Skip to main content

Posts

Showing posts from August, 2009

பங்கு சந்தை - இப்போது ஒரு சுவாரஸ்யமான கட்டத்தில்!

தவறிய பருவமழை, உயரும் வட்டி வீதங்கள், மிக அதிக அளவிலான விலைவாசி உயர்வு, குறைந்து போன ஏற்றுமதி, முடங்கிப் போன தொழிற்துறை இப்படி பல பாதக அம்சங்கள் ஒரு பக்கம். பொருளாதார சிக்கலில் இருந்து மீண்டு வரும் மேற்கத்திய நாடுகள், டாலர் தொடர்ந்து சந்தைக்குள் இறக்கப் படும் என்ற அமெரிக்காவின் உறுதி, உயர்ந்து வரும் பொருட்விலைகள் (Commodity Prices) என சந்தைக்கு சாதகமான அம்சங்கள் இன்னொரு பக்கம். இடையே சீனா ஏதேனும் பொருளாதார வெடிகுண்டை போடுமா என்ற பயம் ஒரு பக்கம். இருந்தாலும், ஏதேனும் நடந்து சந்தைகள் 2008 ஆண்டு உயரத்திற்கு போய் விடுமா என்ற ஆசையும் இன்னொரு பக்கம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. பல பெரிய பங்குகள், பழைய உயர்ந்த நிலைக்கு மிக அருகில் வந்து விட்டாலும், பல சிறிய மற்றும் இடைநிலை பங்குகள் முதலீட்டாளர்களுக்கு ஆவலை தூண்டும் விலை அளவிலேயே இருக்கின்றன. வெளிநாட்டு டாலர் வரத்து முன்போல இல்லையென்றாலும், உள்ளூர் நிறுவனங்களும் சிறிய முதலீட்டாளர்களும் அதிக அளவில் முதலீடு செய்து வருகின்றனர். இவ்வாறு வெளியூர் பணவரத்து குறைந்து உள்ளூர் பணவரத்து அதிகம் ஆவது சந்தைகளின் வெற்றிப்பயணம் கடைசி கட்டத்திற்கு வந்து விட்...

பங்குசந்தை வெற்றிப்பயணம் - ஒரு நடைமுறை பயிற்சி!

பங்குசந்தை நுணுக்கங்களை ஆரம்ப அடிப்படையில் இருந்து அறிந்து கொள்வதை விட சில நேரடி பங்கு சந்தை அனுபவங்கள் மூலம் புரிந்து கொள்வது மனதில் இன்னும் ஆழமாக பதியும் என்று நம்புகிறேன். நேரடி சந்தை அனுபவங்களின் வழியாக அவ்வப்போது எழும் ஏராளமான சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ள பாட நூல் கல்வி மற்றும் விவரமறிந்தவர்களின் வழிகாட்டல் (Guidance) உதவி செய்யும் என்றும் நினைக்கிறேன். என்னுடைய தனிப் பட்ட அனுபவத்தில் கூட ஒரு வித ஜிக் ஜாக் (Zig Zag) கல்வி முறையே அதிக உதவியாக இருந்திருக்கிறது. இந்த பதிவை தொடர்பவர்களில் பலர் பங்குச்சந்தை சாதனையாளர்களாக விரும்புவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களுக்கான ஒரு பயிற்சிக் களமாக இந்த பதிவை அர்ப்பணிக்கிறேன் பங்குசந்தை வெற்றிப் பயணத்திற்கான மூன்று விதமான பாதைகளை நாம் இதுவரை பார்த்திருக்கிறோம். (பார்க்காதவர்கள் இங்கு சுட்டவும்) இப்போது பார்க்கும் பாதை ஒரு உப பாதை என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். காரணம், இந்த பாதையை மற்ற பாதைகளுக்கு மாற்று என்றோ எப்போதுமே இந்த பாதை திறந்திருக்கும் என்றோ சொல்ல முடியாது. சரியாக முயற்சித்தால் வெற்றி சதவீதம் அதிகமாக இருக்கும் என்...

பங்குச்சந்தை வெற்றிப் பயணம்! முகமறியாதவர்களின் மூன்றாவது பாதை!

பங்குசந்தையில் வெற்றி பெற்றவர்கள் என்றால் பலருக்கும் வாரன் பபெட் போன்றவர்களும் மும்பை பங்கு தரகர்களும் மட்டும்தான் மனக் கண் முன்னே வருவார்கள். அதிமேதாவித்தனம் அல்லது செய்திகளை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் சாமர்த்தியம் இருந்தால் மட்டுமே பங்குசந்தையில் வெற்றி பெற முடியும் என்ற எண்ணமும் பலருக்கும் உண்டு. காதை சுற்றி மூக்கை தொடுவதை தவிர்த்து, மிக மிக எளிமையான பாதை ஒன்றில் பயணித்து பங்கு சந்தையில் வெற்றி பெற்ற மனிதர்கள் நம்மிடையே ஏராளமானவர்கள் இருக்கின்றார்கள் என்ற செய்தி உங்களுக்கு சற்று ஆச்சரியமாகக் கூட இருக்கலாம். இது மட்டுமல்ல, பங்குசந்தையில் பெரிய வெற்றிகள் குவித்த, "பங்குச்சந்தை விற்பன்னர்கள்" என்று அழைக்கப் படும் பல பெரியவர்கள் கூட இந்த பாதையைத்தான் தனது பங்கு சந்தை பயணத்தின் துவக்கத்தில் மட்டுமல்ல வளர்ந்த பிறகும் பெரும்பாலான தருணங்களில் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள் என்பது இன்னும் கூட ஆச்சர்யமாக இருக்கலாம். வெற்றி சதவீதம் மிக மிக அதிகமான இந்த பாதையை பற்றிய சில விவரங்களை இங்கு பார்க்கலாம். இந்த பயணிகள் தனித்தே பயணம் செய்கிறார்கள். இவர்கள் திட்டம் மிக எளிமையானது, தன்னை சு...

பச்சை முளைகளும் மஞ்சள் களைகளும்!

இப்போதெல்லாம் பொருளாதார ஜாம்பவான்கள் அதிகம் உபயோகப் படுத்தும் வார்த்தைகளில் முக்கியமான ஒன்று பச்சை முளைகள் (Green Shoots). அமெரிக்காவில் வீடுகள் அதிக விற்பனை, மேற்கு ஐரோப்பாவில் தொழில் வளர்ச்சி, ஜப்பான் பொருளாதார வளர்ச்சி போன்ற பொருளாதார மீட்சிக்கான அறிகுறிகளே இந்த பச்சை முளைகள். இந்த முளைகள் துளிர்த்து, செழித்து செடிகளாக மரங்களாக வளர்ந்து கனிகளையும் காய்களையும் தருமா? அல்லது டாலர் பெருவெள்ளத்தில் அழுகி போய் விடுமா? அல்லது, முளைகளுக்கான நீரை தானே உறிஞ்சி கொண்டு, மிகப் பெரிய அளவில் உலக சந்தைகளில் வளரும் "பப்புல்கள்" எனும் களைகள் உலக பொருளாதாரத்தை அதல பாதாளத்திற்கு கொண்டு செல்லுமா? இவையே இப்போதைக்கான கேள்விகள். சென்ற வாரம் வெளிவந்த பெரும்பாலான உலக பொருளாதார தகவல்கள் ஒரு துரித மீட்சிக்கான அறிகுறிகளை கொண்டிருந்தன. அதே சமயத்தில் இந்தியாவில் பருவமழை தவறியதும் சீனாவில் ஏற்பட்டு வரும் ஒரு வித பப்புளும் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்தியாவில் பருவமழை தவறினாலும், டாலர் மழை இன்னும் பல வருடங்கள் இதே போல தொடரும் என்ற பாணியிலான தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளிவந்த வண்ணம் உள்ள...

பங்குசந்தை வெற்றிப் பயணம் - இன்ட்ரெஸ்டிங்கான இரண்டாவது பாதை

எல்லாருமே வாரன் பபெட் போல இருந்து சந்தையில் என்றைக்காவது ஒரு நாள் மட்டுமே பங்கு வர்த்தகம் செய்தால் சந்தை எப்படி இயங்குவது? ஒரு குறிப்பிட்ட நிலைதான் வாங்குவதற்கு அல்லது விற்பதற்கு சரியான அளவு என்றால் மற்ற நேரங்களில் யாரால் வர்த்தகம் செய்ய முடியும்? வாங்குவதற்கு சரியான விலை என்று எல்லாருமே ஒரு விலையை நினைத்தால் அந்த விலையில் யார்தான் விற்பார்கள்? நடைமுறையில், சந்தையின் எல்லா தருணங்களிலும் வாங்குபவர்களும் இருக்கின்றனர். விற்பவர்களும் இருக்கின்றனர். இவர்களில், தொழில் முறை தின வர்த்தகர்கள் என்று ஒரு பிரிவினர் இருக்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் பங்குதரகர்களின் அலுவலகத்திலேயே அமர்ந்து கொண்டு பங்கு வர்த்தகம் செய்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் அந்தந்த தருணத்தில் கிடைக்கப் பெறும் தகவல்களின் அடிப்படையிலும் தொழிநுட்ப வரைபடங்களின் அடிப்படையிலும் (Technical Analysis) சந்தையின் போக்கின் (Trend) அடிப்படையிலும் இயங்குகின்றனர். (ஒரு நிமிடம் என்பது இவர்களைப் பொறுத்த வரை மிகப் பெரிய கால இடைவெளி.) இவர்களின் ரியாக்சன் மிக வேகமானதாக இருக்கும். அந்த வேகம்தான் அவர்களுடைய பலமாகும். இவர்களின் பாணியை நம்மில் பெ...

முத்தான மூன்று பாதைகளில் முதல் பாதை - புத்திசாலிகளின் பாதை

பங்குச்சந்தையில் வெற்றிகரமாக பயணிக்க மூன்று பாதைகள் உண்டு. அந்த மூன்று பாதைகளில் முதல் பாதையை பற்றிய மேலோட்டமான விபரங்கள் இங்கே வழங்கப் படுகின்றன. வாரன் பபெட், டெம்ப்லெட்டான் போன்ற, மிகப் பெரிய சாதனை படைத்த புத்திசாலிகள் தேர்ந்தெடுத்த பாதை இது. இந்த பாதையில் பயணம் செய்ய வேண்டுமானால், பங்குசந்தைகள் பற்றி மட்டுமல்ல பங்கினை சார்ந்த நிறுவனத்தைப் பற்றியும் அதன் துறையைப் பற்றியும் ஓரளவுக்கு நல்ல ஞானம் இருக்க வேண்டும். வாரன் பபெட் ஒரு முறை தனது பங்கு தேர்வைப் பற்றி சொல்லும் போது, தான் ஒரு பங்கில் முதலீடு செய்யும் போது, அந்த நிறுவனத்தின் தொழிலில் முதலீடு செய்வது போல உணர்வதாக கூறினார். உதாரணத்திற்கு நீங்கள் ஒரு இரண்டு சக்கர வாகன நிறுவன பங்கில் (உதாரணமாக ஹீரோ ஹோண்டா) முதலீடு செய்ய விரும்புகிறீர்கள் என்றால், அந்த நிறுவனத்தின் செயல்பாட்டில், லாப நஷ்டங்களில் நீங்களும் பங்கு பெறுகிறீர்கள் என்று பொருள். ஒரு நிறுவனத்தின் உரிமைதாரர் நீங்கள் ஆக வேண்டுமானால், அந்த நிறுவனத்தின் பலங்கள் மற்றும் பலவீனங்கள், வாகனத்துறையில் தற்போது உள்ள சாதக பாதகங்கள், அந்த நிறுவனத்திற்கான தனித்துவ மகிமைகள் ஆகியவற்றை பற்றிய...

வெற்றி பெறும் பங்குகளை தேர்வு செய்வது எப்படி?

இன்றைக்கு பலருக்கும் பங்கு சந்தையில் முதலீடு செய்வதில் ஆர்வம் இருக்கிறது. ஆனால் பங்கு சந்தை பலருக்கும் என்றைக்கும் புதிரான புதிராகவே இருக்கிறது. அது எப்படி, ஒரு பங்கு சரியாக கீழே வருவதற்கு சில நாட்கள் முன்னர் மட்டுமே நாம் முதலீடு செய்கிறோம் என்ற கேள்வி கூட பலருக்கு எழும்புகிறது. எனக்கும் கூட அது போன்ற கேள்விகள் பல எழும்பியதுண்டு. ஊடகங்களும் அதில் தோன்றும் நிபுணர்கள் என்று அழைக்கப் படுபவர்களும் தினந்தோறும் ஏதாவது ஒரு பங்கினை ஏதாவது ஒரு விலையில் வாங்க சொல்கிறார்கள். அவர்கள் பரிந்துரை செய்த பங்குகளின் வெற்றி சதவீதம் மிகக் குறைவாகவே உள்ளது. குறிப்பாக பங்கு வணிகத்தின் நம்பர் ஒன தொலைகாட்சியானது பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் இருபத்து ஒன்றாயிரம் இருக்கும் போது பல பங்குகளை பரிந்துரைத்ததையும் அதே சென்செக்ஸ் எட்டாயிரம் புள்ளிகள் இருக்கும் போது ஆறாயிரம் புள்ளிகள் வரை சரிய வாய்ப்புள்ளதாக பல முறை சொன்னதையும் யாரும் மறக்க முடியாது. இந்தியாவின் வெற்றிகரமான முதலீட்டாளரான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா அவர்களை ஒரு முறை நேரில் சந்தித்த போது, சில 'நல்ல' பங்குகளை பரிந்துரைக்கும் படி கேட்டுக் கொண்டேன். அப்...

பானா சூனா! போ போ! போயிட்டே இரு!

எதிர்பாராத வீதமாக அமெரிக்காவில் வேலை இழப்பு விகிதம் குறைந்து போக, அமெரிக்காவின் மீட்சி விரைவாக இருக்கும் என்ற நம்பிக்கை உருவான அதே தருணத்தில், அமெரிக்க மத்திய வங்கி தனது "குறைந்த வட்டி கொள்கையை" விரைவிலேயே மறுபரிசீலனை செய்யுமோ என்ற பயமும் கூடவே எழுந்தது. டாலர் வரத்து என்பது இந்திய பங்கு சந்தையின் வளர்ச்சியின் முக்கிய காரணியாக அறியப் படுவதால், டாலர் வரத்தில் ஏற்படும் சிறு தடங்கல்களும் நமது சந்தையின் மனநிலையை பாதிக்கின்றன. மேலும் தவறிப் போன பருவ மழையின் பாதிப்பு ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சியில் பெரிதாக இருக்குமோ என்ற அச்சமும் சேர்ந்து கொள்ள, சென்ற வாரத்தின் முதல் மூன்று நாட்கள் நமது சந்தை தடுமாறிக் கொண்டே இருந்தது. அமெரிக்க மத்திய வங்கி, தனது குறைந்த வட்டிக் கொள்கையை இன்னும் பல காலம் நீட்டிக்க போவதாகவும், சந்தையில் மேலும் $ 300 பில்லியன் (சுமார் Rs.15,00,0000 கோடி) இறக்கி விடப்போவதாகவும் அறிவித்தது சந்தையை நிம்மதி பெருமூச்சு விடச் செய்தது. மேலும் ஜெர்மனி பொருளாதாரத்தில் எதிர்பாராமல் ஏற்பட்ட வளர்ச்சி, உலக பொருளாதாரம் கூடிய சீக்கிரமே தளர்ச்சியில் இருந்து மீளும் என்ற நம்பிக்கைய...

திருப்பல்லாண்டு

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு* பலகோடி நூறாயிரம் மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா!* உன் சேவடி செவ்வித்திருக்காப்பு அடியோ மோடும் நின்னோடும் பிரிவின்றி யாயிரம் பல்லாண்டு* வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு* வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு* படைபோர் புக்கு முழங்குமப் பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே. வாழாட்பட்டு நின்றீருள்ளீரேல் வந்து மண்ணும் மணமும் கொண்மிண்* கூழாட்பட்டு நின்றீர்களை யெங்கள் குழுவினில் புகுத லொட்டோம்* ஏழாட்காலும் பழிபபிலோம் நாங்கள் இராக்கதர்வாழ் இலங்கை* பாழாளாகப் படைபொருதானுக்குப் பல்லாணடு கூறுதுமே.* ஏடுநிலத்தில் இடுவதன் முன்னம் வந்து எங்கள் குழாம் புகுந்து* கூடுமனமுடையீர் வரம்பொழி வந்தொல்லைக் கூடுமினோ* நாடுநகரமும் நன்கறிய நமோ நாராயணா வென்று* பாடுமனமுடைப் பத்தருள்ளீர்! வந்து பல்லாணடு கூறுமினே. அண்டக்குலத்துக் கதிபதியாகி அசுரர் இராக்கதரை* இண்டைக்குலத்தை எடுத்துக் களைந்த இருடிகேசன் றனக்கு* தொண்டைக்குலத்தில் உள்ளீர்!வந்தடி தொழுது ஆயிரநாமம் சொல்லி* பண்டைக்குலத்தைத் தவிர்ந்து பல்லாணடு பல் லாயிரத்தாண்டென்மினே. எந்தை தந்தை தந்தை தந்தை தம்மூத்தப்...

அதிசய கலைஞரின் அற்புத (பென்சில்) ஓவியங்கள்!

என்னைக் மலைக்க வைத்தது கடைசி காட்சிதான். உங்களுக்கு எப்படி? எல்லாமே இருந்தும் நாம் ஏதேதோ குறை சொல்கிறோம். ஊனங்கள் மனதில் மட்டும்தான். வெளியில் இல்லை என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் இவர் அல்லவா? நன்றி! (உபயம் : நெற்குப்பை தும்பி ஐயா அவர்களின் மின்னஞ்சல் )

கிருஷ்ண விஜயம்!

விதி வலியது பன்றி காய்ச்சல் பற்றிக் கொள்ளுமோ படபடவென்ற மனதுடன் பைக்கில் அவன் பயங்கர வேகத்தில் பஸ் எதிரே! கிருஷ்ண விஜயம்! கோகுலாஷ்டமி காலை கைகளில் கோலமாவு காதுக்குள் ஓலம் கண்கள் திரும்பின தொலைக்காட்சியில் செய்திகள் பன்றி காய்ச்சல் பயங்கர வேகத்தில் பரவுதல் பற்றி கிருஷ்ணர் பாதம் வாசலில் இடுமுன் மனம் கேட்கின்றது அவருக்கும் இருக்குமோ? உலக மயமாக்கம் மெக்சிகோவில் பன்றி பண்ணைகள் இந்தியாவில் பன்றி காய்ச்சல் இதுதான் உலக மயமாக்கலோ? வராகம் ஏழு மலை ஏழு கடல் ஏழு கண்டம் தாண்டி வரும் இதுவும் ஒரு 'வராக' அவதாரமோ? நன்றி!

கதையல்ல நிஜம்!

அந்த குழந்தையின் வயது இரண்டு. ஆகஸ்ட் இரண்டாம் தேதி லேசான காய்ச்சல் வந்தது. இரண்டு நாட்கள் கழித்து உடலில் தடிப்புக்கள் தோன்றின. அந்த குழந்தையின் பெற்றோர் முதலில் உள்ளூர் மருத்துவமனையை தொடர்பு கொண்டனர். இது பன்றி காய்ச்சலின் அறிகுறியாக இருக்கலாம் என்று அந்த மருத்துவமனையினர் குறிப்பிட்ட சேவை மையத்தின் தொலைபேசி எண்ணை கொடுத்தனர். அந்த சேவை மையத்தை தொடர்பு கொண்ட போது குழந்தைக்கு பன்றி காய்ச்சலின் ஒரே ஒரு அறிகுறி மட்டுமே இருக்கின்றது என்று வேறொரு தொலைபேசி எண்ணை அந்த மையத்தினர் கொடுத்தனர். அந்த எண்ணில் தொடர்பு கொண்ட போது, குழந்தையின் உடல் வெட்ப நிலை நாற்பது டிகிரி சென்டி கிரேடை தாண்டினால் மீண்டும் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொண்டனர். அப்படியே நாற்பது டிகிரி சென்டி கிரேடை தாண்டியது குழந்தையின் பெற்றோர் அந்த மையத்தை மீண்டும் தொடர்பு கொண்டனர். உடனடியாக அங்கு வந்த மருத்துவக் குழுவினர் அந்த குழந்தையை பரிசோதித்த பிறகு தமி ப்ளு மருந்தினை கொடுத்த பிறகு திரும்பி சென்று விட்டனர். ஒரு மணி நேரம் கழித்த பிறகு அந்த குழந்தையின் கண்கள் வெளிர்ந்து விட பயந்து போன பெற்றோர் அந்த மையத்திடம் மறுபடியும் தொடர்பு கொ...

NHPC நிறுவன பங்கு வெளியீடு (IPO) - முதலீடு செய்யலாமா?

வெகு நாட்களுக்கு பிறகு ஒரு அரசு நிறுவனத்தின் அதுவும் ஒரு மினி-ரத்னா தகுதி கொண்ட ஒரு பெரிய நிறுவனத்தின் பங்குகள் சந்தையில் புதிதாக வெளியிடப் பட உள்ளன. இந்த நிறுவனத்தைப் பற்றியும் ]பங்கின் விலை நிர்ணயம் பற்றியும் சில தகவல்கள் பகிர்தலுக்காக இங்கே. NHPC அதாவது தேசிய நீர்மின் உற்பத்தி நிறுவனம் 1975 ஆம் ஆண்டு நாட்டின் நீர்சக்தியை திறம்பட உபயோகிப்பதற்கான நோக்கத்துடன் உருவாக்கப் பட்டது. இந்த நிறுவனம் இது வரை 13 மின் உற்பத்தி நிலையங்களை அமைத்து சுமார் 5100 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி திறன் பெற்றுள்ளது. தற்போது 11 மின் உற்பத்தி நிலையங்களை புதிதாக அமைத்து வருவதன் மூலம் இந்த நிறுவனம் இன்னும் சில ஆண்டுகளில் சுமார் 4600 மெகாவாட் அளவுக்கு கூடுதலாக மின் உற்பத்தி திறனை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்க படுகிறது. இந்த பதினொரு மின் நிலையங்களில் ஏழு நிலையங்களின் மூலம் மட்டும் சுமார் 3240 மெகாவாட் அளவுக்கான மின்சாரம் பெப்ரவரி 2011 ஆம் ஆண்டுக்குள் உற்பத்தி செய்ய முடியும் என்றும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனம் இப்போது சுமார் 168 கோடி பங்குகளை ஏலக்கணக்கில் (BOOK BUILDING) சந்தையில் வெளியிடுகி...

அசலூர் நல்ல செய்தியும் உள்ளூர் கெட்ட செய்தியும்!

முதலில் அசலூர் நல்ல செய்தியை சொல்லி விடுகிறேன். அமெரிக்காவில் வெகுகாலத்திற்கு பிறகு (ஒரு வருடத்திற்கும் மேலாக) , வேலை இல்லாதோர் விகிதம் (Unempoyment Data) குறைந்திருப்பதாக அங்கிருந்து வரும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த புள்ளி விபரம் அமெரிக்காவின் பொருளாதார தேக்க நிலை கிட்டத்தட்ட முடிவுக்கு அருகே வந்து விட்டதை வெளிக்காட்டுகிறது. (அதே சமயம் முழுமையான மீட்சி எப்போதென்று அறுதியிட்டு கூறுவது கடினம்) அமெரிக்க மத்திய வங்கி (Federal Reserve) அந்நாட்டு பொருளாதார நிலையை சரிசெய்வதற்காக பல லட்சம் கோடி அமெரிக்க டாலரை இதுவரை சந்தையில் இறக்கி விட்டுள்ளது. மிக குறைந்த வட்டியில் அங்கு பெறப் படும் பணமானது, தொழில் வளர்ச்சிக்காக உரிய முறையில் பயன்படுத்தப் படாமல், பல்வேறு சந்தைகளில் பாய்ந்து (உலக பங்கு சந்தைகளிலும் பொருட் சந்தைகளிலும்) பெரிய அளவில் ஏற்றம் ஏற்பட வித்திட்டுள்ளது. இப்போது அமெரிக்க பொருளாதாரம் ஓரளவுக்கு சீராக வாய்ப்புள்ளது என்ற நம்பிக்கை, நம் சந்தைகளுக்கு வந்தவுடன் கூடவே ஒரு புதிய பய உணர்வும் ஏற்பட்டுள்ளது. அதாவது இனிமேல் அதிக டாலர் வெளி சந்தைகளுக்கு பயணிக்காமல் உள்ளூர் சந்தையிலேயே (...

பன்றி காயச்சல் பற்றிய சில தகவல்கள்!

பன்றி காய்ச்சல் என்றால் என்ன? இந்த காய்ச்சலுக்கும் மற்ற காய்ச்ச்சல்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? பன்றி காய்ச்சல் உயிருக்கு ஆபத்தானதா என்ற பல கேள்விகள் என்னுள்ளும் ஓடி கொண்டிருந்தன. அவற்றுக்கு விடை தேடிய போது அறிந்து கொண்ட சில விபரங்கள் பகிர்தலுக்காக கீழே. பன்றி காய்ச்சல் என்பது H1N1 என்ற ஒருவகை இன்ஃபுளுயென்ஸா வைரஸ் A கிருமியினால் உருவாகக் கூடிய காய்ச்சல் ஆகும். இந்த வியாதி சமீபத்தில் முதன் முதலாக மெக்சிகோ நாட்டில் கண்டறியப் பட்டது. பொதுவாக இந்த வகை கிருமிகள் பன்றிகளையும் பன்றிகளுடன் நேரடி தொடர்புள்ள மனிதர்களையும் மட்டுமே தாக்கக் கூடியவை. ஆனால் இந்த முறை, மனிதர்கள் மூலமாகவும் மற்றவர்களுக்கு இந்த கிருமிகள் பரவ ஆரம்பித்திருப்பது மனித குலத்திற்கு புதிய சவாலாக அமைந்துள்ளது. பொதுவாக இந்த காய்ச்சல் அறிகுறிகள் மற்ற சாதாரண ஃப்ளு காய்ச்சல் அறிகுறிகள் போன்றவைதான். கடுமையான காய்ச்சல் (100 டிகிரிக்கு மேல்), இருமல் மற்றும் தொண்டையில் கரகர. சில சிமயங்களில் மூக்கடைப்பு, ஒழுகும் சளி போன்ற மூச்சு சம்பந்தப் பட்ட லேசான வியாதிகளும் கூட பன்றி காய்ச்சல் அறிகுறியாக இருக்கலாம். இன்னும் சில சமயங்களில் மேற்சொ...

எது முக்கியம்?

ஊடகங்களில் இப்போதைய தலைப்பு செய்திகள் ராக்கி சாவந்த் தனது மணமகனை(?) தேர்ந்தெடுத்தார். பாகிஸ்தானுடனான கூட்டறிக்கையின் மீது பாராளுமன்ற விவாதம். இந்திய கிரிக்கெட் வீரர்கள் போதை மருந்து சோதனைக்கு உட்படுத்துவது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுடன் இந்திய கிரிக்கெட் வாரியம் மோதல். பெங்களூரில் திருவள்ளுவர் சிலை திறப்பு குறித்து கன்னட அமைப்புகளுடன் கர்நாடக அரசு பேச்சுவார்த்தை மேற்சொன்ன செய்திகள் பற்றிய காரசாரமான விவாதங்களும் சூடான கருத்துக்களும் ஊடகங்களின் முழுநேரத்தையும் பிடித்துக் கொண்டுள்ளன. ஆனால் இன்னும் சில முக்கிய செய்திகள் பற்றி தகவல் தெரிவிக்கும் கடமையுடன் மட்டும் ஊடகங்கள் நிறுத்திக் கொண்டன. அந்த விஷயங்களில் மேற்கொண்டு அதிகம் நகரவே இல்லை. அவற்றில் சில இங்கே. அண்ணன் தம்பி அம்பானிகள் வழக்கில் மத்திய அரசு அண்ணனுக்கு சாதகமாக நடந்து கொண்டதாக தம்பியின் குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் பதில் அளித்தது. இலங்கைக்கு சென்று சக்தி அம்மா தமிழர்களுக்கு உதவிப் பொருட்கள் அளித்தது. முதல் பிரச்சினைக்கு வருவோம். அரசியல்வாதிகளை பற்றி (அவர் பிரதம மந்திரியாக இருந்தாலும் சரி அல்லது லோக்கல் கவுன்சிலராக இ...

வழிப் பிள்ளையாருக்கு கடை தேங்காய்!

அமெரிக்க கணக்கு தணிக்கை அதிகாரி சென்ற வாரம் ஒரு அறிக்கையை அந்த நாட்டு பாராளுமன்றத்திடம் தாக்கல் செய்துள்ளார். அதன்படி நிதி சிக்கலில் மாட்டிக் கொண்டு, அமெரிக்க அரசின் உதவியால் நிமிர்ந்துள்ள அந்நாட்டு வங்கிகள் பத்தில், ஒன்பது வங்கிகள் அவற்றின் ஊழியர்களுக்கு சுமார் 1,50,000 கோடி வரை போனசாக கொடுத்துள்ளன. இந்த நடைமுறையை தவிர்க்க உரிய நடவடிக்கைகள் எடுக்க அந்நாட்டு அதிகாரிகளுக்கு அமெரிக்க காங்கிரஸ் உத்தரவு இட்டுள்ளது. தவறான நிதி கொள்கையால் தடுமாறிய அமெரிக்காவை மீட்டெடுக்க அந்த தவறான நிதி கொள்கையையே இன்னுமொருமுறை அதுவும் இன்னும் கொஞ்சம் அதிகம் புகட்டும் அமெரிக்க அரசின் இந்த "டாலர் வெளியீட்டு முயற்சி" இன்று உலக சந்தைகளை இன்னுமொரு ஆபத்தான நிலைக்கு அருகே கொண்டு சென்று கொண்டிருக்கிறது. இதில் முதலில் பாதிக்கப் படப் போகும் சந்தை சீனா என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள். ஷாங்காய் பங்கு சந்தை மிக வேகமான ஏற்றத்தாழ்வுகளை சந்திக்கும் வழக்கம் கொண்டது. (இந்தியாவை விட வேகம் அதிகம்). சென்ற முறை கூட, மிக அதிகமான உள்ளூர் சீனர்கள் புதிய கணக்குகளை துவக்கியதும், அந்நாட்டின் பெரிய பங்கு வெளியீடு...

நண்பர்களே!

கல்கி ஒரு முறை சொன்னார். "இளமை காலத்தில் மிகுந்த மகிழ்ச்சி கொடுக்கக் கூடிய விஷயங்கள் இரண்டு. ஒன்று காதல் மற்றொன்று நட்பு. அதே சமயம், காதலைப் பொறுத்தவரை அதில் எவ்வளவு ஆனந்தம் இருக்கிறதோ அவ்வளவு துக்கமும் அடங்கி இருக்கிறது. ஆனால், ஆனந்தத்தை தவிர வேறு ஏதும் இல்லாத ஒரே ஒரு விஷயம் என்னவென்றால் அது நட்பு மட்டும்தான்". நட்பு நாட்கள் அற்புதமானவை. இன்றளவும் மறக்க முடியாதவை. நட்புக்களில்தான் எத்தனை வகை? பள்ளி நட்பு, கல்லூரி நட்பு, அலுவலக நட்பு, பொதுவான நோக்கங்களால் உருவாகும் நட்பு, நட்பின் நட்பான "நாடோடிகள்" நட்பு இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். நட்புக்கு ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் தெரியாது. படித்தவன் படிக்காதவன் என்ற வித்தியாசம் கிடையாது. சேலத்தில் ஒரு இரும்பு உருக்காலையில் பணி புரிந்து, பின்னர் அரசு பணி கிடைத்து அங்கிருந்து விலகிய போது, அங்கு மிகவும் குறைந்த ஊதியத்தில் பணி புரிந்த நண்பர்கள், தமது மாத வருமானத்தில் பெரும்பகுதியை இட்டு, நான் மறுத்த போதும், எனக்காக ஒரு கைக்கடிகாரம் வழங்கினார்கள். அதற்கு பிறகு நான் எத்தனையோ விலை உயர்ந்த கடிகாரங்கள் வாங்கினாலும் அந்த பழைய கட...