
ஆனால் இதை உனது மண்ணின் பிறந்த நாள் என்று சொல்ல முடியாது. அந்த மண்ணின் மைந்தர்களின் உரிமை நாள் என்றும் கூட கூற முடியாது. குடியேற வந்து ஏற்கனவே குடியிருந்தவர்களை மண்ணோடு மண்ணாக்கிய பின்னர், தமது சொந்த தாய்நாட்டின் தொப்புள் கொடி அறுத்த நாள் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
முதல் முறையாக மக்களின் உரிமைகளுக்கு மரியாதை கொடுத்த நாடு நீ. மன்னர்களின் அதிகாரம் முடிந்து பிரபுக்களின் ஆதிக்கத்தை முடித்து மக்கள் கையில் அதிகாரம் கொடுத்த நாடு நீ.
ஜனநாயகம் கூட சுரண்டல் நாயகம் ஆகலாம் என்ற பிரிட்டிஷ் பேரரசை உதாரணமாக கொண்டு, அரசுக்குக் கூட மக்கள் உரிமைகளை பறிக்கும் அதிகாரம் இல்லை என்று சட்டமாக கொண்டு வந்த நாடு நீ.
வாழ்வும் தாழ்வும் எல்லாம் மக்கள் கையில் என்று, அரசாங்கத்தின் கையை சுருக்கி, மக்களிடமே பொறுப்பு அனைத்தையும் கொடுத்த நாடு நீ.
சந்தை பொருளாதாரத்தின் தாய் நீ. உழைப்பு எங்கேயோ இருக்க, தொழிற் நுட்பம் எங்கேயோ இருக்க சந்தைகளை மட்டுமே உன்னகத்தே கொண்டு உலகின் பொருளாதாரத்தையே உன்னை நம்பி இருக்க செய்தாய்.
கிழக்கு மனதை வளர்க்க முயல மேற்கின் சிகரமாகிய நீ பணத்தை வளர்க்க முயற்சி செய்தாய். உன்னுடைய ஆசை பேராசையாக உலகையே உனது பணம் கறக்கும் இயந்திரமாக மாற்ற முயன்றாய்!
பேராசை போராசையாக மாற புதியதொரு காலனி கலாச்சாரத்தையே உருவாக்கினாய்.
உன் பேராசைக்கும் போராசைக்கும் இன்று எத்தனை உயிர்கள் பலி என்பதை பார்த்தாயா?
வியட்நாம் முதல் ஈராக் வரை எத்தனை போர்கள்? மடிந்தது எத்தனைப் பேர்கள்? உடல் காயத்தை விட மனக்காயத்தால் துடிப்பவர்கள் எத்தனை பேர்?
உலகின் நாணயத்தையே உருவாகிய உன்னிடம் நாணயம் மட்டும் இல்லையே, ஏன்?
பாலஸ்தீனம் முதல் ஆப்கானிஸ்தான் வரை அடுத்த நாட்டு மக்களை பகடைக் காய்களாக மட்டுமே பார்ப்பதை நீ எப்போது நிறுத்தப் போகிறாய்?
நீ உருவாக்கிய ஒசாமாக்கள் இன்று உலகிற்கே அச்சுறுத்தலாக இருப்பதை பார்த்துக் கொண்டுதானே இருக்கிறாய்?
உன் மக்கள் உனக்கு பொன் குஞ்சுகள்தான்! அவர்கள் வளமாகவே வாழட்டும்!
ஆனால் அவர்களுக்கான உணவு எங்கள் வயிற்றில் இல்லை என்பதை சொல்லிக் கொள்ள ஆசைப் படுகிறேன்.
இந்த சுதந்திர நாளில் உன்னை மனமார வாழ்த்துகிறேன்!
பல்லாண்டு நீடூழி வாழ்க!
அதே சமயம் இன்னொன்றும் சொல்லிக் கொள்ள ஆசைப் படுகிறேன்.
வாழு! வாழ விடு!
இதுவே உனது பிறந்த நாளின் எனது கோரிக்கையாக இருக்கும்.
என்னுடையது மட்டுமல்ல இந்த கோரிக்கை. இந்த உலகின் பல கோடி மக்களின் கோரிக்கையும் அதுவாகத்தான் இருக்கும்.
நிறைவேற்றுவாயா?
நன்றி.
12 comments:
எங்கே சாபம் இட்டுள்ளீர்களோ என்று பயத்தோடு வாசிக்க வந்தேன். நல்ல வேளை நாகரிகம் காத்துள்ளீர்கள்.
//உலகின் நாணயத்தையே உருவாகிய உன்னிடம் நாணயம் மட்டும் இல்லையே, ஏன்? //
நாணயம் இல்லாததால் தான் இன்று நாணயமும் அற்று கிடக்கிறது.
நன்றி பீர்!
அவன் உருப்படமாட்டாங்க!
நாடே திவாலாகிபோய் கிடக்கு!
வாழைப் பழத்தில் ஊசி... நன்றாக உள்ளது. இது நமது நாகரீகம், இதுவே அவர்களாக இருந்திருந்தால்..
நன்றி வால்பையன்!
நன்றி ராமன்!
//வாழு! வாழ விடு!//
இந்த கோரிக்கை செவிடன் காதில் ஊதிய சங்குயாக மாறக்கூடது என்று எல்லாம் வல்ல இறைவனிடம்
வேண்டுவம் (மன்றடுவம்).
சுதந்திர நாளில் அமேரிக்கா மக்கள் வளமாகவே வாழட்டும் என்று வாழ்த்துவம்.
நன்றி..நன்றி...
super sir
நன்றி தாமஸ் ரூபன்!
நன்றி DG
சோக்கா சொன்னீங்க போங்க...
நரேஷ்
நன்றி நரேஷ்!
Post a Comment