The Art of Appraisal
-
Big Boss: This year your performance was good, excellent and outstanding.
So, your rating is "average".
Kumar: What? How come 'average'?
Big Boss: Becau...
பிரிவுகள்
- சமூகம் (121)
- செய்தியும் கோணமும் (104)
- பொருளாதாரம் (101)
- பங்கு சந்தை (98)
- அரசியல் (74)
- பயணங்கள்/அனுபவங்கள் (40)
- மனவியல் (40)
- பங்கு சந்தை வெற்றி பயணம் - ஒரு வழித் துணை (15)
- கதை (9)
- நகைச்சுவை (7)
- அறிவியல் (5)
- திரைவிமர்சனம் (4)
- சட்டம் (3)
- நூலகம் (3)
- கிறுக்கல்கள் (1)
Thursday, April 16, 2009
உலகிலேயே பெரிய பணக்கார நாடு வாங்கியிருக்கும் கடன் அளவு எவ்வளவு தெரியுமா?
கஷ்டப் பட்டு சம்பாதித்து பணக்காரர்கள் ஆகிறவர்களும் உண்டு. இப்படி கடன் வாங்கியே பணக்காரர்கள் ஆகிறவர்களும் உண்டு. நான் யாரைச் சொல்கிறேன் என்று உங்களுக்கு இந்நேரம் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
நம்மூரில் கூட பார்க்கலாம். துளியும் கடன் சுமை இல்லாத பலர் சாதாரண சைக்கிள்களில் செல்வார்கள். ஆனால் வங்கிகளில் பல கோடி கடன் வாங்கிய தொழில் அதிபர்கள் (அதில் வாராக் கடன் அதிபர்களும் அடக்கம்) மிகப் பெரிய கார்களில், ஏன் சில சமயங்களில் தனியார் ஜெட்டில் கூட செல்வார்கள்.
அதே போல, இந்தியா போன்று குறைவாக கடன் வாங்கிய நாடுகள் எல்லாம் ஏழை நாடுகளாக அறியப் படும் வேளையில், உலகிலேயே அதிக கடன் வாங்கிய நாடு ஒரு வலுவான பணக்கார நாடாக அறியப் படுகிறது.
ஒவ்வொரு நாளும் பில்லியன் டாலர் கணக்கில் அதிகரித்து செல்லும் அமெரிக்காவின் கடன் தொகை கடைசியாக கிடைத்த தகவலின் படி 11 டிரில்லியன் டாலர் அளவையும் தாண்டி விட்டது. இந்திய மதிப்பில் இது எவ்வளவு தெரியுமா? ஏறத்தாள ரூ. 55,00,00,00,00,00,000.00. தலை சுற்றுகிறதா? அதாவது ஐநூத்தி ஐம்பது லட்சம் கோடி ரூபாய். (இந்தியாவின் ஒரு ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவே கிட்டத்தட்ட நாற்பது லட்சம் கோடி ரூபாய் மட்டுமே) இந்த கடன் தொகை அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 75 சதவீதத்திற்கும் மேலே. நூறு சதவீதத்திற்கும் மேலே போனால் இந்த நாடு தாங்குமா என்று தெரியாது. ஆனால் கண்டிப்பாக உலகம் தாங்காது என்று சொல்ல முடியும்.
அமெரிக்க அரசின் மொத்த கடன் தொகையை ஒரு டாலர் நோட்டாக ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைத்தால், பூமியிலிருந்து சந்திரன் வரை போய் விட்டு வரும் அளவுக்கு உயரமாக இருக்கும். (கிட்டத்தட்ட 7,50,000௦௦௦ மைல்கள்). இதே தொகையை பரவலாக அடுக்கி வைத்தால் மூன்று கால்பந்து மைதான பரப்பளவிலும் உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் துபாய் கட்டிடத்தின் உயரத்திற்கு அடுக்க முடியும். சரி ஒரு டாலர் நோட்டு வேண்டாம், நூறு டாலர் நோட்டாக பரப்பி வைக்கலாம் என்று பார்த்தால், அதன் பரப்பளவு வாஷிங்டன் பரப்பளவில் நான்கில் மூன்று பங்கு பிடிக்கும்.
இன்னுமொரு வேடிக்கையான விஷயம், இப்படி நோட்டுக்களாக கடனை அளக்கும் அல்லது அடைக்கும் அளவுக்கு அமெரிக்காவில் போதுமான கரன்சி நோட்டுக்களே இல்லை. புழக்கத்தில் உள்ள மொத்த கரன்சிக்களின் மதிப்பே ஒரு டிரில்லியன் டாலர் அளவுக்கும் குறைவுதான். (அதே சமயம் கடன் அளவு சுமார் 11 டிரில்லியன் டாலர் அளவு)
இந்த கடன் தொகை அரசாங்கத்துடையது மட்டும்தான். அமெரிக்காவில் வாழும் மக்களிலும் மிகப் பலர் கடன் பொருளாதாரத்தை மட்டுமே நம்பி வாழ்கின்றனர். அமெரிக்காவின் மொத்த கடன் தொகை அதன் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியைப் போல (கிட்டத்தட்ட) மூன்றரை மடங்கு என்று சொல்லப் படுகிறது.
தனது சொந்த உழைப்பில் இல்லாமல் இப்படி உலக நாடுகளிடம் கடன் வாங்கியே வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் அமெரிக்காவை ஒரு மிகக் கவர்ச்சியான மற்றும் பெரிய (மோசடி) பைனான்ஸ் கம்பெனி (A Big Ponzi Scheme) என்றும் உலக நாடுகள் எல்லாம் அதில் பணம் போட்டு ஏமாந்து கொண்டிருக்கின்றன என்றும் ஒரு பொருளாதார நிபுணர் கூறினார்.
அவர் சொன்னது போல இருக்குமானால், வெகு சீக்கிரம் இந்த நீர்க் குமிழியும் வெடிக்கும் என்று எதிர்பார்க்கலாம். அப்படி அமெரிக்கா திவாலானால் பாதிக்கப் படுவது (பைனான்ஸ் கம்பெனியில் பணியாற்றி வேலை இழக்கும்) அமெரிக்க மக்கள் மட்டுமல்ல, அங்கு முதலீடு செய்துள்ள இந்தியா, சீனா போன்ற வளம் குறைந்த நாடுகளும் அந்த நாடுகளில் உள்ள நம் போன்ற ஏழை மக்களும்தான்.
எப்போதும் போல இந்த விஷயத்திலும் நம்மை முந்திக் கொண்ட சீனா அரசு தனது அந்நிய செலவாணியை டாலர் கணக்கிலிருந்து வேறு கரன்சிகளுக்கு மற்றும் இதர வகை முதலீடுகளுக்கு மாற்றத் தொடங்கி விட்டது. சீனாவைப் போலவே தனது சேமிப்பில் பெரும்பகுதியை அமெரிக்க டாலரில் முதலீடு செய்திருக்கும் இந்தியா என்ன செய்யப் போகிறது? அமெரிக்க அரசு தவறாக எடுத்துக் கொள்ளும் என்று மாற்றம் செய்யத் தயங்கினால் நஷ்டம் நமக்குத்தான்.
நன்றி.
Labels:
செய்தியும் கோணமும்,
பொருளாதாரம்
Subscribe to:
Post Comments (Atom)
23 comments:
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....
இவண்
உலவு.காம்
அருமையான தகவல்
டோண்டு பதிவில் ஒரு கேள்விக்காக இந்த லிங்க் கொடுத்து விடுகிறேன்!
அட கொக்கமக்க :-) அவ்வளவா ஆஅ ஆஅ ஆ அருமயான பகிர்தல் மச்சான்
பதிவிற்கு நன்றி.
அன்புள்ள உலவு.காம்
கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். இணைத்து விடுகிறேன்.
நன்றி.
நன்றி வால்பையன்.
//டோண்டு பதிவில் ஒரு கேள்விக்காக இந்த லிங்க் கொடுத்து விடுகிறேன்!//
நான் கூட அந்த பதிவைப் பார்த்தேன்.
இந்த பொருள் குறித்த எந்த விவாதத்திற்கும் நான் ரெடி.
நன்றி.
நன்றி சுரேஷ்
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி மாசிலா!
அருமையான தகவல்
நன்றி ச்சின்னப்பையன்!
இப்படி அடுத்தவன் காசை நம்பியே வாழ்க்கையை ஓட்டறவனுக்குதான் மதிப்பு போல உலகத்தில!!! என்னமோ போங்கப்பா!!!
நரேஷ்
www.nareshin.wordpress.com
நன்றி நரேஷ்
அருமையான தகவல்.
பதிவிற்கு நன்றி.
நன்றி பட்டாம்பூச்சி!
இந்த விஷயம் மிகவும் பழைய அவசியமில்லாத விஷயம்.காரணங்களை நான் படித்தவரையில் உங்கள் பார்வைக்கு,
ஒரு நாடு அதிகம் கடன்பட்டிருந்தால் அவை முன்னேறிய நாடாக எப்படி மாறும். உலக அளவில் அமெரிக்காவை தவிர, நாம் இப்ப பார்க்கிற அவ்வுளவும் அமெரிக்கா பல நாடுகளில் பல விதங்களில் முதல் செய்து விட அதை அந்த நாடுகள் திருப்பி கேட்கவும் முடியாது.
ஜப்பான் தான் அமெரிக்காவிற்கு அதிகம் கடன் கொடுத்த நாடு.அதன் பாதுகாப்பு இன்று யார் கையில்? இந்த கடன் அளவு அமெரிக்க ஆதரவு நாடுகளின் விருப்ப கடன்.இதனால் எந்த பாதிப்பும் இல்லை. அமெரிகாவுக்கு!!!
அன்புள்ள ராஜா
//இந்த விஷயம் மிகவும் பழைய அவசியமில்லாத விஷயம்.//
இது மிகவும் பழைய விஷயம் அல்ல. சமீப காலத்தில் அதுவும் சப்ப்ரைம் பிரச்சினைக்கு பிறகு அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது என்று சொல்லலாம். சப்ப்ரைம் பிரச்சினைகளால் பாதிக்கப் பட்ட அமெரிக்க நிறுவனங்களை காப்பாற்றுவதற்கு மட்டும் சுமார் ஒரு டிரில்லியன் டாலர் அளவுக்கு அமெரிக்க அரசு கடன் வாங்குகிறது.
இது மிகவும் அவசியமான கவனிக்கப் பட வேண்டிய விஷயம் என்பதனாலேயே சீனா அரசு தனது டாலர் கரன்சி கையிருப்பை குறைத்து வருகிறது. கூடிய சீக்கிரத்தில் இந்திய மைய வங்கியும் சீனாவை பின்பற்றும் என்பது நிதி வல்லுனர்களின் கருத்து.
//உலக அளவில் அமெரிக்காவை தவிர, நாம் இப்ப பார்க்கிற அவ்வுளவும் அமெரிக்கா பல நாடுகளில் பல விதங்களில் முதல் செய்து விட அதை அந்த நாடுகள் திருப்பி கேட்கவும் முடியாது.//
அமெரிக்க அரசின் நிகர அந்நிய முதலீடு நெகடிவ் ஆகவே உள்ளது.
//இந்த கடன் அளவு அமெரிக்க ஆதரவு நாடுகளின் விருப்ப கடன்.இதனால் எந்த பாதிப்பும் இல்லை. அமெரிகாவுக்கு!!!//
அப்படி இல்லை. உலக பொது கரன்சியாக டாலர் இருந்ததால் பலரும் டாலர் கணக்கில் முதலீடு செய்து வருகின்றனர். அமெரிக்காவின் ஆதிக்கத்தைக் குறைக்கவே ஒரு காலத்தில் ஐரோப்பிய நாடுகளால் "யூரோ" நாணயம் உருவாக்கப் பட்டது. ஆனால் அந்த நாடுகளும் இப்போது மிகவும் வலுவிழந்து போயிருப்பதால் டாலர் தப்பி பிழைத்துள்ளது.
அமெரிக்காவிற்கு எந்த பாதிப்பும் இல்லை என்று எப்படி சொல்கிறீர்கள்? ஜார்ஜ் புஷ் ஆட்சி இழந்ததற்கு டாலர் வலு இழந்ததும் ஒரு முக்கிய காரணம். இறக்குமதி நாடான அமெரிக்காவிற்கு டாலரின் மதிப்பு குறைந்தால் இறக்குமதியில் பெருத்த நஷ்டம் வரும்.
சீனா பல மனித உரிமை மீறல்களை செய்தாலும், அமெரிக்காவால் முன்போல இப்போது தட்டிக் கேட்க முடிய வில்லை? அதற்கும் இந்த கடன் பிரச்சினைதான் காரணம்.
எனவே எந்த நாடாக இருந்தாலும், வரவுக்குள் செலவு செய்யவில்லை அல்லது செலவுக்கு ஏற்றபடி வருமானம் இல்லை என்றால், கண்டிப்பாக பாதிக்கப் படும் என்பது பொருளாதார நியதி. இதை மாற்ற யாராலும் முடியாது.
நன்றி.
உங்களுக்கு நான் சொல்வதின் அடிப்படை புரியவில்லை. ஈரோவின் தோல்வியும், வெற்றியும் டாலரை பொறுத்தே உள்ளது. நான் உங்களிடம் ஒரு அடிப்படை கேள்வி.
இப்பொழுது பார்க்கிற Numbers will you withdraw and store in place? Where these numbers are there? All are numbers.ஒரு நாள் இந்த numbers will become VOID. They will start from scratch. Still America will start from No1. This is what I want to say. Thanks
அன்புள்ள ராஜா
இப்போது எனக்கு எல்லாம் புரிந்து விட்டது. புத்தாண்டு கோபம் இன்னும் உங்களுக்குத் தீர வில்லை.
நம்முடைய விவாதங்களை புத்தாண்டு, ஹிந்து மதம், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியவற்றுடன் நிறுத்திக் கொள்வோம். பொருளாதாரமெல்லாம் வேண்டாம். விட்டுடுங்க! ரொம்ப வலிக்குது! அப்புறம் அழுதுடுவேன்!
ரொம்ப நன்றி! மறுபடியும்---------------------------- வராதீங்கன்னு சொல்ல வந்தேன்!
நன்றி சிவா!
i think people see these as numbers.
I think the recent Chinese statements are very bold and an attempt to take these numbers to reality. They have so much of dollars and are caught in a situation, where they are worried, that US keep printing paper money, and soon its going to become worthless. So far the world depended on US consumption, which is reducing to a larger extent, and soon there will be no market for such junk. When you dont have a market, you dont need to finance. I think thats why India is right to base its economy on its local consumption (atleast a major portion).
So the dollar base and the US debt is really worrisome to the whole world, and it is unfortunate that only Chinese are raising their voice against it. When Saddam did it before, we know what happened to him, Iran is trying to create a oil bourse in Teheran with Euro as base, but no one is supporting them, now chinese are proposing a different currency for strategic reserve, though no one will oppose them, Chinese cannot do much because they hold maximum dollars now, its like catch/22. I am appalled at Indian silence in all of these. Chinese have gone to places and spent their dollars to acquire so much of natural resources, including their fixed price contract for oil with Russia in exchange of dollars. They are really smart, and our pols and officers are sleeping and accumulating money in swiss banks, it is very unfortunate that we are missing out on a good opportunity.
அன்புள்ள itsdifferent
உங்கள் கருத்துக்களை நானும் வழி மொழிகிறேன். கரன்சி நோட்டுகளை அடித்து அடித்து சில வருடங்களில் உலகிலுள்ள மரங்களை எல்லாம் காணாமல் செய்து விடுவார்கள் என்ற வேடிக்கையான கருத்து நிதி வட்டாரங்களில் உலா வருகிறது.
சீனா பல மாதங்களாக தனது "exposure" டாலர் அல்லாத முதலீடுகளில் (இதர முன்னேறி வரும் நாடுகளில் கூட சீனா முதலீடு செய்கிறது) விரிவு படுத்தி வருகிறது. சீனா போல இந்தியா அமெரிக்காவை ஏற்றுமதி விஷயத்தில் சார்ந்து இருக்க வில்லை என்றாலும் இந்தியாவின் அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் அமெரிக்காவைச் (சுயநலத்திற்காக) சார்ந்து உள்ளனர். இதனாலேயே அமெரிக்காவிற்கு வருத்தமோ கோபமோ வருகிற செயல் எதையும் செய்யக் கூடாது என்று இந்த விஷயத்தில் அமைதியாக இருக்கின்றனர் என்று நினைக்கிறேன்.
நன்றி.
You mean to say you ridiculed my statement right? Good Since You are in finance industry and prepared for Just Civil Service Exams doesnt mean you are second to none in economics. I understand your reply. Good. Since you are not able to understand my reply means God only oneday will reply to you. I am again again saying to you that these are only numbers. banks in the world can supply money to all its customers their full money in the same day? This what I want to ask. You pls think about this and correlate to my previous reply to you. I hope you understand atleast now. I will never cry to reply Even you again rejected this. Dont worry.
ஒரு பாட்டு ஒன்று இருக்கு!அதை நான் பாட விரும்பவில்லை.
Why america is import country,it means it is not having resource? hahaha. if they stop almost whole world will stop at any given day. So world will not let it to stop. So pls dont worry and try to blog in other subjects which you know better.
விடாமல் தொடர்ந்து பின்னூட்டமிடுவதற்கு நன்றி ராஜா!
அதே சமயம் உங்கள் கருத்துக்கு பதில் சொல்ல நான் விரும்ப வில்லை.
இனிமேல் தேவையில்லாமல் உங்கள் நேரத்தை வீணடித்துக் கொள்ளாதீர்கள்!
நன்றி.
Post a Comment