
எட்மன்ட் ஹில்லாரி - டென்சிங் இணை எவரெஸ்ட் சிகரத்தை முதன் முதலாக எட்டிப் பிடித்தவர்கள் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும் . ஆனால், பல முறை கண்ட தோல்விக்கு பின்னர்தான் அந்த சாதனை சாத்தியமாயிற்று என்பது எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும் என்பது கேள்விக் குறியே.
எவரெஸ்ட் சிகரத்தை வெற்றி கொள்வதற்காக ஹில்லாரி 1951 மற்றும் 1952 ஆண்டுகளில் செய்த முயற்சிகள் தோல்வி அடைந்தாலும், அவருடைய புகழ் இங்கிலாந்தில் பெருமளவுக்கு பரவி இருந்தது. 1952 முயற்சி தோல்வி அடைந்த சில வாரங்களுக்குள்ளேயே இங்கிலாந்தில் ஒரு கூட்டத்தில் முக்கிய உரையாற்றும்படி ஹில்லாரிக்கு அழைப்பு விடுக்கப் பட்டிருந்தது.
மேடையை நோக்கி சென்ற ஹில்லாரிக்கு பலத்த கைத்தட்டலுடன் வரவேற்பு இருந்தது. ஆனால் மைக்கின் முன்னே நிற்காமல் சற்று ஓரமாக நின்ற ஹில்லாரி, எவரெஸ்ட் மலை படத்தை பார்த்துச் சொன்னாராம்.
" எவரெஸ்ட்! இந்த முறை என்னை தோற்கடித்து விட்டாய். ஆனால் அடுத்த முறை உன்னை நான் தோற்கடிப்பேன். காரணம், நீ வளர முடிந்த வரை வளர்ந்து விட்டாய். ஆனால் நான் இனியும் வளர்ந்து கொண்டே இருப்பேன்"
சொன்னபடியே அடுத்த வருடம் எவரெஸ்ட் மலையை முறியடித்த ஹில்லாரி, மனித முயற்சியின் மகத்துவத்தை நிலைநாட்டி உலக சரித்திரத்தில் அழியாப் புகழை பெற்றுள்ளார்.
நமது வாழ்க்கையிலும் இப்படித்தான், "தாண்டி செல்ல முடியாதோ" என்று அஞ்சும் அளவுக்கு பெரிய பெரிய பிரச்சினைகள் தடையை வந்து நிற்கின்றன.
ஹில்லாரியின் வார்த்தைகளை மனதில் பதியம் போட்டுக் கொள்வோம்.
மனித முயற்சியின் மகத்துவத்திற்கு நிகரேதுமில்லை என்பதை மனனம் செய்து கொள்வோம்.
பிரச்சினைகளை விட நாம் அதிக உயரம் வளரும் போது, எவரெஸ்ட்டும் கூட எறும்பு போல காட்சி தரும்.
நன்றி.
11 comments:
//பிரச்சினைகளை விட நாம் அதிக உயரம் வளரும் போது, எவரெஸ்ட்டும் கூட எறும்பு போல காட்சி தரும். //
சரியான பாயிண்ட்!
நன்றி வால்பையன்!
ஆமா சார், ஒரு நல்ல வாழ்வியல் பாடம்.
//நமது வாழ்க்கையிலும் இப்படித்தான், "தாண்டி செல்ல முடியாதோ" என்று அஞ்சும் அளவுக்கு பெரிய பெரிய பிரச்சினைகள் தடையை வந்து நிற்கின்றன.//
முயற்சியுடையோர் இகழ்ச்சி அடையார்.
அருமையான பகிர்வு நன்றி சார்.
//முயற்சியுடையோர் இகழ்ச்சி அடையார்.//
உண்மைதான் ரஹ்மான்!
நன்றி.
(வெகு நாட்களுக்கு பிறகு வலைதளத்தின் ஊடே சந்திக்கிறோம். மிக்க மகிழ்ச்சி)
நன்றி பீர்!
நல்ல கருத்துக்கள்....
அருமையான பகிர்வு!!!
நன்றி நரேஷ்!
உங்களிடமிருந்து கடந்த ஒரு மாதமாக பதிவுகளே இல்லையே?
அடுத்த பதிவு எப்போது?
நன்றி.
//நன்றி நரேஷ்!
உங்களிடமிருந்து கடந்த ஒரு மாதமாக பதிவுகளே இல்லையே?
அடுத்த பதிவு எப்போது?//
ஆணி ஓவரு!!!
பதிவு எப்பன்னு எனக்கே தெரியலை...எப்பியாவுது சந்துல ஆட்டோ ஓட்டனும்!!!
அருமையான பதிவுங்க
நன்றி
நன்றி கார்த்திக்!
Post a Comment