Wednesday, April 1, 2009

உங்கள் மூளை எந்த பக்கம்?


ஒவ்வொரு மனிதனின் மூளைக்கும் இருவேறு பக்கங்கள் உண்டு என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அந்த இரண்டு பகுதிகளும் வெவ்வேறு குணாதிசியங்களைக் கொண்டவை. வலது மூளை மற்றும் இடது மூளை என அறியப் படும் மூளையின் இந்த இரண்டு பகுதிகளும் முற்றிலும் வேறுபட்ட விதமான பணிகளை செய்கின்றன என்றாலும் இந்த இரண்டு பகுதிகளில் ஒரு பகுதி மற்ற பகுதியை ஆதிக்கம் செலுத்தவும் வாய்ப்புள்ளது. ஒரு மனிதனின் எந்த பகுதி மற்ற பகுதியை ஆக்கிரமிப்பு செய்கிறது என்பதின் அடிப்படையில் அவனது குணாதிசியங்கள் மாறுபடக் கூடும். உங்கள் மூளையின் எந்த பகுதி அதிகம் வேலை செய்கிறது அல்லது ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறீர்களா? ஒரு சிறிய பரிசோதனை முயற்சி இங்கே.

கீழே சில கேள்விகள் கொடுக்கப் பட்டுள்ளன. உங்கள் பதில்களை தனியாக குறித்து வைத்துக் கொள்ளவும். இந்த விடைகளில் சரியானது என்றோ தவறானது என்றோ ஏதுமில்லை. உங்களுக்கு எவ்வளவு அறிவு இருக்கிறது என்பதை சோதிப்பதற்காக இந்த கேள்வி-பதில்கள் இல்லை. எனவே உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகின்றதோ, சாதாரணமான மனநிலையில் எந்த விடையை அளிப்பீர்களோ அந்த பதிலையே தாருங்கள், அது போதும். அப்போதுதான் நமது மனநிலையை நாமே சரியாக புரிந்து கொள்ள முடியும்.

கேள்வி எண் 1:

நீங்கள் எப்படிப் பட்ட மனிதர்?

அ. மற்றவர்கள் எளிதில் ஊகிக்கக் கூடிய வகையில் எனது நடவடிக்கைகள் இருக்கும்.
ஆ. சமயத்திற்கு தகுந்தாற் போல நடந்து கொள்வேன்.

கேள்வி எண் 2.

A = AM என்பது கீழ்கண்டவற்றில் எதனுடன் பொருந்தும்?

அ. P = PM
ஆ. HA = HAM

கேள்வி எண் 3

"வடக்கு - தெற்கு" என்பது எந்த இணையுடன் பொருந்தும்

அ. மேலே - கீழே
ஆ. கிழக்கு - மேற்கு

கேள்வி எண் 4.

15 மற்றும் 6 ஆகிய எண்களுக்கு உள்ள ஒற்றுமை கீழ்க்கண்ட இணைகளில் எதற்கு உள்ளது.

அ. 23 & 5
ஆ. 23 & 14

கேள்வி எண் 5.

"வேலை - விளையாட்டு" கீழ் கண்ட இணைகளில் எதனுடன் அதிகம் பொருந்தும்?

அ. கட்டுப்பாடு - கட்டுப்பாடு இல்லாத நிலை
ஆ. தேவையான ஒன்று - தேவையில்லாத நிலை

கேள்வி எண் 6.

"கோபம் - குரோதம்" கீழ்க்கண்ட இணைகளில் எதனுடன் அதிகம் பொருந்தும்?

அ. மோசம் - மிக மோசம்
ஆ. அன்பு - காதல்

கேள்வி எண் 7

"தங்கம் - மஞ்சள்" கீழ்க்கண்ட இணைகளில் எதனுடன் அதிகம் பொருந்தும்?

அ. ராமர் - நீலம்
ஆ. எவர்சில்வர் - வெள்ளை

கேள்வி எண் 8:

"I - M " என்பது கீழ்க்கண்ட இணைகளில் எதனுடன் அதிகம் பொருந்தும்?

அ. U - R
ஆ. 9 - 13

கேள்வி எண் 9

நீங்கள் (அதிகம்) எப்படிப் பட்ட மனிதர்?

அ. நான் மற்றவர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துவேன்
ஆ. எனது நம்பிக்கையில் உறுதியாக இருப்பேன்

கேள்வி எண் 10

உங்களுக்கு அதிகம் பிடித்தது?

அ. உருவாக்கும் திறன்
ஆ. தெளிவான மனநிலை

இப்போது உங்கள் விடைகளை சரிபாருங்கள்.

உங்கள் விடைகளில் அதிகம் "அ" விடை வந்திருந்தால் உங்கள் வலது மூளையின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது என்று பொருள். மாறாக "ஆ" என்று இருந்தால் இடது மூளை அதிகம் வேலை செய்கிறது என்று பொருள்.

இப்போது மூளையின் ஆதிக்கம் குறித்த பலன்களை பார்ப்போம்.

வலது மூளை ஆதிக்கம் உள்ளவர்கள், கலைத் திறமை, கற்பனைத் திறன் போன்றவற்றை அதிகம் கொண்டிருப்பார்கள். இவர்கள், கலைஞர்களாக அதிகம் வெற்றி பெறுவார்கள். வேகமாக முடிவெடுக்கக் கூடியவர்களாக இருப்பார்கள். அதே சமயம், பல சமயங்களில் முன் யோசனை இல்லாத முடிவுகளையே எடுத்திருப்பார்கள். "எமோஷன்" மனநிலை அதிகம் கொண்டிருப்பார்கள். சொல்ல வந்த விஷயத்தை இவர்களால் சரியாக சொல்ல முடியாது.

வலது மூளை ஆதிக்கம் உள்ளவர்கள் சற்று நிதானமாக யோசித்து முடிவு செய்ய பழகிக் கொள்வது பல பிரச்சினைகளில் இருந்து அவர்களை காப்பாற்றும்.

இடது பக்க மூளை உள்ளவர்கள் மிகவும் நிதானித்து தர்க்க ரீதியான முடிவு எடுக்கக் கூடியவர்கள். இவர்கள் தொழிற் முறை வல்லுனர்களாக வெற்றி பெறுவார்கள். அதே சமயம் "கலை" உணர்ச்சி இவர்களிடம் சற்று குறைவாகவே இருக்கும். ஒருவித "இயந்திர ரீதியான" வாழ்வு முறையை இவர்கள் கொண்டிருப்பார்கள். இவர்கள் மற்றவர்களால் அதிகம் விரும்பப் பட மாட்டார்கள்.

இடது மூளை ஆதிக்கம் கொண்டவர்கள் ஓய்வு நேரத்தில் தங்கள் கவனத்தை "உருவாக்கும் திறனை வளர்க்கும் பொழுது போக்கு அம்சங்களில் (உதாரணமாக வரைதல், எழுதுதல்)" செலுத்தினால் அவர்கள் மன நெருக்கடியில் இருந்து தப்பிக்க முடியும்.

உருவாக்கும் திறன் மற்றும் தர்க்க ரீதியான சிந்தனை இரண்டும் சரியான விகிதத்தில் இணைந்தாலே ஒருவரின் மூளை சரியாக செயல் படும். அவர் தொழில் ரீதியாகவும் வாழ்வியல் ரீதியாகவும் வெற்றி பெற முடியும்.

ஒன்றில்லாத மற்றொன்று உபயோகமில்லாதது. எனவே, உங்களது மூளையில் எந்த பகுதியின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது என்பதை சரியாக உணர்ந்து கொண்டு, உங்களை நீங்களே திருத்தி அமைத்துக் கொள்ளுங்கள்.

வாழ்வில் வெற்றி காணுங்கள்.

நன்றி.

பின்குறிப்பு: இந்த கேள்வி பதில்கள் ஒரு பரிசோதனை முயற்சி மட்டுமே. இந்த கேள்வி-பதில்கள் ஒரு துல்லியமான முடிவைத் தரும் என்பதற்கு எந்த ஒரு உறுதியும் இல்லை. ஆனால், இந்த கேள்வி-பதில்களை மாதிரியாக வைத்துக் கொண்டு உங்களை நீங்கள் பரிசோதித்துக் கொண்டு ஒரு தீர்மானத்திற்கு வர முடியும்.

16 comments:

MCX Gold Silver said...

தல எப்படி இப்படி எல்லா டாபிக்லியும் பின்றிங்க?அந்த ரகசியத்தை கொஞ்சம் சொல்லுங்கலேன்!!!!!!!!!!

Maximum India said...

அன்புள்ள dg

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

//தல எப்படி இப்படி எல்லா டாபிக்லியும் பின்றிங்க?அந்த ரகசியத்தை கொஞ்சம் சொல்லுங்கலேன்!!!!!!!!!!//

எல்லா டாபிக்ஸும் இல்ல பாஸ். ஏதோ ஒன்றிரண்டு சப்ஜெக்ட்தான். ஒரு பொறியியலாளராக இருந்து கொண்டு நிதித்துறையில் பணி புரிகிறேன் அல்லவா? நமக்கு இடது மூளைதான் அதிக நேரம் வேலை செய்கிறது. அதனால்தான், இந்த பதிவில் சொல்லி உள்ளபடி, வலது மூளைக்கு ஓரளவுக்கேனும் வேலை கொடுக்க இந்த புதிய முயற்சிகள்.

நன்றி.

வால்பையன் said...

நல்ல கேள்விகள்!

ஒரே குழப்பத்துல ஒரு வேளை எனக்கு மூளையே இல்லையோனு நினைச்சிட்டேன்.
அடிக்கடி எந்த மாதிரி டெஸ்ட் வையுங்க!

Maximum India said...

அன்புள்ள வால்பையன்

பின்னூட்டத்திற்கு நன்றி

//ஒரே குழப்பத்துல ஒரு வேளை எனக்கு மூளையே இல்லையோனு நினைச்சிட்டேன்.
அடிக்கடி எந்த மாதிரி டெஸ்ட் வையுங்க!//

ஆமாங்க. நமக்கு மூளை இருக்கான்னு அப்பப்ப இந்த மாதிரி டெஸ்ட் வச்சுத்தான் தெரிஞ்சுக்க வேண்டி இருக்கு. அப்புறம் உங்க மூளை எந்த பக்கம்னு சொல்லவே இல்லையே? :)

நன்றி.

ஆண்ட்ரு சுபாசு said...

உண்மையிலேயே 5:5 ...எனக்கு எந்த மூளைன்னு நான் எடுத்துகிறது?

Maximum India said...

அன்புள்ள ஆண்ட்ரு சுபாசு

பின்னூட்டத்திற்கு நன்றி

//உண்மையிலேயே 5:5 ...எனக்கு எந்த மூளைன்னு நான் எடுத்துகிறது?//

நீங்கள் சமநிலையான மனிதர் என்று எடுத்துக் கொள்ளலாம். அதே சமயத்தில், பதிவிலேயே குறிப்பிட்டபடி,
இந்த கேள்வி பதில்கள் ஒரு பரிசோதனை முயற்சி மட்டுமே. இந்த கேள்வி-பதில்கள் ஒரு துல்லியமான முடிவைத் தரும் என்பதற்கு எந்த ஒரு உறுதியும் இல்லை. ஆனால், இந்த கேள்வி-பதில்களை மாதிரியாக வைத்துக் கொண்டு உங்களை நீங்கள் பரிசோதித்துக் கொண்டு ஒரு முடிவுக்கு வரலாம்.

நன்றி.

மங்களூர் சிவா said...

/
ஆமாங்க. நமக்கு மூளை இருக்கான்னு அப்பப்ப இந்த மாதிரி டெஸ்ட் வச்சுத்தான் தெரிஞ்சுக்க வேண்டி இருக்கு.
/

well said

எனக்கும் 5 : 5 தான் வந்தது.

Maximum India said...

அன்புள்ள மங்களூர் சிவா

//எனக்கும் 5 : 5 தான் வந்தது.//

உங்களுக்கும் முந்தைய பின்னூட்டத்திற்கான பதில்தான்.

நன்றி.

Mathivanan said...

மிகவும் நன்றி. நான் ஒரு பயிற்சியாளர் எனக்கு இது மிகவும் உதவும். எனக்கு வலது மூளை தான் செயல்படுகிறது அனேகமாக பயிற்சியாளராக இருப்பது சரிதான் என்று நினைக்கிறேன்.

மதிவாணன்

Raman Kutty said...

my answers are : 2,1,2,1,1,1,2,1,2,2

எனக்கு அ=5 ஆ=5 எனது நிலைமை என்னவோ..just a curiosity

Maximum India said...

அன்புள்ள மதி.

//மிகவும் நன்றி. நான் ஒரு பயிற்சியாளர் எனக்கு இது மிகவும் உதவும். //

மிகவும் சந்தோஷம். இந்த பரிசோதனைகள் ஒருவது மன சம நிலைக்கு மிகவும் உதவும்.

//எனக்கு வலது மூளை தான் செயல்படுகிறது அனேகமாக பயிற்சியாளராக இருப்பது சரிதான் என்று நினைக்கிறேன்.//

வலது மூளை கலைஞர்களுக்கும் உருவாக்கும் துறையில் இருப்பவர்களுக்கும் அதிகம் உதவி செய்யும். ஆனாலும், அவர்களுக்கும் கூட இரண்டு பக்க மூளையும் அதிக அளவில் வேலை செய்வது அவசியம். எனவே, இடது மூளைக்கும் நிறைய பயிற்சி கொடுங்கள்.

நன்றி.

இளமாயா said...

நல்ல பதிவு.,
வாழ்த்துக்கள்..

Maximum India said...

அன்புள்ள ராமன்

//my answers are : 2,1,2,1,1,1,2,1,2,2

எனக்கு அ=5 ஆ=5 எனது நிலைமை என்னவோ..just a curiosity//

இந்த கேள்வி பதில்களின் படி உங்களுக்கு மனச் சமநிலை உள்ளது. ஏற்கனவே சொன்ன படி, இந்த கேள்வி-பதில்கள் ஒரு சிறிய பரிசோதனை முயற்சிதான். உங்கள் மனநிலையை நீங்களே பரிசோதிக்க முடியும். அதாவது நீங்கள் ஆராயும் மனநிலை உள்ளவரா அல்லது புதிய சிந்தனைகள் உள்ளவரா என்று உங்களை நீங்களே பரிசோதித்துக் கொள்ள முடியும்.

நன்றி.

Maximum India said...

நன்றி இளமாயா!

MoHaN said...

நல்ல பகிர்வு !!!:)

Maximum India said...

நன்றி மோகன்!

Blog Widget by LinkWithin