Skip to main content

இந்த பதிவிற்கு ஒரு முப்பது வினாடி ஒதுக்குங்கள்!

வாழ்க்கையைப் பற்றி கோகா கோலா தலைவர் (திரு.பிரையன் டைசன்) நிகழ்த்திய முப்பது வினாடி உரை இங்கே.

வாழ்க்கையை ஐந்து பந்துகளுடன் விளையாடும் ஒரு விளையாட்டாக கற்பனை செய்து கொள்ளுங்கள். அந்த பந்துகளாவன: வேலை (தொழில்) , குடும்பம், உடல்நலம், நண்பர்கள் மற்றும் ஆன்மிகம் (அல்லது சுய தேடல்). அனைத்தையும் மாற்றி மாற்றி காற்றில் சுழல வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

வேலை என்பது ரப்பர் பந்து போல. அது தவற விடப் பட்டாலும் துளியும் சேதமடையாமல் திரும்பக் கைக்கு வந்து சேர்ந்து விடும். ஆனால் மற்ற பந்துகள் அப்படியல்ல.

குடும்பம், நட்பு, உடல் நலம் மற்றும் ஆன்மிகம் ஆகியவை கண்ணாடி பந்துகள் போன்றவை. ஒரு முறை தவற விட்டாலும், அவற்றை பழைய நிலையில் திரும்பப் பார்க்க முடியாது. சொல்லப் போனால் சமயத்தில் சிதறி சின்னாபின்னமாக ஆகியும் விடலாம்.

எனவே நண்பர்களே!

வேலை நேரத்தில் சுறுசுறுப்பாக வேலையை கவனியுங்கள். வேலை நேரம் முடிந்தவுடன் வீட்டுக்கு கிளம்புங்கள்.

தேவையான நேரத்தை உங்கள் குடும்பம், நட்பு ஆகியவற்றுக்கு வழங்குங்கள். உடலுக்கு தேவையான ஓய்வை அளியுங்கள்!

டிஸ்கி: என்ன! முப்பது வினாடி நேரம் ஆகவில்லையே?

நன்றி!

Comments

இதோ கிளம்பிவிட்டேன், வீட்டுக்கு!!
ஆன்மீக பந்தை தூக்கி குப்பையில போடுங்க எல்லாம் ஒழுங்கா நடக்கும்!
படிக்கும்போது ரொம்ப நல்லா தெளிவா புரியுது. ஆனா செயல் படுத்தறது :(

இப்படி எல்லாம் பேசி வினாடிகூடவேஸ்ட் செய்யாம ,கோக் செய்து உலகயே படுத்தறாங்களா..
Maximum India said…
நன்றி தேவன் மாயம்!

//இதோ கிளம்பிவிட்டேன், வீட்டுக்கு!!//

:)
Maximum India said…
நன்றி வால்பையன்!

//ஆன்மீக பந்தை தூக்கி குப்பையில போடுங்க எல்லாம் ஒழுங்கா நடக்கும்!//
உங்களுடைய இந்த கருத்திலிருந்து நான் சற்று மாறுபடுகின்றேன்.

ஆன்மீகம் என்பது வேறு, மதம் சார்ந்த மூட நம்பிக்கைகள் வேறு என்பது என் கருத்து. என்னைப் பொறுத்த வரையில் ஆன்மீகத்தை ஒருவித அறிவுத்தேடலாகவே நான் கருதுகிறேன். சொல்லப் போனால் ஒருவகையில் "நம்மூர் பகுத்தறிவு" கூட ஒருவித கண்மூடித்தனமான முரட்டு பிடிவாதம்தான். ஒரு நம்பிக்கை தரும் பிரச்சினைகளுக்கு (கண்மூடித்தனம் சற்றும் குறையாத) இன்னொரு நம்பிக்கையின் மூலம் தீர்வு கிடைக்காது என்பது என் கருத்து.

எனவே அறிவுத் தேடலை அவரவர் வழியில் தொடருவோம். ஆன்மீகம் (அறிவுத் தேடல்) என்பது முழுக்க முழுக்க ஒரு தனிப்பட்ட அனுபவம் என்பதால் எது சரி எது தவறு என்பதை அவரவர் அனுபவங்களே உணர்த்தும்.


நன்றி!
Maximum India said…
நன்றி முத்துலெட்சுமி!

//படிக்கும்போது ரொம்ப நல்லா தெளிவா புரியுது. ஆனா செயல் படுத்தறது :(//

கொஞ்சம் கஷ்டம்தான். ஆனாலும் முயற்சி செய்வோம்.

முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார் அல்லவா?

:)

நன்றி!
Maximum India said…
நன்றி ராஜேஸ்வரி!

நன்றி DG!
அறிவு தேடல், பகுத்தறிவு தேடல் இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது!

இல்லத ஒன்றை அறிவியல் தேடும் போது முடியவில்லை என்றால் வேற ஒன்றை தேடப்போய் விடும், ஆனால் எவ்வளவு தான் ஏமாந்தாலும் நாங்க ஆன்மீக தேடலை விடமாட்டோம்னு சொல்றவங்களை ஒன்னும் பண்ணமுடியாது!

பெட்டர், நீங்க கல்கி ஆசிரமம் போய் ஒரு மாம்பழம் சாப்பிட்டா தேடியது உடனே கிடைக்கும்!
Maximum India said…
நன்றி வால்பையன்!

//அறிவு தேடல், பகுத்தறிவு தேடல் இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது!//

இதைத்தானே நானும் சொல்கிறேன் தல!

அறிவுத்தேடல் உலகம் முழுக்க பொதுவானது. ஆனால் அறிவுக்கு சற்று பில்ட் அப் கொடுத்து உருவான பகுத்தறிவுக்கு அதுவும் நம்மூர் பகுத்தறிவுக்கு வேறு சில அடையாளங்களும் உண்டு.

பொதுவாக அறிவியல் என்பது விருப்பு வெறுப்புக்கள் அற்றது. ஆனால் நம்மூர் பகுத்தறிவுக்கு விருப்பு, வெறுப்பு சொன்னப்போனால் காழ்ப்புணர்ச்சி கூட ரொம்ப அதிகம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. எனவேதான் பகுத்தறிவு (நம்மூர் context இல்) மறுகேள்வி இல்லாமல் ஒப்புக் கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது.

//இல்லத ஒன்றை அறிவியல் தேடும் போது முடியவில்லை என்றால் வேற ஒன்றை தேடப்போய் விடும், //

அறிவியல் கண்டுபிடிப்புகளில் இரண்டு வகை உண்டு. இது வரை இல்லாத புதிய ஒன்றை கண்டுபிடிப்பது (invention) மற்றும் இருக்கின்ற ஒன்றை தேடுவது (discovery). இவை மட்டுமன்றி பழங்கால கருத்துகளை மேம்படுத்தும் அல்லது சீர்த்திருத்தும் அறிவியலும் உண்டு. சொல்லப்போனால் நிரூபிக்க தேவையில்லாத அல்லது முடியாத பலவகையான அறிவியலும் உண்டு, உதாரணம்: மனவியல், சில உயிரியல் பிரிவுகள், மேலாண்மை போன்றவை. நிரூபிக்க வேண்டிய கட்டாயமுள்ள அறிவியல் இயற்பியல் (மற்றும் அதை ஒத்த பிரிவுகள்) மட்டும்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே அறிவியலை பொதுப்படுத்துவது கடினமான விஷயம்.

//ஆனால் எவ்வளவு தான் ஏமாந்தாலும் நாங்க ஆன்மீக தேடலை விடமாட்டோம்னு சொல்றவங்களை ஒன்னும் பண்ணமுடியாது!//

மனிதன் ஏமாறுவதற்கு முக்கிய காரணம் பேராசை மற்றும் விழிப்புணர்வற்ற தன்மைதான். ஆன்மீகவாதிகளிடம் ஏமாந்ததை விட அரசியல்வாதிகளிடமும் போலி நிதி நிறுவனங்களிடமும் மக்கள் ஏமாந்ததுதான் அதிகம். ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். பகுத்தறிவு பெயரில் அரசியல் நடத்தும் மஞ்சள் துண்டுகளிடமும் கருப்பு உடைகளிடமும் ஏமாந்தவர்கள் நிறைய பேர் இருக்கின்றார்கள் என்பதால் பகுத்தறிவு முட்டாள்தனமாக ஆகிவிடாது. அதே போலத்தான் இதுவும்.

//பெட்டர், நீங்க கல்கி ஆசிரமம் போய் ஒரு மாம்பழம் சாப்பிட்டா தேடியது உடனே கிடைக்கும்//

இது ஒரு கடுமையான கருத்து என்று நினைக்கிறேன். நீங்கள் பகுத்தறிவை விரும்புவதால் உங்களை ஒரு மஞ்சள் துண்டுக்காரருடன் இணைத்துப் பேச எனக்கு எப்படி உரிமையில்லையோ அதே போல ஆன்மீகமும் ஒருவித அறிவுத்தேடல் என்ற ஒரு கருத்து கொண்டிருப்பதால் என்னை கல்கி ஆசிரமத்துடன் இணைத்துப் பேச உங்களுக்கும் எந்த உரிமையும் கிடையாது.

கருத்து மோதல் கருத்துக்களுடன் மட்டுமே நிற்க வேண்டுமே தவிர தனிப்பட்ட சாடல்கள் கூடாது என்பது என் விருப்பம்.

நன்றி! :)
நல்லதொரு யோசனை, இனிமேல் மிகவும் ஒழுங்காக கடைபிடிக்கிறேன். ஆன்மிகம் என்றாலே ஒழுங்கீனம் என எனும் எண்ணம் எப்படித்தான் எழுகிறதோ?! நல்ல விளக்கங்கள் தந்து இருக்கிறீர்கள்.
கடவுளை சீக்கரம் பார்க்க குறுக்கு வழி தான் சொன்னேன்!

நேர் வழியில் போன யாரும் இதுவரை பார்த்ததில்லையாம்!

அந்த கருத்துக்கு மாப்பு கேட்டுகிறேன்!
Maximum India said…
//கடவுளை சீக்கரம் பார்க்க குறுக்கு வழி தான் சொன்னேன்!

நேர் வழியில் போன யாரும் இதுவரை பார்த்ததில்லையாம்!//

ஊருக்கெல்லாம் பகுத்தறிவு பிரச்சாரம் செய்து விட்டு தனக்கென வந்த போது மஞ்சள் துண்டு போர்த்திக் கொள்பவர்களிடம் பகுத்தறிவு பற்றிய உபதேசம் பெறுவது எவ்வளவு முட்டாள்தனமோ அதே போலத்தான் "ஆசையை துற" என்று ஊருக்கெல்லாம் உபதேசம் செய்து விட்டு தனக்கென சொத்துக்களை சேர்க்கும் "ஆனந்தாக்களிடம்" சென்று ஞானம் பெறுவதும். ஏற்கனவே ஒரு பதிவில் சொன்னபடி, நமக்கு "நல்ல வழி" காட்டுபவர் காவி உடை அணிந்தவராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் ஒருவரது தந்தையாக இருக்கலாம், தாயாக இருக்கலாம், நண்பராக இருக்கலாம், ஆசிரியராக இருக்கலாம். ஒரு வழிப்போக்கனாக கூட இருக்கலாம்.

மேலும் கேள்வி கேட்க தெரிந்த போதே ஒருவனுக்கு ஞானம் பிறந்ததாகத்தான் அர்த்தம். அதற்கு விடையளிப்பவர் அந்த ஞானத்தை புலப்படுத்துகிறார். அவ்வளவே.

//அந்த கருத்துக்கு மாப்பு கேட்டுகிறேன்!//

நண்பர்களுக்குள் மாப்பு அவசியமில்லை தல!


நன்றி!
Maximum India said…
நன்றி ராதாகிருஷ்ணன்!

//ஆன்மிகம் என்றாலே ஒழுங்கீனம் என எனும் எண்ணம் எப்படித்தான் எழுகிறதோ?! //

அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. ஆன்மீகம் என்ற போர்வையில் நடந்து வரும் பல மோசடிகள், ஆன்மீகம் என்ற சொல்லையே கேலிக்குரியதாக்கி விட்டது.

நன்றி!

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

தீவிரவாதிகளை வென்ற கதை - இந்திய கமாண்டோவின் விளக்கம்

நேற்று ஒரு தீவிரவாதி பிடிப் பட்ட கதை பார்த்தோம். இன்று தாஜ் ஹோட்டலில் எவ்வாறு நான்கு தீவிரவாதிகள் ஒழிக்கப் பட்டனர் என்று விளக்கும் இந்திய கமாண்டோவின் விளக்கத்தை பார்ப்போம். முதலில் இந்தியா கமாண்டோக்கள் தாஜ் ஹோட்டல் வந்த கதை புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மும்பையை பயங்கரவாதம் தாக்கியது. அப்போது கேரளாவில் இருந்த மகாராஷ்டிர முதல்வர் மும்பை வரவும் இந்த சூழ்நிலையின் பயங்கரத்தையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளவும் 90 நிமிடம் பிடித்தது .பின்னர் 11.00 அளவில் மத்திய அரசிற்கு போன் பேசிய முதல்வர் கோரியது 200 கமாண்டோக்களை. உடனே அந்நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இந்திய கமாண்டோக்கள் எழுப்பப் பட்டனர். அவர்கள் மும்பை வரத் தயாரான போதுதான் புரிந்தது, அவ்வளவு பேரை மும்பை கொண்டுவர தேவையான சிறப்பு விமானம் சண்டிகரில் உள்ளது என்று. உடனே அந்த விமானியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி தயார் படுத்தி டெல்லியிலிருந்து கமாண்டோக்கள் மும்பை வந்த போது நேரம் காலை 5.25 மணி. அவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு கொண்டு வரப்பட்டு திட்டம் தயாரிக்கப் பட்டு அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7.00 மணி. அதாவது மும்பை தாக்கப் ப...

கம்ப்யூட்டர் கட்சியும் கால்குலேட்டர் கட்சியும்!

மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல் இந்தியா முழுவதும் அனைவரும் தாய்மொழியுடன் ஹிந்தியும் படிக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு அனைவரும் ஹிந்தி படிப்பதன் மூலம் நாட்டில் ஒருமைப்பாடு ஏற்படுவதுடன் ஹிந்தியை ஆங்கிலம் போன்று ஒரு "அறிவு மொழியாக (lingua franca)" மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார். இந்த கருத்தின் மீது பதிவுலகில் ஏராளமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலம் மட்டுமே போதும் என்று ஒரு கட்சியும், ஆங்கிலம் வாசலாக இருக்கும் போது ஹிந்தி ஒரு சன்னலாக இருந்து விட்டு போகட்டுமே என்று இன்னொரு கட்சியும் விவாதித்து வருகின்றன. ஹிந்தி எதிர்ப்பு என்பது எப்போதுமே ஒரு உணர்வு பூர்வமான விஷயமாகவே பலராலும் கருதப் பட்டாலும், அதற்கு அறிவு பூர்வமான, சரித்திர பூர்வமான சில அடிப்படைகள் உண்டு. ஹிந்தி திணிப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு பற்றி எனக்கு தெரிந்த சில கருத்துக்களை இங்கு ஒரு புனைவு வடிவில் அளிக்க முயற்சிக்கிறேன். இப்போது புனைவு ! ஒரு காலத்தில் பரதம்பட்டி என்ற ஒரு கிராமம் இருந்ததாம். அங்கு பல ஆண்டுகள் வரை ஆட்சி செய்து வந்த துரை மகாராஜா ஒரு காலத்தில், அந்த கிராமத்தை ஜனநாயக ...