பத்து வருட கனவு இன்று நனவாகி இருக்கிறது. பல்வேறு போராட்டங்கள், பற்பல முட்டுக்கட்டைகள் பலமடங்காகிப் போன செலவினங்கள் எல்லாவற்றையும் தாண்டி இன்று பந்திரா-ஒர்லி கடல்வழி மேம்பாலம் பொது மக்களுக்காக திறந்து விடப் பட்டிருக்கிறது.
இந்த பாலத்தின் முக்கிய சிறப்புக்கள் இங்கே.
இந்த எட்டுவழி பாலத்தின் நீளம் 5.6 கி.மீ.
மொத்த சிமென்ட் உபயோகம் 90,000 டன். இரும்பு 40,000 டன்
இரும்புக் கம்பியின் நீளம் 38,000 கி.மீ. கிட்டத்தட்ட பூமியின் சுற்றளவு
மைய தூணின் உயரம் 126 மீட்டர்.
பாலத்தைக் கட்டியது ஹிந்துஸ்தான் கன்ஸ்ட்ரக்சன் கம்பெனி. அணுமின் நிலையங்கள் போன்ற உயர் தொழிற்நுட்ப அமைப்புக்களை உருவாக்குவதில் வல்ல தனியார் நிறுவனத்தினர்.
மூவாயிரம் தொழிலாளர்கள் தினந்தோறும் உழைத்து இந்த பாலத்தை உருவாக்கி உள்ளனர்
இந்த கட்டுமானப் பணி பல ஆண்டுகள் தள்ளிப் போனதால் கடும் பொருளாதார நெருக்கடிக்குள் உள்ளானபோதும், மனம் தளராமல் இந்த நிறுவனத்தின் தலைவர் சொன்னது, "இந்த கட்டுமானப் பணி இந்தியாவின் பெருமை. எந்த காரணத்தைக் கொண்டும் இந்த பாலத்தை கட்டுவது நிறுத்தப் பட மாட்டாது."
இந்த வாசகங்களை பத்திரிக்கையில் படித்த நான் இந்த நிறுவனத்தின் பங்குகள் சிலவற்றை வாங்கினேன். லாபத்தை எதிர் நோக்கி அல்ல. ஏதோ ஒரு அணிலின் பங்கு என்று வைத்துக் கொள்ளலாம்.
இந்த நிறுவனத்திற்கும், அதன் தலைவருக்கும், பணியாளர்களுக்கும் நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கும் அதே வேளையில் மனதை நெருடும் ஒரு விஷயத்தையும் இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
அதாவது. இந்த பாலம் வழியாக பயணம் செய்ய செலுத்த வேண்டிய தொகை ரூபாய் ஐம்பது. இது ஒரு பக்க பயணத்திற்கு மட்டும். மேலும் இந்த பாலத்தில் செல்ல இரு சக்கர வாகனங்களுக்கு அனுமதி இல்லை.
சாதாரண மக்கள் ஒவ்வொரு முறையும் ஐம்பது ரூபாய் கட்டி இந்த பாலத்தில் பயணம் செய்வது பொருளாதார ரீதியாக கடினமான ஒரு விஷயம்.
பெருமை மிக்க இந்த பாலத்தில் பயணம் செய்யப் போகிறவர்கள் பெரும்பாலும் மேல் தட்டு மக்கள் மட்டும்தான் எனும் சேதி இன்றைய தேதியில் இந்தியாவில் பெருமைப் பட வைக்கும் விஷயங்கள் அனைத்தும் மேல்தட்டு மக்களுக்கு மட்டும்தான் சொந்தமோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. கூடவே, எல்லாருக்கும் எல்லாமும் சொந்தம் என்ற காலம் எப்போது இந்தியாவில் வரும் என்ற பெருமூச்சையும் எழுப்புகிறது.
நன்றி.
22 comments:
அது என்ன போக்குவரத்து பாலமா இல்ல சுற்றுலாதளமா?
50 ரூபா இருந்தா ஒரு நாள் சாப்பாட்டுக்கு ஆகுன்னு என் பொண்டாட்டி சொல்லுவா!
நன்று.
நேற்றைய லேசர் ஷோ கொண்டாட்ட படங்களையும் இணைத்திருக்கலாம்.
நன்றி வால்பையன்
//அது என்ன போக்குவரத்து பாலமா இல்ல சுற்றுலாதளமா?
50 ரூபா இருந்தா ஒரு நாள் சாப்பாட்டுக்கு ஆகுன்னு என் பொண்டாட்டி சொல்லுவா!//
உண்மைதான் தல.
ஐம்பது ரூபாய் என்பது இந்தியாவில் வாழும் பல குடும்பங்களின் ஒரு நாள் சாப்பாட்டு செலவு.
இங்கு அது சில நிமிடங்கள் சேமிக்க உதவும் செலவு.
எல்லாமே காசுதான்.
நன்றி .
//நன்று.
நேற்றைய லேசர் ஷோ கொண்டாட்ட படங்களையும் இணைத்திருக்கலாம்//
மன்னிக்கவும்
அந்த படங்கள் கைவசம் இல்லை.
இந்த கொண்டாட்டங்களை என்னால் நேரில் பார்க்க முடிந்தது என்றாலும் செல்போன் கைவசம் இல்லாததால் படம் பிடிக்க முடிய வில்லை.
நன்றி யூர்கன்
நல்ல தகவல், இந்த பாலம் இல்லை என்றால் 70 கிமீ சுற்ற வேண்டுமாமே? அதைக்காட்டிலும் 50 ரூபாய் கொடுத்துவிடுவது நேரத்தையும் மிச்சப்படுத்துமே...
அன்புள்ள பீர்!
கருத்துரைக்கு நன்றி!
//நல்ல தகவல், இந்த பாலம் இல்லை என்றால் 70 கிமீ சுற்ற வேண்டுமாமே? அதைக்காட்டிலும் 50 ரூபாய் கொடுத்துவிடுவது நேரத்தையும் மிச்சப்படுத்துமே...//
மன்னிக்கவும். மாற்றுப் பாதையின் தூரம் பத்து கி,மீ க்கும் குறைவே. ஆனால் அந்த பாதையில் உள்ள 23 சிக்னல்கள் , கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஆகியவற்றை தவிர்க்க விரும்புவர்களுக்கு இந்த பாலம் மிகவும் உதவியாக இருக்கும். ஞாயிற்று கிழமைகளில் இந்த பாலத்தில் நேர மிச்சத்திற்கான பயணம் என்று ஏதும் இருக்காது என்று நம்பலாம்.
நன்றி.
இங்க சென்னையில ஈசிஆர் ல காசு வாங்குறதுக்கே செம கடுப்பா இருக்கு எல்லாருக்கும்....
இதுல 50 ரூபா என்பது ரொம்பவே அதிகப்படியாக தோன்றுகிறது....
என்னதான் நேரம் மிச்சம் என்றாலும், மாதம் குறைந்த பட்சம் 2500 ரூபாய் செலவு செய்ய வேண்டும் என்பது, அவர்கள் பட்ஜெட்டில் துண்டல்ல, பெட்சீட்டே விழவைக்கும்....
நன்றி நரேஷ் குமார்
//இங்க சென்னையில ஈசிஆர் ல காசு வாங்குறதுக்கே செம கடுப்பா இருக்கு எல்லாருக்கும்....
இதுல 50 ரூபா என்பது ரொம்பவே அதிகப்படியாக தோன்றுகிறது....
என்னதான் நேரம் மிச்சம் என்றாலும், மாதம் குறைந்த பட்சம் 2500 ரூபாய் செலவு செய்ய வேண்டும் என்பது, அவர்கள் பட்ஜெட்டில் துண்டல்ல, பெட்சீட்டே விழவைக்கும்....//
உண்மைதான் நரேஷ் குமார்! இந்த கட்டணத்தை எதிர்த்து ஒரு தனியார் தொண்டு அமைப்பு பொது நல வழக்கு தொடர்ந்திருப்பதாக பத்திரிக்கை செய்திகள் தெரிவிக்கின்றன.
நன்றி
இரும்பு 40,000 டன், இரும்புக் கம்பியின் நீளம் 38,000 கி.மீ///
Sir, please double confirm. Steel usage only 40,000 Tonnes? Based on above, only one tonne (almost) is the weight for 1km steel rod?
Just curiosity only.. please don't mistake me.
இந்த வாசகங்களை பத்திரிக்கையில் படித்த நான் இந்த நிறுவனத்தின் பங்குகள் சிலவற்றை வாங்கினேன். லாபத்தை எதிர் நோக்கி அல்ல. ஏதோ ஒரு அணிலின் பங்கு என்று வைத்துக் கொள்ளலாம்.
Good.
இதெல்லாம் ரொம்ப கொடுமை
டீவில அன்னை சோனியா இந்தப்பாலத்த நாட்டுக்கு அர்ப்பனிக்குராங்கன்னு சொன்னாங்க இது தானா நாட்டுக்கு அர்ப்பனிக்குரது :-((
இதுக்கும் சேத்து நம்ம வரிப்பணத்த பயன்படுத்திருப்பாங்க.அதுல நாம போக 50 ருவா பணம் வேற.
என்ன கொடும சார் இது.
//கடும் பொருளாதார நெருக்கடிக்குள் உள்ளானபோதும், மனம் தளராமல் இந்த நிறுவனத்தின் தலைவர் சொன்னது, "இந்த கட்டுமானப் பணி இந்தியாவின் பெருமை. எந்த காரணத்தைக் கொண்டும் இந்த பாலத்தை கட்டுவது நிறுத்தப் பட மாட்டாது."//
இந்த நிறுவனத்தின் தலைவர்க்கு ஒரு சல் சளுஇட்.இவரை போல நாட்டில் சில பேர் நினைப்பதால் தான் நாடு
இந்த நிலைளவது இருக்கிறது.
இந்த அருமையான பதிவு எழதிய உங்களுக்கும் நன்றி.
இந்த நிறுவனத்தின் பங்குகள் 25என்னிடமும் உள்ளது.இது போன்ற உலகத்தில் உள்ள ஐந்து பாலங்களில் இதுவும் ஒன்று.
படங்கள் நன்றாக வந்துள்ளது நன்றி..
//அது என்ன போக்குவரத்து பாலமா இல்ல சுற்றுலாதளமா?
50 ரூபா இருந்தா ஒரு நாள் சாப்பாட்டுக்கு ஆகுன்னு என் பொண்டாட்டி சொல்லுவா!//
ரோஜா சேடியில் சில முட்களும் இருக்கும்.
நன்றி..
//Sir, please double confirm. Steel usage only 40,000 Tonnes? Based on above, only one tonne (almost) is the weight for 1km steel rod?
Just curiosity only.. please don't mistake me.//
வாங்க ராஜா சார் வாங்க! இத்தனை நாள் எங்கே போயிருந்தீர்கள்?
கம்பியின் எடை கம்பியின் நீளம் மற்றும் விட்டம் சம்பந்தப் பட்டதும் கூட.
ஸ்டீல் உபயோகம் பற்றி பத்திரிக்கையில் படித்ததுதான். இருந்தாலும் உங்களுக்காக இன்னொருமுறை சரி பார்த்து சொல்கிறேன்.
பல நாள் கழித்து வந்து பின்னூட்டம் இட்டதற்கு நன்றி.
நன்றி சிங்காரவேலு!
அன்புள்ள கார்த்திக்!
//இதெல்லாம் ரொம்ப கொடுமை
டீவில அன்னை சோனியா இந்தப்பாலத்த நாட்டுக்கு அர்ப்பனிக்குராங்கன்னு சொன்னாங்க இது தானா நாட்டுக்கு அர்ப்பனிக்குரது :-((
இதுக்கும் சேத்து நம்ம வரிப்பணத்த பயன்படுத்திருப்பாங்க.அதுல நாம போக 50 ருவா பணம் வேற.
என்ன கொடும சார் இது.//
உண்மைதான் கார்த்திக். நான் பதிவிலேயே சொல்லியபடி இது மனதை நெருடுகிற விஷயம்தான்.
நன்றி.
//இது போன்ற உலகத்தில் உள்ள ஐந்து பாலங்களில் இதுவும் ஒன்று.//
தகவலுக்கு நன்றி தாமஸ் ரூபன்!
//ரோஜா சேடியில் சில முட்களும் இருக்கும்.//
ஆனால் ரோஜாவை விட முற்கள் பெரிதாக இருக்க கூடாது அல்லவா?
நன்றி தாமஸ் ரூபன்!
இதெல்லாம் என்னங்க சாதனை????
பிசாத்து 1600 கோடி செலவு...
எங்க ஆளு மாயாவதி சிலை வைக்கறதுக்கே 1000 கோடி செலவு பண்ணியிருக்காங்க பாருங்க...
இந்த லட்சணத்துல இவங்க எல்லாம் நிதித்திட்டம் போட்டு மக்களோட பணத்தை ஒழுங்கா செலவு செய்யப் போறாங்களாம்
விளங்குனாப்லதான்
//எங்க ஆளு மாயாவதி சிலை வைக்கறதுக்கே 1000 கோடி செலவு பண்ணியிருக்காங்க பாருங்க...//
''தனக்குத்தானே சிலை வைத்துக் கொண்ட தானைத் தலைவி வாழ்க!''
இப்படி சொல்றதுக்கும் ஆள் இருக்கும் வரை நம்ம நாட்ட ஒண்ணும் பண்ண முடியாது போங்க!
நன்றி
//Blogger யூர்கன் க்ருகியர்..... said...
நன்று.
நேற்றைய லேசர் ஷோ கொண்டாட்ட படங்களையும் இணைத்திருக்கலாம்.//
லேசர் ஷோ படங்கள் ling
http://sea-link.blogspot.com/
நன்றி .
தகவலுக்கு மிக்க நன்றி தாமஸ் ரூபன்!
குறிப்பிட்ட வலைப்பூவில் உள்ள புகைப் படங்கள் அருமை!
நன்றி.
Post a Comment