பாரெல்லாம் பரவி இருந்த என் பைந்தமிழ் இன்று பள்ளிக் கூடங்களில் மறுக்கப் படுகின்றதே? தரணி எல்லாம் தவழ்ந்து வந்த என் தீந்தமிழை இன்றைய மழலையர் கற்க முடியாதபடி தனியார் பள்ளிகள் ஆங்கில கல்வி புகட்டுகின்றனவே? உலகெல்லாம் ஓங்கி ஒலித்த என் தமிழை ஒழித்துக் கட்ட தமிழின துரோகிகள் முனைந்து விட்டனரே? இதை தடுப்பவர் யார்? திரண்டு வாருங்கள் தமிழர்களே! அழிகின்ற தமிழை காக்கும் பொறுப்பு உங்களிடம்தான் இருக்கிறது! பல்லாயிரம் ஆண்டு காலம் வாழ்ந்த நம் தமிழ் நாம் வாழ்ந்த காலத்தில் அழிந்தது என்று சரித்திரம் சொல்லக் கூடாது. தாய்மொழியை உதறுபவன் தன தாயை இகழ்ந்ததற்கு சமம். தமிழ் வழிக் கல்வியை தடுப்பவனை தாய் தடுத்தாலும் விடேன். இப்படியெல்லாம் சரளமாக எழுதிக் கொண்டிருந்த கவிக் கோவின் கண் முன்னே ஏராளமான கைத்தட்டுக்களும் பாராட்டுக்களும் விரிந்தன. தமிழ் குடிதாங்கி, தமிழின காவலர், தமிழ் செம்மல் என்றெல்லாம் ஏராளமான பட்டங்களை ஏற்கனவே சுமக்க முடியாமல் சுமந்து கொண்டிருக்கும் தான் வருங்காலத்தில் இன்னும் என்னவெல்லாம் பட்டங்கள் சுமக்க வேண்டுமோ என்ற ஒருவித சந்தோச பயம் கூட அவருக்கு வந்தது. இந்த போராட்டத்தை எதிர்த்து சில தமிழின த...
கொஞ்சம் மாத்தி யோசி!