Skip to main content

Posts

Showing posts from June, 2009

இந்தியாவின் பெருமை!

பத்து வருட கனவு இன்று நனவாகி இருக்கிறது. பல்வேறு போராட்டங்கள், பற்பல முட்டுக்கட்டைகள் பலமடங்காகிப் போன செலவினங்கள் எல்லாவற்றையும் தாண்டி இன்று பந்திரா-ஒர்லி கடல்வழி மேம்பாலம் பொது மக்களுக்காக திறந்து விடப் பட்டிருக்கிறது. இந்த பாலத்தின் முக்கிய சிறப்புக்கள் இங்கே. இந்த எட்டுவழி பாலத்தின் நீளம் 5.6 கி.மீ. மொத்த சிமென்ட் உபயோகம் 90,000 டன். இரும்பு 40,000 டன் இரும்புக் கம்பியின் நீளம் 38,000 கி.மீ. கிட்டத்தட்ட பூமியின் சுற்றளவு மைய தூணின் உயரம் 126 மீட்டர். பாலத்தைக் கட்டியது ஹிந்துஸ்தான் கன்ஸ்ட்ரக்சன் கம்பெனி. அணுமின் நிலையங்கள் போன்ற உயர் தொழிற்நுட்ப அமைப்புக்களை உருவாக்குவதில் வல்ல தனியார் நிறுவனத்தினர். மூவாயிரம் தொழிலாளர்கள் தினந்தோறும் உழைத்து இந்த பாலத்தை உருவாக்கி உள்ளனர் இந்த கட்டுமானப் பணி பல ஆண்டுகள் தள்ளிப் போனதால் கடும் பொருளாதார நெருக்கடிக்குள் உள்ளானபோதும், மனம் தளராமல் இந்த நிறுவனத்தின் தலைவர் சொன்னது, "இந்த கட்டுமானப் பணி இந்தியாவின் பெருமை. எந்த காரணத்தைக் கொண்டும் இந்த பாலத்தை கட்டுவது நிறுத்தப் பட மாட்டாது." இந்த வாசகங்களை பத்திரிக்கையில் படித்த நான் இந...

'பட்ஜெட்' பகவான் வரம் தருவாரா?

மத்திய பட்ஜெட் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய இன்னும் ஒரு வாரமே இருக்க, பணத்தில் புரளும் கனவான்கள் முதல் அன்றாட உழைப்பில் சோறு பொங்கி அதில் உப்பு மட்டுமே சேர்த்துக் கொண்டு சாப்பிடும் சாமான்ய மனிதர்கள் வரை அனைவரின் கவனமும் இப்போதைக்கு மத்திய பட்ஜெட் மீதுதான் இருக்கிறது. வறுமை ஒழிப்புத் திட்டங்கள், வேலை உறுதி திட்டங்கள், தனி நபர் ஓய்வூதிய/ காப்புறுதி திட்டங்கள் போன்றவை ஏழை வர்க்கத்தின் ஆவல்கள். தனிநபருக்கான வருமான வரி வரம்புகள் அதிகரிக்கப் படவேண்டும் என்பது மத்திய தர வர்க்கத்தினரின் விருப்பம். விஷம் போல ஏறி இருக்கும் விலை வாசியை குறைக்க ஏதேனும் நடவடிக்கை எடுக்கப் படுமா என்பதும் மேற்சொன்ன இரண்டு வர்க்கத்தினரின் ஏக்கம். புதிய ரயில் திட்டங்கள், வெட்டில்லாமல் கிடைக்கும் மின்சாரம், குடிநீர் விநியோகத் திட்டங்கள், சாலை மேம்பாடு, கட்டுமானப் பணிகள் போன்றவையும் பொது மக்களின் எதிர்பார்ப்புக்கள். இனி தொழில் துறையினரின் விருப்பங்களைப் பார்ப்போம். கலால் வரி குறைப்பு, ஏற்றுமதி சலுகைகள் போன்றவை ஜவுளித் துறையினரின் விருப்பம். கலால் வரி குறைப்பு, வட்டி குறைப்பு மற்றும் தேய்மான சலுகைகள் வாகனத் துறையினர்...

"ஒரு அரிசி"யின் கதை!

முன்னொரு காலத்தில் ஆயகலைகள் அனைத்திலும் தேர்ந்த ஒரு மாமன்னன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு அவனது திறமைகள் மீது அபார நம்பிக்கை. சொல்லப் போனால் நிறைய கர்வமும் கூட. குறிப்பாக, சதுரங்க போட்டியில் அந்த மன்னன் படு கில்லாடி. போவோர் வருவோரையெல்லாம் விளையாட அழைத்து அவர்களை நிமிடத்தில் தோற்கடிப்பதில் அவனுக்கு அலாதி ஆனந்தம். அவனிடம் சதுரங்க போட்டியில் தோற்றுப் போகாத மன்னர்களே அந்த காலகட்டத்தில் இல்லையென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். மன்னர்கள் மட்டுமல்ல, சாதாரண மக்கள், வியாபாரிகள், முனிவர்கள், வீரர்கள் அனைவரையும் அழைத்து ஏதாவது பந்தயம் கட்டி அவர்களை வீழ்த்துவதே அவனது பொழுது போக்கு. அவனிடம் மூக்கறுபட்டவர்கள் ஏராளம். ஒருநாள் அவன் நகர உலா போகும் போது, பரதேசி தோற்றம் கொண்ட ஒருவரைப் பார்க்கிறான். ஆனால் அவரோ அரசரை கண்டு கொள்ளாமல் நேராக தன பாதையில் நடந்து செல்கிறார். மக்களோ அவரைப் பார்த்து பணிவுடன் வணக்கம் தெரிவிக்கின்றனர். அரசனுக்கு எரிச்சலான எரிச்சல். ஒரு மன்னனை அதுவும் தன்னைப் போன்ற ஒரு மகா மேதாவியைப் பார்த்து உரிய மரியாதை செய்யாமல் போகின்ற இந்த பரதேசி யார் என்று கோபம் அவனுக்கு. இந்த பரதேசியை எப்படியாவத...

நினைத்ததெல்லாம் நடந்து விட்டால்!

வருகிற பட்ஜெட் அறிவிப்புக்கள் குறித்து சந்தையில் ஏற்கனவே ஏகப் பட்ட எதிர்பார்ப்புக்கள் நிலவி வருகின்றன. அரசு ஊழியர் சம்பள உயர்வு, விவசாய கடன் தள்ளுபடி போன்ற பாப்புலர் திட்டங்கள் மக்களிடம் பெற்ற வரவேற்பே காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்றாலும், தொழிற் துறைகளுக்கு காங்கிரஸ் அரசு நிச்சயமாக ஏதாவது செய்யும் என்று பல பங்கு வணிகர்கள் உறுதியாக நம்புகிறார்கள். முக்கியமாக நிறுவன வரி குறைப்புக்கள், நிறுவனங்களுக்கு SEZ போன்ற இதர சலுகைகள், வரி விடுமுறைகள், அரசு நிறுவனங்களை தனியார் மயமாக்கல் அல்லது குறைந்த பட்சம் அரசின் பங்கினை குறைத்தல் மற்றும் அரசின் புதிய முதலீட்டுத் திட்டங்கள், இப்படி சந்தையின் எதிர்ப்பார்ப்புக்கள் எக்கச்சக்கம். ஆனால் அரசு இப்போதிருக்கும் நிதி நிலையில் வரிச் சலுகைகளையும் புதிய முதலீட்டு திட்டங்களையும் அறிவிக்க முடியுமா என்பது சந்தேகமான ஒன்றுதான். அப்படி ஒரு வேளை, ஏற்றுமதி சார்ந்த ஒரு சில துறைகளுக்கு வரிச் சலுகைகள் அரசு வழங்கினாலும் அது வேறு சில சட்டைப் பைகளில் இருந்து எடுக்கப் பட்டதாகவே இருக்கும். மொத்தத்தில் புதிய வரிகள் அல்லது வரி அதிகரிப்பு ஏதும் இல்லாமல் இருந...

நாட்டாஆமை! தீர்ப்ப மாத்தி சொல்லு!

ஊர் பஞ்சாயத்து கூடி இருக்கிறது. ஒரே கூட்டமான கூட்டம். நாட்டாமை ஐயா என்ன தீர்ப்பு தரப் போறாருன்னு ஊரே காத்துக் கிடக்கு. அப்ப அங்க ஒரு ப்ளசர் கார் வருது. அதிலிருந்து ஒரு ஜட்ஜ் ஐயா இறங்கறாரு. என்ன இங்க கூட்டமின்னு அவரோட கார் டிரைவருகிட்ட கேட்கறார். டிரைவர் பதில் சொல்றாரு. "ஐயா! இங்க அண்ணன் தம்பி வழக்குக்கான ஒரு பஞ்சாயத்து நடந்துகிட்டு இருக்கு. இந்த வழக்குல நாட்டாமை என்ன தீர்ப்பு சொல்லப் போறாருன்னு, சுத்தி உள்ள பதினெட்டு பட்டி ஜனங்களும் காத்திருக்காங்க" நகரத்தில் பல்வேறு சிக்கலான வழக்குகளை சந்தித்துள்ள அந்த ஜட்ஜ் ஐயாவுக்கு இது கொஞ்சம் வித்தியாசமா தெரியுது. ' 'கிராமங்கள்ளதான் இந்தியா வாழுதுன்னு ரொம்ப பெரியவங்கள்லாம் சொல்லி இருக்காங்க. நாமும் கொஞ்ச நேரம் இங்க காத்திருந்து அப்படி என்ன தீர்ப்ப இந்த நாட்டாமை கொடுக்கறாரனு பாப்போம்" அப்படின்னு சொல்லிட்டு வழக்க கவனிக்க ஆரம்பிக்கிறாரு. பக்கத்துல நிக்கிற ஒரு ஊர் பெரிசு சொல்லுது, " வழக்கு கொஞ்சம் சிக்கல்தான் சாமி! அண்ணன் தம்பி ரெண்டு பேரு. அவங்க அப்பன் மேலே போயிட்டான். அவனோட சொத்துக்காக ரெண்டு பெரும் அடிச்சுக்கறாங்க. மத்த...

சோர்ந்து போன காளைகளும் பயந்து போன கரடிகளும்!

பல வாரங்களாக தொடரும் காளைப் பாய்ச்சல் சென்ற வாரம், லாப விற்பனை காரணமாக, கொஞ்சம் தடுமாறி உள்ளது. அதே சமயம், சந்தையில் அடிக்கடி நடைபெறும் அதிரடி மாற்றங்கள் கரடிகளையும் மிரளச் செய்துள்ளன. இப்படி எதிரணியில் உள்ள காளைகளும் கரடிகளும் அடுத்து செய்வதறியாது தயங்கி நிற்கும் நிலையில் வரும் வாரம் எப்படி இருக்கும் என்று இங்கு பார்ப்போம். சென்ற வாரம் சந்தைகள் லாப விற்பனை காரணமாக, வீழ்ச்சியுடனேயே துவங்கின. ஏற்கனவே நாம் கூறியிருந்த படி நிபிட்டி 4500-4600 புள்ளிகளுக்கிடையே (லாப விற்பனை காரணமாக) கடுமையான எதிர்ப்பை சந்தித்து வந்தது. சரிதான், இதற்கு மேல் கரடிகள் தங்கள் வேலையை காட்டுவார்கள் என்று பலரும் நினைத்திருந்த நிலையில், இந்தியாவால் 9 சதவீத வளர்ச்சியை எட்ட முடியும் என்ற பிரதமரின் பாராளுமன்ற பேச்சு சந்தையை தலைகீழாக மாற்றியது. மேலும் சத்யம் நிறுவனம் லாபம் சம்பாத்தித்தது மென்பொருள் பங்குகளை உயரத்தில் ஏற்றியது. அதே சமயம், உலக சந்தைகளின் நிலையில்லாத போக்கும், கச்சா எண்ணெயின் விலை உயர்வும் சந்தையை பெரிய அளவுக்கு முன்னேற விடாமல் செய்து விட்டன. தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வந்த இந்திய தொழிற்துறை உற்பத்தி குறிய...

குதிரையும் பறக்கும்!

நம்மில் பலருக்கு, வாழ்வின் பல தருணங்களில் ஒரு வித அவநம்பிக்கை தோன்றுகிறது. அதுவும் முக்கியமாக, சற்று கடினமான இலக்குகளுடன் வாழ்க்கையில் முன்னேற துடிப்பவர்களுக்கு, தம்மால் அந்த லட்சியத்தை வெற்றிகரமாக அடைய முடியுமா என்ற சந்தேகங்கள் அடிக்கடி உருவாகுகின்றன. இலக்கை அடைய செல்ல வேண்டிய தூரம், வழியிலுள்ள இடைஞ்சல்கள், அவற்றோடு போராடி நம்மால் வெற்றி பெற முடியுமா என்ற கேள்விகள் போன்றவை நம்முள் பல்வேறு மன சஞ்சலங்களை ஏற்படுத்துகின்றன. இந்த நிலையில் இருந்து விடுபட ஒரு தன்னம்பிக்கைக் கதை இங்கே! ஒரு நாட்டில் ஒரு அரசன் இருக்கின்றான். ஒரு நாள், அவன் முன்னே ஒரு அண்டை நாட்டவன் கொண்டு வந்து நிறுத்தப் படுகின்றான். அவன் மீது உளவுக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப் படுகின்றான். விசாரணை முடிந்த பின்னர் மரண தண்டனை விதிக்கின்றான் அரசன். மரண தண்டனை விதிக்கப் பட்ட பின்னரும், அந்த அண்டை நாட்டான் துளியும் கவலைப் பட வில்லை. தண்டனை கொடுத்தப் பின்னர் திரும்பி செல்லும் அரசனைப் பார்த்து, "அரசே! குதிரையை பறக்க வைக்கும் மந்திரம் எனக்கு தெரியும். ஒரு வருடம் அவகாசம் எனக்கு கொடுத்தால் உங்கள் பட்டத்துக் குதிரையை பறக்க வைத்துக...

பயங்கரவாதி கசாப்பை தலை குனிய வைத்த சிறுமி!

நவம்பர் மும்பை தாக்குதல் விவகாரத்தில் உயிருடன் பிடிபட்ட ஒரே ஒரு பயங்கரவாதி கசாப். அவன் மீதுள்ள குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இப்போது மும்பையில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்றது. அவன் குற்றவாளி என்பதற்கு போதுமான ஆதாரங்கள் நிறைய இருந்தாலும், அந்நிய நாட்டில் இருந்து வந்து நம் நாட்டின் மீது போர் தொடுப்பதற்கு ஈடான குற்றங்கள் புரிந்திருந்தாலும், அவனை விசாரணை இன்றி தண்டிக்க நமது சட்டத்தில் இடமில்லை. இயற்கை நீதி/நியாயங்களின் மீது நம்பிக்கை மற்றும் மரியாதை வைத்து நமது முன்னோர்கள் இயற்றிய இந்திய சட்ட அமைப்பு, கொடுங்குற்றங்கள் புரிந்த கசாப்புக்கு கூட, தான் ஒரு நிரபராதி என்று நிருபித்து கொள்ள இப்போது ஒரு வாய்ப்பு கொடுத்துள்ளது. இது மட்டுமல்லாமல், இந்திய அரசாங்கமே இவனுக்காக வாதாட ஒரு வழக்கறிஞரையும் நியமித்துள்ளது. இந்த பெருந்தன்மையை தவறாக புரிந்து கொண்ட கசாப், நீதிமன்றத்தில் பல முறை அநாகரிமாக நடந்து கொண்டுள்ளான். இதை நீதிபதிகள் வன்மையாக கண்டித்த போதும், ஒரு வித திமிர் அல்லது அலட்சியத்துடனேயே நீதிமன்ற விசாரணையில் பங்கெடுத்து வந்துள்ளான். போலீஸார் மற்றும் இதர சாட்சிகளின் விசாரணையின் போது கூட...

இப்போது என்ன செய்யலாம்?

சந்தையின் இப்போதைய அதிவேக முன்னேற்றம், முதலீட்டாளர்கள் பலருக்கும் தமது பழைய முதலீடுகள் எல்லாம் நன்கு வளர்ச்சி அடைந்துள்ளன என்று ஒரு பக்கம் சற்று சந்தோசத்தைக் கொடுத்தாலும் மறுபக்கம் இந்த முன்னேற்றத்தில் சரிவர பங்கு கொள்ளாமல் போய் விட்டோமோ என்ற வருத்தத்தையும் கொடுத்திருக்கும். ஒரு சிலருக்கு இது வரை தவற விட்டதை இப்போது பிடிக்க வேண்டும் என்ற வேகம் கூட வந்திருக்கும். அவர்கள் முதலீடு செய்ய புதிய உத்வேகத்துடன் முன் வரும் போது, சந்தைகள் உச்சக் கட்டத்தை அடைந்து வீழ்ச்சி அடைய காத்துக் கொண்டு இருக்கும் என்பது சரித்திரம் சொல்லும் கசப்பான உண்மை. சந்தை இது போன்ற முதலீட்டாளர்களின் மன உணர்வுகளின் அடிப்படையில்தான் இயங்குகிறது. சந்தை உயர்வை காணும் போது பதட்டமடைந்து முன்பின் யோசிக்காமல் முதலீடு செய்ய முன் வருவது. கீழே செல்லும் போது, பயத்தில் விற்று விடுவது அல்லது சந்தை பக்கமே தலை வைத்து படுக்கக் கூடாது என்று சபதம் எடுத்துக் கொள்வது. சமீபத்தில், பங்கு சந்தை நிபுணரான எனது நண்பர் ஒருவர், கடந்த சந்தை உச்சத்தின் போது அவரது மாமனார் தனது 77 ஆம் வயதில் நோய் வாய்ப் பட்ட நிலையில் கூட , பங்குகளில் பெருமளவில் முதல...

அய்! இது கூட நல்லா இருக்கே?

சிறிய வயதில் பலரும் திருடன்-போலீஸ் விளையாட்டு விளையாடுவது உண்டு. 'போலீஸ்' சிறிது நேரம் கண்களை மூடிக் கொள்ள, 'திருடர்கள்' அனைவரும் ஓடி ஒளிந்து கொள்வார்கள். ஒரு "கவுண்ட் டவுனுக்கு" பிறகு "வரட்டா வரட்டா என்று பல முறை கேட்ட பிறகு, இந்த 'போலீஸ்' அந்த திருடர்களை தேட ஆரம்பிப்பார். இந்த கலி காலத்தில் நிஜ போலீஸ்-திருடர்கள் கூட இப்படித்தான் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் போல இருக்கிறது. இன்று படித்த ஒரு செய்தி எனக்கு முதலில் சிரிப்பை வரவழைத்தது. செய்தி இதுதான். "மீண்டுமொருமுறை இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடை பெற வாய்ப்பு இருக்கிறது. இந்தியாவில் தற்போது தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால், இந்தியா வரும் அமெரிக்கர்களுக்கு அந்நாடு எச்சரிக்கை விடுத்துள்ளது." "இந்தியாவில் பல்வேறு குற்றங்களுக்காக (முக்கியமாக தீவிரவாத குற்றங்கள்) சிறையில் அடைக்கப் பட்டு பின்னர் விடுவிக்கப் பட்ட பாகிஸ்தானியர்கள் முப்பது பேரை காண வில்லை. இவர்கள் இந்தியாவில் பல்வேறு தாக்குதல் திட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கலாம் என்று அரசுக்கு சந்தேகம் இர...

நிழலா நிஜமா!

சமீபத்தில் எனது நண்பர் ஒருவருடன் அலுவலக அரசியல் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கும் போது அவரது நண்பர் ஒருவர் கூறிய கருத்தினை என்னிடம் பகிர்ந்து கொண்டார். ''அதாவது, தனது நண்பனை மட்டுமே ஒருவரால் ஏமாற்ற முடியும். மற்றவர்களை ஏமாற்ற முடியாது. காரணம் நண்பன் மட்டுமே ஏமாற்றப் படும் அளவுக்கு இடம் கொடுப்பான். மற்றவர்களுடன் முயற்சி செய்தாலும் ஏமாற்றும் அளவுக்கு நெருங்க முடியாது. அப்படியே ஒரு தடவை ஏமாற்றி விட்டாலும் இரண்டாவது தடவை நம் பக்கமே திரும்ப மாட்டான். நண்பன் மட்டுமே ஏமாந்தாலும் (நண்பனாக தொடரும் வரை) திரும்ப திரும்ப வந்து மீண்டும் ஏமாந்து போவான். ஒரே விஷயம், ஏமாற்றப் படுகிறோம் என்ற விஷயம் அவனுக்கு புரியக் கூடாது. இந்த ஏமாற்றுதல் ஏமாறுதல் எல்லாம் பெரிய விஷயங்களுக்கு மட்டுமல்ல ஓசி சிகரெட், டீ காப்பி டிபன், சினிமா போன்ற சின்னச் சின்னச் விஷயங்களுக்கும் பொருந்தும். '' இப்படி தனது நண்பனையே ஏமாற்றுவது தப்பல்லவா என்று வினவியதற்கு அவர் நண்பர் அளித்த புதியதொரு விளக்கம். "உனது நண்பனை ஏமாற்ற விருப்பமில்லையென்றால் நீ ஏமாற்ற விரும்புவனை உனது நண்பனாக்கிக் கொள். அப்புறம் அவனை ஏமாற்று. எ...