Skip to main content

அரசியல்வாதிகள் விளம்பர மாடல்கள் ஆனால்?

இது விளம்பர யுகம். விளம்பரம் இல்லாத பொருள் விலை போவது கஷ்டம். எத்தனை நாட்களுக்குத்தான் நாம் விளம்பரங்களில் நடிகர்களையும், விளையாட்டு வீரர்களையும், தொழிற் முறை மாடல்களையும் மட்டுமே பார்த்து போரடித்துக் கொண்டிருப்பது? நடப்பு விளம்பரங்களில் அரசியல்வாதிகளை நடிக்க வைத்தால் எப்படி இருக்கும் என்று ஒரு கற்பனை. மேலே உள்ள மற்றவர்களாவது காமெரா முன் மட்டுமே நடிக்க முடிந்தவர்கள். ஆனால் நமது அரசியல்வாதிகளோ நல்ல தூக்கத்தில் எழுப்பி விட்டாலும் திறமையாக நடிக்கக் கூடியவர்களாயிற்றே?

ப.சிதம்பரம் - அரசியலில் ஆக்ஷன் பண்ண அருமையான ஷூ " ஆக்ஷன் ஷூ"

மம்தா பானர்ஜீ - உல்லாசப் பயணம் செய்ய உகந்த வாகனம் நானோ கார். யெஸ்! நம்மால் முடியும்!

ராகுல் காந்தி - திருமணத்திற்கு வேண்டிய துணை தேட அவசியம் பாருங்கள் பாரத் மாட்ரிமோனி.காம்.

வருண் காந்தி - இந்தியாவில் பிறந்த அனைவருக்குமே உடனடித் தேவை! சிறந்த ஆயுள் காப்பீடு திட்டங்கள்! ஜீத்தி ரஹோ!

பிரகாஷ் கரட் - உலக மக்கள் எல்லோரும் நம்பி பணம் போட உலகிலேயே நம்பர் ஒன் வங்கி அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் வங்கி

மூன்றாம் அணி - உறுதியாக ஓட்ட வைக்க 'பெவிக்கால்'. இதை யாராலும் பிரிக்கவே முடியாது.

மாயாவதி - என்றைக்கும் மக்களின் வாகனம்! இன்றைக்கும் முந்தும் வாகனம்! ஹீரோ சைக்கிள்!

லாலு பிரசாத் யாதவ் - முப்பது நாட்களில் ஆங்கிலம் பேச கற்றுக் எளிதான வழி! ரெபிடெக்ஸ் புத்தகம்! பேசறது நமக்கு ஈஸி. ஆனா, கேக்கரவங்கதான் பாவம்!

ஜகதிஷ் டைட்லர் - இதுதான் இந்த ஆண்டின் வெற்றித் திரைப் படம்! அனைவரும் பாருங்க! சிங் இஸ் கிங்!

அன்புமணி ராமதாஸ் - (மந்திரி பதவி போல) இழுக்க இழுக்க இறுதி வரை இன்பம்! ஐடிசி வில்ஸ் சிகரெட்!

ஜெயலலிதா - இணைந்தாலே கனவு நனவாகும்! அரிய சுவை உதயம்! புதிய சன்ரைஸ்!

கருணாநிதி - உலகத் தமிழர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய சிறந்தத் திரைப்படம்! மாவீரன் அலெக்சாண்டர்!

லாலு பிரசாத் யாதவ் - எத்தனை பெத்தாலும் ஸ்ட்ராங்கான புருஷன் பொஞ்சாதி! நாங்களே சொல்றோம்! நாம் இருவர்! நமக்கொருவர்!

ராஜ் தாக்கரே - வெளி மாநிலத்தவரே! மும்பையில் (ரயில்வே) வேலை வேண்டுமா? கண்டிப்பா மும்பை வாங்க! அடி படறதுக்கு நான் காரண்டீ!

ஷிவ்ராஜ் பாட்டில்: ஒவ்வொரு தீவிரவாத சூட்டிங்குக்குப் (தாக்குதலுக்குப்) பின்னாலும் நான் விரும்பி அணிவது "கிராசிம் சூடிங்க்ஸ்" ஐ அம் எ கம்ப்ளீட் மேன்!

முததளிக் - எனக்கு ரொம்ப பிடிக்கும்!
யாரு நான்தானே!
இல்லே!
நான் உங்க பிங்க் கலர் உள்ளாடைய சொன்னேன்!

ராமதாஸ் - அனைவரும் வாருங்கள்! ஜம்போ சர்க்கஸ் பார்க்கலாம்! தேர்தலுக்கு தேர்தல் அருமையான அந்தர் பல்ட்டி பார்க்கலாம்!

கடைசியாக பொது மக்கள் என்ன விளம்பரம் செய்யலாம் என்று பார்ப்போம்.

பசிய மறந்து, கூட்டம் கூடி, கைதட்டி, விசிலடிச்சு, கோஷம் போட்டு, 'வேட்டு'க்கள மறந்து 'வோட்டு'க்கள போட்டு தலைவர்களை உருவாக்கி விட்டு பின்னர் அஞ்சு வருடம் கோமா ஸ்டேஜுக்கு போகும் நம் "குறைந்த நேர ஞாபக சக்தி" மக்கள் அனைவரும் "மெமோரி பிளஸ்" சாப்பிடுங்கன்னு விளம்பரம் செய்யலாம்.

நன்றி.

பின்குறிப்பு: ஐயா! அரசியல் வியாதிகளே! சாரி! அரசியல்வாதிகளே! அவர்களை ஆதரிக்கும் அண்ணன்மார்களே! மேலே சொன்னது எல்லாம் சும்மா தமாசுக்குத்தாங்க! விருப்ப பட்டா உங்களுக்குள்ளார ஒளிஞ்சிருக்கும் ஒரு திறமைய வெளிய கொண்டு வரும் ஒரு சிறிய முயற்சின்னு கூட வச்சுக்கலாம். படிச்சுட்டு சிரிச்சுட்டு அப்படியே போயிடுங்க! தயவு செஞ்சு ஆட்டோல்லாம் வேணாம்! ரொம்ப வலிக்கும்! அவ்வ்வ்வ்!

Comments

Unknown said…
படங்கள்லெல்லாம் நெம்ப அருமையா இருக்குதுங்கோ தம்பி......!!
Maximum India said…
நன்றி அண்ணாத்தே!
நல்ல கற்பனை!

முக்கியமா அன்புமணி ராமதாஸ்
நல்ல கற்பனை.. :-))
Maximum India said…
நன்றி வால்பையன்!

:)
Maximum India said…
நன்றி சென்ஷி!

:-)
//அன்புமணி ராமதாஸ் - (மந்திரி பதவி போல) இழுக்க இழுக்க இறுதி வரை இன்பம்! ஐடிசி வில்ஸ் சிகரெட்!//

சோக்கா, கீது தலீவா !! இந்த மேரி ஆளுங்கள எல்லாம், தலீ நகரு பக்கமே சேக்கூடாதுபா,
Maximum India said…
//சோக்கா, கீது தலீவா !! இந்த மேரி ஆளுங்கள எல்லாம், தலீ நகரு பக்கமே சேக்கூடாதுபா,//

டவுசர் பாண்டி கண்ணு!

இந்த ---- கையாண்ட கொஞ்சம் உஷாரா இருந்துக்கோ! இல்லாங்காட்டி நிஜார கூட உஜார் பண்ணிடுவாங்க இந்த ---- பசங்க! :-)

தாங்க்ஸ்மா!
அருமை அருமைன்னு கத்த ஆசைதான்... ஆட்டோவை என் கடைப்பக்கம் அனுப்பிட்டாங்கன்னா என்ன பண்றது?
Maximum India said…
அன்புள்ள நகைக் கடை நைனா!

//அருமை அருமைன்னு கத்த ஆசைதான்... ஆட்டோவை என் கடைப்பக்கம் அனுப்பிட்டாங்கன்னா என்ன பண்றது?//

ஆமாமாம்! தங்கம் விக்கிற வெலையில கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கறதுதான் நல்லது.

நன்றி
Maximum India said…
நன்றி சின்னப் பையன்!

:-)
Suresh said…
:-0 machan already mail vantha padam thannalaum nee sonna matter super
திமுக கொள்கையாளருக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் (தை முதல் தேதியை புத்தாண்டாக ஒப்புக்கொண்ட நீங்கள் திமுக தான்)
Maximum India said…
வாழ்த்துக்களுக்கு நன்றி ராஜா

//தை முதல் தேதியை புத்தாண்டாக ஒப்புக்கொண்ட நீங்கள் திமுக தான்//

நீங்கள் வேண்டுமானால் மதிமுகவாக (மறுப்பு-திமுக கொள்கைகள்) இருக்கலாம்.

ஆனால் நான்?

நான் குடும்ப அரசியல் நடத்த வில்லை, பொய் கடவுள் மறுப்பில் ஈடுபடவில்லை, ஆபாசமான வாக்குவாதத்தில் ஈடுபடுவதில்லை. அப்படி இருக்கும் போது, என்னை எப்படி நீங்கள் திமுக கொள்கைகளைப் பின்பற்றுபவன் என்று நீங்கள் கூறலாம்?

உண்மையில் நான் அதிமுகதான் (அல்ல-திமுக கொள்கைகள்). :-)

நன்றி.
Maximum India said…
நன்றி துளசி கோபால்

:-))))))))))))))))))))))))))
Naresh Kumar said…
கற்பனை அருமை!!!

இப்படியே போனா கூடிய சீக்கிரம் உங்க ஊட்டுக்கும் மட்டுமில்ல, எங்க ஊட்டுக்கும் சேத்து ஆட்டோ இல்ல லாரியே வரும் சொல்லிபுட்டேன்

நரேஷ்
www.nareshin.wordpress.com
Maximum India said…
நன்றி நரேஷ்

//இப்படியே போனா கூடிய சீக்கிரம் உங்க ஊட்டுக்கும் மட்டுமில்ல, எங்க ஊட்டுக்கும் சேத்து ஆட்டோ இல்ல லாரியே வரும் சொல்லிபுட்டேன்//

:-)
ஓடுங்க, ஓடுங்க, வீட்டுக்கு ஆட்டோ வருது.
Maximum India said…
கொஞ்சம் உஷார் படுத்திக்கிட்டேன்!

தகவலுக்கு நன்றி "ஒரு காசு".

:)

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

நரேந்திர மோடி நாடாளலாமா?

சமீபத்தில் நடைபெற்ற குஜராத் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கார்பொரட் கனவான்களான அனில் அம்பானி மற்றும் சுனில் மிட்டல் ஆகியோர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். காரியம் ஆக வேண்டும் என்றால் என்ன வேண்டுமானாலும் பேசக் கூடியவர்கள் நமது தொழில் அதிபர்கள் என்பதனால் அவர்களின் பேச்சுக்கு அவ்வளவு மரியாதை கொடுக்க வேண்டியதில்லை. இவர்களைப் போன்றவர்களால் ஏற்கனவே நாடாள தகுதி பெற்றவர் என்று கூறப் பட்ட சந்திர பாபு நாயுடு அடுத்த சட்ட மன்ற தேர்தலில் தனது முதலமைச்சர் பதவியினையே இழந்தது குறிப்பிடத் தக்கது. தொழில் அதிபர்கள் பேச்சினை பா.ஜ.கவே ஏற்றுக் கொள்ளாத பட்சத்திலும் கூட, தீவிரவாதத்தை ஒடுக்கி குஜராத் மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து சென்றவர் நரேந்திர மோடி என்றும் அவர் இந்தியாவின் பிரதமர் ஆவது நாட்டுக்கு நல்லது என்றும் பலராலும் கருதப் படுவதால், நரேந்திர மோடியின் செயல்பாடு பற்றியும் அவர் பிரதமர் ஆகலாமா என்பது பற்றியும் பிரதமராக அவர் ஏற்றுக் கொள்ளப் படுவாரா என்பதைப் பற்றியும் இங்கு பார்ப்போம். இன்றைய தேதியில் இந்தியாவிலேயே மிகுந்த முன்னேற்றம் அடைந்த ஒரு மாநிலமாக குஜரா...

இந்தியா தாக்குப் பிடிக்குமா?

இன்றைய உலகப் பொருளாதாரத் தேக்க நிலையில், இந்தியாவால் தாக்குப் பிடிக்க முடியுமா என்பது பற்றி பார்ப்போம். சமீபத்தில் வெளியிடப் பட்ட மத்திய புள்ளியல் (மத்திய அரசு) நிறுவனத்தின் மதிப்பீட்டின் படி இந்தியப் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 7.1 சதவீதம் வளர்ச்சியுறும் என்று தெரிகிறது. இது சரியாக இருக்கும் பட்சத்தில் உலகிலேயே இரண்டாவதாக வேகமாக வளர்ச்சியுறும் நாடு இந்தியாவாகத்தான் இருக்கும் (சீனா முதலாவது). சென்ற ஆண்டில் ஒன்பது சதவீதம் வளர்ச்சி பெற்றிருந்த இந்தியப் பொருளாதாரம் செப்டம்பர் 2008 வரையிலான முதல் அரையாண்டில் 7.80% வளர்ச்சிப் பெற்றிருந்தது. பொதுவாகவே பண்டிகைக் காலமாக கருதப் படுகிற இரண்டாவது அரையாண்டே தொழிற் துறையில் அதிக வளர்ச்சியைக் காட்டும் என்றாலும் இந்த முறை இந்தியத் தொழில் துறை பெரும் தேக்க நிலையில் இருந்து வந்திருக்கிறது என்பது கவனிக்கத் தக்கது. இந்திய தொழிற் வளர்ச்சி கடந்த இரு மாதங்களாக மிகவும் குறைந்து காணப் படுவதாலும் ஏற்றுமதியோ இறங்குமுகத்தில் இருப்பதாலும் இந்திய அரசாங்கம், மார்ச் 2009 வரையிலான நிதி ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் நமது பொருளாதாரம் குறைந்த வளர்ச்சியே (6.30%) இரு...