Monday, April 13, 2009

இன்று வாக்கு வேட்டை. நாளை மான் வேட்டை அல்லது மனித வேட்டை?


மும்பையில் ஒரு நெடிய பேருந்து பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற பல நாள் ஆசை நேற்றுத்தான் நிறைவேறியது. கார் அல்லது பைக் பயணத்தின் போது, பெரும்பாலும் நமது கவனம் சாலையின் மீதேதான் இருக்கும். லோக்கல் ரயில் பயணத்திலோ பெரும்பாலும் இருப்புப் பாதைகளையும் ரயில் நிலையங்களையும் மட்டுமே நம்மால் பார்க்க முடியும். அதே சமயம், டவுன் பஸ் பயணமோ நாம் வாழும் ஊரில் நடைபெறும் அன்றாட நிகழ்வுகள் பற்றி இன்னும் கொஞ்சம் தெளிவாக புரிந்து கொள்ள உதவுகிறது.

கேட்வே ஆப் இந்தியாவின் அருகே இருந்து பந்திரா வரை செல்லும் ஒரு பேருந்தில் நேற்று நான் பயணித்த போது, (தென் மும்பையில் சியான் செல்லும்) முக்கிய சாலையில் மக்கள் திரள் அதிகமாக இருந்ததை பார்க்க முடிந்தது. அதுவும் கிட்டத்தட்ட ஐந்து கிமீ நீளத்திற்கு மிகப் பெரிய அளவில் மக்கள் கூட்டம் இருந்தது. சரி ஏதோ தேர்தல் பிரச்சாரம் போல இருக்கிறது என்று எண்ணியிருந்த போது, சக பயணி ஒருவர் "சல்மான் கான் வருகிறார், பிரச்சாரம் செய்ய" என்று கூறினார். அப்போது அவர் கண்களில் ஒருவித பளபளப்பு இருந்ததை உணர முடிந்தது. சாலையிலும் மக்கள் பெருத்த ஆரவாரம் செய்து கொண்டிருந்தனர். கைகளில் மாலைகளோடு பலரும் காத்துக் கொண்டிருந்தனர்.

நாட்டின் பிற பகுதிகளில், குறிப்பாக கிராமப் பகுதிகளில், சினிமா நடிகர்களை காண பெருந்திரளான மக்கள் கூட்டம் வருவது சகஜமான ஒன்றாகவே இருக்க முடியும். காரணம் அங்குள்ள மக்கள் அதிகம் துறைகளில் மட்டுமே, திரை நடிகர்களை பார்க்கின்றனர். ஆனால், திரை நட்சத்திரங்கள் வசிக்கின்ற நகரமான மும்பையில் கூட இப்படியா என்று எனக்கு கொஞ்சம் ஆச்சரியமாகவே இருந்தது. இங்கு பல நட்சத்திரங்களை மிக அருகிலேயே பார்க்க கூடிய வாய்ப்புக்கள் பல சமயங்களில் சாதாரண மக்களுக்குக் கூட உண்டு என்ற நிலையில் ஒரு நடிகரைக் காண இவ்வளவு கூட்டம் இருப்பது அதுவும் வணிக நகரமான மும்பையில் இவ்வளவு ஆரவாரம் வெளிப்படுத்தப் படுவது வியப்பையே உருவாக்கியது.

சல்மான் எப்போதும் போல பளபளவென்று உற்சாகமாகவே இருந்தார். ஒரு வண்டியில் நின்று கொண்டு மக்களிடம் கையசைத்துக் கொண்டிருந்தார். தென்மும்பை தொகுதி காங்கிரஸ் வேட்பாளரான மிலிந்த் தியோராவும் இதர காங்கிரஸ் தலைவர்களும் அவர் அருகே மிக பவ்யமாக நின்று கொண்டிருந்தனர்.

எனக்கு அப்போது தோன்றிய ஒரு கருத்து,

"இன்று தேர்தல் காலத்தில் வாக்கு வேட்டையாட உதவும் சல்மான் கான், நாளை காட்டிற்குள் கன் (gun) உதவியுடன் மானை வேட்டையாடினாலோ அல்லது நாட்டிற்குள்ளேயே கார் உதவியுடன் மனிதர்களையே வேட்டையாடினாலோ அவர் உதவியுடன் பதவிக்கு வரும் இந்த இந்த அரசியல் வியாதிகளால் அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்க முடியும்?"

நன்றி.

10 comments:

Itsdifferent said...

I hope you all have read the news about US Navy Snipers taking out the pirates to free their Captain.
Do you think, any of our leaders will have such a guts to Order to whatever necessary to release one Indian Citizen? It was a direct order from Obama. I think only a US president will have such guts, and confidence in their teams to carry out such an exercise.
Our leaders are all Cowards, to run to Kandahar or delay troops deployment on 26/11 for more than necessary.

Naresh Kumar said...

இது பராவாயில்லை, இவங்களே தேர்தல்ல நிக்கறாங்களே அப்ப என்ன பண்றது?

அமீஷா பட்டேல், குஜராத்ல ஒரு தொகுதில நிக்கப் போறாங்கன்னு ஒரு செய்தி வந்தது. சில வருடங்களுக்கு முன்பு, இதே அமீஷா பட்டேல், "If you want, come with me, atleast save a virgin" என்பது போன்ற வாசகங்களுடன் டி சர்ட் போட்டு பப்பில் பல சாகசங்கள் செய்த ஞாபகம் வந்தது!

பெண் சுதந்திரம் பற்றி பல்வேறு கருத்துக்கள் இருக்கலாம், ஆனா இவங்களைப் போன்றவங்கல்லாம் தேர்தல்ல நிக்கலாம்னா, அது சரி அந்தக் கருமத்துக்குதான் எந்தத் தகுதியே வேணாமே!!!

நரேஷ்
www.nareshin.wordpress.com

Maximum India said...

அன்புள்ள itsdifferent

கருத்துரைக்கு நன்றி.

நீங்கள் சொல்வது உண்மைதான். இது போன்ற கொடுமையான நிகழ்வுகளில் கூட ஏதேனும் அரசியல் ஆதாயம் தேட முடியுமா அல்லது தமது வாக்கு வங்கியை அதிகரிக்க முடியுமா என்பதையே நமது அரசியல் வியாதிகள் யோசித்துக் கொண்டிருப்பார். உறுதியான அல்லது தெளிவான ஆணைகள் பிறப்பிக்க அவர்களுக்கு நேரம் ஏது? மும்பை தாக்குதலின் போது கமாண்டோ படைகளை அனுப்ப தாமதித்தது மன்னிக்க முடியாத ஒரு விஷயம். அதே போல கார்கரே துர்மரணத்தில் கூட வாக்குகளை சேகரிக்க முயன்றது அவமானகரமான ஒரு விஷயம்.

நன்றி.

Maximum India said...

நன்றி நரேஷ் குமார்

//இது பராவாயில்லை, இவங்களே தேர்தல்ல நிக்கறாங்களே அப்ப என்ன பண்றது?//

என்ன கொடுமை நரேஷ் இது?

//அமீஷா பட்டேல், குஜராத்ல ஒரு தொகுதில நிக்கப் போறாங்கன்னு ஒரு செய்தி வந்தது. சில வருடங்களுக்கு முன்பு, இதே அமீஷா பட்டேல், "If you want, come with me, atleast save a virgin" என்பது போன்ற வாசகங்களுடன் டி சர்ட் போட்டு பப்பில் பல சாகசங்கள் செய்த ஞாபகம் வந்தது!//

அமிஷா என்றவுடன் ஒரு வேடிக்கையான சம்பவம் ஞாபகத்திற்கு வருகிறது. ஒரு முறை, மும்பை விமான நிலையத்தில் அவர் எனக்கு மிக அருகே நின்று கொண்டிருந்தார். எனக்கு சுத்தமாக அடையாளம் தெரிய வில்லை. (அப்போது ஹிந்தி படங்களிலும் நடிகர்களிலும் எனக்கு அதிக பரிச்சயம் கிடையாது. மங்கள் பாண்டே நான் பார்த்திருந்தாலும் அதில் அவர் சோகமயமாக ஒரு விதவைக் கோலத்தில் வருவார். இங்கோ முழு அலங்கார தேவதை). யாரோ ஒரு அழகான பெண், என் அருகே நின்று கொண்டிருக்கிறார் என்று நினைத்திருந்தேன். எனது 'வட இந்திய நண்பர்கள்' "ஹே! உன் பக்கத்தில் அமிஷா" என்று காதோடு கூறினர். "அப்படியா! அமிஷா என்றால் யார்" என்று அப்பாவித் தனமாக கேட்டேன்.

அவர் ஓரளவுக்கு பிரபலமாக இருந்த கால கட்டத்தில் இது போன்ற கேள்வி அவருக்கு நிச்சயமாக தர்ம சங்கடமாக இருந்திருக்கும். அப்போது அங்கே வந்த ஒரு "ரொம்ப குண்டு" நடுத்தர வயது மனிதருடன் வேகமாக சென்று விட்டார்.

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இவ்வளவு அழகான பெண்ணுக்கு நம்மைப் போல "பர்சனாலிடியான" இள வயது பாய் பிரென்ட் ஒருவர் கூட கிடைக்க வில்லையா என்று அப்போது எனது நண்பர்களிடம் வேடிக்கையாக கேட்டேன்.

//பெண் சுதந்திரம் பற்றி பல்வேறு கருத்துக்கள் இருக்கலாம், ஆனா இவங்களைப் போன்றவங்கல்லாம் தேர்தல்ல நிக்கலாம்னா, அது சரி அந்தக் கருமத்துக்குதான் எந்தத் தகுதியே வேணாமே!!!//

"முகமது பின் துக்ளக்" திரைப்படத்தில் சோ அவர்கள் ஒரு வசனம் சொல்லுவார், "அரசியல் ஒரு சாக்கடை. அதில் எது வேண்டுமானாலும் கலக்கலாம்"

நன்றி

Suresh said...

super pathivu, sullir endru karuthkal ... manasuku kasthatama than iruku ennaiku than vidivu endru ..

Maximum India said...

நன்றி சுரேஷ்

வால்பையன் said...

நான் கூட முதலில் தமிழ் மக்கள் தான் நடிகர்களை கொண்டாடுகிறார்கள் என்று நினைத்தேன்!

பிறகு பார்த்தால் ஹிந்தியும் அப்படி தான்.

சரி இந்தியா தான் இப்படினா!

கலிபோர்னியா கவர்னர் கூட ஒரு நடிகர் தான்!

Maximum India said...

அன்புள்ள வால்பையன்

பின்னூட்டத்திற்கு நன்றி!

//நான் கூட முதலில் தமிழ் மக்கள் தான் நடிகர்களை கொண்டாடுகிறார்கள் என்று நினைத்தேன்!

பிறகு பார்த்தால் ஹிந்தியும் அப்படி தான்.//

நான் சொல்வதை பலர் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். இது பற்றி பல வட இந்திய நண்பர்களுடன் விவாதித்துள்ளேன். தமிழகத்தில் உள்ள சினிமா நடிகர்கள் தேர்தல் களத்தில் அரசியல்வாதிகளாகவே நுழைகிறார்கள். மக்களுக்கு பல நன்மைகளைப் பெற்றுத் தருவதாக நிழலிலும் நேரிலும் வாக்குறுதி அளிக்கின்றனர். ஆனால் வட நாட்டிலோ, சினிமா நடிகர்கள் சினிமா நடிகர்களாகவே அச்சு மாறாமல் தேர்தல் களத்தில் போட்டி இடுகிறார்கள். வாக்குகளை சேகரிக்கிறார்கள். மக்கள் சினிமா கவர்ச்சியின் அடிப்படையிலேயே வோட்டு போடுகிறார்கள். இதில் இருந்து சொல்லுங்க! எங்க சினிமா கவர்ச்சி அதிகம் என்று?

//சரி இந்தியா தான் இப்படினா!

கலிபோர்னியா கவர்னர் கூட ஒரு நடிகர் தான்!//

சொல்லப் போனால் சினிமா ஒரு பிரபலமான தொழிற் துறை. அதிலிருந்து அரசியலில் நுழைவதில் தவறில்லை. ஆனால். சினிமாவில் நடித்தால் மட்டுமே போதும். அரசியலில் வெற்றி பெற்று விடலாம் என்று நினைப்பது தவறு.

நன்றி.

ச்சின்னப் பையன் said...

கடைசி பத்தியில் சொன்னதுதான் நடக்கப்போகிறது....

Maximum India said...

நன்றி சின்னப் பையன்!

//கடைசி பத்தியில் சொன்னதுதான் நடக்கப்போகிறது...//

என்ன செய்யறது? இதுதான் ஜனநாயகம்.

நன்றி.

Blog Widget by LinkWithin