Monday, March 29, 2010

டெக்னிகல் அனாலிசிஸ் - ஒரு அறிமுகம்!


ஏற்கனவே நமது பதிவுகளில் விவாதித்தபடி ஒரு பங்கின் ஏற்றத்தாழ்வுகள் பொதுவாக இருவகையாக ஆராயப் படுகின்றன. ஒரு நிறுவனத்தின் அடிப்படை நிதி நிலைமைகளை வைத்து பங்கின் விலையை கணிக்க முயல்வது அடிப்படை ஆராய்ச்சி அல்லது Fundamental Analysis. இன்னொரு வகையான ஆராய்ச்சின் பங்கின் விலைகளின் போக்கினை (Trends) அடிப்படையாக வைத்துக் கொண்டே அந்த பங்கின் வருங்கால போக்கினை அறிய உதவும் தொழிற்நுட்ப வரைபட ஆராய்ச்சி அல்லது Technical Analysis.

சென்ற பதிவில் நண்பர்கள் பார்வைக்காக ஒரு வரைபடம் வழங்கப் பட்டிருந்தது. அந்த வரைபடத்தை பற்றிய விரிவான குறிப்புக்கள் ஏதும் வழங்கப் படவில்லை என்று திரு.நெற்குப்பை தும்பி ஐயா குறிப்பிட்டிருந்தார். எனவே அந்த பங்கினை பற்றி விவரிக்கும் போதே டெக்னிகல் அனலிசிஸ் பற்றிய சில விளக்கங்களை இந்த பதிவில் அளிக்கலாம் என்று நினைக்கிறேன்.

ஏற்கனவே சொன்னபடி ஒரு பங்கின் விலையின் போக்கை வைத்துக் கொண்டே, அந்த நிறுவனத்தில் நிகழும் சில முக்கிய மாற்றங்களை புரிந்து கொள்ள முடியும் என்பதுதான் டெக்னிகல் அனாலிசிசின் அடிப்படை. உதாரணமாக, ஒரு நிறுவனத்தில் நிகழும் முக்கிய மாற்றங்கள் வெளியுலகத்திற்கு அறியவருவதற்கு முன்னரே சில முக்கிய புள்ளிகளுக்கு (Insiders) தெரிய வரும் வாய்ப்புள்ளது. அந்த முக்கிய புள்ளிகள் பங்குசந்தையில் நிகழ்த்தும் சில வர்த்தக நடவடிக்கைகளை பங்கின் விலை மற்றும் வர்த்தக அளவில் ஏற்படும் மாற்றங்களின் மூலம் புரிந்து கொள்ள முயற்சிப்பதுதான் டெக்னிகல் அனாலிசிஸ் ஆகும்.

மேலும் ஒரு பங்கு மேலேறும் போதும் கீழிறங்கும் போதும் ஒருவித சீரான போக்கினை (Prices move in trends) கடைப்பிடிக்கிறது. அந்த சீரான போக்கில் தடை வந்தால் அதுவும் அந்த சீரான போக்கில் பெரியதொரு மாற்றம் (Reversal Pattern) நிகழ்ந்தால், அந்த நிகழ்வு இயல்பை மீறிய நிகழ்வாகவும், பங்கின் போக்கினை திசை திருப்பக் கூடியதாகவும் கருதப் படுகிறது.

உதாரணத்திற்கு, சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்த அரேவா டி அண்ட் டி பங்கின் வரைபடத்தை கூர்ந்து கவனிப்போம்.



இந்த பங்கு தொடர்ந்து பல நாட்கள் கீழ்த்திசையிலேயே பயணித்து வந்திருக்கிறது. இங்கே கீழ்த்திசையில் (Downtrend ) பயணிக்கும் ஒரு பங்கின் விலையின் அலைகளின் அதிக பட்ச விலைகள் (Connecting the highs of the candles)ஒரு நேர்கோட்டின் மூலம் இணைக்கிறோம். அந்த நேர்க்கோடு எவ்வளவு நீளமாக இருக்கின்றது என்பதையும் அந்த நேர்கோட்டை தாண்ட நடந்த முயற்சிகள் எத்தனை தோல்வி அடைந்திருக்கின்றன என்பதையும் பொறுத்து அந்த நேர்கோடு வலிமையானதா என்பது கணிக்கப் படுகிறது. வலிமையான நேர்கோடு முழுமையாக முறியடிக்கப் பட்டால் (Decisive Breakout), அந்த பங்கின் திசை மாறும் வாய்ப்புக்கள் அதிகம் என்று சொல்லலாம்.

இந்த நிறுவனத்தின் பங்குகளின் விலை அளவில் கடந்த வியாழனன்று பெரியதொரு மாற்றம் நிகழ்ந்துள்ளது. விலை மாற்றம் அதிக வர்த்தக அளவுடன் நிகழ்ந்திருந்தால் (Breakout with high volume) அதனை வலுவான மாற்றமாக கருத முடியும். இங்கேயும் அதிக அளவு வர்த்தகம் நடந்திருப்பதன் மூலம், இந்த பங்கு கீழ்த்திசைப் பயணத்தை முடித்துக் கொள்ளும் என்று நம்பலாம். மேலும் இருநூறு நாட்கள் சராசரி விலை அளவையும் (200-day Moving Average) இந்த பங்கு முறியடித்திருப்பதும் கவனிக்கத்தக்க விஷயம்.

பல டெக்னிகல் அனலிஸ்ட்கள் இவ்வாறான பெரிய அளவினான விலை மாற்றம் நிகழும் போது, சில அடிப்படைகளையும் கவனிக்கின்றனர். இந்த பங்கினை பொறுத்த வரை, அரேவா நிறுவனத்திற்கு கிடைத்த பெரியதொரு ஆர்டரும், மின்திட்டங்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப் படும் என்று இந்திய பிரதமர் உறுதியளித்ததும் முக்கிய காரணிகளாக கருதப் படுகின்றன.

இந்த பங்கினை வர்த்தகம் செய்ய விரும்புவர்கள் ஸ்டாப் லாஸ் அமைத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.

அதாவது ஒருவேளை இந்த பங்கு மீண்டும் தனது பழைய கீழ்த்திசை பயணத்தில் இணைத்துக் கொண்டாலோ (Entering into the downward trend) அல்லது இருநூறு நாள் சராசரி அளவுக்கு கீழேயே தொடர்ந்து இரண்டு மூன்று தினங்கள் முடிவடைந்தாலோ, இந்த பங்கினை விட்டு விலகி விடலாம். இப்போதைக்கு இந்த பங்கு Rs.295 அளவுக்கு கீழே முடிவடைந்தால் (Closing prices) இந்த பங்கினை விற்று விடலாம்.

இந்த பங்கிற்கான இலக்கு என்ன என்று பார்ப்போம்.

ஓடும் வரை ஓட்டம் என்பதே எனது பாலிசி. தொடர்ந்து இந்த பங்கு முன்னேறிக் கொண்டே இருக்கும் வரை விற்க வேண்டியதில்லை. மேலே செல்ல செல்ல புதிய புதிய ஸ்டாப் லாஸ் அளவுகள் (Running Stop Loss Limits) வைத்துக் கொள்ள வேண்டும். எப்போது தொடர்ந்து சில தினங்கள் கீழ் முகமாக இருந்து கொண்டு நாம் வகுத்துள்ள ஸ்டாப் லாஸ் லிமிட்டுக்கு கீழே வந்தால் மட்டுமே பங்கினை விற்பனை செய்யலாம்.

எனினும் ஒரு குறிப்புக்காக இந்த பங்கின் அடுத்த இலக்குகள் சுமார் Rs . 325 மற்றும் Rs.360 என்றும் இப்போதைக்கு வைத்துக் கொள்ளலாம். பங்கின் விலை மாற்றம் மற்றும் நிறுவனத்தைப் பற்றி வெளிவரும் முக்கிய செய்திகளின் அடிப்படையில் இலக்குகளையும் ஸ்டாப் லாஸ் லிமிட்டுகளையும் அவ்வப்போது மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.

நன்றி!

டிஸ்கி: இந்த பதிவு தகவல் பரிமாற்றத்திற்கு மட்டுமே. பங்கு முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை.

6 comments:

bandhu said...

I firmly believe and follow Benjamin Graham. "The market is there only to serve you and not teach you. "

My 2 cents..

I have never seen any merit in the technical analysis. It is like 'Experts' in the field. What ever be the outcome, there will always be a 'valid' explanation. but you cannot predict the outcome before it happens!

குறும்பன் said...

அறிமுகத்துக்கு மிக்க நன்றி. சில மென்பொருட்களின் மூலம் சில தரகர்கள் வணிகம் செய்வதாகவும் அட்டவணையை வைத்து அவை தானாகவே வாங்கி விற்பதாகவும் சொல்லப்படுகிறதே அது உண்மையா?

Maximum India said...

நன்றி ரவி!

// I firmly believe and follow Benjamin Graham. "The market is there only to serve you and not teach you. I have never seen any merit in the technical analysis. It is like 'Experts' in the field. What ever be the outcome, there will always be a 'valid' explanation. but you cannot predict the outcome before it happens! "//

எந்த வகையான பங்கு ஆராய்ச்சி என்றாலும், கணிப்பவர் எவ்வளவு பெரிய வல்லுநர் என்றாலும் அடுத்து நடப்பதை துல்லியமாக (முக்கியமாக ஒவ்வொரு முறையும்) கணிப்பது அரிதான காரியமே. பங்கு கணிப்பு என்பது இயற்பியல் போல அல்லாமல் தொடர்ச்சியான ஆய்வுகளால் நிரூபிக்க இயலாத ஒரு அறிவியல் என்பதால் இந்த கருத்து எல்லா வகையான பங்கு ஆராய்ச்சிகளுக்கும் பொருந்தும்.

டெக்னிகல் அனாலிசிஸ் என்பது வெற்றிக்கான பங்கின் தேடலில் இறுதியான விடை அல்ல என்றாலும் பங்கின் மாற்றங்களுக்கான காரணங்களை ஆராய உதவும் ஒரு கருவி ஆகும்.

நன்றி!

Maximum India said...

நன்றி குறும்பன்!

//அறிமுகத்துக்கு மிக்க நன்றி. சில மென்பொருட்களின் மூலம் சில தரகர்கள் வணிகம் செய்வதாகவும் அட்டவணையை வைத்து அவை தானாகவே வாங்கி விற்பதாகவும் சொல்லப்படுகிறதே அது உண்மையா?//



பங்கு வர்த்தகத்துக்கு உதவும் படியாக பல்வேறு மென்பொருட்கள் தற்போது புழக்கத்தில் உள்ளன. ஆனால் ஏற்கனவே கூறியபடி பங்கு வர்த்தகம் இயற்பியல் விதிகளுக்குள் அடங்காது, புழக்கத்தில் உள்ள மென்பொருட்கள் முடிவெடுப்பதற்கு உதவலாமே தவிர, மனித மூளைக்கு மாற்றாக முடியாது.



நன்றி!

Thomas Ruban said...

பகிர்வுக்கு நன்றி சார்.

Maximum India said...

நன்றி தாமஸ் ரூபன்!

Blog Widget by LinkWithin