ஒரு காலத்தில் 'கிராஜுவேட்' ஆக நமக்கெல்லாம் குறைந்த பட்சம் இருபது வயதுக்கு மேல் ஆக வேண்டி இருந்தது. இப்போதெல்லாம் அப்படி இல்லை. மிகக் குறைந்த வயதிலேயே 'கிராஜுவேட்' ஆகி விடுகிறார்கள். மழலையர் பள்ளியிலிருந்து (KG) முதல்நிலை பள்ளிக்கு 'கிராஜுவேட்' (primary school) ஆனாலும் அதற்கென ஒரு தனி பட்டமளிப்பு விழா.
இது வேறு யாரும் இல்லை. எனது செல்ல மகள். டிகிரி வாங்கி விட்டோம் என்று ஒரே பூரிப்பு.
இந்த கிராஜுவேட் மேலும் பல கிராஜுவேஷன் பெற வேண்டுமென்று மனதார வாழ்த்துவோம்.
நன்றி.
21 comments:
தங்களது செல்லமகள் மேலும், மேலும் பல வெற்றிகளை குவித்திட எனது மனம்மார்ந்த வாழ்த்துக்கள் !
இபபடிக்கு.
உண்மைவிரும்பி
மும்பை.
நன்றி உண்மை விரும்பி. தங்களது தமிழகப் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
CONGRATULATIONS செல்லம் ...
முதல் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி வால்பொண்ணு.
வாழ்த்துக்கும் என் சார்பாகவும் என் செல்லத்தின் சார்பாகவும் மிக்க நன்றி.
அப்புறம் ஒரு சந்தேகம்.
வால்பையன் தெரியும், இது யாரு, புதுசா வால்பொண்ணு ?
நன்றி.
பட்டங்கள் ஆளவும் புது சட்டங்கள் செய்யவும் வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்களுக்கு நன்றி! நன்றி ராஜநடராஜன்!
Congratulations to your loving kid. I know how proud she will be, and you the parents would be.
Hearty wishes for many more happy returns of the day.
தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்.
எனது உளமார்ந்த வாழ்த்துக்கள். பெயர் என்ன சார்?
மனமார்ந்த வாழ்த்துகள்
அன்புள்ள itsdifferent
//Congratulations to your loving kid.//
நன்றி நன்றி.
// I know how proud she will be, //
உண்மைதான். 'குழந்தைகளின் பெருமிதம்' பார்க்க கண் கொள்ளா காட்சி.
//and you the parents would be.//
ஆமாம். என் பெற்றோர் ஞாபகம்தான் வந்தது.
//Hearty wishes for many more happy returns of the day.//
நன்றி.
அன்புள்ள பீர்
நன்றி. நன்றி
//தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல். //
வாழ்வில் நடைபெறும் ஒவ்வொரு விஷயத்திற்கும் நமது திருவள்ளுவர் ஒரு அருமையான குறளை எழுதி வைத்து விட்டு போய் விட்டார். இல்லையா?
எனது இளவயது வெற்றிகளின் போது, எனது பெற்றோரின் (எல்லா பெற்றோரின் கூட) உணர்வுகள் எப்படி இருந்திருக்கும் என்பதை இப்போது நான் அறிய முடிந்தது.
//எனது உளமார்ந்த வாழ்த்துக்கள்.//
என் சார்பாகவும் எனது சுட்டியின் சாபாகவும் நன்றி.
//பெயர் என்ன சார்?//
கல்வியின் பெயர். வித்யா.
நன்றி.
நன்றி நரேஷ் குமார்
ஹா ஹா ஹா
இது கூட ஒரு ஊக்கம் மாதிரி தானே!
என் பொண்ணு பேன்சி ட்ரெஸ் காம்பிடேஷன்ல இரண்டாம் பரிசு!
பரிசு வாங்கும் போது போட்டோ எடுக்கலைன்னு நகரவேயில்லை!
எனக்கு சிரிப்பு வந்துருச்சு!
அப்புறம் போட்டோ எடுத்து தான் அனுப்பினாங்க!
உங்கள் செல்ல மகளுக்கும் எனது வாழ்த்துக்கள்!
நன்றி வால்பையன்
// ஹா ஹா ஹா
இது கூட ஒரு ஊக்கம் மாதிரி தானே!
என் பொண்ணு பேன்சி ட்ரெஸ் காம்பிடேஷன்ல இரண்டாம் பரிசு!
பரிசு வாங்கும் போது போட்டோ எடுக்கலைன்னு நகரவேயில்லை!
எனக்கு சிரிப்பு வந்துருச்சு!
அப்புறம் போட்டோ எடுத்து தான் அனுப்பினாங்க!//
குழந்தைகளில் மனோபாவம் அலாதியானது. மிகவும் ரசிக்க வைப்பது.
சமீபத்தில் ஒரு அருங்காட்சியகத்திற்கு போகும் போது, பாதுகாப்பிற்காக மற்றவர்களின் கைப்பைகளை "எக்ஸ் ரே" இயந்திரத்திற்குள் நுழைய விட்டு பரிசோதித்தனர். சிறிய குழந்தையாயிற்றே என்று என் மகளின் கைப்பையை சோதிக்க வில்லை. அடம் பிடித்து அவளுடைய கைப்பையையும் சோதிக்க செய்து பின்னரே அங்கிருந்து நகர்ந்தாள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
//உங்கள் செல்ல மகளுக்கும் எனது வாழ்த்துக்கள்!//
அதே! டபுள் ரிபீட்டு!
நன்றி.
// மழலையர் பள்ளியிலிருந்து (KG) முதல்நிலை பள்ளிக்கு 'கிராஜுவேட்' (primary school) ஆனாலும் அதற்கென ஒரு தனி பட்டமளிப்பு விழா //
என்ன கொடுமைனா பட்டமளிப்பு விழா. இது என்னான்னு கூட குழந்தைகளுக்கு புரியாது.ஆனா சந்தோசப்படுவாங்கன்னு நம்புறேன்.
புள்ள நல்லா வளந்துட்டா.
// பட்டங்கள் ஆளவும் புது சட்டங்கள் செய்யவும் வாழ்த்துக்கள்.//
எனது வாழ்துக்களையும் சொல்லிடுங்க.
நன்றி கார்த்திக்
//என்ன கொடுமைனா பட்டமளிப்பு விழா. இது என்னான்னு கூட குழந்தைகளுக்கு புரியாது.ஆனா சந்தோசப்படுவாங்கன்னு நம்புறேன்.//
இப்ப குழந்தைங்கல்லாம் நம்ம காலத்த விட நல்லா விவரமாவே இருக்காங்க. எல்லா குழந்தைகளும் மேடையில் அழகா நடந்து போய், சான்றிதளை வாங்கிட்டு காமராவுக்கு நல்லாவே "போஸ்" கொடுக்கறாங்க.
நன்றி.
பட்டங்கள் ஆளவும் புது சட்டங்கள் செய்யவும் வாழ்த்துக்கள்
இபபடிக்கு
DG
நன்றி DG
ஹா ஹா கலக்கல். வாழ்த்துக்கள் செல்லம்.
நன்றி சிவா!
Congradulations to your Daughter
Post a Comment