண்டியதில்லை. ரெண்டு ருபாய் தினசரி பேப்பர் படித்தால் போதும். நம் நாட்டில் சினிமா நடிகர்கள், அரசியல்வாதிகள் எல்லோரும் நம் படைப்புகள்தான். எப்போதும் நம்மை விஞ்சிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் கோபுரத்திற்கு போகலாம் என்ற நம்பிக்கையை அவர்கள் தருகிறார்கள். ஒரு முறை கோட்டையை பிடித்தால் அப்புறம் அவர்கள் வாழ்க்கையில் இல்லை ஓட்டை. இறங்க முடியாத உயரத்திற்கு போய் விடுகிறார்கள். நம் சுட்டு விரலில் ஓட்டு போட்டு நம்மை நாமே சுட்டு கொள்கிறோம். இருப்பினும் நாம் தான் எங்கு போனாலும் மெஜாரிட்டி. நம்பிக்கையோடு வாழ்வோம்.
Maximum India said…
உண்மையான கருத்துக்கள்.

நன்றி பொதுஜனம்!
Naresh Kumar said…
உண்மை!!!

நம்மூரு சினிமாவிலும் பல படங்களில் கவுண்டமணி நகைச்சுவை நடிகரா இருந்தாலும், அவருதான் ஹீரோவா இருப்பாரு...

நல்ல பகிர்தல்...

பொன்னியின் செல்வன்ல பிர்ச்சனை என்னான்னா, கடைசில யாரு கரிகாலனை கொன்னாங்கன்னு, கேட்டு அதோட தொடர்ச்சியை தேடி அலைய வெச்சிருவாரு கல்கி, அதுதான் அந்த நாவலின் வெற்றியே!!!

நந்திபுரத்து நாயகி, உடையார் போன்ற நாவல்கள் அதனை தழுவிச் சென்றாலும், காவிரி மைந்தன் நாவல்தான் அதனுடைய சரியான தொடர்ச்சி என்று கேள்விப்பட்டிருக்கிறேன், படிக்கனும்.....


நரேஷ்
www.nareshin.wordpress.com
Maximum India said…
நன்றி நரேஷ்!

//நந்திபுரத்து நாயகி, உடையார் போன்ற நாவல்கள் அதனை தழுவிச் சென்றாலும், காவிரி மைந்தன் நாவல்தான் அதனுடைய சரியான தொடர்ச்சி என்று கேள்விப்பட்டிருக்கிறேன், படிக்கனும்.....//

தகவலுக்கு நன்றி!

நான் கூட காவிரி மைந்தன் நாவலை படிக்க முயற்சி செய்கிறேன்.!

:-)

Popular posts from this blog

நரேந்திர மோடி நாடாளலாமா?

சமீபத்தில் நடைபெற்ற குஜராத் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கார்பொரட் கனவான்களான அனில் அம்பானி மற்றும் சுனில் மிட்டல் ஆகியோர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். காரியம் ஆக வேண்டும் என்றால் என்ன வேண்டுமானாலும் பேசக் கூடியவர்கள் நமது தொழில் அதிபர்கள் என்பதனால் அவர்களின் பேச்சுக்கு அவ்வளவு மரியாதை கொடுக்க வேண்டியதில்லை. இவர்களைப் போன்றவர்களால் ஏற்கனவே நாடாள தகுதி பெற்றவர் என்று கூறப் பட்ட சந்திர பாபு நாயுடு அடுத்த சட்ட மன்ற தேர்தலில் தனது முதலமைச்சர் பதவியினையே இழந்தது குறிப்பிடத் தக்கது. தொழில் அதிபர்கள் பேச்சினை பா.ஜ.கவே ஏற்றுக் கொள்ளாத பட்சத்திலும் கூட, தீவிரவாதத்தை ஒடுக்கி குஜராத் மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து சென்றவர் நரேந்திர மோடி என்றும் அவர் இந்தியாவின் பிரதமர் ஆவது நாட்டுக்கு நல்லது என்றும் பலராலும் கருதப் படுவதால், நரேந்திர மோடியின் செயல்பாடு பற்றியும் அவர் பிரதமர் ஆகலாமா என்பது பற்றியும் பிரதமராக அவர் ஏற்றுக் கொள்ளப் படுவாரா என்பதைப் பற்றியும் இங்கு பார்ப்போம். இன்றைய தேதியில் இந்தியாவிலேயே மிகுந்த முன்னேற்றம் அடைந்த ஒரு மாநிலமாக குஜரா...

இந்தியா தாக்குப் பிடிக்குமா?

இன்றைய உலகப் பொருளாதாரத் தேக்க நிலையில், இந்தியாவால் தாக்குப் பிடிக்க முடியுமா என்பது பற்றி பார்ப்போம். சமீபத்தில் வெளியிடப் பட்ட மத்திய புள்ளியல் (மத்திய அரசு) நிறுவனத்தின் மதிப்பீட்டின் படி இந்தியப் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 7.1 சதவீதம் வளர்ச்சியுறும் என்று தெரிகிறது. இது சரியாக இருக்கும் பட்சத்தில் உலகிலேயே இரண்டாவதாக வேகமாக வளர்ச்சியுறும் நாடு இந்தியாவாகத்தான் இருக்கும் (சீனா முதலாவது). சென்ற ஆண்டில் ஒன்பது சதவீதம் வளர்ச்சி பெற்றிருந்த இந்தியப் பொருளாதாரம் செப்டம்பர் 2008 வரையிலான முதல் அரையாண்டில் 7.80% வளர்ச்சிப் பெற்றிருந்தது. பொதுவாகவே பண்டிகைக் காலமாக கருதப் படுகிற இரண்டாவது அரையாண்டே தொழிற் துறையில் அதிக வளர்ச்சியைக் காட்டும் என்றாலும் இந்த முறை இந்தியத் தொழில் துறை பெரும் தேக்க நிலையில் இருந்து வந்திருக்கிறது என்பது கவனிக்கத் தக்கது. இந்திய தொழிற் வளர்ச்சி கடந்த இரு மாதங்களாக மிகவும் குறைந்து காணப் படுவதாலும் ஏற்றுமதியோ இறங்குமுகத்தில் இருப்பதாலும் இந்திய அரசாங்கம், மார்ச் 2009 வரையிலான நிதி ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் நமது பொருளாதாரம் குறைந்த வளர்ச்சியே (6.30%) இரு...

இங்கும் அங்கும் பாதை உண்டு. இதில் நீ எந்த பக்கம்?

சென்ற வாரம் 8350 என்ற எதிர்ப்பு நிலையை தாண்டிய போதும், நிப்டியால் முழுமையான வெற்றியை பெற முடிய வில்லை. 8350 என்ற நிலையின் அருகிலேயே இன்னும் நிலை பெற்றுள்ளது. உலக சந்தைகளின் போக்கினையொட்டி இந்த வாரம் 8350 என்ற எதிர்ப்பு நிலையை முழுமையாக முறியடிக்கின்றதா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். நன்றி.