Skip to main content

இதுவும் போலிதான்!

இந்தியாவில் மற்ற பலவற்றையும் போலவே "தேசிய ஒருமைப்பாட்டு கூக்குரல்களும்" போலியானவையே என்று தோன்றுகிறது.

தேசிய கட்சிகள் என்றும் தம்மைத் தானே கருதிக்கொள்ளும் கட்சிகளும் அவற்றின் தலைவர்களும் மாநிலத்திற்கு மாநிலம், ஒவ்வொரு வேடமிடும் பச்சோந்திகளாகவே இருக்கின்றனர்.

சமீபத்திய உதாரணம், ராகுல் காந்தியின் சமீபத்திய பீகார் பிரச்சாரங்கள். அந்த மாநிலத்தில் சில தொகுதிகள் கூடுதலாக பெறவேண்டும் என்ற ஒரே காரணத்திற்க்காக அவர் கையாள விரும்புகின்ற உத்தி "பிரிவினை கருத்துக்கள் அதிகம் இல்லாத தேசிய பாதுகாப்பு படையிலும் மாநில அடையாளங்களை புகுத்துதல்". "மும்பையை காப்பாற்றியது உத்திர பிரதேச மற்றும் பீகார் மாநிலங்களை சேர்ந்த வீரர்களே" என்று கூறி ஒரு புதியவகை பிரிவினை வாதத்தை தொடங்கி வைத்திருக்கிறார். அவருடைய இந்த பேச்சுக்கு தேசிய அளவில் எதிர்ப்பு கிளம்பாதது வருத்தத்துக்குரிய ஒன்றாகும். இனிமேல் ஒருமாநிலத்தில் கலவரங்கள் நடக்கும் போது அதை அடக்க எந்த மாநிலத்தில் பிறந்த "தேசிய படைவீரர்கள்" வருகின்றனர்" என்பதும் கூர்மையாக கவனிக்கப் பட்டால் பிரிவினைவாதங்கள் மேலும் வலுபெற வாய்ப்புள்ளதல்லவா?

காஷ்மீர், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் ஏற்பட்ட பிரிவினைவாதங்களின் ஆரம்பக்கட்டங்களில், வலுவான உள்ளூர் அரசியல் கட்சியை ஒடுக்குவதற்காக பிரிவினைவாதிகளை வளரவிட்டதும், சமீபத்திய தெலுங்கானா பிரச்சினையில் இரண்டு பக்கமும் தலையையும் வாலையும் காட்டியதும் பெரிய தேசிய கட்சிகள்தான் என்பதையும் யாரும் மறக்க முடியாது.

நம்மூர் பாமாகவைப் போலவே சிவசேனாவும் அவ்வப்போது நல்ல கருத்துக்களை கூறினாலும், அவர்களுடைய நம்பகத்தன்மை குறைவாக உள்ளதானால் மக்கள் அவற்றை முழுமையாக புறக்கணிக்கின்றனர். ஆனால் இவர்களை விட அதிக ஆபத்தானவர்கள் ராகுல் காந்தி போன்ற "பச்சோந்தி தேசியவாதிகள்" என்பதையும் யாரும் மறந்துவிடக்கூடாது. ஏனென்றால் வெளிப்படையாக தெரிந்து விட்டால் எளிதாக ஒதுங்கி விடலாம். நல்லவர்கள் போல நாடகமாடுபவர்களிடம் இருந்து காப்பாற்றிக் கொள்வதுதான் மிகவும் கடினமான காரியம்.

நன்றி.

பின்குறிப்பு

இந்த பதிவை எழுத தூண்டுகோலாக அமைந்தவை

தேன்கூடு

திருச்சிக்காரன்

Comments

Thomas Ruban said…
அரசியல்வாதிகளிடம் சில விசியங்களை எதிர்ப்பார்க்ககூடது (அதுவும் முக்கியமாக தேர்தல் நேரங்களில்). ராகுல் காந்தியும் விதி விலக்கல்ல!!!

நல்ல சிந்தனை. பதிவுக்கு நன்றி சார்.
Maximum India said…
// அரசியல்வாதிகளிடம் சில விசியங்களை எதிர்ப்பார்க்ககூடது (அதுவும் முக்கியமாக தேர்தல் நேரங்களில்). ராகுல் காந்தியும் விதி விலக்கல்ல!!!//

உண்மைதான் தாமஸ் ரூபன்!

நன்றி!
Naresh Kumar said…
இங்க நோக்கம், அடுத்த பிரதமர் பதவிக்கு அவரை தயார் செய்யனும்...

அதான் அவரை விட்டு ஏதாவது செய்தி வந்திட்டிருக்கு!!!

திடீர்னு இறங்கி ரெண்டாம் வகுப்பு ரயில் பெட்டிக்கு போனாராம், எல்லாரும் ஆச்சரியப்பட்டாங்களாம், ஏடிஎம் ல பணம் எடுத்தாராம்,(பாஸ் நீங்க எங்க எதுக்கு பணம் கொடுக்க வேண்டிய அவசியம் வந்துதுன்னு சொல்ல முடியுமா!!!)

இதெல்லாம் கூட விட்டுடல்லாம்....ஆனா இந்த மாதிரி காரியாங்களாலேயே அவரு பெருசா சாதிச்சிட்டாருன்னு சொல்ற கூட்டத்தை நினைச்சாத்தான் பயமா இருக்கு!!!!

Popular posts from this blog

நரேந்திர மோடி நாடாளலாமா?

சமீபத்தில் நடைபெற்ற குஜராத் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கார்பொரட் கனவான்களான அனில் அம்பானி மற்றும் சுனில் மிட்டல் ஆகியோர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். காரியம் ஆக வேண்டும் என்றால் என்ன வேண்டுமானாலும் பேசக் கூடியவர்கள் நமது தொழில் அதிபர்கள் என்பதனால் அவர்களின் பேச்சுக்கு அவ்வளவு மரியாதை கொடுக்க வேண்டியதில்லை. இவர்களைப் போன்றவர்களால் ஏற்கனவே நாடாள தகுதி பெற்றவர் என்று கூறப் பட்ட சந்திர பாபு நாயுடு அடுத்த சட்ட மன்ற தேர்தலில் தனது முதலமைச்சர் பதவியினையே இழந்தது குறிப்பிடத் தக்கது. தொழில் அதிபர்கள் பேச்சினை பா.ஜ.கவே ஏற்றுக் கொள்ளாத பட்சத்திலும் கூட, தீவிரவாதத்தை ஒடுக்கி குஜராத் மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து சென்றவர் நரேந்திர மோடி என்றும் அவர் இந்தியாவின் பிரதமர் ஆவது நாட்டுக்கு நல்லது என்றும் பலராலும் கருதப் படுவதால், நரேந்திர மோடியின் செயல்பாடு பற்றியும் அவர் பிரதமர் ஆகலாமா என்பது பற்றியும் பிரதமராக அவர் ஏற்றுக் கொள்ளப் படுவாரா என்பதைப் பற்றியும் இங்கு பார்ப்போம். இன்றைய தேதியில் இந்தியாவிலேயே மிகுந்த முன்னேற்றம் அடைந்த ஒரு மாநிலமாக குஜரா...

இந்தியா தாக்குப் பிடிக்குமா?

இன்றைய உலகப் பொருளாதாரத் தேக்க நிலையில், இந்தியாவால் தாக்குப் பிடிக்க முடியுமா என்பது பற்றி பார்ப்போம். சமீபத்தில் வெளியிடப் பட்ட மத்திய புள்ளியல் (மத்திய அரசு) நிறுவனத்தின் மதிப்பீட்டின் படி இந்தியப் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 7.1 சதவீதம் வளர்ச்சியுறும் என்று தெரிகிறது. இது சரியாக இருக்கும் பட்சத்தில் உலகிலேயே இரண்டாவதாக வேகமாக வளர்ச்சியுறும் நாடு இந்தியாவாகத்தான் இருக்கும் (சீனா முதலாவது). சென்ற ஆண்டில் ஒன்பது சதவீதம் வளர்ச்சி பெற்றிருந்த இந்தியப் பொருளாதாரம் செப்டம்பர் 2008 வரையிலான முதல் அரையாண்டில் 7.80% வளர்ச்சிப் பெற்றிருந்தது. பொதுவாகவே பண்டிகைக் காலமாக கருதப் படுகிற இரண்டாவது அரையாண்டே தொழிற் துறையில் அதிக வளர்ச்சியைக் காட்டும் என்றாலும் இந்த முறை இந்தியத் தொழில் துறை பெரும் தேக்க நிலையில் இருந்து வந்திருக்கிறது என்பது கவனிக்கத் தக்கது. இந்திய தொழிற் வளர்ச்சி கடந்த இரு மாதங்களாக மிகவும் குறைந்து காணப் படுவதாலும் ஏற்றுமதியோ இறங்குமுகத்தில் இருப்பதாலும் இந்திய அரசாங்கம், மார்ச் 2009 வரையிலான நிதி ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் நமது பொருளாதாரம் குறைந்த வளர்ச்சியே (6.30%) இரு...

இங்கும் அங்கும் பாதை உண்டு. இதில் நீ எந்த பக்கம்?

சென்ற வாரம் 8350 என்ற எதிர்ப்பு நிலையை தாண்டிய போதும், நிப்டியால் முழுமையான வெற்றியை பெற முடிய வில்லை. 8350 என்ற நிலையின் அருகிலேயே இன்னும் நிலை பெற்றுள்ளது. உலக சந்தைகளின் போக்கினையொட்டி இந்த வாரம் 8350 என்ற எதிர்ப்பு நிலையை முழுமையாக முறியடிக்கின்றதா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். நன்றி.