The Art of Appraisal
-
Big Boss: This year your performance was good, excellent and outstanding.
So, your rating is "average".
Kumar: What? How come 'average'?
Big Boss: Becau...
பிரிவுகள்
- சமூகம் (121)
- செய்தியும் கோணமும் (104)
- பொருளாதாரம் (101)
- பங்கு சந்தை (98)
- அரசியல் (74)
- பயணங்கள்/அனுபவங்கள் (40)
- மனவியல் (40)
- பங்கு சந்தை வெற்றி பயணம் - ஒரு வழித் துணை (15)
- கதை (9)
- நகைச்சுவை (7)
- அறிவியல் (5)
- திரைவிமர்சனம் (4)
- சட்டம் (3)
- நூலகம் (3)
- கிறுக்கல்கள் (1)
Friday, June 5, 2009
அய்! இது கூட நல்லா இருக்கே?
சிறிய வயதில் பலரும் திருடன்-போலீஸ் விளையாட்டு விளையாடுவது உண்டு. 'போலீஸ்' சிறிது நேரம் கண்களை மூடிக் கொள்ள, 'திருடர்கள்' அனைவரும் ஓடி ஒளிந்து கொள்வார்கள். ஒரு "கவுண்ட் டவுனுக்கு" பிறகு "வரட்டா வரட்டா என்று பல முறை கேட்ட பிறகு, இந்த 'போலீஸ்' அந்த திருடர்களை தேட ஆரம்பிப்பார்.
இந்த கலி காலத்தில் நிஜ போலீஸ்-திருடர்கள் கூட இப்படித்தான் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் போல இருக்கிறது.
இன்று படித்த ஒரு செய்தி எனக்கு முதலில் சிரிப்பை வரவழைத்தது.
செய்தி இதுதான்.
"மீண்டுமொருமுறை இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடை பெற வாய்ப்பு இருக்கிறது. இந்தியாவில் தற்போது தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால், இந்தியா வரும் அமெரிக்கர்களுக்கு அந்நாடு எச்சரிக்கை விடுத்துள்ளது."
"இந்தியாவில் பல்வேறு குற்றங்களுக்காக (முக்கியமாக தீவிரவாத குற்றங்கள்) சிறையில் அடைக்கப் பட்டு பின்னர் விடுவிக்கப் பட்ட பாகிஸ்தானியர்கள் முப்பது பேரை காண வில்லை. இவர்கள் இந்தியாவில் பல்வேறு தாக்குதல் திட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கலாம் என்று அரசுக்கு சந்தேகம் இருக்கிறது. இவர்களை இந்திய போலீஸ் வலை வீசி தேடி கொண்டிருக்கிறார்கள்"
எனக்கு வந்த சந்தேகங்கள் சில.
இவர்களை ஏன் வலை வீசி கஷ்டப் பட்டு தேட வேண்டும்? சிறையில் இருந்து விடுவிக்கும் போதே எளிதாக பிடித்திருக்கலாமே?
அப்படி ஒருவேளை, இவர்களால் தீவிரவாத தாக்குதல் நடத்தப் படும் என்ற சந்தேகம் இருந்தால் ஏன் இவர்களை விடுவிக்க வேண்டும்? விடுவிக்காமலே இருந்திருக்கலாமே?
அப்படி விடுவித்தாலும், அவர்களை ஏன் இந்தியாவில் வைத்து விடுதலை செய்ய வேண்டும்? ஏன் அவர்களை நேரடியாக பாகிஸ்தானில் கொண்டு சென்று விட்டு விட்டு வந்திருக்கக் கூடாது?
ஒரு வேளை, இந்தியாவில் பல போலீஸ்காரர்கள் தொந்தியும் தொப்பையுமாக இருப்பதால், அவர்கள் ஓடியாடி வேலை செய்யட்டும் என்று இப்படி "திருடன்-போலீஸ்" விளையாட்டு நடத்தப் படுகிறதா?
மும்பை தாக்குதலின் முக்கிய குற்றவாளியை பாகிஸ்தானில் விடுவித்ததற்கு கூச்சல் போடும் அரசியல்வாதிகளுக்கும் ஊடகங்களுக்கும் ஒரு வேண்டுகோள்.
நம் வீட்டை முதலில் ஒழுங்குப் படுத்துங்கள்! அப்புறம் அடுத்தவருக்கு அறிவுரை செய்யுங்கள்!
சிறிய வயதில் எனக்கு பெரியவர்கள் கொடுத்த அறிவுரை இது!
"பார்த்து விளையாடு! ஓவர் விளையாட்டு வினையாகி விடப் போகிறது"
அதே அறிவுரையை முக்கியப் பொறுப்பிலுள்ள ரொம்ப ரொம்ப பெரியவர்களுக்கு இந்த சிறியவன் கொடுக்க விரும்புகிறேன்.
நன்றி.
Labels:
செய்தியும் கோணமும்
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
//இந்தியாவில் பல போலீஸ்காரர்கள் தொந்தியும் தொப்பையுமாக இருப்பதால், அவர்கள் ஓடியாடி வேலை செய்யட்டும் என்று இப்படி "திருடன்-போலீஸ்" விளையாட்டு நடத்தப் படுகிறதா?//
இது தான் காரணமாக இருக்கும்!
இடையில் சாகும் அப்பாவி மனிதர்கள் சாதரண காய்கள், அதனால் அவர்களை பற்றி அவர்களுக்கு கவலையில்லை!
நன்றி வால்பையன்!
//இடையில் சாகும் அப்பாவி மனிதர்கள் சாதரண காய்கள், //
சரிதான். அரசியல் சதுரங்கத்தில் வெட்டப் படும் காய்களைப் பற்றி யாரும் கவலைப் படுவதில்லை.
நன்றி.
யாராவது ரண்டு பேர் பணத்த வாங்கிட்டு இந்தமாதிரி ரீலீஸ் செய்வாங்காலா இருக்கும் !
அன்புள்ள கார்த்திக்!
//யாராவது ரண்டு பேர் பணத்த வாங்கிட்டு இந்தமாதிரி ரீலீஸ் செய்வாங்காலா இருக்கும் //
ரண்டு பேர் மட்டும் இருந்தால் நன்றாக இருக்கும். ஆனால் ரண்டு பேர் மட்டும்தானா என்பது இப்போதைய கேள்வி.
நன்றி.
Post a Comment