Friday, March 26, 2010

தாடிக்காரன் தப்பு செஞ்சான்! மீசைக்காரன் மாட்டிக்கிட்டான!


மும்பை தாக்குதலில் கைதாகி விசாரனைக்குள்ளாகி வரும் கசாபின் வழக்கறிஞர் கூறிய மராட்டிய கவிதை இது. கசாப் ஏதோ சினிமா ஆசையில் இந்தியாவிற்கு வந்து ஜுஹு கடற்கரையோரம் சுற்றிக் கொண்டிருந்ததாகவும், அவனை அங்கிருந்து போலீசார் பிடித்து வந்து மும்பை தாக்குதல் வழக்கில் சிக்க வைத்து விட்டதாகவும், மும்பை தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பது போல உலகிற்கு காட்டவே போலீசார் அவனுக்கு எதிராக பொய் சாட்சியங்களை உருவாக்கியிருப்பதாகவும் திறம்பட வாதிட்ட அந்த வழக்கறிஞர் தன துணைக்கு மேற்சொன்ன மராட்டிய கவிதையும் சேர்த்துக் கொண்டார்.

சிங்க மராட்டியர்தம் கவிதைக்கு கேரளத்து தந்தங்கள் பரிசளிப்போம் என்று பாரதியே சொல்லியிருந்தாலும், தீவிரவாதத்தால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப் பட்ட இந்திய மக்களில் எவரேனும் இந்த மராட்டிய கவிதைக்கு வாய் வழி பாராட்டேனும் அளிப்பாரா என்பது சந்தேகமே . சொல்லப் போனால் கசாப்புக்கு கூட இது கொஞ்சம் ஓவர் எனவே தோன்றியிருக்கும். அனைத்து வீடியோ மற்றும் இதர நேரடி ஆதாரங்களுமே சித்தரிக்கப் பட்டவை என்று ஆவேசமாக வழக்கறிஞர் வாதிட்டாலும் அந்த நேரம் கசாப் தலையை நிமிர்த்தக் கூட இல்லை என்று பத்திரிக்கை செய்திகள் கூறுகின்றன.

ஒரு பிரபல மராட்டிய நாடகத்திலிருந்து எடுக்க பட்ட மேற்சொன்ன கவிதையை வழக்கறிஞர் மொழிந்தவுடன், மாண்புமிகு நீதிபதி கேட்டாராம், "இது கூட நாடகமா என்று?"

ஒரு பயங்கரவாதிக்கு கூட தன்னுடைய தரப்பு வாதங்களை நீதிமன்றத்தில் முன்வைக்கவும், ஒரு வழக்கறிஞருக்கு நாட்டின் ஒட்டு மொத்த இறையாண்மையை கையில் எடுத்துக் கொள்ளவும் உரிமை தரும் இந்த தேசத்தின் எல்லையற்ற சுதந்திரம் ஒருபக்கம் புல்லரிக்க வைத்தாலும், இன்னொரு பக்கம் இது போன்ற வாதங்களிலும் உண்மை இருக்குமா என்று ஒரு கணம் யோசிக்க வைக்கும் இந்திய போலீசாரின் மீதான நம்பகத்தன்மையின்மை வேதனையை அளிக்கிறது.

நன்றி!

11 comments:

ராஷா said...

bayangaravathathukku jathiyum ella mathamum ella...

valakaringargal sila nerangalil thAnnudaiya varumaikku poradinalum parava ella bayangaravathathukku athira thayavu seithu porada vendam.

ethula veena pona barathi kavithai vera!?

ராஷா said...

anne yarellam thadikaran, yarellam meesaikaran. thalaipu puriyala konjam sollugalen

nerkuppai thumbi said...

The poetry referred is not appearing on my screen. Please guide me as to how to get it; better, pl give the Tamil version too, if posible.

thanks

LK said...

intha mathiri terroristsku sarba entha vakeelum ajaraga koodathu innum avana tookula podama eduku vachirukanga

Thomas Ruban said...

இந்த தேசத்தில் தான் சாதாரண குற்றம் செய்தவன் கூட தண்டனை அனுபவிக்கிறான் ஏன் தண்டனையே செய்யாதவர்கள் கூட தண்டனை அனுபவிக்கிறார். ஆனால் குற்றம் செய்து விட்டு இவ்வளவு ஆதாரம் இருந்தும் அவனுக்கு எல்லவசதியும் (பிரியாணி உட்பட)செய்து அவனை பாதுகாத்து வேடிக்கை பார்ப்பது நம் தேசத்தில் மட்டும்தான் நடக்கும்.

பதிவுக்கு நன்றி சார்.

Maximum India said...

நன்றி ராஷா!

//bayangaravathathukku jathiyum ella mathamum ella...

valakaringargal sila nerangalil thAnnudaiya varumaikku poradinalum parava ella bayangaravathathukku athira thayavu seithu porada vendam.

ethula veena pona barathi kavithai vera!?//

//anne yarellam thadikaran, yarellam meesaikaran. thalaipu puriyala konjam sollugalen//


யாரோ செய்த தவறுக்கு யாரோ தண்டிக்கப் பட்டார் என்பதை நகைச்சுவையாக குறிப்பதே இந்த மராட்டிய கவிதை. மதம் அல்லது இனம் சம்பந்தப் பட்டதல்ல. எனவே வருத்தம் வேண்டாம்.

நன்றி!

Maximum India said...

நன்றி நெற்குப்பை தும்பி ஐயா!

//The poetry referred is not appearing on my screen. Please guide me as to how to get it; better, pl give the Tamil version too, if posible.//

இந்த கவிதையின் முழுத்தொகுப்பு செய்தித்தாளில் வழங்கப் படவில்லை. ஒரு பிரபல மராட்டிய நாடகத்தில் இருந்து இந்த கவிதை எடுக்கப் பட்டதாக மட்டுமே செய்தி இருந்தது.

நன்றி!

Maximum India said...

நன்றி லக்!
//intha mathiri terroristsku sarba entha vakeelum ajaraga koodathu innum avana tookula podama eduku vachirukanga

intha mathiri terroristsku sarba entha vakeelum ajaraga koodathu innum avana tookula podama eduku வச்சிருகாங்க//ஆயிரம் குற்றவாளி தப்பிக்கலாம் ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப் படக் கூடாது என்பதற்காக சட்டத்தில் வழங்கப் பட்டுள்ள சலூகைகளை குற்றவாளிகளே அதிகம் உபயோகிப்பது வருந்தத்தக்க ஒன்றுதான்.நன்றி!

Maximum India said...

நன்றி தாமஸ் ரூபன்!

//இந்த தேசத்தில் தான் சாதாரண குற்றம் செய்தவன் கூட தண்டனை அனுபவிக்கிறான் ஏன் தண்டனையே செய்யாதவர்கள் கூட தண்டனை அனுபவிக்கிறார். ஆனால் குற்றம் செய்து விட்டு இவ்வளவு ஆதாரம் இருந்தும் அவனுக்கு எல்லவசதியும் (பிரியாணி உட்பட)செய்து அவனை பாதுகாத்து வேடிக்கை பார்ப்பது நம் தேசத்தில் மட்டும்தான் நடக்கும்.//

உண்மைதான் நண்பரே. சட்டப்படிதான் தண்டனை வழங்குவோம் என்பது பாராட்டத்தக்க விஷயம்தான் என்றாலும், சட்ட நடவடிக்கைகளை விரைவு படுத்தி தண்டனையை விரைவாக வழங்குவது சட்டக்காவலர்களின் முக்கிய கடமையாகும்.

நன்றி!

ராஜ நடராஜன் said...

//ஒரு பயங்கரவாதிக்கு கூட தன்னுடைய தரப்பு வாதங்களை நீதிமன்றத்தில் முன்வைக்கவும், ஒரு வழக்கறிஞருக்கு நாட்டின் ஒட்டு மொத்த இறையாண்மையை கையில் எடுத்துக் கொள்ளவும் உரிமை தரும் இந்த தேசத்தின் எல்லையற்ற சுதந்திரம் ஒருபக்கம் புல்லரிக்க வைத்தாலும், இன்னொரு பக்கம் இது போன்ற வாதங்களிலும் உண்மை இருக்குமா என்று ஒரு கணம் யோசிக்க வைக்கும் இந்திய போலீசாரின் மீதான நம்பகத்தன்மையின்மை வேதனையை அளிக்கிறது.//

பெரும்பாலான எஃப்.ஆர்.ஐ மற்றும் இந்திய போலீசின் கேஸ் நீதிமன்றம் சென்றவுடன் வற்புறுத்தி வாங்கிப்பட்டது,அவர்களாகவே எழுதிக் கொண்டு கையெழுத்து வாங்கி கொண்டார்கள் என்பது போன்ற நீதிமன்றம் முன்னால் வெளிவருவதற்கு இந்திய போலீசின் நம்பகத்தன்மை ஒரு புறமிருக்க வழககாடும் வழக்குரைஞரும் கட்சிக்காரரை ஜெயிக்க வைத்து விடவேண்டும் என்ற காசு வாங்கின நியாயத்துக்காகவும் வற்புறுத்தினார்கள்,துன்புறுத்தினார்கள் என்ற பழி போடுவதும் நடைமுறை சாத்தியங்கள்.

இணைந்து செயல்பட வேண்டிய போலீஸ்,நீதித்துறையின் முரண்நிலைகள் சினத்தின் வெளிப்பாடாக சென்னை நீதிமன்ற கலவரத்தில் கண்கூடு.

Maximum India said...

நன்றி ராஜநடராஜன்!

Blog Widget by LinkWithin