Thursday, March 18, 2010

பெர்சிஸ்டேன்ட் சிஸ்டம்ஸ் - முதலீடு செய்யலாம்.


மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான "பெர்சிஸ்டேன்ட் சிஸ்டம்ஸ் லிமிடெட்" தனது பங்குகளை வெளியிட முடிவு செய்துள்ளது. நாளைய தேதியில் (19.03.2010) முடிவடையும் இந்த வெளியீட்டின் (IPO) விலை Rs.290-310 என்ற அளவில் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. மென்பொருட்களை அவுட்சோர்சிங் (Outsoruced Software Product Development - OPD) செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ள இந்த நிறுவனம் மற்ற தகவல் தொழிற்நுட்ப நிறுவனங்களிடம் இருந்து சற்று மாறுபட்டு காணப் படுகிறது. இந்த நிறுவனத்தின் நிதி நிலை அறிக்கைகள் சிறப்பாகவே (உலகப் பொருளாதார பின்னடைவு ஏற்பட்ட 2009 ஆம் ஆண்டை தவிர) காணப் படுகிறது. இதன் விலை நிர்ணயமும் ஏற்கனவே வணிகமாகி வரும் மற்ற பெரிய மென்பொருள் நிறுவனங்களை விடவும் கவரக் கூடிய வகையில் உள்ளது.

ஓரளவுக்கு மதிப்பில் சிறந்த இந்த நிறுவனத்தின் மிகச் சிறிய அளவிலான புதிய பங்கு வெளியீடு பலமடங்கு வரவேற்பை பெறும் என்று நம்புகின்றேன். சந்தையிலும் மென்பொருட் நிறுவனங்களின் பங்குகளுக்கு தற்போது நல்ல வரவேற்பு காணப் படுவதும், இந்திய மென்பொருட் நிறுவனங்கள் பெருமளவுக்கு சார்ந்திருக்கும் அமெரிக்க பொருளாதாரம் சற்று மேம்பட்டு வருவதும் நல்ல விஷயங்கள். அதே சமயத்தில் ருபாய் மதிப்பு அதிகரித்து வருவதும், மென்பொருட் நிறுவனங்களுக்கான வரிச்சலுகைகள் (Tax Holidays for Software Technology Parks) திரும்பப் பெறப் படக்கூடிய சாத்தியக் கூறுகள் அதிகரித்து வருவதும் எதிர்மறை விஷயங்கள்.

ஆக மொத்தத்தில் சிறப்பியல் கூறுகள் கொண்ட இந்த நிறுவனத்தில் தொலை தூர நோக்கிலும் அல்லது லிஸ்டிங் லாபங்களை கருத்தில் கொண்டும் முதலீடு செய்யலாம் என்று நம்புகிறேன்.

வாழ்த்துக்கள்!

நன்றி.

6 comments:

பொதுஜனம் said...

பெர்சிஷ்டேன்ட் - பெயரே நம்பிக்கை தருகிறது. - முதன் முறையாக ஒரு நிறுவனத்தை அழுத்தமாக பரிந்துரை செய்துள்ளீர்கள். முயற்சிக்கிறோம் .பங்கு சந்தையில் நோண்டி நோங்கேடுக்கும் பலர் மததியில் ஏதோ கொஞ்சம் பங்கெடுக்க விரும்பும் சிறு(வாடு) முதலீட்டளர்கள் கவனிக்கவும்.அனேகமாக 2010 ட்ரேடிங் வருடமாக தான் இருக்கும் என நிபுணர்கள் சொல்கிறார்கள். இருப்பினும் நல்ல பங்குகளை சாவகாசமாக வாங்கலாம்.மாயாவதி கழுத்தில் போடுவதற்கு பதில் இந்திய முன்னேற்றத்தில் பங்கு கொள்ளும் நிறுவனத்தில் முதலீடு செய்யலாம்.நமக்கு நம் சந்ததியினர் சிலை வைப்பார்கள்.

MCX Gold Silver said...

nanri talaiva

Thomas Ruban said...

உங்கள் பரிந்துரைக்கு நன்றி சார்.ஆனால் நல்ல நிறுவனமான N.T.P.C யின் மறுபங்கு IPO வெளியீடு தோல்வி கோஞசம் யோசிக்கவைக்கிறது.

பகிர்வுக்கு நன்றி சார்.

Maximum India said...

நன்றி DG !

Maximum India said...

நன்றி தாமஸ் ரூபன்!

//.ஆனால் நல்ல நிறுவனமான N.T.P.C யின் மறுபங்கு IPO வெளியீடு தோல்வி கோஞசம் யோசிக்கவைக்கிறது.
உங்கள் பரிந்துரைக்கு நன்றி சார்.ஆனால் நல்ல நிறுவனமான N.T.P.C யின் மறுபங்கு IPO வெளியீடு தோல்வி கோஞசம் யோசிக்கவைக்கிறது.//

NTPC நிறுவனத்துடன் பெர்சிஸ்டேன்ட் சிஸ்டம்ஸ் நிறுவனத்தை ஒப்பிட முடியாது. ஏனென்றால் முன்னதன் பங்குகள் ஏற்கனவே சந்தையில் வர்த்தகமாகி வந்தன என்பதுடன் அந்த பங்கின் சந்தை உத்தேச மதிப்பின் (Market Value) அளவிலேயே வெளியீட்டு விலை நிர்ணயம் செய்யப் பட்டது. ஆனால், பெர்சிஸ்டேன்ட் நிறுவனத்தின் பங்குகளின் விலை அதன் ஒத்த நிறுவனங்களின் விலையை விட குறைவாகவே நிர்ணயிக்கப் பட்டது (Priced at a discount to its value) சாதகமான ஒன்றாகும்.

ஒரு பங்கினை எப்படி மதிப்பீடு செய்ய வேண்டும் என்பதை பின்னர் ஒருமுறை நேரம் கிடைக்கும் போது விளக்க முயற்சிக்கிறேன்.

நன்றி!

Maximum India said...

நன்றி பொதுஜனம்!

Blog Widget by LinkWithin