Friday, May 7, 2010

நீதிக்கு தலை வணங்குவோம்!


இந்த வாரம் மிகவும் எதிர்பார்க்கப் பட்ட இரண்டு முக்கிய தீர்ப்புக்கள் வழங்கப் பட்டிருக்கின்றன.

முதலாவது, மும்பை தாக்குதலில் ஈடுபட்ட பாக் தீவிரவாதி கசாப்புக்கு கொடுக்கப் பட்ட மரண தண்டனை.

பல அப்பாவிகளை ஈவிரக்கமில்லாமல் கொடூரமாக கொலை செய்த அவனை நடுசந்தியில் இட்டு பழி தீர்க்க வேண்டும் என்ற வலுவான மக்கள் உணர்வுகளுக்கு மத்தியிலும் சட்டத்தின் ஆட்சியினை நிலை நிறுத்திய இந்திய அரசாங்கம் மற்றும் மிகவும் சிக்கலான ஒரு வழக்கினை சரித்திரத்தில் இதுவரை இல்லாத படி விரைவாக விசாரித்து உறுதியான தீர்ப்பை வழங்கிய நீதிபதி ஆகியோருக்கு நமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வோம்.

இந்திய அரசாங்கத்தின் கடமை இத்துடன் நிறைவு பெற்று விட வில்லை. கசாபின் மரண தண்டனையை விரைவாக நிறைவேற்ற வேண்டிய மற்றுமொரு பெரிய பொறுப்பும் அரசாங்கத்திற்கு உள்ளது.

மற்றொரு தீர்ப்பு!

இந்தியாவின் மிகப் பெரிய பணக்கார அண்ணன் தம்பிகளுக்கு இடையே ஏற்பட்ட பாகப் பிரிவினை போராட்ட வழக்கின் தீர்ப்பு.

"கிருஷ்ணா-கோதாவரி படுகையிலிருந்து வெளிவரும் எரிவாயு மத்திய அரசுக்குத்தான் சொந்தம். ரிலையன்ஸ் ஒப்பந்ததாரர் மட்டுமே". ஒரு குடும்ப ஒப்பந்தம் நாட்டின் ஆதாரங்களை கட்டுப்படுத்த முடியாது என்கிற இந்த தீர்ப்பையும் முழுமனதோடு வரவேற்கிறேன். (இது பற்றிய எனது பழைய பதிவு)

மேலும் என்னைப் பொறுத்த வரை, சட்டப் படி ரிலையன்ஸ் நிறுவனம் என்பது ஒரு பொது நிறுவனம்தான் (Public Limited Company). ஒரு குடும்பத்திற்கு கட்டுப்பட்டது அல்ல. அந்த நிறுவனத்தின் நலன்களை புறக்கணிக்கும் வகையிலான குடும்ப ஒப்பந்தத்தில், பங்குதாரர்களின் முறையான ஒப்புதல் இல்லாமல், கையெழுத்திட்ட முகேஷ் அம்பானியின் மீது கம்பெனி சட்டத்தின் கீழே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

இந்தியாவைப் பொறுத்த வரை பொது நிறுவனங்களிலும் கூட தனி நபர்களின் ஆதிக்கம் மிகுந்திருப்பதை நம்மால் காணமுடிகிறது. இந்த வழக்கின் அடிப்படையில் முகேஷ் அம்பானி மீது நடவடிக்கை எடுக்கப் படின் அது ஒரு நல்ல ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

நன்றி!

6 comments:

Thomas Ruban said...

//சிக்கலான ஒரு வழக்கினை சரித்திரத்தில் இதுவரை இல்லாத படி விரைவாக விசாரித்து உறுதியான தீர்ப்பை வழங்கிய நீதிபதி ஆகியோருக்கு நமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வோம்.//
கண்டிப்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வோம் சார்.
//
"கிருஷ்ணா-கோதாவரி படுகையிலிருந்து வெளிவரும் எரிவாயு மத்திய அரசுக்குத்தான் சொந்தம். ரிலையன்ஸ் ஒப்பந்ததாரர் மட்டுமே". ஒரு குடும்ப ஒப்பந்தம் நாட்டின் ஆதாரங்களை கட்டுப்படுத்த முடியாது என்கிற இந்த தீர்ப்பையும் முழுமனதோடு வரவேற்கிறேம்//

மூன்று நீதிபதிகளின் கருத்தும் ஒரேமாதிரி இருந்திருந்தால்(2:1) இன்னமும் சிறப்பாக இருந்துறுக்கும்.
//பங்குதாரர்களின் முறையான ஒப்புதல் இல்லாமல், கையெழுத்திட்ட முகேஷ் அம்பானியின் மீது கம்பெனி சட்டத்தின் கீழே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.//
அப்படி பார்த்தால் பல நிறுவனத்தின் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் சார்.

பதிவுக்கு நன்றி சார்.

MCX Gold Silver said...

வாரம் தோரும் சந்தை பற்றிய கட்டுரையை எதிர் பார்கிறேன்.உங்களின் தற்போதைய சிக்கலிளிருந்து விரைவில் விடுபட வாழ்த்துகிறேன்... நன்றி

Maximum India said...

நன்றி தாமஸ் ரூபன்!

//அப்படி பார்த்தால் பல நிறுவனத்தின் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் சார்.//

கண்டிப்பாக. ஒரு பொது நிறுவனத்தின் சொத்துக்களை தனது சொந்த சொத்துக்களைப் போல அனுபவிக்கும் மனப்பாங்கு தவிர்க்கப் பட வேண்டியது. இல்லையென்றால் தடை செய்யப் பட வேண்டியது என்று நினைக்கிறேன்.

Maximum India said...

நன்றி DG!

//வாரம் தோரும் சந்தை பற்றிய கட்டுரையை எதிர் பார்கிறேன்.உங்களின் தற்போதைய சிக்கலிளிருந்து விரைவில் விடுபட வாழ்த்துகிறேன்... நன்றி//
கண்டிப்பாக முயற்ச்சிக்கிறேன் நண்பரே!

நன்றி!

பொதுஜனம் said...

கசாபை கசாப்பு கடைக்கு அனுப்பும் தீர்ப்பு . மொத்த மக்களின் உணர்வின் வெளிப்பாடு. ஓம்பலே சுட்டு கசாப் இறந்திருந்தால் சுலபமாக பாகிஸ்தான் பெயர் காப்பாற்ற பட்டிருக்கும். மக்களை நாயை விட கேவலமாக கொன்றவர்களை பற்றியும் அவர்களின் மூலம் பற்றியும் தெரிந்து சட்ட ரீதியாக விசாரணை மேற்கொண்டு தண்டனை அளித்திருப்பது பாராட்டுக்குரியது. இந்தவகையில் ஓம்பலேக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். அடுத்து துணிச்சலாகவும் திறமையாகவும் வாதாடிய வழக்கறிஞர் மற்றும் மிக முக்கிய வழக்கை பாரபட்சமின்றி விசாரித்த நீதிபதி. கண் முன்னே பலரை கொன்றவனுக்கும் வாதாட ஒரு வழக்கறிஞரை அனுமதித்த நம் சட்டம் . கசாப் குறி தவறாமல் எய்யப்பட்ட சக்தி வாய்ந்த அம்பு மட்டுமே. எய்தவர்கள் கர்ம சிரத்தையாக அடுத்த தாக்குதலுக்கு திட்டம் போட்டு கொண்டு இருக்கலாம். மீண்டும் அப்படி ஒரு நிலை ஏற்படாமல் விழிப்புடன் இருக்க வேண்டும்..( ஆண்டவா! கசாபுகளை நாங்கள் பார்த்துகொள்கிறோம். சில சீனா ஜால்ராக்களிடம் இருந்து எங்களை காப்பாற்று.)

Maximum India said...

நன்றி பொதுஜனம்!

//( ஆண்டவா! கசாபுகளை நாங்கள் பார்த்துகொள்கிறோம். சில சீனா ஜால்ராக்களிடம் இருந்து எங்களை காப்பாற்று.)//

கண்டிப்பாக. நக்சல் பிரச்சினையில் கூட பல அரசியல்வாதிகள் இரட்டை வேடம்தான் போடுகின்றனர்.

நன்றி!

Blog Widget by LinkWithin