Thursday, September 25, 2008

கம்யூனிச அமெரிக்காவும் முதாலாளித்துவ சீனாவும் - ஓர் அலசல்.


தற்போது உலக நாடுகள், முன் எப்போதும் சந்தித்திராத அளவிற்கு, சமூக, அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்களை சந்தித்து வருகின்றன.


அவற்றில் மிக முக்கியமாக கவனிக்க பட வேண்டியவை - அமெரிக்கா கம்யூனிச நாடாகவும் சீனா முதலாளித்துவ நாடாகவும் மாறி வருவது ஆகும்.


அது குறித்து சற்றே இங்கு அலசுவோம்.


கார்ல் மார்க்ஸ் கண்ட கம்யூனிச சித்தாந்தந்தின் அடிப்படை கூறுகளாவன.

1. Egalitarian Society - எல்லாரும் சமம் என்ற சமுதாயம்
2. Classless Society - ஏற்ற தாழ்வற்ற நிலை
3. Stateless Society - அரசாங்கத்தின் தலையீடு குறைவான சமூகம்.
4. மேலும் உற்பத்தி மற்றும் இதர சொத்துக்கள் பொது உடைமையாக இருத்தல்.


கார்ல் மார்க்ஸ், உழைக்கும் மக்களே மூல தனம் என்றும், கம்யூனிசம், தனி மனித சுதந்திரத்தின் முழுமையை அடைய உதவும் என்றும் நம்பினார்.



கம்யூனிச சித்தாந்தம் உலகம் ஒன்றே என்றே கூறுகிறது. உலக வரைபட எல்லைக்கோடுகளை எப்போதும் நம்புவதில்லை.


அமெரிக்கா, கடந்த சிலகாலமாகவே கம்யூனிச பாதையில் சென்று வருகிறது.



அமெரிக்காவின் கம்யூனிச போக்கிற்கு, சில உதாரணங்கள், கீழே கொடுக்க பட்டு உள்ளன.



அமெரிக்கா WTO இல் ஏற்படும் பல வழக்குகளில் தன்நாட்டு உழவர்களுக்கு கொடுக்கப்படும் மிக அதிகமான மானியங்களை குறைக்க மறுத்து போராடி வருகிறது. காரணம், அந்நாட்டு உழவர்களுக்கு கொடுக்கப்படும் மிக அதிகமான மானியங்களை குறைக்க அந்நாடு விரும்பவில்லை.(இந்தியா போன்ற பேரளவில் சோஷலிச நாடுகள் இதனை கொள்கை அளவில் ஒப்பு கொண்டு விட்டன).



ஒவ்வொருவருக்கும் வேலை என்பது அமெரிக்காவில் உறுதி இல்லை என்ற போதிலும், வேலை இல்லாத பலர்க்கு , அரசின் சார்பில் உதவித் தொகை (Subsistence Allowance) வழங்கப் படுகிறது. (அந்த தொகை நமது சம்பளத்தை விட மிகவும் அதிகம்). மேலும் ஓய்வுதியம், மருத்துவ உதவி போன்ற பல சலுகைகள் (ஓரளவிற்காவது ) உண்டு. யாராவது மனதளவில் சற்று சோர்வு அடைந்திருந்தாலும் கூட, மன நல ஆலோசகர் (Counsellor) வீடு தேடி வரும் பழக்கம் கூட பார்க்கலாம்.



மார்க்ஸ் காண விரும்பிய தனி மனித சுதந்திரம், எந்த ஒரு (இதர) நாட்டையும் விட, அமெரிக்காவில் அதிகம் உண்டு.



அமெரிக்கா ஒரு முழுமையான ஜனநாயக நாடு.



இந்திய காம்ரேடுகளுக்கு மிகவும் பிடித்த, வேலை நிறுத்த உரிமை கூட அமெரிக்காவில் (அத்தியாவசிய துறைகளை தவிர) உண்டு.



வேடிக்கையாக சொன்னால், கம்யூனிஸ்ட்டுக்கு பிடித்தது "Strike". அமெரிக்கர்களுக்கு பிடித்தது "Air Strike"



மிக முக்கியமான ஒரு விஷயம். அமெரிக்கா மற்ற நாடுகளைப் பொறுத்த வரையில், சுரண்டல் பேர்வழியாக இருக்கலாம். ஆனால், அது தம் சொந்த மக்களை ஒருபோதும் சுரண்டுவதில்லை.



கார்ல் மார்க்சின் அதி முக்கிய கொள்கையாகும் இது.



கம்யுனிசம் போலவே அமெரிக்காவும் உலக வரைபட எல்லைகளை நம்புவது இல்லை. (எங்கு வேண்டுமானாலும் புகுந்து அடிப்பார்கள். அது ஈராக் ஆகட்டும் அல்லது பாகிஸ்தான் ஆகட்டும்),



Subprime பற்றிய என்னுடைய பகுதியை அனைவரும் படித்து இருப்பீர்கள் என்றும் நம்புகிறேன்.



அதில் உள்ளபடி, அமெரிக்கா தற்போது வங்கிகளை தேசிய மயமாக்கி கம்யுனிசத்தின் உச்ச கட்டத்தை எட்டி உள்ளது.



அதே சமயம் சீனா!


மார்க்சியத்தை விட மாவோசியத்தை அதிகம் நம்பிய நாடு.



மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப் படாத அரசால், வழி நடத்த நடத்தப் படும் நாடு சீனா.



சீன கம்யூனிச தந்தை, மாவோ கூறுகிறார்.


1. தனி மனிதன், அமைப்புக்கு கீழே
2. சிறுபான்மையினர், பெரும்பான்மையினருக்கு கீழே
3. கீழ் நிலையில் உள்ளோர், மேல் நிலையில் உள்ளோருக்கு கீழே.
4. அனைத்து உறுப்பினரும், (கட்சி) தலைமை குழுவுக்கு கீழே.

இக்கருத்துக்கு கீழ் படியதோர் கட்சி ஒற்றுமையை குலைப்பவராவோர்.

(நன்றி. Billion of Enterpreneurs - தருண் கண்ணா)

வலை தளம் - http://www.marxists.org/reference/archive/mao/selected-works/volume-2/mswv2_10.htm


இந்த சித்தாந்தத்தை மீண்டும் ஒரு முறை படித்து பாருங்கள்.


(we must affirm anew the discipline of the Party,

namely:

(1) the individual is subordinate to the organization;
(2) the minority is subordinate to the majority;
(3) the lower level is subordinate to the higher level; and
(4) the entire membership is subordinate to the central Committee.

Whoever violates these articles of discipline disrupts Party unity.)



படித்தால் சில இந்திய காம்ரேடுகளின் போக்கின் சாராம்சத்தினை புரிந்து கொள்ள முடியும்.



மற்றொரு முக்கிய கோட்பாடு, "உறுதிச் சமநிலை எல்லாவற்றுக்கும் மேலே" (Stability Overrules Every Thing), சீனாவில் அனைத்துக்கும் ஆதாரமானது.



மேல் கண்ட கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்த சீனா அரசு (கட்சி தலைமை குழு!), சீன மக்களின் சுதந்திரங்களை முழுமையாக பறித்தது எதிர்ப்புகள் நசுக்கப் பட்டன.



தியான்மென் சதுக்கம்! சற்றே திரும்பி பாருங்கள்!



நண்பர்களே, ஒரு விஷயம் இங்கு.




மார்க்ஸியம் வேறு மாவோயிசம் வேறு.




மார்க்ஸ் விரும்பியது சுதந்திரம். மாவோ விதித்தது கட்டுப்பாடு.




மாவோ அரசின் கீழ் சீன மக்கள் நிலங்கள் அனைத்தும் அரசுடமை ஆக்கப்பட்டன.




1980 க்கு பிறகு மாவோயிசம் கூட மாற்றிப் போனது.




அவரது மரணத்துக்கு பிறகு அந்நிலங்கள் மீண்டும் பிரித்தளிக்க பட்டன.




ஆனால் சாதரண மக்களுக்கு அல்ல.





தனியாருக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும், அரசு நிலங்கள் தாரை வார்க்கப் பட்டன.




பன்னாட்டு நிறுவனங்களுக்கு பட்டு கம்பளம் விரிக்க பட்டது.





அவர்களுக்கு, அனைத்து சலுகைகளும் (பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில் ) வழங்கப் பட்டது.




தன்னாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில், பணி புரிவோருக்கு, அரசு (கட்சி குழு?) கூறுவதே ஊதியம் மற்றும் பணி குறித்த இதர கட்டுபாடுகள். (வேலை நிறுத்த உரிமை அறவே கிடையாது).




சீனா, உலகிற்கே தொழிற்சாலை ஆனது. அதனால் மிக குறைந்த விலையில், தனது பொருட்களை, உலக சந்தையில் விற்பனை செய்ய முடிந்தது.




அரசு நிறுவனங்களின் பங்குகள் சந்தைக்கு வந்தன.




தனியார் முதலாளிகளும் பன்னாட்டு முதலாளிகளும் அங்கு செழித்தனர். கட்சியினரை பற்றி கேட்கவே வேண்டாம்.




மார்க்ஸ் மிகவும் வெறுத்த bourgeois (மேல் தட்டு மக்கள் ஆட்சி) சமுதாயம் அங்கு தற்போது உருவாகும் சூழ் நிலை உள்ளது.




மார்க்ஸ் சித்தாந்த அடிப்படையில், சிலர் (bourgeois), பலரை, வெகு காலமாக அடக்கி (சுரண்டலுடன்) ஆளும் போது புரட்சி உருவாகும்.





ரஷிய மற்றும் பிரெஞ்சு புரட்சிகளின் அடிப்படை மேல் கண்ட கோட்பாடாகவே இருந்தது.




ஆக மொத்தத்தில், சீனா ஒரு (அரசு) முதலாளித்துவ நாடு (State Capitalism).




அதாவது அரசே மக்களை சுரண்டுவதாக உள்ள சமூகமாகும்.




இந்த கதை சில இந்திய காம்ரேடுகளால் படிக்கப் பட வேண்டியதாகும்.




சீனா இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தத்தினை தனது சொந்த காரனங்களுக்காக (ill - motivated reasons) எதிர்க்கிறது. நடு இரவில் காம்ரேட் புஷ் சீன அதிபரை எழுப்பி அணு மூல பொருட்கள் அளிக்கும் குழுவின் (NSG) ஒப்புதலை பெற வைத்தது வேறு விஷயம்.




அணு ஒப்பந்தத்தின் சாதக பாதகங்கள் ஆராய்ந்து அலச பட வேண்டிய விஷயம். அதை வேறு ஒரு கட்டுரையில் பார்க்கலாம்.





சீனா கம்யூனிசம் வாழுமிடம் என்றும் நினைத்துக் கொண்டு, சீனாவை திருப்தி படுத்துவதற்காக, அணு ஒப்பந்தத்தை எதிப்பவர்கள், ஒன்று புரிந்து கொள்ளட்டும்.




சீனா ஒரு (அரசு) முதலாளித்துவ நாடு. அமெரிக்கா ஒரு மக்கள் கம்யூனிச நாடு.



பின் குறிப்பு: ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு Socialist உம் வாழ்கிறான். Capitalist உம் வாழ்கிறான்.



21 வயதில் சோசலிஷம் பேசாதவன் மனிதன் இல்லை.



50 வயதில் கேபிடலிசம் பேசாதவன் புத்திசாலி இல்லை.

4 comments:

Anonymous said...

அமெரிக்கா WTO ஒப்பந்தத்தில் கையெழுத்து இடவில்லை என்று
எழுதும் மூடனே, முதலில் WTO
இணையதளத்திற்க்கு சென்று
அடிப்படைகளை அறிந்து கொண்டு
எழுது.

Unknown said...

நண்பரே!

தங்கள் தகவலுக்கு நன்றி.

ஒரு விஷயம்.

இந்த கட்டுரை, மாறி வரும் உலக போக்கினை பற்றியதாகும். தகவல் பேழை அல்ல.

தாங்கள் குறிப்பிட்டுள்ள WTO website நானும் பார்த்துள்ளேன். அதில் உள்ள DISPUTES பகுதியையும் பார்த்துள்ளேன்.

அமெரிக்கா உலக வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்து இட வில்லை என்று கூறியது அவர்களின் மாறி வரும் போக்கினை சுட்டுவதேற்கே ஆகும். (WTO இன் முன்னோடி நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று ஆகும்)

வலை தளம்: http://www.wto.org/english/tratop_e/dispu_e/dispu_by_country_e.htm

மற்றபடி தவறான தகவலை தருவதற்கு அல்ல.

இருந்த போதிலும் தங்களின் மேலான கருத்தினை ஏற்று, அந்த பத்தியை சற்றே மாற்றி அமைத்துள்ளேன்.

மேலும் தங்களை ஏதேனும் மனதளவில் புண் படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.

Unknown said...

//இந்த கட்டுரை, மாறி வரும் உலக போக்கினை பற்றியதாகும்//

சிறு திருத்தம்

இந்த கட்டுரை, மாறி வரும் உலக போக்கினை பற்றிய கருத்து பரிமாற்றம் மட்டுமே ஆகும்.

நாகா said...

அற்புதம் அய்யா. இன்று தான் உங்கள் வலை முகவரியை சாருவின் தளத்தில் பார்த்தேன். அருமையான ஒப்பீடு.

-SuNa

Blog Widget by LinkWithin