Skip to main content

Posts

Showing posts from 2011

நேர்ந்து விடப் பட்டவர்கள் - இவர்களும் இந்தியர்களே!

எனது வங்கியில் புதியதாக கணக்கு துவக்க விண்ணப்பித்த ஒரு நடுத்தர வயது பெண்மணி, தனது விண்ணப்பத்தில் தந்தை/கணவர் பெயரை நிரப்ப வில்லை. ஏன் நிரப்ப வில்லை என்ற என் கேள்விக்கு அந்த பெண்ணிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. பொதுவாகவே கல்வியறிவு மிகவும் குறைந்த வட கர்நாடக பகுதி என்பதால், அவரது விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய உதவி செய்த நபரை அழைத்து, கணவர் பெயரை நிரப்பும் படி அறிவுறுத்தினேன், . அந்த பெண்ணிற்கு இன்னும் திருமணமாக வில்லை என்று அந்த நபர் கூறினார். அதனால் என்ன, அவரது தந்தை பெயரை நிரப்புங்கள் என்று சற்று எரிச்சலுடன் கூறினேன். அவருக்கு தந்தையும் இல்லை என்றார் அவர். மேலும் எரிச்சலான நான் தந்தையை கேட்க வில்லை, தந்தையின் பெயரைத்தான் கேட்கிறேன் என்று கூறினேன். அதற்கு அவர், அந்த பெண்மணியின் பட்டப் பெயரை கவனிக்க வில்லையா என்று கேட்டார். அதற்கென்ன என்று நான் திருப்பிக் கேட்ட போது, அந்த (தேவதாசி) இனத்தை சேர்ந்தவர்கள் கடவுளுக்கு நேர்ந்து விடப் பட்டவர்கள் என்றும் அவர்களுக்கு தந்தையோ கணவரோ கிடையாது என்று கூறினார். இந்த காலத்திலும் இப்படியா என்று ஒரு நிமிடம் திகைப்பின் உச்சிக்கு சென்ற நான் அந்த பெண்ணைப் ப...

டாலர் செல்லா காசாகுமா?

நாகரிக வளர்ச்சியின் காரணமாக பண்டமாற்று வணிக முறை வழக்கொழிந்த பின்னர், பல நூறாண்டு காலமாக தங்கம்தான் பன்னாட்டு வணிகத்தின் அதிமுக்கிய நாணயமாக திகழ்ந்து வந்தது. ஆனால், கடந்த நூற்றாண்டில் தனிப்பெரும் பொருளாதார வல்லரசாக அமெரிக்கா உருவெடுத்த பின்னர், டாலர் பன்னாட்டு வணிகத்தின் முக்கிய நாணயமாக தலையெடுத்தது. நிக்சன் அதிர்ச்சிக்குப் பின்னரும், டாலருக்கு மாற்றான உலக நாணயமாக யூரோ நாணயம் முன்னிறுத்தப் பட்ட பின்னரும் கூட டாலர் தனது முக்கியத்துவத்தை தக்க வைத்துக் கொண்டதுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். ரஷ்யாவின் அரசியல் செல்வாக்கு குறைந்த பின்னர், தனிப்பெரும் ஏகாதிபத்தியமாக அமெரிக்கா உருவெடுத்ததும், இந்தியா, சீனா போன்ற உற்பத்தி நாடுகள் அமெரிக்காவின் நுகர்வோர் கலாச்சாரத்தை பெருமளவில் சார்ந்திருந்ததும், டாலரின் மதிப்பு பெருமளவில் வீழாமல் காப்பாற்றின. சமீபத்திய பொருளாதார வீழ்ச்சிக்கு அதிமுக்கிய காரணம், அளவுக்கதிகமான கடன் பொருளாதாரத்தின் வளர்ச்சி என்றாலும், பொருளாதார மீட்சிக்கு உலக நாடுகள் தேர்ந்தெடுத்த பாதை அதே வீழ்ச்சி பாதையானது துரதிர்ஷ்டவசமான ஒன்றாகும். அரசின் செலவினங்களை குறைத்து கடன் அளவை குறைப்பதற்கு...

பணவீக்க சுழற்சியின் இரண்டாம் பாதி ஆரம்பம்?

ஒரு பொருளாதார வீழ்ச்சிக்கு பின்னே உருவாகும் பணவீக்க சுழற்சியின் முதல் பகுதி எப்பொழுதுமே விரும்பக் கூடியதாகத்தான் இருக்கும். பொருளாதார மந்த நிலையில் இருந்து விடுதலை, அதிகப் படியான பண புழக்கம், அதிக வேலை வாய்ப்புக்கள், ரியல் எஸ்டேட் உயர்வு, தொழிற் வளர்ச்சியில் முன்னேற்றம் என பல வகையிலும் மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கும். அதிகப் படியான விலை அளவுகள் உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகளின் லாபத்தை உயர்த்தும். அரசாங்கத்தின் வரி வசூலும் அதிகமாகும். மக்களிடையே உருவாகும் அதிகப் படியான பணபுழக்கம் ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகளையும் குஷிப் படுத்தும். அதிகப்படியான வேலை வாய்ப்புக்கள் மற்றும் சம்பள உயர்வு நடுத்தர வர்க்கத்தினையும் மகிழ்ச்சிப் படுத்தும். அதே சமயத்தின் பணவீக்க சுழற்சியின் இரண்டாம் பகுதி சற்று கசப்பாகத்தான் இருக்கும். விலைவாசிகள் விண்ணை முட்டும் பட்சத்தில் நடுத்தர வர்க்கத்தின் பட்ஜெட் வெகுவாக பாதிக்க படும். அதிகப் படியான கடன் வட்டி வீதங்கள் உற்பத்தியாளர்களை நஷ்டத்தில் தள்ளும். புதிய முதலீடுகள் குறையும். நாட்டின் பொருளாதாரத்தில் ஒரு மந்த நிலை உருவாகும். இப்போதைய சூழ்நிலையில், மேலோட்டமா...

சந்தை இப்போது ஒரு முக்கிய தருணத்தில்!

தமிழக வாக்காளர்களுக்கு வாழ்த்துக்கள்!

காசுக்கும் இலவசத்துக்கும் தமிtழக வாக்காளர்கள் விலை போவார்கள் என்ற பரவலான ஊடக கணிப்புக்களுக்கு முற்று புள்ளி வைத்து, தமது கண்ணியத்துக்கு முக்கியத்துவம் குடுத்த தமிழக வாக்காளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்! ஜாதி கணக்குகளையும் கூட்டணி கணக்குகளையும் மனதில் நிறுத்தி தேர்தலை சந்தித்தவர்களின் கணக்குகளை முடித்து வைத்ததற்கு இன்னுமொரு வாழ்த்துக்கள்! குடும்ப ஆட்சியை முடித்து வைத்ததற்கும் குறுநில மன்னர்களை வீட்டிற்கு அனுப்பியதற்கும் மீண்டுமொரு வாழ்த்துக்கள்! ஒரு தேர்தலுக்கு ஒரு கூட்டணி என ஜாதி பெயரை சொல்லி வோட்டு கேட்டவர்களுக்கும், தமிழீழ பிரச்சனையில் பஞ்சோந்தியாக நாட்கமாடியவர்களையும் சரியாக இனம் கண்டதற்கும் நல்வாழ்த்துக்கள்! அறுபது சீட்டு கேட்டு அடம் பிடித்தவர்களை ஐந்து சீட்டுடன் அடக்கி வைத்ததற்கும் வாழ்த்துக்கள்! கவர்ச்சியும் காமெடியும் திரையில் (சில சமயங்களில் நேரில்) ரசிப்பதற்கு மட்டுமே. திரை மயக்கம் தேர்தலில் செல்லாது என்று மீண்டுமொரு முறை நிருபித்ததற்கும் வாழ்த்துக்கள்! பண பலம், அதிகார பலம், ரௌடி பலம் அனைத்தையும் அடக்கி அஞ்சா நெஞ்சர்களை அஞ்சா நோஞ்சான்களாக ஆக்கிய தேர்தல்...

ஒழியட்டும் ஊழல் எனும் பயங்கரவாதம்!

உலகின் பல்வேறு பகுதிகளில் காலம் காலமாக பல பயங்கரவாத தாக்குதல்கள் நடந்திருந்தாலும், பயங்கரவாதத்தின் உச்சக்கட்ட தாக்குதலாக கருதப் படுவது, அமெரிக்க இரட்டை கோபுரங்களின் மீது நடந்த விமான தாக்குதல்தான். ஏனென்றால், அதுவரையில் இந்தியா போன்ற வலு குறைந்த நாடுகளை குறி வைத்தே பழக்கப் பட்ட பயங்கரவாதிகள், உலக வல்லரசான அமேரிக்கா மீது குறிவைத்தது பலரையும் வியப்பில் உள்ளாக்கியதுடன், பயங்கரவாதிகளின் வெளிப்படையான தைரியத்தையும் பறை சாற்றியது. இந்தியாவில் ஊழல் புரையோடிப் போனது அனைவரும் ஒப்புக் கொண்ட ஒன்றுதான் என்றாலும், இன்னும் சொல்லப் போனால் இந்திய மக்கள் ஊழலுடன் ஒத்துப் போய் வாழப் பழகி பல ஆண்டுகள் ஆகி விட்டாலும், இரண்டு அலைக்கற்றை ஊழலின் பரிமாணம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சொல்லப் போனால் பல ஊழல் பெருச்சாளிகளையும் கூட அந்த ஊழல் திகைப்பில் ஆழ்த்தியது. ஊழல் பணம் வெளிப்படையாக கைமாறியது, தம்மை யாரும் எதுவும் செய்ய முடியாது என்ற ஊழல்வாதிகளின் அதி தைரியத்தையும் காட்டியது. பயங்கரவாதத்தின் தீமைகளுக்கு சற்றும் குறைவில்லாதது ஊழல் தரும் தேசிய இழப்புக்கள். ஊழல்வாதிகளும் பயங்கரவாதிகளைப் போலவே தண்டிக்கப்...

பணவீக்கமும் விஷக் காய்ச்சலும்!

பரதப்பட்டி ஜனங்களெல்லாம் பாவப் பட்ட ஜனங்களாம். பலதரப் பட்ட வியாதிகளால் அடிக்கடி பாதிக்கப் படுவார்களாம். ஒரு முறை எல்லாரும் ஒண்ணா கூடி இந்த பிரச்சினைக்கு வழி என்னன்னு யோசிச்சாங்களாம். அப்ப வந்த யோசனைப்படி ஒரு டாக்டரை அதுவும் வெளிநாட்டில் படிச்ச டாக்டரை ஊர் தலைவரா போட்டாங்களாம். அவருக்கு துணையா நிறையா படிச்ச டாக்டர்களாக வச்சுகிட்டாங்கலாம். நம்மூரு தலைவரா ஒரு டாக்டர் இருக்காருன்னு, இனிமேல நமக்கு வியாதி தொல்லை இருக்காது நினைச்ச பரதப்பட்டி ஜனங்களோட சந்தோஷம் ரொம்ப நாளைக்கு நீடிக்கலையாம். திடீரென்னு ஒரு விஷக் காய்ச்சல் ஊரெல்லாம் பரவுச்சாம். பரத் பவார் என்கிற ஒரு டாக்டர் சொன்னாராம், காசு அதிகமாக சம்பாதிக்கிறதால ஊரு ஜனங்க எல்லாரும் நிறைய சாப்பிடறாங்க. அதனாலதான் காய்ச்சல் வருதுன்னு. பாரினில படிச்ச இன்னொரு டாக்டர் பதம்பரம் சொன்னாராம், "இது ஒலக பிரச்சினை. எல்லா இடத்திலும்தான் காய்ச்சல் இருக்கு. அங்க எல்லாருக்கும் சரியாப் போனா, நம்மூரிலும் சரியாப் போயிடும்'னு". திட்டம் போடுற படா டாக்டர் பளுவாலியா சொன்னாராம். "நேத்திக்கு நூறு டிகிரி இருந்த காய்ச்சல், இன்னைக்கு ஒரு டிகிரிதான் ...

தந்தியடிக்கும் கலைஞர்!

விலைவாசி ஏற்றம் முதல் ஈழத்தமிழர் இனப்படுகொலை வரை பிரச்சனைகளை கடிதங்கள் மூலமாக கையாண்டு கொண்டிருந்த கலைஞர் ஐயா, இன்று இந்திய மீனவர்கள் இலங்கை படையினரால் படுகொலை செய்யப் படுவதை தடுக்க "தந்தியை " ஆயுதமாக கையில் எடுத்துக் கொண்டிருக்கிறார். எதிரி நாடாக கருதப் படும் பாகிஸ்தான் கூட எல்லை தாண்டி மீன் பிடிக்கும் இந்திய மீனவர்களை சுட்டுத் தள்ளுவதில்லை. நேச நாடாக நேசிக்கப் படும் இலங்கையோ எல்லைக்கு அருகே வரும் இந்திய மீனவர்களைக் கூட விட்டு வைப்பதில்லை. சிறிது காலம் முன்னர் வரை விடுதலை புலிகளுக்கு உதவ வரும் மீனவர்களைத்தான் சுடுகிறார்கள் என்று சப்பைக் கட்டு கட்டியவர்கள் இப்போது என்ன சொல்லப் போகிராரர்கள் என்று தெரிய வில்லை. கலைஞர் ஐயாவிற்கு வருவோம். மொபைல், ஈ மெயில், பாக்ஸ் போன்ற பல நவீன தகவல் தொடர்பு சாதனங்களின் வருகைக்குப் பின்னர், நலிவடைந்து போன தந்தித் துறைக்கு மறு வாழ்வளிக்க இப்போது கலைஞர் ஐயா முடிவு செய்திருக்கிறார் போல தெரிகிறது. மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதி எழுதியே மன்மோகன் சிங் விலைவாசியை கட்டுப் படுத்துவதை போல, கலைஞரும் இனிமேல் தந்தி அடித்தே தமிழினத்தை வாழ வைக்கப் போகிறா...