The Art of Appraisal
-
Big Boss: This year your performance was good, excellent and outstanding.
So, your rating is "average".
Kumar: What? How come 'average'?
Big Boss: Becau...
பிரிவுகள்
- சமூகம் (121)
- செய்தியும் கோணமும் (104)
- பொருளாதாரம் (101)
- பங்கு சந்தை (98)
- அரசியல் (74)
- பயணங்கள்/அனுபவங்கள் (40)
- மனவியல் (40)
- பங்கு சந்தை வெற்றி பயணம் - ஒரு வழித் துணை (15)
- கதை (9)
- நகைச்சுவை (7)
- அறிவியல் (5)
- திரைவிமர்சனம் (4)
- சட்டம் (3)
- நூலகம் (3)
- கிறுக்கல்கள் (1)
Sunday, August 2, 2009
வழிப் பிள்ளையாருக்கு கடை தேங்காய்!
அமெரிக்க கணக்கு தணிக்கை அதிகாரி சென்ற வாரம் ஒரு அறிக்கையை அந்த நாட்டு பாராளுமன்றத்திடம் தாக்கல் செய்துள்ளார். அதன்படி நிதி சிக்கலில் மாட்டிக் கொண்டு, அமெரிக்க அரசின் உதவியால் நிமிர்ந்துள்ள அந்நாட்டு வங்கிகள் பத்தில், ஒன்பது வங்கிகள் அவற்றின் ஊழியர்களுக்கு சுமார் 1,50,000 கோடி வரை போனசாக கொடுத்துள்ளன. இந்த நடைமுறையை தவிர்க்க உரிய நடவடிக்கைகள் எடுக்க அந்நாட்டு அதிகாரிகளுக்கு அமெரிக்க காங்கிரஸ் உத்தரவு இட்டுள்ளது.
தவறான நிதி கொள்கையால் தடுமாறிய அமெரிக்காவை மீட்டெடுக்க அந்த தவறான நிதி கொள்கையையே இன்னுமொருமுறை அதுவும் இன்னும் கொஞ்சம் அதிகம் புகட்டும் அமெரிக்க அரசின் இந்த "டாலர் வெளியீட்டு முயற்சி" இன்று உலக சந்தைகளை இன்னுமொரு ஆபத்தான நிலைக்கு அருகே கொண்டு சென்று கொண்டிருக்கிறது.
இதில் முதலில் பாதிக்கப் படப் போகும் சந்தை சீனா என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள். ஷாங்காய் பங்கு சந்தை மிக வேகமான ஏற்றத்தாழ்வுகளை சந்திக்கும் வழக்கம் கொண்டது. (இந்தியாவை விட வேகம் அதிகம்). சென்ற முறை கூட, மிக அதிகமான உள்ளூர் சீனர்கள் புதிய கணக்குகளை துவக்கியதும், அந்நாட்டின் பெரிய பங்கு வெளியீடுகள் பல மடங்கு உயர்ந்ததும் பங்கு சந்தை வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்தது. இப்போதும் கூட அந்த நிலைக்கு வெகு அருகே ஷாங்காய் பங்கு சந்தை வந்து விட்டதாகவே சொல்லப் படுகிறது.
இந்த பங்கு சந்தை உயர்வு ஒருவித பப்புள் என்று சென்ற வாரம் சீனா அரசாங்கம் சொன்ன ஐந்து நிமிடத்திலேயே, ஆசிய பங்கு சந்தைகள் (இந்தியா உட்பட) மற்றும் பொருட் சந்தைகள் பெரிய வீழ்ச்சியை சந்தித்தன. அதே சமயம், தொடர்ந்து வரும் டாலர் முதலீடுகள் பப்புள் பயத்தை மறக்கடிக்கவே , வார இறுதிக்குள் சந்தைகள் மீண்டும் உயர்நிலையை அடைந்தன.
இது போன்ற டாலர் வரவுகள் இந்தியா உட்பட வளரும் நாடுகளின் பொருளாதாரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஏற்கனவே ஒரு பதிவில் சொன்னபடி, இந்த டாலர் பணம் மீண்டும் அமெரிக்க அரசின் கடன் பத்திரத்திலேயே முதலீடு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இந்த நாடுகளின் மத்திய வங்கிகள் உள்ளன. டாலர் மதிப்பு வீழ்ச்சி, கடன் பத்திரங்கள் மதிப்பு வீழ்ச்சி மற்றும் குறைந்த வட்டி என அனைத்து வகையிலும் டாலர் முதலீடுகள் மதிப்பை இழக்க, ஒரு மிகப்பெரிய தேசிய இழப்பை வளரும் நாடுகள் சந்திக்கின்றன.
ஆனால், குறுகிய கால நோக்கத்தில் (முதலீட்டாளர்களிடையே ஒருவித சந்தோச மனநிலை மற்றும் குறைந்த செலவில் பங்கு முதலீடு கிடைப்பதால்) வளரும் நாடுகளின் தலைமைகள் இந்த டாலர் பாய்ச்சலை தடுக்க உரிய நடவடிக்கை எடுப்பதில்லை.
சீனா கூட தனது வாய் ஜாலங்களை விடுத்து, தனது கரன்சியை (யுவான்) சந்தை நாணயமாக மாற்றினால் பல பிரச்சினைகள் தீரும். இந்திய மத்திய வங்கியும் சந்தைகளில் குறுக்கீடு செய்வதை குறைத்துக் கொள்ள வேண்டும். மத்திய அரசு அந்நிய முதலீடுகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். அல்லது அவர்களின் லாபத்தின் மீது வரி விதிக்க வேண்டும். இப்படியெல்லாம் செய்ய தவறினால், ஒட்டுமொத்த இந்தியாவே ஒரு பெரிய விலை கொடுக்க வேண்டி இருக்கும் என்பது என் தனிப்பட்ட கருத்து.
சந்தைகளுக்கு வருவோம்.
சென்ற வாரம் கொடுத்திருந்த எதிர்ப்பு நிலைக்கு கீழேயே சந்தைகள் முடிவடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வரும் வாரம் காளைகள் தமது பாய்ச்சலை தொடர முயற்சிப்பார்கள். அதே சமயம் (நிபிட்டி) 4700 அளவுக்கு அருகே கரடிகள் தமது பிடிகளை இறுக்குவார்கள். மொத்தத்தில் காளை-கரடி துவந்தமாகவே வரும் வாரம் இருக்கும்.
ஏற்கனவே சொன்னதுதான். இருந்தாலும் திரும்ப ஒரு தடவை சொல்வதில் தவறில்லை என்று நினைக்கிறேன்.
நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்ய விரும்புவர் சற்று நிதானித்து செயல்படுவது நல்லது. வதந்திகளின் அடிப்படையில் நீண்ட கால முதலீடு செய்ய வேண்டாம். ஊடகங்களின் பரிந்துரைகளை எச்சரிக்கையாக ஆய்வது நல்லது.
மேற்சொன்ன பரிந்துரைகள் முதலீட்டாளர்களுக்கு மட்டும்தான்.
குறுகிய கால நோக்கில் பங்கு வர்த்தகம் செய்பவர்களுக்கு இது பொற்காலம். அதே சமயம் உரிய நகரும் இழப்பு நிறுத்தத்துடன் (Strict Dynamic Stop Loss Limit) மட்டும் வர்த்தகம் செய்யவும்.
இப்போது தொழிற்நுட்ப நிலைகள்.
சென்செக்ஸ்
எதிர்ப்பு - 15800 & 16200
அரண் - 15200 & 15000
நிபிட்டி
எதிர்ப்பு - 4700 & 4800
அரண் - 4475 & 4425
வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்
நன்றி.
Labels:
பங்கு சந்தை,
பொருளாதாரம்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
//இந்திய மத்திய வங்கியும் சந்தைகளில் குறுக்கீடு செய்வதை குறைத்துக் கொள்ள வேண்டும். மத்திய அரசு அந்நிய முதலீடுகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். அல்லது அவர்களின் லாபத்தின் மீது வரி விதிக்க வேண்டும். இப்படியெல்லாம் செய்ய தவறினால், ஒட்டுமொத்த இந்தியாவே ஒரு பெரிய விலை கொடுக்க வேண்டி இருக்கும் என்பது என் தனிப்பட்ட கருத்து.//
பொருளாதார நிபுணர்கள் பலரின் கருத்தும் இதேதான் அய்யா.
இந்த மருந்து இப்போதைக்கு கசப்பாக இருந்தாலும் எதிர் காலத்தில் இனிப்பாக மாறும்.
எனவே விரைந்து அரசாங்கம் ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும்!!
நாம் எல்லாம் இனி சந்தை சரியவே, சரியாது என்று நினைத்து கொண்டு இருப்போம்.அப்போழ்து,
எல்லாவற்றையும் சுருட்டி கொண்டு போய விடுவார்கள்,பெரும் முதலைகள்.
//குறுகிய கால நோக்கில் பங்கு வர்த்தகம் செய்பவர்களுக்கு இது பொற்காலம். அதே சமயம் உரிய நகரும் இழப்பு நிறுத்தத்துடன் (Strict Dynamic Stop Loss Limit) மட்டும் வர்த்தகம் செய்யவும்.//
உரிய நகரும் இழப்பு நிறுத்தத்துடன் (Strict Dynamic Stop Loss Limit) மட்டும் போட்டு தினவர்த்தகம்
செய்வதற்க்கு சிரமமாக உள்ளது.இரண்டுபக்கமும் தொட்டு செல்வதால் Stop Loss போட்டால்
நான் Loss ஆகி விடுகிறேன்.என்ன செய்வது என்று புரியவில்லை.
உங்கள் பதிவுக்கு நன்றி.
//நாம் எல்லாம் இனி சந்தை சரியவே, சரியாது என்று நினைத்து கொண்டு இருப்போம்.அப்போழ்து, எல்லாவற்றையும் சுருட்டி கொண்டு போய விடுவார்கள்,பெரும் முதலைகள்.//
உண்மைதான்.
//உரிய நகரும் இழப்பு நிறுத்தத்துடன் (Strict Dynamic Stop Loss Limit) மட்டும் போட்டு தினவர்த்தகம் செய்வதற்க்கு சிரமமாக உள்ளது.இரண்டுபக்கமும் தொட்டு செல்வதால் Stop Loss போட்டால் நான் Loss ஆகி விடுகிறேன்.என்ன செய்வது என்று புரியவில்லை.//
தின வர்த்தகம் என்பது கடினமான ஒன்றுதான். அதே சமயம் அதிலேயே கவனமாக இருந்தால் லாபம் ஈட்ட வழியுண்டு. நம்மில் பலர் லாபத்தை உடனடியாக எடுத்துக் கொண்டு நஷ்டத்தை மட்டும்தொடர அனுமதிக்கிறோம். எத்தனை தடவை லாபம் அல்லது நஷ்டம் சந்திக்கிறோம் என்பதை விட, எத்தனை முறை லாபத்தை விருத்தி செய்து நஷ்டத்தை குறைத்துக் கொள்கிறோம் என்பதுதான் சிறந்தது.
நன்றி மற்றும் வாழ்த்துக்கள் தாமஸ் ரூபன்!
Post a Comment