
மிக எளிதில் வெளியேறக் கூடிய பங்கு முதலீட்டு பணமானது (portfolio investment) மொத்த அந்நிய செலவாணி கையிருப்பில் ஐம்பது சதவீதத்திற்கும் மேலே இருப்பது, பொருளாதார ரீதியாக இந்தியாவை ஒரு பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வைத்திருப்பதாகவே கருதுகிறேன். ஒருவேளை அந்நிய முதலீட்டாளர்கள் இந்தியாவை விட்டு திடீரென்று வெளியேற முற்பட்டால், முன்னொரு காலத்தில் தங்கத்தை அடகு வைத்த நிலை கூட திரும்பக் கூடும். அவர்கள் உடனடியாக வெளியேறாமல் தடுப்பதற்காக அரசாங்கம் அவர்களுக்கு தேவையற்ற (நீண்ட கால முதலீட்டு வரி விலக்கு போன்றவை) சலூகைகளை வழங்க வேண்டி இருக்கிறது என்பதும் அது போன்ற சலுகைகள் நாட்டை இன்னொரு மேலை நாட்டு சுரண்டல் காலத்திற்கு இட்டுச் செல்கிறது என்றும் நினைக்கிறேன்.
இப்போது நமது பங்கு சந்தைக்கு வருவோம்.
மிகுந்த ஆரவாரத்துடன் ஆண்டுக் கணக்கை துவங்கிய நமது பங்கு சந்தை, வாரத்தின் இறுதி பகுதியில் சற்று தடுமாற்றத்தை சந்திக்க நேரிட்டது. சீன நாணயத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், உலக பொருளாதாரத்தின் நிலை பற்றிய குழப்பமான தகவல்கள், லாப விற்பனை மற்றும் பங்குகளின் மதிப்பு பற்றிய வினாக்கள் ஆகியவை சந்தையை பெரிய அளவில் முன்னேறவிடாமல் தடுக்கின்றன. அதே சமயத்தில் அடிப்படைகள் வலுவில்லாத பல நிறுவனங்களின் பங்குகள் பெரிய அளவில் முன்னேறியது, சந்தை இப்போது பெரிய வணிகர்களின் (Operators) கையில் மீண்டுமொருமுறை சிக்கி உள்ளது என்பதையே காட்டுகின்றது.
தொழிற்நுட்ப ரீதியாக நிபிட்டி 5160 மற்றும் 5080 ஆகிய நிலைகளில் நல்ல அரணைக் கொண்டிருக்கும். 5320 மற்றும் 5400 அளவுகள் எதிர்ப்பு நிலையாக இருக்கும். டாடா டீ பங்கு பல வருடங்களாக சந்தித்து வந்த 1000 என்ற வலுவான எதிர்ப்பு நிலையை(Chart) முறியடித்துள்ளது. 920 ருபாய் என்ற நிலையை ஸ்டாப் லாஸ் லிமிட் ஆக வைத்துக் கொண்டு ஒரு வருடத்திற்கான வர்த்தக நிலையை (Trading Position) எடுக்கலாம். ஒரு வருடத்தில் இந்த பங்கு 1400-1500 வரை உயர வாய்ப்புள்ளது.
மற்றபடிக்கு அடிப்படை வலுவில்லாத சிறிய பங்குகளில் வர்த்தக நிலை எடுப்பவர்கள் வதந்திகளை நம்பாமல் இருப்பது நல்லது. முதலீட்டாளர்கள் சென்ற பதிவில் கூறியது போன்ற நீண்டகால முதலீட்டு நிலை எடுப்பது நல்லது.
வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
8 comments:
அன்னிய செலவாணி கையிருப்பினால் ருபாயின் மதிப்பில் மாற்றம் இருக்குமா!?
நன்றி வால்பையன்!
// அன்னிய செலவாணி கையிருப்பினால் ருபாயின் மதிப்பில் மாற்றம் இருக்குமா!?//
நிச்சயமாக. அந்நிய செலவாணியின் கையிருப்பு அதிகமாகும் பட்சத்தில் ரூபாயின் மதிப்பும் அதிகமாகும். ஒருவேளை, அந்நிய முதலீடுகள் திரும்பப் பெறப் பட்டால், ரூபாயின் மதிப்பு வெகுவாக குறையும்.
நன்றி!
I think you should write about L&T Chief Naik's comments on Chinese killing our Mfg sector, and he was demanding 25% anti-dumping duties to hedge against Chinese currency policies. I believe that has got lots of merit. China is killing Mfg all over the world, and the recent example is the US. India will definitely be a soft target for them, with our cowardice politicians, and babudom, that will do anything for money.
//ஒருவேளை அந்நிய முதலீட்டாளர்கள் இந்தியாவை விட்டு திடீரென்று வெளியேற முற்பட்டால், முன்னொரு காலத்தில் தங்கத்தை அடகு வைத்த நிலை கூட திரும்பக் கூடும்.//
உண்மையாகவா சார்!! நிலைமை அவ்வளவு மோசமாக உள்ளதா?
பதிவுக்கு நன்றி சார்.
நன்றி itsdifferent!
//I think you should write about L&T Chief Naik's comments on Chinese killing our Mfg sector, and he was demanding 25% anti-dumping duties to hedge against Chinese currency policies. I believe that has got lots of merit. China is killing Mfg all over the world, and the recent example is the US. India will definitely be a soft target for them, with our cowardice politicians, and babudom, that will do anything for money.//
சீனா மட்டுமல்ல அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் சுயநலத்திற்காக இது போன்ற தந்திரங்களை பல ஆண்டுகளாக கையாண்டு கொண்டுதான் இருக்கின்றனர். வலுத்தவன் பிழைப்பான் என்ற காட்டின் எழுதப் படாத சட்டம் இன்று நாடுகளுக்கும் வெகுவாக பொருந்துகின்றது.
மற்ற நாடுகளைப் பொறுத்த வரையாவது உலக அளவில், தம் நாட்டிற்காக போராடும் தலைவர்கள் இருக்கின்றனர். நம் நாட்டிலோ சுயநலம் என்பது தனிநபர் சம்பந்தப் பட்டது மட்டுமே. பணத்திற்காக தன நாட்டையே அடகு வைக்க தயங்காத தலைவர்கள்தான் இங்கு அதிகம். இதில் வேடிக்கை என்னவென்றால், எளியவர்களை சுரண்டிப் பிழைக்கும் நம் நாட்டு தொழில் அதிபர்கள் கூட வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் "தர்மம் நியாயம்" பேசுகின்றனர்.
நன்றி.
நன்றி தாமஸ் ரூபன்!
//உண்மையாகவா சார்!! நிலைமை அவ்வளவு மோசமாக உள்ளதா?//
உண்மைதான் ஐயா ! நம்முடைய குடுமி யார் யார் கையிலோ இருக்கின்றது என்பது வேதனைக்குரிய உண்மை!
நன்றி!
நம் நாட்டவர்க்கு எப்போதும் வெளிநாட்டவர் மற்றும் அவர்கள் பணத்தின் மீதுதான் மோகம்....
இக்கரைக்கு அக்கறை பச்சை...
அந்நிய செலாவணி முக்கியமென்றாலும், நாட்டின் பொருளாதார பாதுகாப்பு அதை விட முக்கியமல்லவா?
instead begging FDI and FII,why not our govt encourage & literate our people regarding participating in Share market....
More the participation of our people, more secure our country's economy & future....
ஒரு வேண்டுகோள்-- உங்கள் பதிவிலிருந்தே தமிழில் பின்னூட்டம் இட ஆவண செய்யவும்...
(that is instead of going to Google transliteration page,you can include that facility in the comment section itself.i seen this in some tamil blogs)
நன்றி
ரகு
நன்றி ரகு!
//நம் நாட்டவர்க்கு எப்போதும் வெளிநாட்டவர் மற்றும் அவர்கள் பணத்தின் மீதுதான் மோகம்....
இக்கரைக்கு அக்கறை பச்சை...//
உண்மைதான் ரகு!
//அந்நிய செலாவணி முக்கியமென்றாலும், நாட்டின் பொருளாதார பாதுகாப்பு அதை விட முக்கியமல்லவா?
instead begging FDI and FII,why not our govt encourage & literate our people regarding participating in Share market....
More the participation of our people, more secure our country's economy & future....//
எனக்கும் கூட இதே கருத்துத்தான். அந்நிய முதலீட்டாளர்களின் அளவுக்கு அதிகமான தலையீடு, சந்தைகளில் ஏராளமான ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி, சிறு முதலீட்டாளர்களை சிரமத்துக்குள்ளாக்குகிறது.
//ஒரு வேண்டுகோள்-- உங்கள் பதிவிலிருந்தே தமிழில் பின்னூட்டம் இட ஆவண செய்யவும்...
(that is instead of going to Google transliteration page,you can include that facility in the comment section itself.i seen this in some tamil blogs)//
கண்டிப்பாக முயற்சிக்கிறேன்!
நன்றி மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
Post a Comment