Sunday, November 22, 2009

அந்நிய முதலீடுகளை கட்டுப்படுத்த வேண்டுமா?



பொதுவாக வளரும் நாடுகளில், மனித வளம், கனிம வளம், நீர் ஆதாரங்கள், நிலம் என பல்வேறு இயற்கை ஆதாரங்கள் மிகுதியாக இருக்கும். ஆனால், இவற்றை ஒருங்கிணைத்து, பொருளாதார முன்னேற்றத்தை உருவாக்கும் கிரியா ஊக்கியான "மூலதனம்" (Capital) என்பது அரிதான ஒன்றாகவே இருக்கும். எனவேதான், வளரும் நாடுகள் அந்நிய முதலீட்டாளர்களை ரத்தின கம்பளம் இட்டு வரவேற்கின்றன.

அந்நிய முதலீடுகளை அந்நிய நேரடி முதலீடு (FDI) மற்றும் அந்நிய நிறுவன முதலீடு (FII) என இரண்டு வகையாக பிரிக்கலாம். சீனா போன்ற நாடுகள் அந்நிய நேரடி முதலீட்டை அதிகம் ஊக்குவிக்கின்றன. அந்நிய நேரடி முதலீட்டின் வாயிலாக "மூலதனம்" மட்டுமில்லாமல் வேறு சில நன்மைகளும், அதாவது வளரும் நாடுகளுக்கு எட்டாக்கனியாக இருக்கும் "அரிய வகை தொழிற்நுட்பங்கள்", "சீரிய மேலாண்மை முறைகள்", "ஏற்றுமதி வருவாய்" மற்றும் "அதிக வேலை வாய்ப்பு" போன்றவையும் அந்நிய நேரடி முதலீடுகள் வழியாக கிடைக்கின்றன. மேலும், இது போன்ற நேரடி முதலீடுகள் எளிதாக திரும்ப பெற முடியாதவை என்பதால் ஒரு வித "நிதி பாதுகாப்பு"ம் (Long Term Investments) வளரும் நாடுகளுக்கு கிடைக்கின்றன.

மற்றொரு வகையான அந்நிய முதலீடான "அந்நிய நிறுவன முதலீட்டின்" வாயிலாகவும் சில நன்மைகள் வளரும் நாடுகளுக்கு கிடைக்கின்றன. "தொழிற்முனைவோர் திறன்" (Enterpreneurship Skills) அதிகம் கொண்ட இந்தியா போன்ற நாடுகள் இந்த வகையான முதலீடுகளை வரவேற்கின்றன. இந்த வகை அந்நிய முதலீட்டாளர்கள் பங்கு முதலீடு மட்டுமே செய்கின்றனர். மற்ற பொறுப்புக்கள் அனைத்தும் இந்திய நிறுவனங்களையே சார்ந்துள்ளன.

இந்த வகை அந்நிய முதலீடு, இந்திய நிறுவனங்கள் மற்றும் புதிய தொழிற் முனைவோர் திரட்ட விரும்பும் "மூலதனத்திற்கான செலவை (Capital Cost ) " பெருமளவு குறைக்கின்றது. இதனால் புதிய தொழில் துவங்குவதும் தற்போதைய தொழிலை விரிவுபடுத்துவதும் எளிதாகிறது. மேலும், தொழிற்துறையில் முன்னுக்கு வருவது பொருளாதாரரீதியாக மிகப் பெரிய வருவாயை அளிப்பதால் (Listing in Capital Markets) புதிய தொழிற்முனைவோர் அதிக அளவில் உருவாகவும் உதவுகின்றது. இறக்குமதியையே அதிகம் சார்ந்திருக்கும் (Import oriented ) நம் நாட்டின் ஏற்றுமதி-இறக்குமதி இடைவெளியை (Trade Deficit) ஈடுகட்டவும் இவ்வகை முதலீடுகள் உதவுகின்றன. எனவேதான் இந்திய அரசாங்கம் இந்த வகை முதலீடுகளை பெருமளவில் ஊக்குவிக்கின்றது.

ஆனால், இந்த வகை முதலீடுகளால் பலவகையான பொருளாதார சிக்கல்கள் உருவாகுகின்றன. அதாவது, இவ்வாறு இந்தியாவில் வந்து குவியும் அந்நிய செலவாணி பணத்தை, குறிப்பிட்ட நாடுகளிலேயே குறைந்த வருவாயில் முதலீடு செய்யும் கட்டாயம் இந்திய மத்திய வங்கிக்கு ஏற்படுகின்றது. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால், அமெரிக்க முதலீட்டாளர்கள் அமெரிக்காவில் குறைந்த வட்டியில் கடன் வாங்கி இந்தியாவில் முதலீடு செய்யும் போது, அவர்கள் மூலம் இந்தியா வரும் அமெரிக்க டாலர்களை, அமெரிக்க அரசாங்கம் வெளியிடும் கடன் பத்திரங்களில் அதிக அளவில் இந்திய மத்திய வங்கி முதலீடு செய்கிறது. அவ்வாறான பத்திரங்களில் மிகக்குறைவான (0.25% முதல் 4% வரை) வருவாயே கிடைக்கின்றது. மேலும் டாலர் மதிப்பீடு ஒவ்வொரு நாளும் குறைந்து வருவதாலும் இந்தியாவிற்கு பெருத்த நஷ்டம் ஏற்படுகின்றது. சென்ற நிதியாண்டில் மட்டும் இந்த வகையில் இந்தியாவிற்கு பல பில்லியன் டாலர்கள் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப் படுகின்றது.

உள்நாட்டிலும் அதிகப் படியான அந்நிய பண வரத்தினால் பல குழப்பங்கள் ஏற்படுகின்றன. பங்கு சந்தையில் ஏற்படும் பெரிய ஏற்றத்தாழ்வுகள் உள்நாட்டு முதலீட்டாளர்களையும் பொருளாதாரத்தையும் பாதிக்கின்றன. "சூடான பணம் (Hot Money)" அதிக பணவீக்கத்தையும் (Asset Inflation) உருவாக்குகின்றது. ரியல் எஸ்டேட், கம்மொடிட்டி போன்ற பொருளாதாரத்திற்கு நேரடி பலன் அளிக்காத துறைகளில் (Unproductive Sectors) இந்த வகை பணம் பாய்ந்து "சொத்து குமிழ்களை (Assets Bubbles)" உருவாக்குகின்றன. மேலும், வளரும் நாடுகளின் வளங்களை மறைமுகமாக சுரண்ட வளர்ந்த நாடுகளுக்கு ஒரு பெரிய வாய்ப்பாகவும் இந்த வகை முதலீடுகள் அமைகின்றன.

எனவேதான், இந்த வகையான முதலீடுகளை கட்டுபடுத்த பிரேசில் போன்ற சில வளரும் நாடுகள் சமீபத்தில் சில நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன. இந்தியாவில் கூட அரசின் சார்பில் சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், சில வலுவான இந்திய பங்கு வர்த்தகர்கள் குறுகிய கால லாப நோக்கிற்காக இவற்றை எதிர்த்து வருகின்றனர். இந்திய அரசாங்கமும் உறுதியான நடவடிக்கை எடுக்க தயங்கி வருகின்றது. பொதுவாக, பங்கு சந்தைகள் உயர்ந்து கொண்டே இருப்பதைத்தான் பலரும் (முக்கியமாக பங்கு வர்த்தகர்கள் மற்றும் பெரிய பணக்காரர்கள்) விரும்புகிறார்கள். ஆனால் அவ்வாறு உயர்வதற்காக நாடு ஒரு மிகப்பெரிய விலையை கொடுத்து வருகின்றது என்பது அவர்களுக்கு நன்கு புரிந்தாலும் கூட அலட்சியம் செய்கின்றனர்.

என்னைப் பொறுத்த வரை நீண்ட கால அந்நிய நிறுவன மற்றும் நேரடி முதலீடுகள் வரவேற்கப் பட வேண்டியவையே. அதே சமயம் குறுகிய கால நோக்கிற்காக சுனாமிகளை ஏற்படுத்தும் "குறுகிய கால பரஸ்பர நிதிகள் (Hedge Funds)" கட்டுப்படுத்தப்பட வேண்டியவை. இதற்காக அரசாங்கம், குறுகிய கால லாபத்தின் மீது அதிக வரிக் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நம் நாட்டில் சம்பாதிக்கும் லாபத்தில் ஒரு பங்கு நம் நாட்டிற்கும் கிடைக்க வேண்டும் என்று விரும்புவதில் எந்த தவறும் இல்லையே? மேலும் இந்திய பங்கு வர்த்தகர்கள் கூட, ஒரு சீரான நிதானமான வளர்ச்சி பெறும் ஒரு பங்கு சந்தையின் மூலம்தான் அதிக பணம் ஈட்ட முடியும். மிக வேகமாக செயல்படக் கூடிய திறமை கொண்ட "குறுகிய கால அந்நிய முதலீட்டாளர்கள்" அவ்வப்போது ஏற்படுத்தும் "சுனாமிகள்" சிறிய இந்திய பங்கு முதலீட்டாளர்கள் பலரையும் காணாமல் போக செய்து விடுகின்றன என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இப்போது பங்கு சந்தை நிலவரத்திற்கு வருவோம்.

பிரேசில் போல நம் நாட்டிலும் அந்நிய முதலீடுகளின் மீது கட்டுப்பாடுகள் கொண்டுவரப் படுமோ என்ற அச்சத்தில் பங்குசந்தைகள் கடந்த சில காலமாக தடுமாறிக் கொண்டே இருந்தன. டாலர் சர்வதேச செலவாணி சந்தைகளில் முன்னேற்றம் அடைந்ததும், மீண்டும் ஒரு முறை பொருளாதார தளர்ச்சி (Doubel Dip Recession) ஏற்படும் என்று ஒபாமா கூறியதும், அமெரிக்க/ஐரோப்பிய வங்கிகளின் மீது அந்நாடுகளின் மத்திய வங்கிகள் கொண்டுவர விரும்பும் முதலீட்டு கட்டுப்பாடுகளும் இந்திய சந்தைகளின் தளர்ச்சிக்கு மற்ற காரணங்களாக இருந்தன. அந்நிய முதலீடுகளை கட்டுபடுத்தும் நோக்கம் எதுவும் இல்லை என்று இந்திய அரசாங்கம் உறுதியளித்தவுடன், நமது பங்கு சந்தையில் நல்ல முன்னேற்றம் காணப் பட்டது.

இந்த முன்னேற்றம் எந்த அளவு நீடிக்கும் என்பது இப்போதைய கேள்வி. "பில்டிங் ஸ்ட்ரோங் ஆனால் பேஸ்மென்ட் வீக்" என்ற பிரபல நகைச்சுவை வசனம்தான் தற்போதைக்கு மனதில் எழுகிறது. தெளிவில்லாத பொருளாதார மீட்சி அறிகுறிகளுக்கு இடையே, பங்குசந்தை மதிப்பீடுகள் (Share Price Valuations) மிக அதிக அளவில் உயர்ந்துள்ளன என்பதை பலரும் தற்போது உணர்ந்துள்ளனர். அமெரிக்க/ஐரோப்பிய வங்கிகள் தங்களது பழைய பாணியை பின்பற்றுவது உலக பொருளாதாரத்திற்கு மீண்டும் ஒருமுறை சிக்கலை ஏற்படுத்த வல்லது என்பதை அந்நாடுகளின் மத்திய வங்கிகள் உணர்ந்துள்ளன என்பதை அவர்களது சமீபத்திய நடவடிக்கைகள் தெளிவாக்குகின்றன.

இந்திய சந்தையை பொறுத்த வரை, அந்நிய முதலீட்டாளர்களே அதிக ஆதிக்கம் செலுத்துவதால், அவர்களது நடவடிக்கையை பொறுத்தே நமது பங்கு சந்தையின் போக்கு அமையும் என்று நினைக்கின்றேன். ஏற்கனவே சொன்னபடி நிபிட்டி 5100-5200 அளவுகளில் நல்ல எதிர்ப்பை சந்திக்கும்.

நீண்டகால முதலீட்டாளர்கள் பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை (ஒவ்வொரு சரிவின் போதும்) சிறிது சிறிதாக சேகரிக்கலாம். வங்கிகளின் இணைப்புத் திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப் பட்டால், இந்திய பொதுத்துறை வங்கிகளின் மதிப்பீடு உயர வாய்ப்புள்ளது. விஜயா வங்கி, தேனா வங்கி போன்ற சிறிய வங்கிகளின் மீது வர்த்தகர்களின் கவனம் இப்போது திரும்பி உள்ளது.

குறுகிய கால வர்த்தகர்கள் சற்று எச்சரிக்கையாக தகுந்த "இழப்பு நிறுத்தத்துடன்" பங்கு வணிகம் செய்யவும். குறிப்பாக மேற்கத்திய நாடுகளின் மத்திய வங்கிகள் விதிக்கக் கூடிய முதலீட்டுக் கட்டுப்பாடுகள் நம் பங்குசந்தையை வெகுவாக பாதிக்கக் கூடும்.

மொத்தத்தில் வரும் வாரத்தில் சர்வதேச செலவாணி வணிகத்தில், டாலர் அளவில் ஏற்படும் மாற்றத்தைப் பொறுத்தே நமது சந்தையின் போக்கு அமைந்திருக்கும் என்று கருதுகிறேன்.

வரும் வாரம் மிகச் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்.

நன்றி.

11 comments:

Atchuthan Srirangan said...

பங்குச்சந்தை - ஸ்ரீலங்கா

http://pangusanthai-srilanka.blogspot.com/

பங்குச்சந்தை பற்றிய பொதுவான தகவல்களும் பங்கு முதலீட்டின் நுணுக்கங்களையும் எளிய முறையில் கற்றுக்கொள்வதக்கான பதிவு,முற்றிலும் தமிழில் கற்று கொள்ளுங்கள் வெற்றி பெறுங்கள்!

Thomas Ruban said...

//என்னைப் பொறுத்த வரை நீண்ட கால அந்நிய நிறுவன மற்றும் நேரடி முதலீடுகள் வரவேற்கப் பட வேண்டியவையே. அதே சமயம் குறுகிய கால நோக்கிற்காக சுனாமிகளை ஏற்படுத்தும் "குறுகிய கால பரஸ்பர நிதிகள் (Hedge Funds)" கட்டுப்படுத்தப்பட வேண்டியவை. இதற்காக அரசாங்கம், குறுகிய கால லாபத்தின் மீது அதிக வரிக் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நம் நாட்டில் சம்பாதிக்கும் லாபத்தில் ஒரு பங்கு நம் நாட்டிற்கும் கிடைக்க வேண்டும் என்று விரும்புவதில் எந்த தவறும் இல்லையே? மேலும் இந்திய பங்கு வர்த்தகர்கள் கூட, ஒரு சீரான நிதானமான வளர்ச்சி பெறும் ஒரு பங்கு சந்தையின் மூலம்தான் அதிக பணம் ஈட்ட முடியும்.//

உண்மைதான் சார்.

அந்நிய முதலீடுகளின் மீது வரி விதிக்கப்படுமா என்ற கேள்விக்கு, நம்முடைய மத்திய நிதி அமைச்சருமும் வரும் ஆனா வராது...(தேவைப்பட்டால் வரும் ) என்று காமடி பண்ணுகிறார்.

மொத்தத்தில் தனியார்துறை ஊழியரின் சம்பளத்தை தவிர மற்ற எல்லாமே உயர்ந்துக் கொண்டே போகிறது.
வரும் வாரத்தில் இந்த மாதத்திற்க்கான F&O கணக்கை நேர் செய்யும் நாள் இருப்பதால் சந்தையில் ஊசலாட்டம் தொடரும் என நினைக்கிறேன்.
பதிவுக்கு நன்றி சார்...

Maximum India said...

நன்றி அச்சு!

//பங்குச்சந்தை பற்றிய பொதுவான தகவல்களும் பங்கு முதலீட்டின் நுணுக்கங்களையும் எளிய முறையில் கற்றுக்கொள்வதக்கான பதிவு,முற்றிலும் தமிழில் கற்று கொள்ளுங்கள் வெற்றி பெறுங்கள்!//

உங்களுடைய முயற்சி வெற்றிபெற அன்பான வாழ்த்துக்கள்!

நன்றி!

Maximum India said...
This comment has been removed by the author.
Maximum India said...

நன்றி தாமஸ் ரூபன்!

//அந்நிய முதலீடுகளின் மீது வரி விதிக்கப்படுமா என்ற கேள்விக்கு, நம்முடைய மத்திய நிதி அமைச்சருமும் வரும் ஆனா வராது...(தேவைப்பட்டால் வரும் ) என்று காமடி பண்ணுகிறார்.//

நம்முடைய அரசியல்வாதிகள் பங்குசந்தைக்கு தேவைக்கு அதிகமாகவே முக்கியத்துவம் கொடுக்கின்றனர். நாட்டின் நலனை (பொருளாதாரம்) விட பங்குசந்தை முதலீட்டாளர்களின் குறுகிய லாபம் முக்கியம் அல்ல என்பதை முக்கிய தலைவர்கள் உணர்ந்து கொண்டால் நல்லது.

//மொத்தத்தில் தனியார்துறை ஊழியரின் சம்பளத்தை தவிர மற்ற எல்லாமே உயர்ந்துக் கொண்டே போகிறது.//

வேலை வாய்ப்புக்கள் கொஞ்சம் அருகி விட்ட நிலை முதலாளிகளுக்கு ரொம்ப சௌகரியமாக போய் விட்டது என்று நினைக்கிறேன்.

//வரும் வாரத்தில் இந்த மாதத்திற்க்கான F&O கணக்கை நேர் செய்யும் நாள் இருப்பதால் சந்தையில் ஊசலாட்டம் தொடரும் என நினைக்கிறேன்.//

தகவலுக்கு நன்றி தாமஸ் ரூபன்!

நன்றி.

வால்பையன் said...

தங்கம் எங்க தான் தல போய் நிற்கும்!

Itsdifferent said...

//ஆனால், இந்த வகை முதலீடுகளால் பலவகையான பொருளாதார சிக்கல்கள் உருவாகுகின்றன. அதாவது, இவ்வாறு இந்தியாவில் வந்து குவியும் அந்நிய செலவாணி பணத்தை, குறிப்பிட்ட நாடுகளிலேயே குறைந்த வருவாயில் முதலீடு செய்யும் கட்டாயம் இந்திய மத்திய வங்கிக்கு ஏற்படுகின்றது. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால், அமெரிக்க முதலீட்டாளர்கள் அமெரிக்காவில் குறைந்த வட்டியில் கடன் வாங்கி இந்தியாவில் முதலீடு செய்யும் போது, அவர்கள் மூலம் இந்தியா வரும் அமெரிக்க டாலர்களை, அமெரிக்க அரசாங்கம் வெளியிடும் கடன் பத்திரங்களில் அதிக அளவில் இந்திய மத்திய வங்கி முதலீடு செய்கிறது. அவ்வாறான பத்திரங்களில் மிகக்குறைவான (0.25% முதல் 4% வரை) வருவாயே கிடைக்கின்றது. மேலும் டாலர் மதிப்பீடு ஒவ்வொரு நாளும் குறைந்து வருவதாலும் இந்தியாவிற்கு பெருத்த நஷ்டம் ஏற்படுகின்றது. சென்ற நிதியாண்டில் மட்டும் இந்த வகையில் இந்தியாவிற்கு பல பில்லியன் டாலர்கள் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப் படுகின்றது. //
Got confused here. Why are we reinvesting in US bonds, the funds we got through FII? I thought those are for investing in the local businesses through lending and other such practices, extending credit to the Indian business folks who will use this for their business purposes.
What am I reading wrong?

Maximum India said...

அன்புள்ள வால்பையன்!

//தங்கம் எங்க தான் தல போய் நிற்கும்!//

இந்த கேள்வியை நாமெல்லோருமே கேட்க வேண்டியவர்கள் அமெரிக்காவில் இருக்கின்றனர். அமெரிக்கா பேப்பர் பணத்தை பெரிய அளவில் அச்சடிப்பது நிற்கும் வரை தங்கம் விலை உயர்வு நீடிக்கும் என்று நினைக்கிறேன்.

நன்றி.

Maximum India said...

நன்றி itsdifferent !

//Got confused here. Why are we reinvesting in US bonds, the funds we got through FII? I thought those are for investing in the local businesses through lending and other such practices, extending credit to the Indian business folks who will use this for their business purposes.
What am I reading wrong?//

பொதுவாக ஒரு நாட்டின் கரன்சி நோட்டு அந்த நாட்டின் கடன் பத்திரம் ஆகும். எனவே ஒரு கரன்சி குறிப்பிட்ட நாட்டில் மட்டுமே (இறுதியாக) செல்லுபடியாகும். மேலும் இந்திய வங்கிகளிடமே ஏராளமான பணம் இருக்கின்றது. கடன் வாங்கத்தான் ஆளில்லை.

இந்த கேள்விகளுக்கு விளக்கமான பதிலாக ஒரு பதிவே இருக்கின்றது. அந்த பதிவை படியுங்கள். (http://sandhainilavaram.blogspot.com/2009/07/blog-post_29.html) அதன் பின்னர் வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேளுங்கள்.

நன்றி
.

KARTHIK said...

பகிர்வுக்கு நன்றிங்க.

Maximum India said...

நன்றி கார்த்திக்!

Blog Widget by LinkWithin