The Art of Appraisal
-
Big Boss: This year your performance was good, excellent and outstanding.
So, your rating is "average".
Kumar: What? How come 'average'?
Big Boss: Becau...
பிரிவுகள்
- சமூகம் (121)
- செய்தியும் கோணமும் (104)
- பொருளாதாரம் (101)
- பங்கு சந்தை (98)
- அரசியல் (74)
- பயணங்கள்/அனுபவங்கள் (40)
- மனவியல் (40)
- பங்கு சந்தை வெற்றி பயணம் - ஒரு வழித் துணை (15)
- கதை (9)
- நகைச்சுவை (7)
- அறிவியல் (5)
- திரைவிமர்சனம் (4)
- சட்டம் (3)
- நூலகம் (3)
- கிறுக்கல்கள் (1)
Sunday, May 9, 2010
உலக பொருளாதார சிக்கல் - பகுதி - II ?
நெருப்பை நெருப்பால் அணைக்க முடியுமா? கடன்களை திருப்பிச் செலுத்த முடியாத பொருளாதார சிக்கலை இன்னொரு கடனால் தீர்க்க முடியுமா? இந்த கேள்விகளுக்கு விடை "இல்லை" என்பது உண்மையானால் உலகம் இரண்டு வருடங்களுக்குள்ளாகவே மீண்டுமொரு பெரிய பொருளாதார சிக்கலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதும் உண்மையாகும். சற்று விளக்கமாக இங்கே பார்ப்போம்.
கிட்டத்தட்ட ஒன்றரை வருடத்திற்கு முன்னர் வாடிக்கையாளர்களின் "கடன் வாங்கி செலவு செய்யும் போக்கு" வரைமுறைகளை மீறியதால் அவர்கள் கையை விரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர்களுக்கு கடன் கொடுத்த வங்கிகள் காலாவதியாகும் நிலையும் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர், ஏன் ஒரு வங்கியை கூட இன்னொரு வங்கி நம்பாத சூழ்நிலை உருவாகியது. உலக பொருளாதாரம் சில மாதங்கள் வரை ஸ்தம்பித்து காணப் பட்டது. பங்கு சந்தைகள் உள்ளிட்ட பல்வேறு நிதி சந்தைகளும் சரிவை சந்தித்தன.
அப்போது, பொருளாதார சிக்கலை தீர்க்க வேண்டி, உலக நாடுகளின் அரசாங்கங்கள் அதிகப் படியான கடனை வாங்கி அந்த கடனின் உதவியால் சரிந்து கொண்டிருந்த பொருளாதாரத்தை நிமிர்த்தின. அதே போல காலாவதியான வங்கிகளுக்கு (கடன் மூலமாக) அதிக மூலதனத்தை அளித்து புத்துயிர் கொடுத்தன. இப்படி சந்தையினையும் வங்கிகளையும் காப்பாற்றிய பல மேலை நாட்டு அரசாங்கங்கள் தமது சொந்த கடனை திருப்பி தர முடியாத நிலை இப்போது ஏற்பட்டுள்ளது. கிரீஸ் ஒரு "tip of the ice berg" மட்டுமே என்றும் அமெரிக்கா, ஸ்பெயின் போன்ற பெரிய நாடுகள் கூட "கடன் சிக்கலில்" தத்தளிக்கும் காலம் விரைவில் வரும் என்று சில பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.
கிரீஸ் நாட்டினை காப்பாற்ற ஐரோப்பிய யூனியன் மற்றும் சர்வதேச நிதி அமைப்புக்கள் முன்வந்தாலும், அவர்களும் கூட மீண்டும் மீண்டும் கடன் வாங்கித்தான் சிக்கலை தள்ளிப்போட முனைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் நாளை (10.05.2010) காலை ஆசிய சந்தைகளில் வர்த்தகம் ஆரம்பிப்பதற்கு முன்னரே ஒரு உத்தேச திட்டம் வெளியிடப் படும் என்று ஐரோப்பிய யூனியன் அறிவித்திருப்பது, இவர்கள் நிஜப் பிரச்சினைகளை விட சந்தை சரிவைப் பற்றியே அதிகம் கவலைப் படுகிறார்கள் என்பது ஊர்ஜிதமாகிறது.
ஆக மொத்தத்தில் பெருகி வரும் கடன் குவிப்பால் (Spiralling of Public Debt) உலகப் பொருளாதாரம் மீண்டும் ஒரு மந்த நிலைக்கு தள்ளப் பட இப்போதைக்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளன என்று தோன்றுகிறது.
இப்போது நமது சந்தைக்கு வருவோம்.
நிபிட்டி 5400 புள்ளிகளுக்கு அருகே செல்ல செல்ல லாப விற்பனை செய்யுங்கள் என்றும் புதிய முதலீடுகளை தவிர்க்கவும் என்றும் இந்த பதிவில் திரும்ப திரும்ப வலியிறுத்தி வந்ததை நினைவு கூற விரும்புகிறேன். மேலே சொன்னபடி கிரீஸ் திட்டம் நாளை காலையில் அறிவிக்கப் பட்டு, அந்த திட்டம் சந்தைகளை சந்தோசப் படுத்தும் பட்சத்தில், நிபிட்டி (சந்தையும் கூட) ஒரு தற்காலிக முன்னேற்றம் காண வாய்ப்புக்கள் உள்ளன. சரிவில் மிகவும் பாதிக்கப் பட்ட உலோகம் மற்றும் இதர தயாரிப்பு நிறுவனங்கள் நல்ல முன்னேற்றம் காண வாய்ப்புக்கள் உள்ளன.
அதே சமயம் ஐரோப்பா என்பது உலக பொருளாதாரத்தின் முக்கிய பகுதியாகும். அங்கே காணப் படும் சிக்கல்கள் மற்ற பகுதிகளையும் நிச்சயம் பாதிக்கும். குறிப்பாக ஐரோப்பிய கண்டத்துடன் அதிகப் படியான வர்த்தக தொடர்புகள் வைத்திருக்கும் இந்திய நிறுவனங்களை (நீண்ட கால நோக்கில்) தவிர்க்கலாம். உதாரணம் டாடா ஸ்டீல் போன்றவை.
வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!
நன்றி!
Labels:
பங்கு சந்தை,
பொருளாதாரம்
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
நல்ல செய்தி , வாழ்த்துகள் !
உண்மைவிரும்பி,
மும்பை.
நன்றி உண்மை விரும்பி!
கிரீஸ் பிரச்னையை தற்காலிகமாக கிரீஸ் போட்டு அடக்கினாலும் மொத்தமாக பிரச்னையை தீர்க்க ஓவர் ஹாலிங் செய்து தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும். துக்ளக் மாதிரி செம்பு நாணயம் இஸ் எக்வல் டு வெள்ளி நாணயம் என்று சொல்லாமல் உருப்படியாக ஒக்காந்து யோசித்து முடிவெடுக்க வேண்டும். இடியாப்ப சிக்கலை எல்லோரும் சேர்ந்துதான் தீர்க்க வேண்டும். மாறாக ஒரு பக்கம் இழுக்க இன்னொரு பக்கம் போனால் சீட்டுக்கட்டு போல் விழ வேண்டியதுதான். ஏப்பா பொருளாதார மேதைகளே ! எத்தனையோ தியரிகளை புட்டு புட்டு வெச்சீங்களே !. மொதல்ல ஓட்டய அடைக்க ஒரு வழி சொல்லகூடாதா ?
நன்றி பொதுஜனம்!
//கிரீஸ் பிரச்னையை தற்காலிகமாக கிரீஸ் போட்டு அடக்கினாலும் மொத்தமாக பிரச்னையை தீர்க்க ஓவர் ஹாலிங் செய்து தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும். துக்ளக் மாதிரி செம்பு நாணயம் இஸ் எக்வல் டு வெள்ளி நாணயம் என்று சொல்லாமல் உருப்படியாக ஒக்காந்து யோசித்து முடிவெடுக்க வேண்டும்//
ஒரு கடன் பிரச்சினையை இன்னொரு கடனால் தீர்க்க முடியாது என்பது சரித்திரம். ஆனால் சிலவற்றை பட்டுத்தான் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
நன்றி!
Post a Comment