
இயற்கை நீதி/நியாயங்களின் மீது நம்பிக்கை மற்றும் மரியாதை வைத்து நமது முன்னோர்கள் இயற்றிய இந்திய சட்ட அமைப்பு, கொடுங்குற்றங்கள் புரிந்த கசாப்புக்கு கூட, தான் ஒரு நிரபராதி என்று நிருபித்து கொள்ள இப்போது ஒரு வாய்ப்பு கொடுத்துள்ளது. இது மட்டுமல்லாமல், இந்திய அரசாங்கமே இவனுக்காக வாதாட ஒரு வழக்கறிஞரையும் நியமித்துள்ளது. இந்த பெருந்தன்மையை தவறாக புரிந்து கொண்ட கசாப், நீதிமன்றத்தில் பல முறை அநாகரிமாக நடந்து கொண்டுள்ளான். இதை நீதிபதிகள் வன்மையாக கண்டித்த போதும், ஒரு வித திமிர் அல்லது அலட்சியத்துடனேயே நீதிமன்ற விசாரணையில் பங்கெடுத்து வந்துள்ளான்.
போலீஸார் மற்றும் இதர சாட்சிகளின் விசாரணையின் போது கூட, ஒரு வித அலட்சிய சிரிப்புடனேயே பதில் தந்துள்ளான். இப்படிப் பட்டவனை நேற்றைய விசாரணையில் (மும்பை தாக்குதலில் பாதிக்கப் பட்ட) ஒரு பத்து வயது சிறுமியும் அவளது தந்தையும் கசாப்பை தலை குனிய வைத்துள்ளனர்.
மும்பை ரயில் நிலையத்தில், கசாப் குண்டுகளால் பாதிக்கப் பட்டவர்களில் தேவிகா என்ற இந்த சிறுமியும் ஒருத்தி. காலில் பாய்ந்த கசாப்பின் துப்பாக்கி குண்டு அவளை நிரந்தரமாக ஊனமாக்கி விட்டது. அந்த சிறுமியினை சாட்சியாய் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றும் அது பரிதாபத்தை வரவழைக்கும் ஒரு முயற்சியாக இருக்கும் என்று கசாப்பின் வழக்கறிஞரின் வாதிட்டதை மீறி, அவளது சாட்சியத்தை நீதி மன்றம் ஏற்றுக் கொண்டது.
நடக்க முடியாமல் நடந்து வந்த அந்த சிறுமி இவனை சரியாக அடையாளம் காட்டினாள். அந்த சிறுமியை வெகுவாக குழப்ப முயன்ற கசாப் வழக்கறிஞரின் தந்திரங்கள் பலிக்க வில்லை. "பொய் சொன்னால் கடவுள் தண்டிப்பார்" என்றும் அந்த சிறுமி வழக்கறிஞருக்கு பதில் அளித்துள்ளாள்.
அந்த சிறுமி கசாப்பை நேரடியாக பார்த்து கை நீட்டிய போது, பொதுவாகவே அலட்சிய நோக்குடன் காணப் படும் கசாப் தலை குனிந்து, கைகளை பிசைய ஆரம்பித்ததாக பத்திரிக்கை செய்திகள் கூறுகின்றன. அந்த சிறுமி சாட்சியத்தை முடித்து வெளியே செல்லும் வரை அவன் தலை நிமிர வில்லை என்றும் கூறப் படுகிறது.
இது மட்டுமல்ல, மகளின் நிலையைப் பார்த்து மனம் உடைந்து போயுள்ள, அவளின் தந்தை "இந்த நாயமகன் எனது மகளின் காலை மட்டும் உடைக்க வில்லை. அவளது வாழ்க்கையையும் உடைத்து விட்டான். தயவு செய்து இவனை தூக்கில் இடுங்கள்" என்று ஆவேசமாக கதற, இந்த முறை கசாப் மட்டுமல்ல, அவனது வழக்கறிஞரும் தடுமாறி போய் விட்டாராம்.
தந்தையை சமாதான படுத்த முயன்ற நீதிபதியிடம், அவர் கூறினாராம், "அடிபட்டவனுக்கு மட்டும்தான் அதன் உண்மையான வலி தெரியும். (இந்த வாசகத்தை பொன்னால் பொரித்து நமது நாட்டில் ரொம்ப பெரிய பொறுப்பில் இருந்து கொண்டு பொதுமக்கள் பயங்கரவாதத்தால் படும் பாடு பற்றி அலட்டிக் கொள்ளாமல் இருப்பவர்கள் எல்லாருக்கும் அனுப்ப வேண்டும்), இவனுக்கு தாய் தந்தை யாரும் இல்லையா?"
அரசு தரப்பு சாட்சிகள் எல்லாரையும் தனது குறுக்கு கேள்விகளால் மடக்கி தனது வக்கீல் கடமையை செவ்வனே செய்து வரும் வழக்கறிஞர் அப்பாஸ் கஸ்மி, இந்த முறை இவரிடம் நேரடியாக எந்த கேள்வியும் கேட்க வில்லையாம்.
சட்டங்களாலும் சட்டக் காவலர்களாலும் செய்ய முடியாததை ஒரு சிறுமியும் அவளது தந்தையும் செய்து காட்டி இருக்கிறார்கள்.
சட்டமும் அதை நடைமுறை படுத்தும் அமைப்புக்களும் வலுவானவைதான்.
ஆனால் உண்மையும் நியாமும் அதை விட ரொம்ப வலிமையானவை
இவை எல்லாவற்றையும் விட அப்பாவி மக்களின் வேதனைக் கண்ணீர் மிகவும் பலமானது.
அதற்கு முன்னே எப்படிப் பட்ட முரட்டு தீவிரவாதியும் தலை நிமிர்ந்து நிற்க முடியாது.
நன்றி.
12 comments:
www.Tamilers.com
You Are Posting Really Great Articles... Keep It Up...
We have launched a Tamil Bookmarking site called "www.Tamilers.com" which brings more traffic to all bloggers
தமிழர்ஸ்.காம் தளத்தில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.
அழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள்
தமிழர்ஸின் சேவைகள்
இவ்வார தமிழர்
நீங்களும் தமிழர்ஸ் டாட்காமின் இவ்வார தமிழராக தேர்ந்தெடுக்கப்படலாம்... இவ்வார தமிழர் பட்டை உங்கள் தளத்தின் டிராபிக்கை உயர்த்த சரியான தேர்வு.
இவ்வார தமிழராக நீங்கள் தேர்ந்து எடுக்கப்படும் போது, அனைத்து பதிவர்களின் பதிவுகளிலும் மின்னுவீர்கள். இது உங்களது பதிவுலக வட்டத்தை தாண்டி உங்களுக்கு புதிய நண்பர்களையும், டிராபிக்கையும் வர வைக்கும்
இவ்வார தமிழர் பட்டையை இது வரை 40 பிரபல பதிவர்கள் இணைத்துள்ளார்கள் நீங்களும் சுலபமாக நிறுவலாம்.
இவ்வார தமிழரை இணைக்க இந்த சுட்டியை சொடுக்குங்கள்
இணைத்துவிட்டு எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அல்லது ஒரு பின்னுட்டம்
சிறந்த தமிழ் வலைப்பூக்கள்
Add your Blog to Top Tamil Blogs - Powered by Tamilers.
It has enhanced ranking system. It displays all stas like Hits Today, Rank, Average hits, Daily status, Weekly status & more.
This Ranking started from this week.So everyone has the same start line. Join Today.
"சிறந்த தமிழ் வலைப்பூக்கள்" தளத்தில் உங்கள் பிளாக்கையும் இணைத்து வலைப்பூவிற்கான வருகையை அறிந்து கொள்வதுடன், உங்கள் வலைப்பூவின் ரேங்கையும் தெரிந்து கொள்ளுங்கள்.
இநத வாரம் தான் இந்த ரேங்கிங் தொடங்கியது, எனவே எல்லா பிளாக்கும் ஒரே கோட்டில் இருந்து ஆரம்பம் ஆகிறது. உடனே இணையுங்கள்
சிறந்த வலைப்பூக்களில் சேர இந்த சுட்டியை சொடுக்குங்கள்
இன்னும் பல சேவைகள் வரப்போகுது, உடனே இணைத்துக்கொள்ளுங்கள். இது உலக தமிழர்களக்கான தளம்.
உங்கள் ஆலோசணைகளும் கருத்துகளும் services@tamilers.com என்ற மின்னஞ்சலுக்கு வரவேற்க்க படுகின்றன.
நன்றி
உங்கள் ஆதரவு, அன்பு மற்றும் தமிழுடன்
தமிழர்ஸ்
தமிழர்ஸ் பிளாக்
கொலைக்கு கொலை சரியான தண்டனை என்று நினைத்தாலும், இம்மாதிரியான வெறி பிடித்த மிருங்கள் உயிரோட இருப்பது மேலும் மிருங்கங்கள் உருவாக வழிவகுக்கும்!
சங்கோஜப்படாமல் இஸ்லாமிய தண்டனை போல் நடுரோட்டில் கல்லால் அடித்து கொல்ல வேண்டியது தான்!
"அடிபட்டவனுக்கு மட்டும்தான் அதன் உண்மையான வலி தெரியும். (இந்த வாசகத்தை பொன்னால் பொரித்து நமது நாட்டில் ரொம்ப பெரிய பொறுப்பில் இருந்து கொண்டு பொதுமக்கள் பயங்கரவாதத்தால் படும் பாடு பற்றி அலட்டிக் கொள்ளாமல் இருப்பவர்கள் எல்லாருக்கும் அனுப்ப வேண்டும்)"
1000000000000000000000000000000000000000000% true....
"அடிபட்டவனுக்கு மட்டும்தான் அதன் உண்மையான வலி தெரியும். (இந்த வாசகத்தை பொன்னால் பொரித்து நமது நாட்டில் ரொம்ப பெரிய பொறுப்பில் இருந்து கொண்டு பொதுமக்கள் பயங்கரவாதத்தால் படும் பாடு பற்றி அலட்டிக் கொள்ளாமல் இருப்பவர்கள் எல்லாருக்கும் அனுப்ப வேண்டும்)"
1000000000000000000000000000000000000000000% true....
fantastic !! brought tears to my eyes!!!
கருத்துரைக்கு நன்றி வால்பையன்!
//கொலைக்கு கொலை சரியான தண்டனை என்று நினைத்தாலும், இம்மாதிரியான வெறி பிடித்த மிருங்கள் உயிரோட இருப்பது மேலும் மிருங்கங்கள் உருவாக வழிவகுக்கும்!
சங்கோஜப்படாமல் இஸ்லாமிய தண்டனை போல் நடுரோட்டில் கல்லால் அடித்து கொல்ல வேண்டியது தான்!//
மும்பை தாக்குதல் போன்ற தீவிரவாத தாக்குதல்களால் பாதிக்க பட்ட அப்பாவி மக்கள் படும் வேதனைகளை பற்றி அறிய வரும்போதெல்லாம் எனக்கும் இப்படித்தான் தோன்றுகிறது.
நன்றி.
கருத்துரைக்கு நன்றி ராமன்!
நன்றி ஆண்டிகார்சியா!
மீண்டும் ஒரு நல்ல பதிவு.
மும்பை விஷயங்களை மட்டுமே எழுதுவது என்று முடிவா ?
இன்னும் ஒன்று: குறிப்பிட்ட சிறுமியை விசாரித்த அன்று, இன்னும் ஒரு சாட்சியும் விசாரிக்கப்பட்டார் அன்று நினைக்கிறேன். அவர் ஒரு இஸ்லாமியர். அவரும் குண்டு, அல்லது வெடிகுண்டில் பாதிக்கப் பட்டவர். அவருடைய வாக்குமூலத்திற்கும் தேவையான முக்கியத்துவம் கொடுத்து, அதை வெளியிட்டிருக்க வேண்டும். இதை செய்ய மீடியா தவறி விட்டது. அதாவது, இஸ்லாமிய பயங்கரவாதிகளின் செயலினால் அனைத்து தரப்பினரும், குறிப்பாக இஸ்லாமியர்களுக்கும் கஷ்டமே, நஷ்டமே என கோடிட்டு kaattiyirukkum. தன முன்னால் ஒரு பயங்கர வாதத்திற்கு, துணை போகும் செயல்கள் நடந்தால், adhai கண்டும் காணாது இருக்கிறார்களோ என karudhappadum அம்மத நண்பர்கள் கண்ணை இது போன்ற விஷயங்கள் திறக்கும் என எதிர்பார்க்கலாம்.
அன்புள்ள நெற்குப்பை தும்பி ஐயா!
//மீண்டும் ஒரு நல்ல பதிவு. //
வெகுநாட்களுக்கு பிறகு வந்திருக்கிறீர்கள். மிகவும் சந்தோசமாக உள்ளது. உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.
//மும்பை விஷயங்களை மட்டுமே எழுதுவது என்று முடிவா ?//
அப்படி இல்லை. இங்கு நடைபெறும் விஷயங்கள் எளிதில் கண்களில் படுகின்றன. அவ்வளவே. கொல்கத்தா பற்றி அறிந்து கொள்ள கூட மிகவும் ஆவலாக உள்ளேன். நீங்கள் ஏன் அங்குள்ள சமூக, அரசியல் மற்றும் பொருளாதார சூழல் பற்றி பதிவிடக் கூடாது? அந்த பதிவுகள் என்னைப் போன்று அந்தப் பக்கம் வர வாய்ப்பில்லாதவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.
//இன்னும் ஒன்று: குறிப்பிட்ட சிறுமியை விசாரித்த அன்று, இன்னும் ஒரு சாட்சியும் விசாரிக்கப்பட்டார் அன்று நினைக்கிறேன். அவர் ஒரு இஸ்லாமியர். அவரும் குண்டு, அல்லது வெடிகுண்டில் பாதிக்கப் பட்டவர். அவருடைய வாக்குமூலத்திற்கும் தேவையான முக்கியத்துவம் கொடுத்து, அதை வெளியிட்டிருக்க வேண்டும். இதை செய்ய மீடியா தவறி விட்டது. அதாவது, இஸ்லாமிய பயங்கரவாதிகளின் செயலினால் அனைத்து தரப்பினரும், குறிப்பாக இஸ்லாமியர்களுக்கும் கஷ்டமே, நஷ்டமே என கோடிட்டு kaattiyirukkum. தன முன்னால் ஒரு பயங்கர வாதத்திற்கு, துணை போகும் செயல்கள் நடந்தால், adhai கண்டும் காணாது இருக்கிறார்களோ என karudhappadum அம்மத நண்பர்கள் கண்ணை இது போன்ற விஷயங்கள் திறக்கும் என எதிர்பார்க்கலாம்//
சரியான கருத்து. இது போன்ற பல விஷயங்களில் நம்மில் பலருக்கும் ஒருவித "Selective Amnesia" இருக்கிறது என்று நினைக்கிறேன்.
பயங்கரவாதம் என்பது ஒரு கொடிய வெறி பிடித்த நாய். அதற்கு மதம், இனம், நாடு, மொழி என்றெல்லாம் வித்தியாசம் இல்லை. இது நம் ஊர் நாய் அல்லது வீடு நாய் என்றெல்லாம் கருணையோடு பார்த்துக் கொண்டிருந்தால் அது நம்மையும் ஒரு நாள் கடித்து விடும். ஒன்று முறையான வைத்தியம் பார்க்க வேண்டும் அல்லது சுட்டுத் தள்ள வேண்டும்.
நன்றி.
// இவை எல்லாவற்றையும் விட அப்பாவி மக்களின் வேதனைக் கண்ணீர் மிகவும் பலமானது. //
உலகத்துக்கே தெரியும் தாக்குதலுக்கு காரணம் யாருன்னு இன்னும் ஏன் விசாரனை அவனுக்கு பாதுகாப்புக்காவுர செலவு ஒன்னும் சொல்லுரதுக்கில்லை
என்ன நீதியோ தண்டனையோ
அன்புள்ள கார்த்திக்!
//உலகத்துக்கே தெரியும் தாக்குதலுக்கு காரணம் யாருன்னு இன்னும் ஏன் விசாரனை அவனுக்கு பாதுகாப்புக்காவுர செலவு ஒன்னும் சொல்லுரதுக்கில்லை
என்ன நீதியோ தண்டனையோ//
உண்மைதான். ஆனால் என்ன செய்ய? முறை என்று ஒன்று இருக்கிறதல்லவா? ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம். ஆனால் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப் படக் கூடாது என்ற கொள்கையை இந்தியா பின் பற்றுகிறது அல்லவா? இதனால், நிரபராதிகள் தப்பிக்கிறார்களா என்று தெரியாது. ஆனால் பல குற்றவாளிகள் தப்பித்துக் கொண்டே இருக்கிறார்கள். :-(
நன்றி.
Post a Comment