
அந்த குழந்தையின் வயது இரண்டு. ஆகஸ்ட் இரண்டாம் தேதி லேசான காய்ச்சல் வந்தது. இரண்டு நாட்கள் கழித்து உடலில் தடிப்புக்கள் தோன்றின. அந்த குழந்தையின் பெற்றோர் முதலில் உள்ளூர் மருத்துவமனையை தொடர்பு கொண்டனர்.
இது பன்றி காய்ச்சலின் அறிகுறியாக இருக்கலாம் என்று அந்த மருத்துவமனையினர் குறிப்பிட்ட சேவை மையத்தின் தொலைபேசி எண்ணை கொடுத்தனர்.
அந்த சேவை மையத்தை தொடர்பு கொண்ட போது குழந்தைக்கு பன்றி காய்ச்சலின் ஒரே ஒரு அறிகுறி மட்டுமே இருக்கின்றது என்று வேறொரு தொலைபேசி எண்ணை அந்த மையத்தினர் கொடுத்தனர்.
அந்த எண்ணில் தொடர்பு கொண்ட போது, குழந்தையின் உடல் வெட்ப நிலை நாற்பது டிகிரி சென்டி கிரேடை தாண்டினால் மீண்டும் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொண்டனர்.
அப்படியே நாற்பது டிகிரி சென்டி கிரேடை தாண்டியது குழந்தையின் பெற்றோர் அந்த மையத்தை மீண்டும் தொடர்பு கொண்டனர். உடனடியாக அங்கு வந்த மருத்துவக் குழுவினர் அந்த குழந்தையை பரிசோதித்த பிறகு தமி ப்ளு மருந்தினை கொடுத்த பிறகு திரும்பி சென்று விட்டனர்.
ஒரு மணி நேரம் கழித்த பிறகு அந்த குழந்தையின் கண்கள் வெளிர்ந்து விட பயந்து போன பெற்றோர் அந்த மையத்திடம் மறுபடியும் தொடர்பு கொண்டனர். மருத்துவ குழுவினர் வருவதற்குள் அந்த குழந்தை காலமாகி விட்டது.
.

இது நடந்தது எங்கே தெரியுமா? மருத்துவ வசதிக்கு புகழ் பெற்ற கிரேட் பிரிட்டனில்தான்.
பன்றி காய்ச்சல் கட்டுபடுத்தும் பொறுப்பு அதிகம் பயிற்சி பெறாத "கால் சென்டர்" பணியாளர்களிடம் கொடுக்கப் பட்டதே இந்த உயிர் பலிக்கு காரணம் என்று சொல்லப் படுகிறது.
இந்த வியாதி கண்டவர்களை நேரடியாக பரிசோதிக்காமல் இந்த கால் சென்டர் பணியாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வதன் மூலமே அவர்களுக்கு வியாதி இருக்கிறதா இல்லையா என்று நிர்ணயிக்கப் படுகிறது என்றும் அந்த பணியாளர்களின் அறிவுரையின் படியே தமி ப்ளு மருந்து வழங்கப் படுகிறது என்றும் சொல்லப் படுகிறது.
இந்தியா எவ்வளவோ பரவாயில்லை.
எத்தனையோ இந்திய மருத்துவர்களும் இதர மருத்துவ பணியாளர்களும் தங்கள் சொந்த பாதுகாப்பை பற்றி கவலைப் படாமல் இந்த காய்ச்சலால் பாதிக்கப் பட்ட நோயாளிகளுக்கு இரவு பகலாக வைத்தியம் செய்கிறார்கள்.
அவர்களுக்கு இந்த நேரத்தில் ஒரு சல்யூட் வைப்போம்.
நன்றி
(நன்றி: ஸ்கை டிவி, எகோநோமிக் டைம்ஸ்)
17 comments:
அடப்பாவிகளா!
வைத்தியத்துக்கும் கால்செண்டரா!?
உருப்பட்டா மாதிரி தான்!
வாந்தி மயக்கம்னா கர்ப்பம்னு சொல்லிருவாய்ங்களே!
இந்திய பரவயில்லையா? நாங்கள், இந்தியா வந்த பொது, ஒரு form கொடுத்து அதில் உள்ள எல்லா கேள்விகளுக்கும் (5 கேள்விகள் என்று நினைக்கிறேன்) No என்று பதில் சொல்லியிருந்தால், அங்கிருந்த மருத்துவ பணியாளர் பச்சை ரப்பர் ஸ்டாம்ப் குத்தி அனுப்பி விட்டார். இந்த அளவு தான் அரசால் சோதனை செய்ய முடியும், என்றால், இது வரை 12 பேர் மட்டுமே பலியானது நம் அதிர்ஷ்டம் என்பேன்.
ரொம்ப கிலியா இருக்கு.
உயிர் என்ன வெல்லக்கட்டியா வசனம் எல்லாம் ஞாபகம் வரமாட்டேங்குது.
கால் செண்டர்... ம்ம் என்ன பண்ண? என்னோட வேலை பாக்கற நிறைய மக்கள் கால் செண்டருக்கு கால் பண்ணி ஸ்வைன் ஃப்ளூ அவங்களுக்கு இல்லன்னு முடிவுக்கு வந்திருக்காங்க.
நன்றி வால்பையன்!
//வாந்தி மயக்கம்னா கர்ப்பம்னு சொல்லிருவாய்ங்களே//
நல்லாவே யோசிக்கிறீங்க!
:-)
நன்றி.
என்ன இது புதுசு புதுசா நோய் வருதே
//அவர்களுக்கு இந்த நேரத்தில் ஒரு சல்யூட் வைப்போம்.//
கண்டிப்பா அவங்களுக்கு ஒரு சல்யூட் :-))
//இந்திய பரவயில்லையா? நாங்கள், இந்தியா வந்த பொது, ஒரு form கொடுத்து அதில் உள்ள எல்லா கேள்விகளுக்கும் (5 கேள்விகள் என்று நினைக்கிறேன்) No என்று பதில் சொல்லியிருந்தால், அங்கிருந்த மருத்துவ பணியாளர் பச்சை ரப்பர் ஸ்டாம்ப் குத்தி அனுப்பி விட்டார். இந்த அளவு தான் அரசால் சோதனை செய்ய முடியும், என்றால், இது வரை 12 பேர் மட்டுமே பலியானது நம் அதிர்ஷ்டம் என்பேன்.//
பிரிட்டன் போன்று இந்தியாவில் மருத்துவ வசதி இல்லாமல் இருக்கலாம். ஆனால், வைத்தியத்தை கால் சென்டெர் மூலம் செய்து கொள்ள சொல்லும் கலாச்சாரம் இன்னும் வர வில்லை என்று என்னால் சொல்ல முடியும். மேலும் வைத்தியம் பார்த்தால் வியாதி தொற்றிக் கொள்ளும் என்ற அபாயம் இருந்தாலும், பணத்திற்காக மட்டுமில்லாமல் சேவை மனப்பான்மையுடன் பணியாற்றும் பல மருத்துவர்கள் (மேலை நாடுகளை விட நிச்சயம் அதிகமாக) இந்தியாவில் இருக்கிறார்கள் என்றும் சொல்ல முடியும்.
நன்றி Itsdifferent!
நன்றி கபீஷ்!
//கால் செண்டர்... ம்ம் என்ன பண்ண? என்னோட வேலை பாக்கற நிறைய மக்கள் கால் செண்டருக்கு கால் பண்ணி ஸ்வைன் ஃப்ளூ அவங்களுக்கு இல்லன்னு முடிவுக்கு வந்திருக்காங்க.//
நீங்களும் அங்கேதான் இருக்கீங்க! எதற்கும் ஜாக்கிரதையாகவே இருங்கள்!
நன்றி.
//என்ன இது புதுசு புதுசா நோய் வருதே //
கம்ப்யூட்டர் வைரஸ் போலவே இவையும் திட்டமிட்டே பரப்பப் படுகிறதா என்ற சந்தேகம் கூட எனக்கு உண்டு.
நன்றி கார்த்திக்!
//எத்தனையோ இந்திய மருத்துவர்களும் இதர மருத்துவ பணியாளர்களும் தங்கள் சொந்த பாதுகாப்பை பற்றி கவலைப் படாமல் இந்த காய்ச்சலால் பாதிக்கப் பட்ட நோயாளிகளுக்கு இரவு பகலாக வைத்தியம் செய்கிறார்கள்.//
இவற்களை பொல் சிலப்பேர்நாட்டில் இருப்பத்னால் மழை கொஞ்சமாவது பெய்கிற்து.
நன்றி அய்யா
நன்றி தாமஸ் ரூபன்!
//எத்தனையோ இந்திய மருத்துவர்களும் இதர மருத்துவ பணியாளர்களும் தங்கள் சொந்த பாதுகாப்பை பற்றி கவலைப் படாமல் இந்த காய்ச்சலால் பாதிக்கப் பட்ட நோயாளிகளுக்கு இரவு பகலாக வைத்தியம் செய்கிறார்கள்.
அவர்களுக்கு இந்த நேரத்தில் ஒரு சல்யூட் வைப்போம்.//
நாம் பொதுவாகவே இந்திய மருத்துவர்களையும் ஊழியர்களையும் பற்றி வேதனைப் படுவதுண்டு.ஆனால் சில சமயம் அவர்களுடைய பணி மெய்சிலிர்க்க வைக்கிறது.
அவர்களுக்கு நாம் அனைவரும் நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கிறோம்.
இரண்டு வயது குழைந்தை இழப்பு தாங்க முடியாதது.பெரும்பாலும் நோய்கள் பற்றிய அறிவு இல்லாததே காரணம்.இந்தியாவில் பொது மருத்துவம் பற்றி குறைந்த பட்ச அறிவு கூட யாருக்கும் இல்லை. மெடிக்கல் சீட் கிடைத்தால் மட்டுமே அரைகுறையாக தெரிந்து கொல்ல சாரி கொள்ள வாய்ப்பு உள்ளது. முதல் உதவி, சாதரண மருத்துவம் பற்றி பிள்ளைகளுக்கு போதிக்க வேண்டும். பொது இடங்களில் அச் என்று நம் முகம் மேல் தும்முபவர்கள் எத்தனை பேர். இதற்கு அரசாங்கமோ, ஆசிரியர்களோ ஏதும் செய்ய முடியாது. நம் வீட்டில் இருன்னு துவங்கவேண்டும்.. சரிதானே?
நன்றி பொதுஜனம்!
//இந்தியாவில் பொது மருத்துவம் பற்றி குறைந்த பட்ச அறிவு கூட யாருக்கும் இல்லை.//
பொது சுகாதாரம் பற்றிய அக்கறையும் அதிகம் இல்லை
//சாதரண மருத்துவம் பற்றி பிள்ளைகளுக்கு போதிக்க வேண்டும். //
சரியான கருத்து. வாழ்வியல் கல்வியை பள்ளிகளில் புகட்டுவது மிகவும் முக்கியம்.
நன்றி!
ஸ்வைன் ஃபுளூவைப் பொறுத்த வரை இந்திய ஊடகங்களின் போக்கு மிகுந்த பயத்தையும், வெறுப்பையும் அளித்தாலும் (வழக்கம் போலவே) நீங்கள் சொல்லியிருக்கும் விதம் மிக புதிது...
உண்மையிலேயே இது மாதிரி மருத்துவர்களுக்கு நாம் கடமைப்பட்டிருக்கிறோம்...
நன்றி நரேஷ்!
d
Hi,
Are you from UK, I m working in UK and live in Leeds.
You are articles are really good and I m also interested in Stock Markets.
If you are in uk, pass on your contact number or email lets have a chat.
Thanks
Post a Comment