Skip to main content

நினைத்ததெல்லாம் நடந்து விட்டால்!

வருகிற பட்ஜெட் அறிவிப்புக்கள் குறித்து சந்தையில் ஏற்கனவே ஏகப் பட்ட எதிர்பார்ப்புக்கள் நிலவி வருகின்றன. அரசு ஊழியர் சம்பள உயர்வு, விவசாய கடன் தள்ளுபடி போன்ற பாப்புலர் திட்டங்கள் மக்களிடம் பெற்ற வரவேற்பே காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்றாலும், தொழிற் துறைகளுக்கு காங்கிரஸ் அரசு நிச்சயமாக ஏதாவது செய்யும் என்று பல பங்கு வணிகர்கள் உறுதியாக நம்புகிறார்கள். முக்கியமாக நிறுவன வரி குறைப்புக்கள், நிறுவனங்களுக்கு SEZ போன்ற இதர சலுகைகள், வரி விடுமுறைகள், அரசு நிறுவனங்களை தனியார் மயமாக்கல் அல்லது குறைந்த பட்சம் அரசின் பங்கினை குறைத்தல் மற்றும் அரசின் புதிய முதலீட்டுத் திட்டங்கள், இப்படி சந்தையின் எதிர்ப்பார்ப்புக்கள் எக்கச்சக்கம்.

ஆனால் அரசு இப்போதிருக்கும் நிதி நிலையில் வரிச் சலுகைகளையும் புதிய முதலீட்டு திட்டங்களையும் அறிவிக்க முடியுமா என்பது சந்தேகமான ஒன்றுதான். அப்படி ஒரு வேளை, ஏற்றுமதி சார்ந்த ஒரு சில துறைகளுக்கு வரிச் சலுகைகள் அரசு வழங்கினாலும் அது வேறு சில சட்டைப் பைகளில் இருந்து எடுக்கப் பட்டதாகவே இருக்கும். மொத்தத்தில் புதிய வரிகள் அல்லது வரி அதிகரிப்பு ஏதும் இல்லாமல் இருந்தாலே நாமெல்லாரும் அரசுக்கு நன்றி தெரிவிக்க வேண்டி இருக்கும். அப்படித்தான் இருக்கிறது இப்போதைய அரசின் நிதி நிலை. முதல் அரை ஆண்டில் மட்டும் மத்திய அரசு வாங்க திட்டமிருக்கும் கடன் அளவு சுமார் 2,54,௦௦௦000 கோடி ரூபாய். இந்த கடன் அளவு இன்னும் கூட அதிகமாக வாய்ப்புக்கள் உண்டு என்று சந்தை நிபுணர்கள் கருதுகின்றனர்.

எனவே, இந்த பட்ஜெட் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில வரி சீர்திருத்தங்கள், சில சலுகைகள், சில பொது நிறுவனங்களின் பங்கு வெளியீடு, சில வரிகுறைப்புகள் கொண்டதாக இருக்கலாமே தவிர அனைவரின் முக்கியமாக பங்கு வர்த்தகர்களின் அனைத்து எதிர்ப்பார்ப்புக்களையும் பூர்த்தி செய்யும் அளவுக்கு "கனவு பட்ஜெட்" ஆக இருக்க வாய்ப்புக்கள் சற்று குறைவுதான்.

இருந்தாலும் கூட, குறுகிய காலத்தில் பெருமளவு வந்து சேர்ந்துள்ள அந்நிய முதலீடு காரணமாக உருவான ஏராளமான பட்ஜெட் எதிர்பார்ப்புக்களுடன் சந்தை காத்துக் கொண்டிருக்கிறது.

சந்தையின் எதிர்பார்ப்புக்களையும் பூர்த்தி செய்யும் அளவுக்கு மத்திய பட்ஜெட் இருப்பது கடினமான ஒன்று என்றாலும் எந்த பட்ஜெட்டையும் கனவு பட்ஜெட்டாக உருவகப் படுத்தும் பலம் (அந்நிய முதலீடு மட்டும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் பட்சத்தில்) ஊடகத்திற்கும் பங்கு சந்தை நிபுணர்களுக்கும் உண்டு என்பதையும் மறுக்க முடியாது.

மொத்தத்தில் சந்தையின் போக்கை குறுகிய கால நோக்கில் நிர்ணயிக்கப் போவது அந்நிய நிறுவனங்களின் பண வரத்தாக இருக்குமே தவிர பட்ஜெட்டாக இருக்காது. அதே சமயம் அந்நிய நிறுவனங்களின் இந்திய சந்தை முதலீடு உலக சந்தைகளின் போக்கையும் அமெரிக்க டாலரின் ஏற்றத்தாழ்வுகளையும் பெருமளவுக்கு சார்ந்து இருக்கும்.

உலக சந்தைகளைப் பொருத்த வரை, அமெரிக்காவின் பொருளாதார எழுச்சி மிக முக்கிய காரணியாக கருதப் படுகிறது. ஒரு சில பொருளாதார தகவல்கள் அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சி கிட்டத்தட்ட நின்று போய் விட்டது என்பதை வெளிகாட்டினாலும், வேறு சில தகவல்கள் முழுமையான மீட்சிக்கு இன்னும் நீண்ட காலம் பிடிக்கும் என்று உணர்த்துகின்றன. முக்கியமாக கச்சா எண்ணெய், அடிப்படை உலோகங்களின் அதிரடி விலை உயர்வு பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் என்று கருதப் படுகிறது.

அதிரடி பொருளாதார மீட்சியை எதிர்பார்த்த உலக சந்தைகள் அது இப்போதைக்கு சாத்தியமில்லை என்பதை உணர்ந்ததும் தமது வேகத்தை குறைத்துக் கொண்டன. அந்த வேகத்தடையின் எதிரொலி இந்திய சந்தைகளிலும் சென்ற வாரம் உணரப்பட்டது.

அமெரிக்க டாலர் மற்றும் ஜப்பானிய யெந் ஆகியவற்றின் உயர்வு மற்ற சந்தைகளை பெருமளவு பாதித்தது. முக்கியமாக இந்தியா உட்பட வளரும் நாடுகளின் சந்தைகள் பெருமளவு பாதிக்கப் பட்டன. சென்செக்ஸ், நிபிட்டி குறியீடுகளின் முக்கிய பங்கான ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு எதிராக வழங்கப் பட்ட தீர்ப்பு நமது சந்தையின் வீழ்ச்சியை துரிதப் படுத்தியது.

அமெரிக்க பொருளாதாரத்தின் நிலை ஓரளவுக்கு தெளிவான பின்னரே இந்தியா போன்ற நாடுகளில் மீண்டும் பெரிய அளவில் அந்நிய நிறுவனங்கள் முதலீடு செய்யும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. சென்ற வாரம் அமெரிக்க வங்கிகளின் தரவரிசை குறைக்கப் பட்டதின் எதிரொலியாக இந்திய பங்குகள் பெருமளவு வீழ்ந்தது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க அரசு விதிக்க விரும்பும் சந்தை கட்டுப்பாடுகள் மற்றும் அமெரிக்க பொது வங்கியின் வட்டி அதிகரிப்பு முயற்சி ஆகியவை உலக சந்தைகளில் பண போக்குவரத்தை பெருமளவு பாதிக்கும் என்றும் நம்பப் படுகிறது.

மேலும், இந்தியாவில் இந்த வருடத்திற்கான மழை அளவு, பொருளாதார சீர்த்திருத்தங்களில் புதிய அரசின் உறுதியான நிலைப்பாடு மற்றும் இந்திய நிறுவனங்களின் செயல்பாடு மற்றும் லாப உயர்வு ஆகியவற்றின் அடிப்படையிலேயே இனிமேல் புதிய முதலீடுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். மொத்தவிலை பணவீக்கம் எதிர்மறை பகுதிக்குச் (Negative Territory -1.61%) சென்றது நமது பொருளாதாரத்திற்கு கெட்ட செய்தி என்றாலும் பணச்சுருக்க நிலை (Deflationary Environment) இந்தியாவில் ஏற்படாது என்று மத்திய வங்கித் தலைவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில், வர்த்தகர்கள் இப்போதைக்கு எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. ரூபாய் - டாலர் வர்த்தகத்தில் கவனம் வைப்பது நல்லது. நிபிட்டி மீண்டும் ஒருமுறை 4400 அளவுகளை (சென்செக்ஸ் 14725) உறுதியாக கடந்தால் மட்டுமே உயர்வை எதிர்பார்த்து வர்த்தகம் செய்யலாம். வங்கிப் பங்குகளின் மீது ஒரு கண் வைப்பது நல்லது.

சரியும் விலைகள் முதலீட்டாளர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பைக் கொடுக்கின்றன. குறைந்த விலையில் கிடைக்கும் அடிப்படையில் சிறந்த பங்குகளை கொஞ்சம் கொஞ்சமாக சேகரிப்பது நல்லது. சிறப்பாக செயல்படும் அரசு நிறுவன பங்குகளை கவனிக்கலாம். வங்கித் துறைப் பங்குகளை நீண்ட கால அடிப்படையில் சேகரிக்கலாம். இந்திரபிரஸ்தா காஸ் போன்ற எரிவாயு சம்பந்தப் பட்ட பங்குகளை நீண்ட கால நோக்கில் கவனிக்கலாம்.

வரும் வாரத்திற்கான தொழிற்நுட்ப அறிகுறிகள்.

சென்செக்ஸ் - அரண்- 14,500, 14200 & 13,600
சென்செக்ஸ் - எதிர்ப்பு - 14,700 & 15,200

வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

நன்றி.

Comments

//அரசு நிறுவனங்களை தனியார் மயமாக்கல் அல்லது குறைந்த பட்சம் அரசின் பங்கினை குறைத்தல்//

விளங்கீறும்!
Maximum India said…
நன்றி வால்பையன்!

என்னைப் பொறுத்தவரை நன்கு செயல் படும் அரசு நிறுவனங்களின் பங்குகள் சந்தையில் வெளியிடப் பட்டால் சந்தையின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு உதவியாகவே இருக்கும். நம்மைப் போன்ற சிறிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய இப்போதிருக்கும் ஒரு சில பங்குகளின் பின்னே மட்டுமே செல்ல வேண்டிய கட்டாயம் குறையும். மேலும் அரசு நிறுவனங்களின் பங்குகள் வர்த்தகமாகும் பட்சத்தில் அந்த நிறுவனங்களின் ஊழியர்களும் சற்று அதிக (வணிக) பொறுப்புடன் நடந்து கொள்வார்கள் அல்லவா?

நேரடி தனியார்மயமாக்க கொள்கை கூட ஒருவகையில் தவறில்லை என்றாலும் ஸ்பெக்ட்ரம் போன்ற ஊழல்கள் அரசின் நம்பகத்தன்மையை குறைக்கின்றன.

நன்றி.
Thomas Ruban said…
//சரியும் விலைகள் முதலீட்டாளர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பைக் கொடுக்கின்றன. குறைந்த விலையில் கிடைக்கும் அடிப்படையில் சிறந்த பங்குகளை கொஞ்சம் கொஞ்சமாக சேகரிப்பது நல்லது. சிறப்பாக செயல்படும் அரசு நிறுவன பங்குகளை கவனிக்கலாம். வங்கித் துறைப் பங்குகளை நீண்ட கால அடிப்படையில் சேகரிக்கலாம். இந்திரபிரஸ்தா காஸ் போன்ற எரிவாயு சம்பந்தப் பட்ட பங்குகளை நீண்ட கால நோக்கில் கவனிக்கலாம்.//

உங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி.

பருவ மழை பொய்த்து போனது பங்கு சந்தையில் பதிப்பை ஏற்படுத்துமா?

நன்றி.. நன்றி...
Thomas Ruban said…
//நேரடி தனியார்மயமாக்க கொள்கை கூட ஒருவகையில் தவறில்லை என்றாலும் ஸ்பெக்ட்ரம் போன்ற ஊழல்கள் அரசின் நம்பகத்தன்மையை குறைக்கின்றன. //

உண்மைதான் சார்.


தாங்களின் வழிகாட்டுதலுக்கு மிக்க நன்றி.
Maximum India said…
நன்றி தாமஸ் ரூபன்!

//பருவ மழை பொய்த்து போனது பங்கு சந்தையில் பதிப்பை ஏற்படுத்துமா? //

பங்கு சந்தையில் உடனடி பாதிப்பு இருக்குமா என்பதை கணிப்பது கடினம். ஆனால் ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். பொருளாதாரத்தை பங்கு சந்தை சரியாக பிரதிபலிக்க வேண்டும் என்றாலும் அது எப்போது எந்த வகையில் என்பதை காலம்தான் சொல்ல வேண்டும்.

நன்றி.

Popular posts from this blog

வாண வேடிக்கையா? வெறும் புஸ்வாணமா?

பெரிதாக வெடிக்கப் போகிறது அல்லது வண்ண மயமான ஒளிச்சிதறல்கள் பூக்கப் போகின்றன என்றெல்லாம் பெரிதாக நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போது, சில பட்டாசுகள் புஸ்வாணமாக போவதுமுண்டு. தீபாவளி தினத்தன்று நமக்கெல்லாம் சில சமயங்களில் ஏற்பட்டு விடும் இது போன்ற ஒரு அனுபவம் சென்ற வாரம் பங்குசந்தையிலும் ஏற்பட்டது. சென்ற வாரம் நம்மை ஏமாற்றிய புஸ்வாணங்களைப் பற்றி முதலில் பார்ப்போம். முதல் புஸ்வானம் - பாரதி ஏர்டெல் தென் ஆப்பிரிக்க தொலைபேசி நிறுவனமான எம்டிஎன்-னுடான இணைப்பு இல்லையென்றவுடன் முதலில் துள்ளிக் குதித்த பாரதி பங்கு, வெகு சீக்கிரத்திலேயே ஆடி அடங்கி விட்டது. எம்டிஎன்னுடன் இணையாததால் சில அபாயங்கள் நீங்குகின்றன என்று அந்த பங்கினை அதிக விலையில் வாங்கி வைத்து ஆசையுடன் காத்திருந்த பலருக்கு பாரதி ஒரு பெரிய புஸ்வாணமாகவே அமைந்தது. இரண்டாவது புஸ்வானம் - ரிலையன்ஸ் பத்து ஆண்டுகளுக்கு பின்னர் ரிலையன்ஸ் நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு போனஸ் பங்கு கொடுப்பதாக அறிவித்தது. இந்தியாவின் 'நம்பர்-ஒன்' வணிகத் தாளான எகோநோமிக் டைம்ஸ் பத்திரிக்கை, தீபாவளி வாணவேடிக்கை ஆரம்பித்து விட்டதாக முதல் பக்கத்தில் தலைப்ப...

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

இந்தியா தாக்குப் பிடிக்குமா?

இன்றைய உலகப் பொருளாதாரத் தேக்க நிலையில், இந்தியாவால் தாக்குப் பிடிக்க முடியுமா என்பது பற்றி பார்ப்போம். சமீபத்தில் வெளியிடப் பட்ட மத்திய புள்ளியல் (மத்திய அரசு) நிறுவனத்தின் மதிப்பீட்டின் படி இந்தியப் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 7.1 சதவீதம் வளர்ச்சியுறும் என்று தெரிகிறது. இது சரியாக இருக்கும் பட்சத்தில் உலகிலேயே இரண்டாவதாக வேகமாக வளர்ச்சியுறும் நாடு இந்தியாவாகத்தான் இருக்கும் (சீனா முதலாவது). சென்ற ஆண்டில் ஒன்பது சதவீதம் வளர்ச்சி பெற்றிருந்த இந்தியப் பொருளாதாரம் செப்டம்பர் 2008 வரையிலான முதல் அரையாண்டில் 7.80% வளர்ச்சிப் பெற்றிருந்தது. பொதுவாகவே பண்டிகைக் காலமாக கருதப் படுகிற இரண்டாவது அரையாண்டே தொழிற் துறையில் அதிக வளர்ச்சியைக் காட்டும் என்றாலும் இந்த முறை இந்தியத் தொழில் துறை பெரும் தேக்க நிலையில் இருந்து வந்திருக்கிறது என்பது கவனிக்கத் தக்கது. இந்திய தொழிற் வளர்ச்சி கடந்த இரு மாதங்களாக மிகவும் குறைந்து காணப் படுவதாலும் ஏற்றுமதியோ இறங்குமுகத்தில் இருப்பதாலும் இந்திய அரசாங்கம், மார்ச் 2009 வரையிலான நிதி ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் நமது பொருளாதாரம் குறைந்த வளர்ச்சியே (6.30%) இரு...