Monday, January 11, 2010

ஒரு குற்றத்திற்கு இரண்டு தண்டனைகளா?


திருட்டு டிவிடியில் சினிமா படம் பார்த்தால் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப் படுவர் என்று ஒரு சட்டம் வரப் போவதாக பத்திரிக்கை செய்தியில் பார்த்தவுடன் என்னுள் பல கேள்விகள் எழுந்தன. அவற்றை இங்கே பதிய விரும்புகின்றேன்.

இந்த திருட்டு டிவிடி சட்டம் உள்ளூர் படங்களுக்கு மட்டும்தானா அல்லது உலகப் படங்களுக்குமா?

ஒருவேளை உலக படங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தினால் நிறைய ஜாம்பவான்கள் சிறையில்தானே தமிழ் படம் தயாரிக்க வேண்டியிருக்கும்?

அப்படி சிறையில் இருந்துகொண்டே திரைப்படம் எடுப்பவர்கள் சிறைஞானி என்று அழைக்கப் படுவார்களா?

இன்றைய தேதியில் வெளிவரும் பல தமிழ் படங்களை பார்ப்பதே ஒரு பெரிய தண்டனைதானே?

இதற்கும் மேல் ஒரு குண்டர் சட்டம் தேவையா?

ஒரு குற்றத்திற்கு இரண்டு தண்டனைகள் வழங்கும் சட்டம் செல்லாது என்று அரசியல் சாசனம் சொல்கின்றதே?

தீவிரவாதிகள் எல்லோரும் கூவிக் கூவி திருட்டு டிவிடி விற்கிறார்கலாமே? அதனால்தான் கொஞ்ச நாட்களாக குண்டு சத்தம் குறைவாக கேட்கின்றதோ?

அப்படியே அவர்களை திரைப்படங்களையும் தயாரிக்க சொல்லி விடுங்களேன். கைதாகாமலேயே நிறைய பேரை வதைக்கலாமல்லவா?

இன்றைய தேதியில் நடைமுறையில் இருக்கும் சட்டங்களைக் கொண்டே வீட்டில் "சிவனே என்று" தூங்கிக் கொண்டிருப்பவர்களைக் கூட கைது செய்ய முடியுமே?

இப்போதிருக்கும் சட்டங்களைக் கொண்டு, பலர் பேர் முன்னிலையில், ஏன் வீடியோ ஆதாரத்துடன் தவறு செய்தாலும் கூட தண்டிக்க முடியாதுதானே?

அப்படியிருக்கும் போது எதற்கு ஒரு இன்னொரு புதிய சட்டம்?

ஏதோ செய்வது போல காட்டிக் கொள்ளத்தானோ?

ஒரு திரைப்படம் அரங்கில் வெளிவருவதற்கு முன்னரே திருட்டு டிவிடியில் வெளிவருகின்றது என்றால் அது உள்ளாட்கள் உதவியின்றி நடக்காது என்பது சினிமா சூப்பர் ஸ்டார்களுக்கு தெரியாதா?

தொலைத்த இடத்தில் தேடாமல், வெளிச்சம் இருக்கும் வேறொரு இடத்தில் ஒன்றும் கிடைக்காது என்பது அந்த சகலகலா வல்லவர்களுக்கு தெரியாதோ?

எல்லாம் ஒரு விளம்பரம்தானோ?

ஆக மொத்தத்தில் எல்லாருக்கும் பொழுது நன்றாகவே போயிற்று. எனக்கும் ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு வெகுஜன பதிவு ஆயிற்று.

மொத்தத்தில் ஏதேனும் ஒன்று செய்து தமிழர்களின் சினிமா பார்க்கும் நேரத்தை குறைத்தால் சரிதான்.

ஆகா! ஒரு மெசேஜும் ஆயிற்று.


நன்றி!

12 comments:

கே.ரவிஷங்கர் said...

சூப்பர்.

Naresh Kumar said...

நீங்க வேற, கூடிய சீக்கிரம் கலைஞருக்கு திரையுலகினர் பாராட்டு விழா எடுக்குறாங்களாம்!!! காரணம் என்ன தெரியுமா???

திருட்டு விசிடியை ஒழிச்சிட்டாராம்.....

காசு கொடுத்து தியேட்டருக்கு போயி பாக்கும் போது அவ்ளோ மொக்கை போட்டதுக்காக படத்தோட ஆட்களை குண்டர் சட்டத்தில் உள்ள தள்ள முடியுமா???

வால்பையன் said...

3டி வகை படங்கள் திரையரங்குகளில் மட்டுமே பார்ப்பது போன்று கட்டாயமயமாக்கப்பட்டது நல்ல முயற்சி!
தொழில்நுட்பங்களில் திரைதுறை முன்னேறுவதே திருட்டு வி/சி/டி யை ஒழிக்க ஒரே வழி!

Thomas Ruban said...

வித்தியாசமாவும் அதே “நறுக்”கோடும் இருக்கு சார். அசத்தல்பதிவு.

//ஒருவேளை உலக படங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தினால் நிறைய ஜாம்பவான்கள் சிறையில்தானே தமிழ் படம் தயாரிக்க வேண்டியிருக்கும்?
அப்படி சிறையில் இருந்துகொண்டே திரைப்படம் எடுப்பவர்கள் சிறைஞானி என்று அழைக்கப் படுவார்களா?

"சிறையோகி" என்று அழைக்கப் படுவார்கள்.
பதிவுக்கு நன்றி சார்..

Maximum India said...

நன்றி ரவிஷங்கர்!

Maximum India said...

நன்றி நரேஷ் குமார்!

//நீங்க வேற, கூடிய சீக்கிரம் கலைஞருக்கு திரையுலகினர் பாராட்டு விழா எடுக்குறாங்களாம்!!! காரணம் என்ன தெரியுமா???

திருட்டு விசிடியை ஒழிச்சிட்டாராம்.....//

அவ்வப்போது பாராட்டு விழாக்கள் அதுவும் சினிமா சம்பந்தப் பட்ட விழாக்கள் நடந்து கொண்டிருந்தால்தானே தலைவர்கள் முதல் பாமரர்கள் வரை பல தமிழர்களுக்கும் நன்றாக பொழுது போகும்.

தமிழ் கலாச்சாரத்தை காப்பாற்றவென்றே அவதரித்துள்ள கண்மணிகளின் ஆடை அலங்காரங்களை கண்வொட்டாமல் பார்க்கவென்று ஒரு கூட்டம். பார்த்துவிட்டு தவறென்று விமர்சனம் செய்ய ஒரு கூட்டம். தமிழை கடித்து குதறினாலும், மழலை தமிழென்று ரசிக்கவும் ஒரு கூட்டம். இந்த பாராட்டு விழாவை நேரடியாக மற்றும் மறு ஒளிபரப்பாக பலமுறை ஒளிபரப்பும் ஒரு கூட்டம். அதை ஏராளமான விளம்பரங்களுக்கிடையேயும் பார்த்து ரசிக்க ஒரு கூட்டம். பக்கங்களை நிரப்ப பத்திரிக்கையாளர்களுக்கும், நேரடி விமரசங்களை எழுதி அதிக "விசிட்டர்ஸ்" களை பதிவர்களுக்கும் ஒரு சிறந்த வாய்ப்பு. மொத்தத்தில் தமிழ் கூறும் நல்லுலகம் நன்றாகவே முன்னேறி வருகிறது.//காசு கொடுத்து தியேட்டருக்கு போயி பாக்கும் போது அவ்ளோ மொக்கை போட்டதுக்காக படத்தோட ஆட்களை குண்டர் சட்டத்தில் உள்ள தள்ள முடியுமா???//நம்ம ஊரு போலீசு "குண்டாக" இருந்தார் என்று காரணம் காட்டிக் கூட சிலரை "குண்டர் சட்டத்தில்" அடைத்து விடுவார்கள். ஆனால் அதிகார வர்க்கத்திற்கு நெருக்கமாக உள்ளவர்களை அவ்வளவு சீக்கிரம் நெருங்க மாட்டார்கள்.


நன்றி!

Maximum India said...

நன்றி வால்பையன்!

//3டி வகை படங்கள் திரையரங்குகளில் மட்டுமே பார்ப்பது போன்று கட்டாயமயமாக்கப்பட்டது நல்ல முயற்சி!
தொழில்நுட்பங்களில் திரைதுறை முன்னேறுவதே திருட்டு வி/சி/டி யை ஒழிக்க ஒரே வழி!//

நல்ல யோசனை!

:)

Maximum India said...

நன்றி தாமஸ் ரூபன்!

//"சிறையோகி" என்று அழைக்கப் படுவார்கள்.//

நம்மூரில் பட்டங்களை வழங்குவதை பெரிய வேலை என்ன இருக்க முடியும்?

நடக்கட்டும்! நடக்கட்டும்!

:)

Thomas Ruban said...

உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் எல்லோர்க்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் அய்யா.

கார்த்திக் said...

// அப்படியே அவர்களை திரைப்படங்களையும் தயாரிக்க சொல்லி விடுங்களேன். கைதாகாமலேயே நிறைய பேரை வதைக்கலாமல்லவா? //

இப்போ கூட மும்பைல பல பெரிய படங்கள் தயாரிப்பது வெளிநாட்டுல இருக்குர இந்திய தாதாக்கள் தானாமங்க.

Maximum India said...

நன்றி கார்த்திக்!

//இப்போ கூட மும்பைல பல பெரிய படங்கள் தயாரிப்பது வெளிநாட்டுல இருக்குர இந்திய தாதாக்கள் தானாமங்க.//

அப்படித்தான் சொல்லப் படுகின்றது.

முந்தைய மும்பை வெடிகுண்டு தாக்குதல் நடந்து பல ஆண்டுகள் வரை நம்மூர் ஸ்டார்கள் தாவூத் இப்ராகிம் பார்ட்டிகளில் கலந்து கொண்டுதான் இருந்தார்கள். கடைசி தாக்குதலில் சம்பந்தப் பட்டிருந்த ஹீட்லி உடன் கூட நிறைய சினிமாகாரர்கள் தொடர்பு வைத்திருந்தார்கள். அவர்களுடைய அரசியல் செல்வாக்கு மற்றும் கவர்ச்சி அவர்களை நிறைய தரம் தப்ப வைத்திருக்கின்றது. மிகச்சிறந்த உதாரணம் - சஞ்சய் தத்

நன்றி.

Maximum India said...

நன்றி தாமஸ் ரூபன்!

Blog Widget by LinkWithin