Skip to main content

அரசியல்வாதியிடமே "ஆட்டைய" போட்ட பலே திருடர்கள்

நம்மூர் அரசியல்வாதிகள் ஜகதலப் பிரதாபன்கள். ஊரையே அடித்து உலையில் போட்டு காய்ச்சி சுவிஸ் பாங்கிற்கு கொண்டு போய் சேர்ப்பதில் கில்லாடிகள். அத்தகைய அரசியல்வாதி அதுவும் தேர்தலில் போட்டியிடும் ஒரு முக்கிய கட்சி வேட்பாளரிடம், "அபேஸ்" செய்யவும் வல்ல சில வல்லவனுக்கும் வல்லவர்கள் நம் நாட்டில் உள்ளார்கள் தெரியுமா?

தென் கோவா தொகுதியில் போட்டியிடுபவர் திரு.நரேந்திர சவோய்க்கர். இவர் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர். இவருடைய முக்கிய தேர்தல் கோஷம்: " கோவா மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது". இது வரை மக்கள் இவர் கூற்றை நம்பினார்களோ இல்லையோ, இனி மேல் நம்பித்தான் ஆக வேண்டும். ஆம். பலே திருடர்கள் இவரிடமே தமது கை வரிசையை காட்டி விட்டனர். அதுவும் ஒரு மிகப் பழைய தந்திரத்தை பயன்படுத்தி.

சம்பவத்தன்று தென் கோவா தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த நரேந்திர சவோய்க்கரின் அருகே இரண்டு பேர் வந்தனர். அவர் தோளைத் தட்டிய ஒருவர், "கீழே கிடப்பது உங்கள் பணமா என்று பாருங்கள்" என்று சொன்னார். ஆவலுடன் கீழே குனிந்த (மற்றவர் பணத்தையே விடாத அரசியல் வியாதிகள் தங்கள் சொந்த பணத்தையா விட்டு விடப் போகிறார்கள்) அவரிடமிருந்த லேப்டாப் கணினியை பறித்துக் கொண்டு நொடியில் தலை மறைவாகி விட்டனர்.

அரசியல்வாதியையே கணநேரத்தில் அசத்திய அவர்கள் சாதாரணமான ஆட்களாக இருக்க முடியாது. சொல்ல முடியாது, அவர்கள் ஏதேனும் வேறு தொகுதிகளில் போட்டியிடுபவர்களாகவும் கூட இருக்கலாம்.

நரேந்திராவுக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கும் அதே நேரத்தில், திருடர்களின் கைவரிசையில் ஏமாறலாம், ஆனால் எக்காரணம் கொண்டும் "கையிடம்" ஏமாந்து போகாதீர்கள் என்றும் ஒரு நல்லெண்ண எச்சரிக்கையும் விடுப்போம்.

நன்றி.

Comments

அண்ணே சொல்ல முடியாது, அவங்க "கைகளே" வாக இருக்கலாம்.
Maximum India said…
அன்புள்ள கும்மாச்சி

//அண்ணே சொல்ல முடியாது, அவங்க "கைகளே" வாக இருக்கலாம்.//

கலியுகம் தம்பி இது. ஒரு "கையே" இன்னொரு "கைய" நம்ப முடியாத காலம் இது.

நன்றி.
Admin said…
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவண்
உலவு.காம்
Maximum India said…
கண்டிப்பாக இணைக்கிறேன் சரண்

நன்றி
எந்தவித‌ முன்னெச்சரிக்கையும் பாதுகாப்பும் இல்லாம இப்படி ஆபத்தா குனிஞ்சா ஆப்புதான் மிஞ்சும். ஹா! ஹா!
Maximum India said…
பின்னூட்டத்திற்கு நன்றி மாசிலா
ஜன நாயக திருடரிடம் பணத்தை நியாய மாகவா திருடமுடியும் ? இருப்பினும் அவர் பின்னால் திருட போவதை முன்பே உணர்ந்து கொஞ்சம் அட்வான்சாக மக்கள் பணத்தை அவர்கள் எடுத்துக்கொண்டு உள்ளார்கள். தப்பில்லை.
Maximum India said…
நன்றி பொதுஜனம்

//இருப்பினும் அவர் பின்னால் திருட போவதை முன்பே உணர்ந்து கொஞ்சம் அட்வான்சாக மக்கள் பணத்தை அவர்கள் எடுத்துக்கொண்டு உள்ளார்கள். தப்பில்லை.//

அய்! இது கூட நல்லாருக்கே?
திருட்டா இருக்காது!

முதல்ல இவரு ஆட்டைய போட்டிருப்பாரு!

அதான் கன்னம் வச்சு அவங்க ஆட்டைய போட்டாங்க!
Maximum India said…
நன்றி வால்பையன்

//திருட்டா இருக்காது!

முதல்ல இவரு ஆட்டைய போட்டிருப்பாரு!

அதான் கன்னம் வச்சு அவங்க ஆட்டைய போட்டாங்க!//

இருக்கலாம். நம்ம ஆளுங்கள நம்பவே முடியாது.

நன்றி

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

தீவிரவாதிகளை வென்ற கதை - இந்திய கமாண்டோவின் விளக்கம்

நேற்று ஒரு தீவிரவாதி பிடிப் பட்ட கதை பார்த்தோம். இன்று தாஜ் ஹோட்டலில் எவ்வாறு நான்கு தீவிரவாதிகள் ஒழிக்கப் பட்டனர் என்று விளக்கும் இந்திய கமாண்டோவின் விளக்கத்தை பார்ப்போம். முதலில் இந்தியா கமாண்டோக்கள் தாஜ் ஹோட்டல் வந்த கதை புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மும்பையை பயங்கரவாதம் தாக்கியது. அப்போது கேரளாவில் இருந்த மகாராஷ்டிர முதல்வர் மும்பை வரவும் இந்த சூழ்நிலையின் பயங்கரத்தையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளவும் 90 நிமிடம் பிடித்தது .பின்னர் 11.00 அளவில் மத்திய அரசிற்கு போன் பேசிய முதல்வர் கோரியது 200 கமாண்டோக்களை. உடனே அந்நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இந்திய கமாண்டோக்கள் எழுப்பப் பட்டனர். அவர்கள் மும்பை வரத் தயாரான போதுதான் புரிந்தது, அவ்வளவு பேரை மும்பை கொண்டுவர தேவையான சிறப்பு விமானம் சண்டிகரில் உள்ளது என்று. உடனே அந்த விமானியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி தயார் படுத்தி டெல்லியிலிருந்து கமாண்டோக்கள் மும்பை வந்த போது நேரம் காலை 5.25 மணி. அவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு கொண்டு வரப்பட்டு திட்டம் தயாரிக்கப் பட்டு அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7.00 மணி. அதாவது மும்பை தாக்கப் ப...

கம்ப்யூட்டர் கட்சியும் கால்குலேட்டர் கட்சியும்!

மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல் இந்தியா முழுவதும் அனைவரும் தாய்மொழியுடன் ஹிந்தியும் படிக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு அனைவரும் ஹிந்தி படிப்பதன் மூலம் நாட்டில் ஒருமைப்பாடு ஏற்படுவதுடன் ஹிந்தியை ஆங்கிலம் போன்று ஒரு "அறிவு மொழியாக (lingua franca)" மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார். இந்த கருத்தின் மீது பதிவுலகில் ஏராளமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலம் மட்டுமே போதும் என்று ஒரு கட்சியும், ஆங்கிலம் வாசலாக இருக்கும் போது ஹிந்தி ஒரு சன்னலாக இருந்து விட்டு போகட்டுமே என்று இன்னொரு கட்சியும் விவாதித்து வருகின்றன. ஹிந்தி எதிர்ப்பு என்பது எப்போதுமே ஒரு உணர்வு பூர்வமான விஷயமாகவே பலராலும் கருதப் பட்டாலும், அதற்கு அறிவு பூர்வமான, சரித்திர பூர்வமான சில அடிப்படைகள் உண்டு. ஹிந்தி திணிப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு பற்றி எனக்கு தெரிந்த சில கருத்துக்களை இங்கு ஒரு புனைவு வடிவில் அளிக்க முயற்சிக்கிறேன். இப்போது புனைவு ! ஒரு காலத்தில் பரதம்பட்டி என்ற ஒரு கிராமம் இருந்ததாம். அங்கு பல ஆண்டுகள் வரை ஆட்சி செய்து வந்த துரை மகாராஜா ஒரு காலத்தில், அந்த கிராமத்தை ஜனநாயக ...