Thursday, November 26, 2009

கடனில் தத்தளிக்கும் துபாய்!

பொதுவாக ஒரு வளம் கொழிக்கும் நாடாக அறியப் படும் ஐக்கிய அரேபிய கூட்டமைப்பின் (UAE) முக்கிய அங்கமான துபாய் இன்றைய தேதியில் பெரிய கடன் சிக்கலில் தத்தளித்து வருகின்றது தெரியுமா? இந்த தகவல் முதலில் எனக்குக் கூட மிகவும் ஆச்சரியமாக இருந்தது. பின்னர் சற்று ஆழமாக ஆய்ந்த போது, கிடைத்த சில தகவல்கள் பகிர்வுக்காக இங்கே.

ஐக்கிய அரேபிய கூட்டமைப்பில் மொத்தம் ஏழு நாடுகள் உள்ளன. அவற்றில் துபாய் மிகப் பெரிய "மாநகர" நாடாகும். துபாய் எண்ணெய் வளம் மிக்க அரேபிய பகுதியில் இருந்தாலும் அதனது பொருளாதாரத்தில் எண்ணெய் வருவாய் மிகக் குறைவானதேயாகும். மத்திய கிழக்கு நாடுகளின் முக்கிய வணிக நகரமான துபாயின் பெரும்பாலான வருமானம் வணிக நடவடிக்கைகளின் வாயிலாகவே வருகின்றது.

இந்நிலையில் வணிக மற்றும் சுற்றுலா மையமான "துபாய் உலகம்" அமைப்பதற்காக சுமார் 80 பில்லியன் டாலர் (3,60,000 கோடி ருபாய்) கடனாக துபாய் அரசு நிறுவனங்களால் பெறப் பட்டது. கடந்த ஆண்டின் பொருளாதார சிக்கல் ரியல் எஸ்டேட் விலைகளை பாதிக்கும் மேல் குறைத்து விட, "துபாய் உலகம்" தான் பெற்ற கடனில் சுமார் 59 பில்லியன் டாலர் அளவுக்கு இன்று வரை திருப்பி செலுத்த முடியவில்லை என்று சொல்லப் படுகிறது. எனவே கடன் திருப்பி செலுத்துவதை தள்ளி போட துபாய் அரசு முடிவு செய்திருப்பதாகவும் சொல்லப் படுகிறது. கடந்த 2001 இல் கடன் திருப்பி செலுத்த முடியாமல் போன அர்ஜென்டினா அரசாங்கத்திற்கு பிறகு ஒரு அரசாங்கம் தனது கடனை திருப்பி செலுத்த முடியாமல் போவது இதுதான் முதல் முறை என்றும் சொல்லப் படுகிறது.

தனது ஒட்டு மொத்த பொருளாதாரத்தை விட (GDP is about $37 billion) அதிக கடன் சுமையை தாங்கி வரும் துபாய் அரசாங்கம் "திவால்" ஆகி விடுமோ என்ற அச்சம் இன்றைய தேதியில் உலக சந்தைகளில் எழுந்துள்ளது. இதன் காரணமாக அரசாங்கங்களின் கடன் பத்திரங்களின் மீதான "கடன் உத்திரவாத பிணையங்கள்" (Credit Default Swaps) விலை உயர்ந்துள்ளன. முதலீட்டாளர்களின் நம்பிக்கை மீண்டும் ஒருமுறை அடி வாங்கியுள்ளது. அதனால் டாலர் மதிப்பு பெருமளவுக்கு உயர்ந்து மற்ற கரன்சிகளின் மதிப்பு குறைந்துள்ளது. பங்கு சந்தைகளும் பெரிய வீழ்ச்சி அடைந்துள்ளன.

ஆனைக்கும் அடி சறுக்கும் என்பார்கள். இங்கே ஆயிலையும் வழுக்கி விழச் செய்தது "அளவுக்கு மீறிய ஆசைதானே"?

நன்றி.

டிஸ்கி: பிளாக்கர் தளத்தின் சில தொழிற்நுட்ப கோளாறுகளின் காரணமாக என்னுடைய "பதில் பின்னூட்டங்களை" பதிய முடியவில்லை. எனவே பின்னூட்ட நண்பர்கள் பொறுத்தருளவும்.

11 comments:

வடுவூர் குமார் said...

தாங்கிப்பிடிக்க அங்கு பல தேசக் கைகள் இருக்கு, எவ்வளவு தூரத்துக்கு தாக்குப்பிடிப்பார்கள் என்பது தான் கேள்வி.

Maximum India said...

நன்றி குமார்!

//தாங்கிப்பிடிக்க அங்கு பல தேசக் கைகள் இருக்கு, எவ்வளவு தூரத்துக்கு தாக்குப்பிடிப்பார்கள் என்பது தான் கேள்வி.//

உண்மைதான் குமார். ஏற்கனவே அபுதாபி தேசிய வங்கி 4 பில்லியன் டாலர் அளவு கடன் உதவி செய்துள்ளதாக கூறுகிறார்கள். அதே சமயம், இந்த நிகழ்வு உலக சந்தைகளில் ஒருவித அவநம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

நன்றி.

குப்பன்.யாஹூ said...

BUILDING STRONG, BASEMENT WEEK,

NEENGA DUBAI YAA ABIDHAABIYAA,

Unknown said...

இறைவனனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாகட்டும். முதலில் இங்கே நான் ஒன்றை கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன். துபாய் போல் உலகில் போக்கிரித்தனம், பொருக்கித்தனம், கலாச்சார சீரழிவு நிறைந்த நாட்டை உலகில் பார்க்க முடியாது. 100ல் 95 சதவிதத்தினர் மிக மிக மோசமானவர்களாகவே உள்ளனர். அதாவது அங்கே வேலை செய்யும் இந்திய, பாகிஸ்தான் மக்களையும் சேர்த்துதான் சொல்கிறேன். இறைவனின் கோப பார்வையில் எப்படி அமெரிக்கா சீரழிகிறதோ அவ்வாறே இறைவன் நாடினால் துபாயும் மிக விரைவிலே அழியும். இறைவனனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாகட்டும்.

அது சரி(18185106603874041862) said...

நல்லதொரு இடுகை...ஆனால் சில விஷயங்கள்...

எமிரேட்ஸில் பெரிய நாடு துபாய் அல்ல...அபு தாபி என்பதே சரி...

துபாய் உலகம் என்பது சுற்றுலா மையம் அல்ல...அது அந்த நாட்டின் ஒரு அரசு நிறுவனத்தின் பெயர்...இன்டியன் ரயில்வேஸ் என்பது போல....அந்த நிறுவனம் வாங்கிய கடனை தான் திருப்பி கட்டமுடியவில்லை...(அரசின் கடன் அல்ல)..ஆனால், அது அரசு நிறுவனம் என்பதால், அரசே கடனை கட்ட முடியவில்லை என்று அர்த்தமாகிறது...

அர்ஜென்டினாவுக்கு அப்புறம் உக்ரைன், ஐஸ்லாண்ட் என்று சில நாடுகள் டிஃபால்ட் செய்திருக்கின்றன...அவர்களுக்கு பிற நாடுகள் ரகசியமாகவும், வெளிப்படையாகவும் உதவி செய்தது தெரிந்திருக்கலாம்...

துபாயின் CDS Spread அதிகரிக்க காரணம் துபாயின் சமீபத்திய பிரச்சினை மட்டுமல்ல...துபாய் எமிரேட்ஸின் ஒரு அங்கம்...அதனால், துபாய்க்கு அபு தாபி உதவி செய்யும் என்ற நம்பிக்கை இருந்தது...ஆனால், இந்த நிகழ்வில் அபு தாபி உதவி செய்யவில்லை....அதனால், துபாயின் ரிஸ்க் அதிகமாகிறது....Its all political too....

அது சரி(18185106603874041862) said...

//
Mohamed Bismillah said...
இறைவனனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாகட்டும். முதலில் இங்கே நான் ஒன்றை கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன். துபாய் போல் உலகில் போக்கிரித்தனம், பொருக்கித்தனம், கலாச்சார சீரழிவு நிறைந்த நாட்டை உலகில் பார்க்க முடியாது. 100ல் 95 சதவிதத்தினர் மிக மிக மோசமானவர்களாகவே உள்ளனர். அதாவது அங்கே வேலை செய்யும் இந்திய, பாகிஸ்தான் மக்களையும் சேர்த்துதான் சொல்கிறேன். இறைவனின் கோப பார்வையில் எப்படி அமெரிக்கா சீரழிகிறதோ அவ்வாறே இறைவன் நாடினால் துபாயும் மிக விரைவிலே அழியும். இறைவனனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாகட்டும்.
//

This post is related to an economical event...

Seriously, do you have to talk about your religious beliefs here too????

What god has to do with all these?? Come on, dont make your god cheap!!

Maximum India said...

இறைவனனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாகட்டும். முதலில் இங்கே நான் ஒன்றை கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன். துபாய் போல் உலகில் போக்கிரித்தனம், பொருக்கித்தனம், கலாச்சார சீரழிவு நிறைந்த நாட்டை உலகில் பார்க்க முடியாது. 100ல் 95 சதவிதத்தினர் மிக மிக மோசமானவர்களாகவே உள்ளனர். அதாவது அங்கே வேலை செய்யும் இந்திய, பாகிஸ்தான் மக்களையும் சேர்த்துதான் சொல்கிறேன். இறைவனின் கோப பார்வையில் எப்படி அமெரிக்கா சீரழிகிறதோ அவ்வாறே இறைவன் நாடினால் துபாயும் மிக விரைவிலே அழியும். இறைவனனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாகட்டும்.

அன்புள்ள முஹம்மத் பிஸ்மில்லா!

உங்கள் கருத்துக்களை மதிக்கிறேன். அதே சமயம், இந்த பிரச்சினை சாமியால் வந்தது என்று சொல்வதை விட ஆசை மிக்க ஆசாமிகளால் வந்தது என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

"உளமார்ந்த தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள்"

நன்றி.

Maximum India said...

நன்றி குப்பன் யாகூ!

//BUILDING STRONG, BASEMENT WEEK,

NEENGA DUBAI YAA ABIDHAABIYAA,//

நான் இந்தியா! இங்கே பில்டிங்கும் வீக். பேஸ்மென்டும் வீக்!

:)

நன்றி.

Thomas Ruban said...

பதிவுக்கு நன்றி சார்..

இதனால் பதிக்கப்படும் இந்திய நிறுவனங்கள் எது எது?

நன்றி சார்.

Thomas Ruban said...

பதிவுக்கு நன்றி சார்..

இதனால் பாதிக்கப்படும் இந்திய நிறுவனங்கள் எது எது?

இதனால் இனி அரசாங்க கடன் பத்திரங்களின் நம்பகத்தன்மை பாதிக்கப்படும் அபயம் உள்ளதே!!!!

நன்றி சார்.

Blog Widget by LinkWithin