Saturday, April 4, 2009

இந்தியப் பொதுத் தேர்தல்கள் - சில சுவாரஸ்ய தகவல்கள்


இந்திய வரலாற்றில் 1989 தேர்தல்கள் மிகப் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தின. ஒரு கட்சி ஆதிக்கம் முடிவுக்கு கொண்டு வரப் பட்டதுடன், இந்தியாவிற்கு மிகவும் புதியதான (1977 ஜனதா அரசு சற்றே வேறுபட்டது) ஒரு கூட்டணி ஆட்சி முறை அறிமுகப் படுத்தப் பட்டதுடன், அந்த முறை தொடர வலுவான அச்சாரமும் போடப்பட்டது. அன்று முதல் இன்று வரை அரசியலில் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும் தொடருகின்ற சில பொதுவான விஷயங்கள் நம்மை ஆச்சரியப் படுத்துகின்றன.

ஒரு கட்சி அல்லது ஒரு குடும்ப ஆட்சி என்றிருந்த நிலையிலிருந்து முற்றிலும் விலகி, இந்தியா ஒரு புதிய ஜனநாயக பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்பதை வெளிக்காட்டும் சில சுவாரஸ்யங்கள் இங்கே.

1989 க்கு பிறகு நடைபெற்ற தேர்தல்களில் எந்த ஒரு கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்க வில்லை. 1991 காங்கிரஸ் அரசு தவிர அனைத்து அரசாங்கங்களும் பல கட்சிகளின் கூட்டணி அரசாங்கமாகவே அமைந்தன. 1991 தேர்தலில் கூட தேர்தலில் மெஜாரிடி பெற முடியாத காங்கிரஸ் மற்ற கட்சிகளில் இருந்து வெளியேறியவர்களின் துணையுடன் பின்னர் பெரும்பான்மையை ஏற்படுத்திக் கொண்டது என்பது குறிப்பிடத் தக்கது. 1996 இல் பிஜேபி தனி ஆட்சி முயற்சி உடனடி தோல்வி கண்டது.

1991 க்கு பிறகு நடைபெற்றுள்ள அனைத்து தேர்தல்களிலும் மாநில/ பிராந்திய விவகாரங்களே அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளன. அதே போல மாநில கட்சிகளின் பலம் தேசிய அளவில் மிகுந்துள்ளது. முக்கியமாக இரண்டு மூன்று தொகிதிகளைப் பெறும் கட்சிகள் கூட பெரிய அளவில் பேரங்கள் பேச துவங்கி விட்டன. "மாநிலத்தில் நாங்கள் மத்தியில் நீங்கள்" என்ற உடன்பாடு மாறிப் போய், மாநிலத்தில் நாங்கள் மத்தியில் நாம்" என்ற வகையிலான புதிய உடன்பாடுகள் ஏற்பட துவங்கி விட்டன. தேசிய கட்சிகளின் பலம் மங்கி மாநில கட்சிகளுக்கு பல வகையிலும் ஒத்துப் போக வேண்டிய கட்டாயங்கள் ஏற்பட்டுள்ளன. பல சமயங்களில் தனக்கு கீழே பணியாற்ற வேண்டிய அமைச்சர்களை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் கூட பிரதமருக்கு வழங்கப் படவில்லை.

1989 க்கு பிறகு எந்த ஒரு தேர்தலிலும் பிரதமராக முன்னிறுத்தப் பட்டவரின் கட்சி அல்லது கூட்டணிக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்க வில்லை. பிரதமர் வேட்பாளராக களம் கண்டு பிரதமரான 1998 தேர்தலில் வாஜ்பாயீ கூட அவரது தலைமையை வெளியில் இருந்து ஆதரித்த தெலுங்கு தேசத்தின் துணையுடனேயே முழுப் பெரும்பான்மையை அடைய முடிந்தது என்பது குறிப்பிடத் தக்கது.

வாஜ்பாயி அவர்கள் தவிர, மற்ற அனைத்து பிரதமர்களும் தேர்தலுக்கு பின்னரே முடிவு செய்யப் பட்டனர். பல தருணங்களில் மக்களுக்கு, தேர்தலுக்கு பிறகான பிரதமர் தேர்வு மிகப் பெரிய ஆச்சரியத்தையே அளித்து. மேலும், அவர்கள் சொந்த கட்சி/ கூட்டணியிலேயே இரண்டாவது மூன்றாவது சாய்ஸ் ஆக இருந்தது குறிப்பிடத் தக்கது. உதாரணமாக, தேவ கௌட, மன்மோகன் சிங் போன்றவர்கள் பிரதமர் ஆவார்கள் என்று அவர்களே கூட எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

1989, 1996 தேர்தல்கள் (மூன்றாவது அணி ஆட்சி) தவிர அனைத்து தேர்தல்களிலும், பெரிய இரண்டு கட்சிகளில் எந்த கட்சிக்கு அதிக உறுப்பினர்கள் கிடைத்தனரோ, அந்த கட்சியின் தலைமையிலேயே ஆட்சிகள் அமைக்கப் பட்டுள்ளன.

1999 தேர்தல் தவிர அனைத்து தேர்தல்களிலும் ஆளும் கட்சி/ கூட்டணி தோல்வியைத் தழுவின.

விடுதலை பெற்றதிலிருந்து 1989 வரை (இடையில் சிறிது காலம் தவிர்த்து) ஆட்சியில் இருந்து வந்த நேரு-காந்தி குடும்பத்தைச் சேர்ந்த யாரும் 1989 தேர்தலுக்குப் பின்னர் பிரதமர் பதவிக்கு வர வில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.

எப்போதெல்லாம் மூன்றாம் அணி பதவிக்கு வந்ததோ அப்போதெல்லாம் நம்மால் இரண்டு பிரதமர்களைப் பார்க்க முடிந்தது.

இந்த தேர்தலுக்கு வருவோம்.

இந்த தேர்தலில் குறைந்தது 10 பேருக்கு பிரதமர் பதவியை அடைய வாய்ப்புக்கள் உள்ளன. ஒரு மாநிலத்தை மட்டுமே சார்ந்த கட்சித் தலைவர்கள் கூட பிரதமர் கனவில் மிதக்கிறார்கள்.

இந்தத் தேர்தலில் போட்டியிடும் (கிட்டத்தட்ட) அனைத்துக் கட்சிகளும் 1991 க்கு பிறகு ஏதேனும் ஒரு அரசாங்கத்தில் பங்கெடுத்துக் கொண்டிருக்கின்றன. அல்லது ஏதேனும் ஒரு அரசாங்கத்தில் முழு செல்வாக்கு கொண்டு இருந்திருக்கின்றன. பதவி மற்றும் செல்வாக்கை உபயோகித்துக் கொண்டு பல காரியங்களை சாதித்திருக்கின்றன. பதவிக்காகவும் செல்வாக்குக்காகவும் கூசாமல் கூட்டணி மாறி வந்துள்ளன.

இந்த தேர்தலில், கிட்டத்தட்ட ஐந்நூறு தொகுதிகள் சீரமைக்கப் பட்டவையாக உள்ளன. இந்த சீரமைப்புக்கள் பல "வாக்கு வங்கிக் கணக்குகளை" புரட்டிப் போடக் கூடும் எனக் கருதப் படுகிறது. இது பல வேட்பாளர்களின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. ஏறத்தாழ 10 கோடி புதிய வாக்காளர்களுக்கு வோட்டுரிமை இந்த தேர்தலில் புதிதாக கிடைக்க இருக்கிறது.

முந்தைய தேர்தல்கள் போல அல்லாமல் இந்த தேர்தலில் தொகுதி உடன்பாடுகள் மிகவும் குறைவாக உள்ளன. பல கட்சிகளும் தமது சொந்த பலத்தை சோதித்து பார்த்து விடும் முனைப்பில் உள்ளன. இரண்டு மூன்று தொகுதி கூட பேரம் பேசும் வலிமையை தருவதால், இந்த துணிச்சலான முயற்சி என்று நினைக்கிறேன்.

இதுவரை இலவசங்களை அள்ளி வீசுவது மாநில கட்சிகளின் பாணியாக மட்டுமே இருந்து வந்திருக்க , இந்த முறை தேசிய கட்சிகளும் பல்வேறு இலவசங்களை அறிவித்துள்ளன,

இந்த தேர்தலிலும் எந்த ஒரு தனிக் கட்சிக்கும் அல்லது கூட்டணிக்கும் தனி மெஜாரிடி கிடைக்கும் என்று தோன்ற வில்லை. தேர்தலுக்கு பின்னர் எந்த கட்சி எந்த கட்சியுடன் வேண்டுமானாலும் கூட்டணி அமைக்கலாம் என்ற நிலைதான் இந்த தேர்தலிலும் உள்ளது.

உலக அதிசயங்களில் ஒன்றாக இடம் பிடிக்க வல்ல நமது இந்தியப் பொதுத் தேர்தல்களில் சுவாரஸ்யத்திற்கும் என்றும் பஞ்சமில்லை. சுவாரஸ்யங்களை கண்டு ரசிக்கும் அதே வேளையில் வாக்களிக்கும் கடமையை மறந்து விட வேண்டாம்.

நன்றி.

14 comments:

ராஜரத்தினம் said...

I think if you vote you will vote for either DMK in tamilnadu or Congress in Mumbai right? Because only DMK supporting souls celeberated and justified tamil New year on Jan 14. Dont mistake me.

Maximum India said...

அன்புள்ள ராஜா

//I think if you vote you will vote for either DMK in tamilnadu or Congress in Mumbai right? //

யாருக்கு வோட்டு போடுவது என்பது அவரவர் சொந்த விருப்பம். இதையெல்லாம் வெளிப் படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

//Because only DMK supporting souls celeberated and justified tamil New year on Jan 14. Dont mistake me.//

கண்டிப்பாக நான் உங்களை "mistake" பண்ண வேண்டியிருக்கும்.

தமிழ் பற்று உள்ளவன் = திமுக விரும்பி.
பிராமணன் = தமிழையும் தமிழரையும் வெறுப்பவன்
ஈழத் தமிழரை நேசிப்பவன் = விடுதலைப் புலிகள் ஆதரவாளன்.
இந்து மதத்தில் ஈடுபாடு உள்ளவன் = மதவாதி அல்லது பிஜேபி அனுதாபி.
இஸ்லாத்தை நேசிப்பவன் = தீவிரவாதி

இப்படியெல்லாம் தனக்குத் தானே கற்பனை செய்து கொண்டு பலரும் ஒரு வித மாய உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஒவ்வொரு விஷயத்திலும் தனக்கென ஒரு தனிப் பார்வை கொண்டவனே மனிதன். அவர் சொல்கிறார் இவர் சொல்கிறார் என்று ஆராயாமல் அப்படியே எடுத்துக் கொண்டால் மாக்களின் மந்தையில் அவன் ஒரு சிறு அங்கம் மட்டுமே.


நன்றி.

ராஜரத்தினம் said...

//ஒவ்வொரு விஷயத்திலும் தனக்கென ஒரு தனிப் பார்வை கொண்டவனே மனிதன்//
I never think you have your own vision. while you answered my question about Tamil new year you told that earth start rotating on jan14 some thing like that. I searched those reply I could not find. Otherwise I would have attached here. Yesterday the same soul blogging that nothing special in celeberating differenet new year for each group. Pls be stand on one side. I want to say onething Again dont mistake me. I stopped to read daily your blog the day you justified that damn new year on Jan 14. After that I could not find any good thing in your blog. even if you did. sorry. Because I stand in only one side. I know my vision will not affect you any way.

Maximum India said...

My dear Raja

//I want to say onething//

You have already said many things.

//Again dont mistake me.//

How many times will you repeat the same thing?

// I stopped to read daily your blog the day you justified that damn new year on Jan 14. After that I could not find any good thing in your blog. even if you did. //

I don’t understand how you are able to comment continuously without reading the blog/posts.(Ha Ha) I also don’t understand how you are able to find nothing good in my blog even though you stopped reading it long back. (Ha Ha Haha)

//sorry. Because I stand in only one side.//

I fully understand. You stand by only one side i.e. to hurt me. But I don’t understand why so. If you don’t like me/my blogs, please stop visiting my blog and wasting your time in commenting.

//I know my vision will not affect you any way.//

Thank you, I know my answer will not affect you also.

I want to say to some thing from my side as I still respect you as a fellow human being.

Internet blogging is a virtual world. We meet through a small window screen. Try to have a positive relationship with the people you meet through this virtual medium so that our minds can be fresh even after switching off the computer.

I hope that you appreciate my views at least from the last para.

Bye.

KARTHIK said...

// "மாநிலத்தில் நாங்கள் மத்தியில் நீங்கள்" என்ற உடன்பாடு மாறிப் போய், மாநிலத்தில் நாங்கள் மத்தியில் நாம்" //

சரியாச்சொன்னீங்க

ஆனா இந்த தடவா நிலையான ஆட்சிமட்டும் இருக்காதுன்னு தெரியுது.
தேசிய கட்சிகள் மேல உக்காருர வாய்ப்பு கம்மியாத்தான் இருக்கும் போல
மூன்றாவது அணி அமர்ந்தாலும் யார் பிரதமர்ங்கர கேள்வி எழும் பிரச்சனையும் வரும்.நல்ல காமடியா இருக்கும் பாக்கவே.

ஆனா யாருவந்தாலும் மத்திலா குறைந்தது 5 முக்கிய இலாக்காக்களையாவது திமுக வாங்கிவிடும்.

(சாலை போக்குவரத்து டிஆர்.பாலு
அது வேறயாருக்கும் கிடையாது.)

Maximum India said...

அன்புள்ள கார்த்திக்!

கருத்துரைக்கு நன்றி.

//ஆனா இந்த தடவா நிலையான ஆட்சிமட்டும் இருக்காதுன்னு தெரியுது.//

தேர்தல்கள் இப்போதெல்லாம் ரொம்ப காஸ்ட்லியான சமாச்சாரம் ஆகி விட்டதனால், ஐந்து வருடத்திற்குள் ஏராளமான பேரங்கள் நடக்கும் என்று நினைக்கிறேன்.

//தேசிய கட்சிகள் மேல உக்காருர வாய்ப்பு கம்மியாத்தான் இருக்கும் போல//

இப்போதைக்கு காங்கிரஸ் ரேசில் கொஞ்சம் முந்தி உள்ளது போலவே தோன்றுகிறது.

//ஆனா யாருவந்தாலும் மத்திலா குறைந்தது 5 முக்கிய இலாக்காக்களையாவது திமுக வாங்கிவிடும்.//

உண்மைதான். ருசி கண்ட பூனை ஆயிற்றே? மத்தியில்தான் ஆயிரக் கணக்கான கோடிகளை எளிதில் பார்க்க முடியும்.

//(சாலை போக்குவரத்து டிஆர்.பாலு
அது வேறயாருக்கும் கிடையாது.)//

கப்பல் போக்குவரத்தை உட்டுட்டீங்களே?
:)
நன்றி

ராஜரத்தினம் said...

Sorry. I never say that I didn't read blog at all. Ok I dont want to rejoinder all time. I stopped to read your blog daily.thats what I told. I used to forget everything once I closed your blog. I clealy told that the day you asked some nonsence question about hinduism the day I started to stop daily and want to have negative relationship with you. whoever asks questions like you I will behave with them like this only. sorry for commenting like this. I will not do this again. My only concern about you is you betrayed the neutral vision of your blog by justifying tamil new year on Jan 14 . thanks it is for your personal reply only. No need to put in your blog. if you want you can.

Maximum India said...

அன்புள்ள ராஜா

உங்களுக்கு நினைவிருக்கிறதா என்று தெரிய வில்லை. கடந்த முறை "தமிழ் புத்தாண்டு" பற்றிய விவாதங்களின் போதும் இறுதியில் இதே போன்ற ஒரு பின்னூட்டத்தை அளித்தீர்கள். அதை வெளியிட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டீர்கள். கை தவறுதலாக அதை "publish" பட்டனை அழுத்தி விட்டு பிறகே நீங்கள் எழுதியவற்றை படித்தேன். நீங்கள் தவறாக நினைத்துக் கொள்ள கூடாது என்ற ஒரே காரணத்திற்காக (மட்டுமே) அந்த பதிவினையே முழுமையாக நீக்கி விட்டேன். இப்போதும் கூட நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த பதில். ஒ.கே?

//Sorry. I never say that I didn't read blog at all. Ok I dont want to rejoinder all time. I stopped to read your blog daily.thats what I told.//

நான் கூட இப்போதெல்லாம் தினமும் பதிவிடுவதில்லை. எனவே நீங்கள் தினந்தோறும் பதிவைப் படிக்க வேண்டியதில்லை. வாரம் ஒரு தடவை மட்டும் பார்த்தால் போதும். அது கூட உங்கள் இஷ்டம். ஓகே?

// I used to forget everything once I closed your blog. //

நல்ல பழக்கம்தான். வாழ்த்துக்கள். உங்கள் பின்னூட்டங்கள் வித்தியாசமாக உள்ளது என்ற முறையில் நான் அவற்றை ஒரு வகையில் "என்ஜாய்" செய்திருக்கிறேன் என்றாலும் (பதிவில் பொருளுக்கு சம்பந்தமில்லாத விவாதங்களாக இருப்பதால்) பதிவை படிக்கும் மற்ற நண்பர்கள் தவறாக நினைக்கக் கூடாது என்பதற்காகவே "நெகடிவ்" மனதோடு தனிநபர் தாக்குதல் பின்னூட்டங்கள் எழுத வேண்டாம் என்று கூறினேன். ஓகே?

//I clealy told that the day you asked some nonsence question about hinduism the day I started to stop daily and want to have negative relationship with you. whoever asks questions like you I will behave with them like this only. sorry for commenting like this. //

ஹிந்து மதம் ஒரு பெரிய கடல். ஒருவரால் உருவாக்கப் பட்டது அல்ல. என்னிடம் ஒரு பெரியவர் கூறினார். 'ஹிந்து மதம் கேள்விகளால் உருவானது' என்று. கேள்விகள் கேட்க கேட்கத்தான் மதமும் மனமும் விரிவடையும். ஹிந்து மதமெனும் கடலில் முத்துக்களும் உண்டு சுறா மீன்களும் உண்டு. நல்ல கேள்விகள் முத்துக்களை வெளியில் எடுக்கின்றன. கேள்விகள் கேட்கக் கூடாது என்ற அதிகார தொனி சுறாமீன்களை வரவழைக்கின்றன. மதம் பற்றிய விவாதங்களில் திறந்த மனதோடு மட்டுமே விவாதிக்க வேண்டும். மேலும் ஏற்கனவே நான் சொன்னபடி, எதிர் கருத்துக்கள் எதிரியின் கருத்துக்கள் அல்ல. நீங்கள் எப்போதும் போல என்னுடன் கருத்துக்களில் முரண்படலாம். ஆனால் தனிப் பட்ட முறையில் நண்பர்களாக இருப்போம். ஓகே?

//I will not do this again. //

நன்றி,

//My only concern about you is you betrayed the neutral vision of your blog by justifying tamil new year on Jan 14 //

சற்று யோசித்துப் பாருங்கள். நான் கூறியது "ஒரு தரப்பு வாதம் இது" என்று மட்டும்தான். தனிப் பட்ட முறையில் நான் அனைத்து புத்தாண்டுகளையும் வரவேற்பவன் என்றுதான் கூறியிருக்கிறேன். சொல்லப் போனால் நான் எல்லா நாட்களையும் புத்தாண்டுகளாக கொண்டாட ரெடி. இதற்காக ஒரு தனிப் பதிவு கூட போட்டிருக்கிறேன்.

//thanks it is for your personal reply only. No need to put in your blog. //

உங்களுக்கு பதிலளிக்க உங்கள் ஈ மெயில் ஐ டி இல்லை. அதனால்தான் பதிவின் வழியாக இந்த பதில். ஓகே?

//if you want you can.//

நீங்கள் தந்த இந்த சுதந்திரத்தினால்தான் இந்த பதில் பதிவில். ஓகே?

நன்றி.

Itsdifferent said...

I think it is very difficult for Indians to agree with others' views, get along with some one for a long time.
2. Its also difficult to agree someone has a leader, and rally behind them.
3. The other side of the coin to #2, is we give way too much credit, recognition and stuff like that just to the leader. Not realising that leader has help from his entire team, to be successful.

Because of these reasons, though there are not huge ideological reasons between so many parties, mainly due to the difference between the individuals, we create a party.

If we have to tabulate and start identifying the principles list each party's stand, I am sure we are going to find many similarities across the parties.

And the other bigger inhibitor has been the states divided across the language lines, as languages have dictated the cultural differences also and there by even more divide resulting in more parties.

It is important that we educate the party leaders and the masses of these differences, make them realise those, to take atleast a first step of uniting under 1, 2 or 3 parties max, for all of India.

ராஜரத்தினம் said...

Thanks for your reply. I didnt expect this from you. Always I am very sensitive to my religious feeling getting disturbed by some useless and nonsense and that too by the people who dont have any knowledge and belief in that. If this new year is changed by Jaya also I would have opposed by all means I can. Thats the reason I put comment. I put comment in all blogs which I read the wishes for new year on jan 14. Ok thanks we will meet again in some other time if your blog offend my feelings.

வால்பையன் said...

பதிவை விட பின்னூட்டங்கள் கலை கட்டுதே!

இப்படி இருந்தா தான்! சோர்வா இருக்குற ரீடர்ஸ் கொஞ்சம் நிமிர்ந்து உட்காருவாங்க!

அடுத்து வேலை வந்தாலும் சுறுசுறுப்பா போகும்!

Maximum India said...

நன்றி வால்பையன்

//பதிவை விட பின்னூட்டங்கள் கலை கட்டுதே!//

உங்களுக்கு கலை கட்டுது. நமக்குத்தான் மூச்சு கட்டுது.

சும்மா தமாசுக்கு. உண்மையாலுமே, நல்லாத்தான் போயிட்டிருக்கு.

Maximum India said...

அன்புள்ள itsdifferent


//It is important that we educate the party leaders and the masses of these differences, make them realise those, to take atleast a first step of uniting under 1, 2 or 3 parties max, for all of India.//

உண்மைதான். ஒரு சில கட்சிகள் குறைந்த பட்சம் ஒரு சில கூட்டணிகள் இருந்தால் நன்றாகத்தான் இருக்கும்.

நன்றி

Maximum India said...

அன்புள்ள ராஜா

//Thanks for your reply. .//

நன்றி.

//I didnt expect this from you//

இல்லை நீங்கள் நிறைய எதிர்பார்க்கலாம். தப்பில்லை.

//Always I am very sensitive to my religious feeling getting disturbed by some useless and nonsense and that too by the people who dont have any knowledge and belief in that.//

அப்படி இருக்காதீர்கள் மனதிற்கும் உடலுக்கும் நல்லதல்ல. மாற்றுக் கருத்துக்களையும் எதிர்கருத்துக்களையும் வாங்கி ஆராய்ந்து பாருங்கள். எது சரி எது தவறு என்று பின்னர் முடிவு செய்யுங்கள்.

//If this new year is changed by Jaya also I would have opposed by all means I can. Thats the reason I put comment. I put comment in all blogs which I read the wishes for new year on jan 14. //

நானும் கூட எந்த தலைக்காகவும் எந்த முடிவும் எடுப்பதில்லை. நம்புங்கள்.

//Ok thanks we will meet again in some other time if your blog offend my feelings.//

கண்டிப்பா. வரும்போது வலுவான கருத்துக்களா எடுத்துட்டு வாங்க. ஆனா தனி நபர் தாக்குதல்கள் மட்டும் வேண்டாம்.

நன்றி.

Blog Widget by LinkWithin